மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் நடிகர், நடிகை
- பா.ஜனதா கூட்டணி குறித்து ஒரு வாரத்துக்குள் அறிவிப்போம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
- பிணைத்தொகை ரூ.10 கோடி கொடுக்க தவறியதால் சிறுவனைக் கொன்ற கடத்தல்காரர்கள் கைது
- கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை
- பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல்: வேட்பாளர்களுக்கு உதவ தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு
- இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம்
- உத்தரகாண்ட் அரசியல் நெருக்கடிக்கு பாரதீய ஜனதா காரணம் அல்ல: அருண் ஜெட்லி பேட்டி
- நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு: சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா கோரிக்கை
- வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பிய 77 சதவீத மாணவர்கள் தகுதி தேர்வில் தோல்வி
- பிரதமர் மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு
- கட்சியின் மூத்த தலைவர்களுடன் மெகபூபா விரைவில் ஆலோசனை
- தண்ணீருக்காக ஏற்படும் வன்முறைகளை தவிர்க்க முதல் முறையாக மராட்டிய மாநிலத்தில் 144 தடை உத்தரவு
- தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை: தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நாளை அசாம் பயணம்
- மத்திய நிதி அமைச்சகம் அலுவலத்தில் திடீர் தீ விபத்து
- டெல்லியில் 4 நாய்களை அடித்து கொன்ற வாலிபர்: வீடியோ காட்சி வெளியீடு
- அரசியலில் வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிப்போம், தேசவிரோதத்திற்கு அல்ல: ராஜ்நாத் சிங் பேச்சு
- 40 நாட்களாக கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்திய மாலுமி மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்
- கார்கில் பனிச்சரிவில் சிக்கி மாயமான தமிழக இராணுவ வீரரின் உடல் மீட்பு
- மும்பை விமான நிலையத்தில் கவர்ச்சிகரமான 146 ஆமைகள் பறிமுதல்: சுங்க அதிகாரிகள் நடவடிக்கை
- காஷ்மீரில் ஆட்சி அமைக்க பி.டி.பி-யின் புதிய நிபந்தனைகளை ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை: பா.ஜ.க.
| கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் நடிகர், நடிகை Posted: 20 Mar 2016 09:51 PM PDT கேரளாவில் வருகிற மே 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கி உள்ளது. பா.ஜனதா கட்சியும் பல்வேறு அமைப்புகளை ஒன்று சேர்ந்து 3-வது |
| பா.ஜனதா கூட்டணி குறித்து ஒரு வாரத்துக்குள் அறிவிப்போம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Posted: 20 Mar 2016 08:53 PM PDT டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற தேசிய செயற்குழுவில் கலந்துகொண்ட பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேசிய செயற்குழு கூட்டம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. |
| பிணைத்தொகை ரூ.10 கோடி கொடுக்க தவறியதால் சிறுவனைக் கொன்ற கடத்தல்காரர்கள் கைது Posted: 20 Mar 2016 08:20 PM PDT ஐதராபாத் நகரின் ஷாகினாயாத்காஞ் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் அபாய் மொதானி (வயது 15). கடந்த புதன்கிழமை மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற அபாய், மாலை வரையில் வீடு திரும்பவில்லை. |
| Posted: 20 Mar 2016 05:25 PM PDT மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274-வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது. |
| பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல்: வேட்பாளர்களுக்கு உதவ தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு Posted: 20 Mar 2016 05:13 PM PDT பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் போன்ற நடவடிக்கைகளில் வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. |
| இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம் Posted: 20 Mar 2016 04:58 PM PDT இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் 4 ஆயிரத்து 802. அதில் தற்போது 3 ஆயிரத்து 894 பணி இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான 908 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 114 பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த |
| உத்தரகாண்ட் அரசியல் நெருக்கடிக்கு பாரதீய ஜனதா காரணம் அல்ல: அருண் ஜெட்லி பேட்டி Posted: 20 Mar 2016 04:48 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கட்சித்தலைவர்கள் மத்திய அரசுக்கும், |
| நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு: சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா கோரிக்கை Posted: 20 Mar 2016 03:19 PM PDT பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், கடந்த 6-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். |
| வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பிய 77 சதவீத மாணவர்கள் தகுதி தேர்வில் தோல்வி Posted: 20 Mar 2016 01:58 PM PDT வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றி அடைந்த பின்னர் தான் அவர்கள் இந்தியாவில் நிரந்தர டாக்டர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். |
| Posted: 20 Mar 2016 01:15 PM PDT காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- பா.ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் பதவி ஏற்றது முதல் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. |
| கட்சியின் மூத்த தலைவர்களுடன் மெகபூபா விரைவில் ஆலோசனை Posted: 20 Mar 2016 12:31 PM PDT காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையேஒருமித்த கருத்து ஏற்படவில்லை. |
| தண்ணீருக்காக ஏற்படும் வன்முறைகளை தவிர்க்க முதல் முறையாக மராட்டிய மாநிலத்தில் 144 தடை உத்தரவு Posted: 20 Mar 2016 11:45 AM PDT மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக தண்ணீருக்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் குழாய்கள்,கிணறுகள்,தண்ணீர் தொட்டிகள், உள்ளிட்ட இடங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் திரளக்கூடாது. |
| தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை: தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நாளை அசாம் பயணம் Posted: 20 Mar 2016 11:16 AM PDT அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 மற்றும் 11–ந் தேதி 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநில தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நாளை (திங்கட்கிழமை), |
| மத்திய நிதி அமைச்சகம் அலுவலத்தில் திடீர் தீ விபத்து Posted: 20 Mar 2016 11:09 AM PDT மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் உள்ள அலுவலக அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் |
| டெல்லியில் 4 நாய்களை அடித்து கொன்ற வாலிபர்: வீடியோ காட்சி வெளியீடு Posted: 20 Mar 2016 10:34 AM PDT டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அருகே நாய்கள் இறந்து கிடப்பதாக டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு குட்டையில் 3 தெரு நாய்களும், ஒரு நாய்க்குட்டியும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தன. |
| அரசியலில் வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிப்போம், தேசவிரோதத்திற்கு அல்ல: ராஜ்நாத் சிங் பேச்சு Posted: 20 Mar 2016 09:39 AM PDT அரசியலில் மாறுபட்ட கருத்துக்களுக்கும், விமர்சனத்திற்கு பா.ஜ.க., அரசு இடமளிக்கும், ஆனால் தேசத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பா.ஜ.க., மத்திய செயற்குழுக் கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். |
| 40 நாட்களாக கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்திய மாலுமி மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல் Posted: 20 Mar 2016 07:53 AM PDT 40 நாட்களாக கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்திய மாலுமி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட் கடலில் சென்ற 'மேக்சிமஸ்' என்ற கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளையும், ஒரு பாகிஸ்தான் மாலுமியையும் கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்திச்சென்றனர். |
| கார்கில் பனிச்சரிவில் சிக்கி மாயமான தமிழக இராணுவ வீரரின் உடல் மீட்பு Posted: 20 Mar 2016 07:49 AM PDT காஷ்மீரில் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 12 அடி ஆழத்தில் சிக்கி மாயமான இராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் கார்கில் பனி சிகரம் 17,500 அடி உயரம் கொண்டது. இங்கு இந்திய ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் வீரர்களை ஈடுபடுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்தப் பகுதியில் லேசான நிலநடுக்கம், கடும் பனிப் பொழிவும் ஏற்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. |
| மும்பை விமான நிலையத்தில் கவர்ச்சிகரமான 146 ஆமைகள் பறிமுதல்: சுங்க அதிகாரிகள் நடவடிக்கை Posted: 20 Mar 2016 07:36 AM PDT மும்பை விமான நிலையத்தில் நேபாளத்தை சேர்ந்தவரிடம் இருந்து 146 ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆப்பிரிக்காவை ஒட்டிய மடாகாஸ்கர் தீவில் இருந்து வந்திருந்த அந்த நபர், நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு செல்வதற்காக காத்திருந்தார். அவரது பேக்கினை சோதனை செய்த போது இந்த ஆமைகள் சிக்கியது. |
| காஷ்மீரில் ஆட்சி அமைக்க பி.டி.பி-யின் புதிய நிபந்தனைகளை ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை: பா.ஜ.க. Posted: 20 Mar 2016 07:02 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சையது காலமானதையடுத்து, அங்கு புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-பிடிபி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதில் உள்ள முட்டுக்கட்டைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, பி.டி.பி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |