Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஒன்ராறியோவில் சில பகுதிகளில் இன்னமும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது

Posted: 27 Mar 2016 08:02 PM PDT

gh

ghபனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டு நான்கு நாட்களின் பின்னரும் ஒன்ராறியோவில் 10,000 இற்கும் அதிகமான மின் நுகர்வோர் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இன்னமும் இருப்பதாக ஹைட்ரோ வன் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்புயல் பாதிப்பினை அடுத்து 108,000 நுகர்வோர் மீண்டும் மின் வினியோகத்தினைப் பெற்றுள்ளனர் என்றும், அதற்காக 1,200 இற்கும் அதிகமான பணியாளாகள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.gh

தெற்மேற்கு ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும், மின் வடங்கள் சேதமுற்றுள்ளதாகவும், அவை புதிதாக திருத்தியமைக்கப்பட வேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளது.

Orangeville மற்றும் Alliston பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களே மின் விநியோகத்தை இழந்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

The post ஒன்ராறியோவில் சில பகுதிகளில் இன்னமும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகா கத்திக்குத்தில் இருவர் படுகாயம்

Posted: 27 Mar 2016 10:54 AM PDT

stabbing_-_03262016

stabbing_-_03262016இன்று அதிகாலையில் மிசிசாகாவில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Dixie வீதி மற்றும் Matheson Boulevard பகுதியில் அதிகாலை 2.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு ஆளானவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்திலும், கழுத்திலும் காயம் ஏற்பட்ட நிலையில் ஆண் நபர் Sunnybrook மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பெண் கையில் காயம் ஏற்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.stabbing_-_03262016

இதேவேளை இந்த கத்திக்குத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை காவல்த்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

The post மிசிசாகா கத்திக்குத்தில் இருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா மனித உரிமைகள் ஆலோசகராக கனேடியர்: கனேடிய அரசாங்கம் கேள்வி

Posted: 27 Mar 2016 10:30 AM PDT

Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016

Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016கனேடியர் ஒருவர் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முக்கிய பதவி ஒன்றில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் மைக்கல் லின்க் என்பவரே பாலஸ்தீன மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா.வுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஐக்கிய நாடுகள் நிறுவனம் நியமித்துள்ளது.

பேராசிரியர் மைக்கல் லின்க் நீணட காலமாகவே இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளவர் என்ற கருத்து நிலவிவரும் நிலையில், அவரின் இந்த நியமனம் தொடர்பில் யூத அமைப்புக்களும், எதிர்க்கட்சிகளும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையிலேயே பேராசிரியரின் குறித்த நியமனம் தொடர்பிலே கேள்வி எழுப்பியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர், குறித்த அந்த கனேடிய பேராசிரியரின் நியமனத்தினை மறு பரிசீலனை செய்யுமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள இந்த தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் டியோன் மேலதிக விளக்கங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016

எனினும் பேராசிரியர் லின்க் இன் முன்னைய அறிக்கைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் கவலை கொண்டுள்ளதாக அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான பதவிகளுக்கு எவரும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், அவர்களின் நாடுகளை அடிப்படையாக கொண்டு இவ்வாறான நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அலுவலகம், பேராசிரியர் லின்க் தனிப்பட்ட ரீதியிலேயே இந்த பதவிக்கான விண்ணப்பதினை செய்திருக்க கூடும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.

அவர் கனேடிய அரசாங்கத்தினால் அந்த பதவிக்கு முன்மொழியப்பட்டவரோ அல்லது அங்கீகரிக்கப்பட்டவரோ அல்ல என்ற நிலையில், அவரது கருத்துக்கள் கனடாவையோ, கனேடிய அரசாங்கத்தினையோ பிரதிபலிப்பதாக இருக்காது எனவும் வெளியுறவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post ஐ.நா மனித உரிமைகள் ஆலோசகராக கனேடியர்: கனேடிய அரசாங்கம் கேள்வி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™