Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Posted: 23 Mar 2016 07:59 PM PDT

t

tஅன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ளும் உணவில் இன்றியமையாத உணவுதான் அரிசி உணவுகள்.

அதனை சாப்பிடும் நீங்கள் அதனை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.t

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

The post அரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ டவுண்ரவுனில் விபத்து – மூதாட்டி படுகாயம்

Posted: 23 Mar 2016 07:56 PM PDT

yu

yuரொரன்ரோ டவுண்ரவுனில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் அவருக்கு உயிராபத்தான காயம் ஏற்பட்ட நிலையிலேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ontario வீதிக்கு அருகில் King வீதியில் இரவு 8.15 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு 70 வயதுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.yu

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், Berkeley மற்றும் Sherbourne வீதிகளுக்கு இடைப்பட்ட King Street பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோ டவுண்ரவுனில் விபத்து – மூதாட்டி படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிபரல கட்சியின் முன்னாள் மூத்த ஆலோசகர் காலமானார்

Posted: 23 Mar 2016 07:52 PM PDT

gh

ghலிபரல் கட்சியின் முன்னாள் மூத்த ஆலோசகர் Leon Korbee நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலமானார். இதனை அவரின் அலுவலகம் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் ஒன்றாரியோ மாகாணத்தின் இரண்டு முதல்வர்களின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சியின் முன்னாள் மூத்த ஆலோசகரான Leon Korbee என்பவா Dalton McGuinty மற்றும் Kathleen Wynne ஆகியோரின் வுத்த தொடர்பாடல் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சியில் இணைவதற்கு முன்னராக இவர் CTV News இல் 1983 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றியிருந்தார்.

The post லிபரல கட்சியின் முன்னாள் மூத்த ஆலோசகர் காலமானார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று இரவு உறைபனி மழையை எதிர்பார்க்கலாம்

Posted: 23 Mar 2016 04:48 PM PDT

j

jரொரன்ரோ, ஹமில்ரன் மற்றும் ரொரன்ரோப் பெரும்பாகம் ஆகிய பகுதிகள் கடுமையான குளிரையும், காற்றையும் கொண்ட மோசமான வானிலையை இன்று இரவு எதிர்கொள்ளக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியங்களில் பனி, மற்றும் மழை, உறைபனி மழை என்பவை இன்று இரவு ஏற்படாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ரொரன்ரோ, ஹமிட்டன் மட்டுமல்லாது ஹோல்ரன், பீல், யோர்க், டூர்ஹாம் ஆகிய பகுதிகளுக்கும் உறைபனி மழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலில் வேளையில் ரொரன்ரோவில் மழையை பெய்ய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அது பனியுடன் கூடிய பனிக் கட்டிகளாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.j

அத்துடன் நாளை வியாழக்கிழமை அதிகாலையில் உறைபனிமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலை காரணமாக மின் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உறைபனிக்கான எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு மேலதிக பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க போவதாக ரொரன்ரோ மின்சாரவாரியம் (Toronto Hydro) தெரிவித்துள்ளது.

The post ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று இரவு உறைபனி மழையை எதிர்பார்க்கலாம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிபரல் அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம்

Posted: 23 Mar 2016 09:42 AM PDT

Trudeau_-_03222016

Trudeau_-_03222016புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லிபரல் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த வரவு செலவுத் திட்டம் குறித்த மக்கள் மத்தியில் விளக்கி ஆதரவு தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் அமைச்சர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினை நாடு முழுவதற்கும் தெளிவு படுத்தி அதற்கான ஆதரவினைத் திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் இன்று பங்கேற்பதுடன், தமது வரவு செலவுத் திட்டத்திட்டம் குறித்து விளக்குகின்றார்.

அமைச்சர்களும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள், அவற்றினை நிறைவேற்றுவதற்கான செலவீனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.Trudeau_-_03222016

அந்த வகையில் நிதி அமைச்சர் பில் மோர்னியோ இன்று காலையில் ஒட்டாவாவில் உரையாற்றவுள்ளதுடன், ஊடகங்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.

அதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படடுள்ள பல்வேறு திட்டங்கள் எந்த வகையில் நடுத்தர கனேடியர்களுக்கு பலனுள்ளதாக அமையும் என்ற விளக்கத்தினை, இன்று ஹலிஃபெக்ஸ் டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள திறைசேரியின் தலைவர் ஸ்கொட் பிறிசன் முன்வைக்கவுள்ளார்.

அதேபோல ரொரன்ரோ பிராந்திய வர்த்தக சபையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பெய்ன்சும், மார்க்கம் வர்த்தக சபையில் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலமும் உரையாற்றவுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னோ மொன்றியலில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post லிபரல் அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலஸ்ட்ராலுக்கு என்ன காரணம்?

Posted: 23 Mar 2016 07:42 AM PDT

h

hநமது உடல் கொலஸ்ட்ராலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது.

நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.

25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.h

* அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

* அதிக மாமிச உணவு உண்பது

* அதீத உடற்பருமன் (Obesity)

* உடல் இயக்கக் குறைவான பணிகள்.

* உடற்பயிற்சியின்மை

* அதிக தூக்கம்

* புகைப் பழக்கம்

* மன அழுத்தம்

* மதுப்பழக்கம்

* சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.

* கருத்தடை மாத்திரைகள்.

* பெற்றோர்களுக்கு மிகை கொலஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.

பொதுவாக இரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

The post கொலஸ்ட்ராலுக்கு என்ன காரணம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™