Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பலி

Posted: 23 Mar 2016 11:22 PM PDT

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயவாடாவில் உள்ள சித்தார்தா கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் குண்டூர் மாவட்டம் சித்தா நகரில் ஹோலி கொண்டாட வந்தனர்.

பால்தாக்கரேவை கொல்ல தீவிரவாதியை அனுப்பினோம்: டேவிட்ஹெட்லி வாக்குமூலம்

Posted: 23 Mar 2016 10:53 PM PDT

மும்பையில் 2008–ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்காவில் டேவிட்ஹெட்லி என்ற தீவிரவாதி பிடிப்பட்டான். இவன் லஷ்கர்–இ–தொய்யா தீவிரவாத இயக்கத்துக்கு நாசவேலை திட்டங்களை வகுத்து கொடுத்து செயல்பட்டார்.

கேரள சட்டசபை தேர்தலில் அதிமுக 7 தொகுதியில் போட்டி?

Posted: 23 Mar 2016 10:32 PM PDT

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 9 இடங்களில் பாலக்காடு – கோவை எல்லையில் உள்ள 3 பஞ்சாயத்துக்கள் மற்றும் தமிழக எல்லை பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டம் பீர்மேடு, தேவிகுளம் மற்றும் மறையூரில் உள்ள 3 வார்டுகள் என மொத்தம் 6 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதேபோல் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

மல்லையா விமானத்தையும் ஏலம் விட போகிறார்கள்: சேவை வரித்துறை நடவடிக்கை

Posted: 23 Mar 2016 09:56 PM PDT

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா நாடெங்கும் உள்ள 17 வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. வங்கிகளின் கூட்டமைப்பு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திருவனந்தபுரம் மத்திய தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியை களமிறக்க பா.ஜனதா திட்டம்

Posted: 23 Mar 2016 09:28 PM PDT

தமிழகம், புதுச்சேரியுடன் கேரள சட்டசபைக்கும் மே 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் அங்கு தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன.

தலையில் கொம்பு முளைக்கும் விநோத நோயால் அவதிப்படும் மூதாட்டி

Posted: 23 Mar 2016 08:48 PM PDT

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலையில் கொம்பு முளைக்கும், விநோத நோயால் ஒரு மூதாட்டி அவதிப்பட்டு வருகிறார். அவர் தன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார். இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திலும் மேலான உயிரினமாக

சபரிமலை அய்யப்பனுக்கு பம்பை ஆற்றில் ஆராட்டு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 23 Mar 2016 08:38 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும்: உலக வங்கி கணிப்பு

Posted: 23 Mar 2016 07:02 PM PDT

இந்தியாவில், அடுத்த நிதி ஆண்டில் (2016-17) தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஆய்வறிக்கை கூறுவதாவது:-

பெங்களூரு கலபுரகி சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted: 23 Mar 2016 05:16 PM PDT

கர்நாடக மாவட்டம் கலபுரகி மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக சிவக்குமார், லட்சுமணன், சுனில், தாஜூதின் ஆகிய 4 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் சிவக்குமார் கொலை வழக்கில் கைதாகி இருந்தார். மற்ற 3 பேரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.

விடுதலைப்போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜகுருவுக்கு மோடி புகழ் அஞ்சலி

Posted: 23 Mar 2016 04:59 PM PDT

இந்திய திருநாட்டின் விடுதலை வேள்வியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த 3 இளைஞர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு. லாகூர் குண்டுவெடிப்பு சதி வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மூவரும் 1931-ம் ஆண்டு, மார்ச் மாதம் 23-ந் தேதி லாகூர் சிறையில் தூக்கில் போடப்பட்டனர்.

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த போன் மூலம் இண்டிகோ நிறுவனத்தின் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 23 Mar 2016 04:47 PM PDT

சென்னையில் உள்ள இண்டிகோ விமான நிறுவனத்தின் அழைப்பு மையத்துக்கு நேற்று காலை 11.10 மணி அளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தனது பெயர் ஸ்மித் எனவும் தான் அமெரிக்காவில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்தார்.

ரெயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் மூத்த குடிமக்களுக்கு 6 கீழ் படுக்கை வசதி: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

Posted: 23 Mar 2016 04:28 PM PDT

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கீட்டை அதிகரித்து பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவிப்பு வெளியிட்டார்.

டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் சந்திப்பு

Posted: 23 Mar 2016 03:05 PM PDT

டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள்

தமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக தேர்தல் கமிஷனிடம் கனிமொழி எம்.பி. புகார்

Posted: 23 Mar 2016 02:20 PM PDT

டெல்லி மேல்-சபை தி.மு.க. எம்.பி.யான கனிமொழி நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, அவர் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக கூறி 11 புகார் மனுக்களை அவர்களிடம் அளித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் - பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல் இன்று முடிவு செய்யப்படும்: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

Posted: 23 Mar 2016 01:07 PM PDT

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல்

தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் சென்னை என்ஜினீயர் மாயம்

Posted: 23 Mar 2016 12:42 PM PDT

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கன்னையா குமாரை ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் அனுமதிக்காததை அடுத்து பதற்றமான சூழ்நிலை

Posted: 23 Mar 2016 10:30 AM PDT

ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 பேரை, பல்கலைக் கழக நிர்வாகம் விடுதியிலிருந்து வெளியேற்றியது. இதனால் மனமுடைந்த ரோகித், தான் தங்கியிருந்த விடுதியில் கடந்த ஜனவரி மாதம் 17–ம் தேதி தற்கொலை செய்து

பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு நினைவு நாளில் சோனியா காந்தி அஞ்சலி

Posted: 23 Mar 2016 08:16 AM PDT

இந்திய சுதந்திர போராட்டத்தின்பொழுது புரட்சியில் ஈடுபட்ட கதாநாயகர்களான ஷாஹீத்-இ-ஆசம் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று அஞ்சலி செலுத்தினார். வீரமரணம் அடைந்த அவர்களின் தீர செயல்கள் மற்றும் தெளிவான எண்ணங்கள் ஒவ்வொரு இந்தியரின் மனதில்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகள்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 23 Mar 2016 05:20 AM PDT

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கிழ் சுமார் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2022–ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம்

ரோகித் வெமுலாவிற்கு நீதி வழங்கக் கோரி ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் கன்னையா குமார் இன்று பேசுகிறார்

Posted: 23 Mar 2016 05:06 AM PDT

ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 பேரை, பல்கலைக் கழக நிர்வாகம் விடுதியிலிருந்து வெளியேற்றியது. இதனால் மனமுடைந்த ரோகித், தான் தங்கியிருந்த விடுதியில் கடந்த ஜனவரி மாதம் 17–ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவானது. பல்கலைக் கழக துணை வேந்தர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™