Tamil Star |
- வெயில் காலத்தில் உளுந்து சாப்பிடலாமா?
- குழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள்
- முதியவர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவுக்கான வயது எல்லை 65ஆக குறைப்பு
- காவல்த்துறையினரால் துரத்திச் சென்ற வாகனம் விபத்து – 8 பேர் காயம்
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : ஒருவர் படுகாயம்
- இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி
| வெயில் காலத்தில் உளுந்து சாப்பிடலாமா? Posted: 20 Mar 2016 06:41 PM PDT
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும். தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும். இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பு உளுந்து,வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு இல்லை உளுத்தம்பருப்பு அஜீரணத்தை அதிகரிப்பதோடு, பித்தத்தையும் அதிகப்படுத்தும் எனவே கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது. The post வெயில் காலத்தில் உளுந்து சாப்பிடலாமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள் Posted: 20 Mar 2016 06:11 PM PDT
இவ்வாறு கட்டுப்பாடின்றி உள்ளெடுக்கும் சில வகை உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கபடுவது மட்டுமன்றி குழந்தைப் பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த உணவு வகைகள் தாம்பத்திய உறவில் உண்டான நாட்டத்தினை வெகுவாக பாதிப்பதன் ஊடாக குழந்தைப் பாக்கியம் அற்றுப்போகின்றது. பிரெஞ்ச் ப்ரைஸ் பிரெஞ்ச் ப்ரைஸ் சுவை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால் உங்கள் தமனிகள் அடைபடாமல் இருக்க வேண்டுமானால் அதனை நீங்கள் தவிர்ப்பதே நல்லதே. ஏதோ ஒரு வகையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கொழுப்பு சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கியுள்ள உணவுகள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு நல்லதல்ல. அவ்வகை உணவுகளை அளவாக உண்ணவும்; குறிப்பாக 30 வயதுக்கு மேலானவர்கள். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை தவிர்க்கவும். சர்க்கரை உணவுகள் (Refined Sugar) ரிஃபைன்ட் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவதில் சிரமம் ஏற்படும். மேலும் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்ட்டிரோஜன் சுரப்பதற்கு தடையாக இருக்கிறது. துரித உணவுகள் துரித உணவுகள் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும், இவ்வகை உணவுகளில் தீவனச்சேர்க்கை பொருட்கள் மற்றும் பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும், இது உங்கள் கருத்தரிப்பு திறனை வெகுவாக பாதிக்கும். டப்பாவில் அடைத்துவைக்கப்பட்ட உணவுகள் டப்பாவில் அடைக்கப்பட்ட கெட்டுப் போகாமல் இருப்பதற்கு இராசயனங்களை பயன்படுத்துவதால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர்தக்க வைத்தலை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள மெர்குரி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். The post குழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதியவர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவுக்கான வயது எல்லை 65ஆக குறைப்பு Posted: 20 Mar 2016 06:05 PM PDT
கனடாவில் முதியவர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவுக்கான வயது எல்லை 65ஆக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டுள்ளார். முன்னராக ஆட்சி செய்த பழமைவாதக் கட்சி அரசாங்கம் "Old Age Security pension" என அழைக்கப்படும் இந்த ஓய்வூதியக் கொடுப்பனவினை முதியவர்கள் பெற்றுக் கொள்வதற்கான வயது எல்லையை 67 ஆக அதித்திருந்தது. ஆனால் கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த வயது எல்லையை மீண்டும் 65ஆக மாற்றுவோம் என்று லிபரல் கட்சி அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றி ஈட்டி லிபரல் அரசாங்கம் தற்போது ஆட்சியமைத்துள்ள நிலையில், தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதியவர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவுக்கான வயது எல்லை 65ஆக மீண்டும் குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எமது சமூதாயத்தில் மிகவும் பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடிய மக்கள் மீது நாம் எவ்வளவு கரிசனை கட்டுகின்றோம் என்பது மிகவும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த திட்டம் மிகவும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளதையும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். The post முதியவர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவுக்கான வயது எல்லை 65ஆக குறைப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காவல்த்துறையினரால் துரத்திச் சென்ற வாகனம் விபத்து – 8 பேர் காயம் Posted: 20 Mar 2016 02:37 PM PDT
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்ட சிறப்பு விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர், யோர்க் வீதி மற்றும் Bremner Boulevard பகுதியில் அதிகாலை 3 மணியளவில் கார் ( Acura) ஒன்றை நிறுத்துவதற்காக காவல்த்துறையினர் துரத்திச் சென்றிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் அவர் விபரித்துள்ளார். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர் என்றும், அவர்கள் மூன்று உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். காயமடைந்த 8 பேரில் மூன்று பேர் மோசமான காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து குறித்த வீதிப் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்ததுடன், சிறப்புப் விசாரணைப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது. The post காவல்த்துறையினரால் துரத்திச் சென்ற வாகனம் விபத்து – 8 பேர் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : ஒருவர் படுகாயம் Posted: 20 Mar 2016 10:28 AM PDT
படுகாயமடைந்த நபர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Bayview மற்றும் Steeles avenues பகுதிக்கு அருகில் வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் அதிகாலை 4.30 மணிக்குப் பின்னர் இடம்பெற்றதாக தெரிவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி Posted: 20 Mar 2016 10:10 AM PDT
Stoney Creek இற்கு அருகில் குயின் எலிசபெத் வீதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் ஒன்று நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர். விபத்தை அடுத்து குறித்த பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். The post இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.

தற்போதைய காலத்தில் அனைவரும் சுவைக்காகவே உணவுகளை உட்கொள்கின்றார்களே அன்றி உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொள்வதில்லை.





இன்று ஞாயிற்றுக்கிழமை Financial District இல் இடம்பெற்ற மோசமான விபத்தை அடுத்து, விசாரணைகளை மேற்கொள்ள மாகாண சிறப்புப் விசாரணைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
