Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனேடியப் பிரதமர் நியூயோர்க் பயணம்: ஐ.நா செயலாளரையும் சந்திக்கின்றார்

Posted: 15 Mar 2016 09:46 AM PDT

Prime_Minister_Justin_Trudeau_-_02162016

Prime_Minister_Justin_Trudeau_-_02162016கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நாளை அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் அவர் நியூயோக்கிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடியப் பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் அமெரிக்காவின் வோசிங்டனிற்கு முதல் பயணத்தை சென்ற வாரமே மேற்கொண்டிருந்த நிலையில், நாளை நியூயோக் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நியூயோர்க் செல்லும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் சந்திப்பொன்றையும் நடாத்த உள்ளார் என பிரதமர் அலுவலம் அறிவித்துள்ளது.

நாளை புதன் கிழமை இந்த சந்திப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Prime_Minister_Justin_Trudeau_-_02162016

இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கனடாவின் தொடர்ச்சியா ஆதரவு, பெண்களின் உரிமை மற்றும் பாலினச் சமத்துவம் போன்ற விடயங்களின் மேம்பாடு என்பன தொடர்பில் கனேடியப் பிரதமர் மீள்ளுறுதிப்படுத்துவார் என்றும் கூறப்பட்டுகிறது.

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடா அங்கத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பினை கனேடியப் பிரதமர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்களும் வெளியாகியுள்ளன.

The post கனேடியப் பிரதமர் நியூயோர்க் பயணம்: ஐ.நா செயலாளரையும் சந்திக்கின்றார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

படையினர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்

Posted: 15 Mar 2016 09:08 AM PDT

oronto_Police_Chief_Mark_Saunders_-_03152016

oronto_Police_Chief_Mark_Saunders_-_03152016கனேடிய இராணுவப் படை உறுப்பினர் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரொரன்ரோவில் உள்ள படையினர் ஆட்சேர்ப்பு மையத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீரென நுளைந்த நபர் ஒருவர், அங்கு சீருடை அணிந்திருந்த கனேடிய இராணுவ உறுப்பினர் இருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

சம்பவத்தை அடுத்து தாக்குதல் நடாத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சில விபரங்களை விடுத்திருந்த காவல்த்துறையினர், குறித்த சம்பவம் பயங்கரைவாதச் செயலுடன் தொடர்புடையதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.oronto_Police_Chief_Mark_Saunders_-_03152016

தாக்குதலிற்கான நோக்கம் தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்வதற்கு மேலும் நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடாத்திய நபர் 27 வயதான Ayanie Hassan Ali என அடையாளம் காணப்பட்டள்ளார்.

இவர் கனடாவின் மொன்றியலில் பிறந்தவர் என்றும், கடந்த ஐந்து வருடங்களாக ரொரன்ரோவில் வசித்து வருகின்றார் என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கத்திக்குத்துக்கு ஆளான படை வீரர்கள் இருவருக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post படையினர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுமக்களின் விபரங்களை பகிந்துகொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு

Posted: 15 Mar 2016 09:00 AM PDT

canada_america_flag_-_03052016

canada_america_flag_-_03052016அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே பொதுமக்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் திட்டம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மூன்று நாள் அரசமுறைப் பயணமாக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதன் போது நீண்டகாலமாக தேக்கமடைந்திருந்த குறித்த இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கை கரூன் (Guy Caron)லிபரல் அரசாங்கத்தின் குறித்த அந்த தகவல் பரிமாற்ற தி்ட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னராக மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்கள் எத்தகைய தேவைகளுக்கு பயன்படு்த்தப்படவுள்ளன என்பது குறித்தும், இவ்வாறான தகவல்களை வழங்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் பரிமாற்றம் தொடர்பில் கனேடிய சிவில் உரிமைகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரியும் கருத்து வெளியிட்டுள்ளார்.canada_america_flag_-_03052016

அமெரிக்காவுடன் இவ்வாறான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம், அவற்றை துஸ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

தனி நபர்கள் தொடர்பிலான பெருமளவிலான தகவல்களை சேகரிப்பதன் மூலம், ஒருவரின் அனைத்து விபரங்களும் இலகுவாக பட்டியலிடப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா கனடா இடையேயான எல்லை சோதனை நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு இவ்வாறான ஒரு உடன்படிக்கை அவசியமானதாக உள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post பொதுமக்களின் விபரங்களை பகிந்துகொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™