Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திர சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு

Posted: 15 Mar 2016 11:09 PM PDT

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினர். இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் பதவியை பறிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி–திருமலைக்கு 24 மணி நேரமும் பஸ் வசதி - ஊழியர்கள் விடுப்பில் செல்ல தடை

Posted: 15 Mar 2016 11:00 PM PDT

கோடை விடுமுறையில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களது வசதிக்காக திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் பங்குனி பூஜை: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Posted: 15 Mar 2016 10:59 PM PDT

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பிறப்பையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.

உயிரோடு இருக்கும் போது கணவர் இறந்ததாக கூறி சொத்தை அபகரித்த மனைவி

Posted: 15 Mar 2016 10:55 PM PDT

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது மனைவி வீரம்மா, சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக வேலைக்கு செல்லாததால் அவரை வீரம்மா, மகன்கள் சுப்பையா, ரமணா வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

மோடி உத்தரவால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் கோப்புகள் அகற்றம்

Posted: 15 Mar 2016 10:24 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி 2 வாரங்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் தேவை இல்லாமல் தேங்கி கிடக்கும் கோப்புகளை கண்டெடுத்து அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கோப்புகளை சரிபார்த்து

திருச்சூர் அருகே கோவில் திருவிழாவில் தந்தத்தால் யானை குத்தி பாகன் பலி

Posted: 15 Mar 2016 09:36 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் அருகே தைகாட்டுச்சேரியில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு திருவிழா நடைபெற்றது. இதில் குட்டி சங்கரன் என்ற யானை ஊர்வலமாக கோவிலை வலம் வந்தது. இரவு 10.30 மணியவில் யானை குட்டிசங்கரனுக்கு திடீர் என்று மதம்

சென்னை ஷோரூமில் ரூ.2 கோடி கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச் சென்றவன் பீகாரில் பிடிபட்டான்

Posted: 15 Mar 2016 08:59 PM PDT

சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச் சென்றவனை சென்னை போலீசார் பீகார் மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.

தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்களின் பாதுகாப்பு செலவு ரூ.5 கோடியே 62 லட்சம் பாக்கி: பட்னாவிஸ் தகவல்

Posted: 15 Mar 2016 08:44 PM PDT

பிரபல தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மாநில அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 62 பேர், பாதுகாப்பு செலவு தொகையை முறையாக செலுத்தவில்லை என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் வரையில்

மும்பையில் பெருகி வரும் துரித உணவுக்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும்: சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் பேச்சு

Posted: 15 Mar 2016 08:38 PM PDT

மராட்டிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தொடரில் சயான் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- மும்பையில் ஆரோக்கியமற்ற சைனீஸ், பீட்சா, பிரான்கி போன்ற துரித

அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் போட்ட விவகாரம்: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து கன்னையா குமார் நீக்கமா?

Posted: 15 Mar 2016 08:33 PM PDT

நமது ஜனநாயகத்தின் திருக்கோவில் என்று கொண்டாடப்படுகிற பாராளுமன்றத்தில் 2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ந்தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி 9 பேரை கொன்று குவித்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து, கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

இடைநீக்க உத்தரவை எதிர்த்து ரோஜா வழக்கு: ஆந்திரா ஐகோர்ட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 15 Mar 2016 08:32 PM PDT

நடிகை ரோஜா ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர பிரதேச சட்டசபை விவாதத்தின் போது, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி சபையில் இருந்து ரோஜாவை ஒரு ஆண்டு

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கட்டுமானப் பணியின்போது மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த தொழிலாளிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

Posted: 15 Mar 2016 08:32 PM PDT

டெல்லி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையமான 'எய்ம்ஸ்' ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கின் அருகே புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வேலைசெய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரும் கடந்த

மும்பையில் விமானத்தின் டயர் வெடித்தது: பயணிகள் காயம்

Posted: 15 Mar 2016 08:21 PM PDT

நாக்பூரில் இருந்து மும்பை வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் திடீரென்று வெடித்ததால் அவசரவழியாக வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. 150-க்கும் அதிகமான பயணிகளுடன் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர்

குஜராத்தில் ஊடுருவிய 10 தீவிரவாதிகளில் 3 பேர் சுட்டுக்கொலை

Posted: 15 Mar 2016 08:15 PM PDT

லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர், சமீபத்தில் கடல் வழியாக குஜராத் மாநிலத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்தது. அவர்கள் சோமநாதர் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்த

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்: பாராளுமன்றத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 15 Mar 2016 08:15 PM PDT

மேற்குவங்காள மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 மந்திரிகள், எம்.பி.க்கள் சிலர், ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதற்காக லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் வடமாநில செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் குதிரையை தாக்கியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு

Posted: 15 Mar 2016 07:46 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் பின்பகுதி கால் உடைந்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ காட்சிகள் பரவியது.

குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி மனு: அன்புமணி ராமதாஸ் வழக்கு ஏப்ரல் 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 15 Mar 2016 07:37 PM PDT

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்த போது 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது: நுகர்வோர் பயன் அடையவே சட்டம் என வெங்கையா நாயுடு பேச்சு

Posted: 15 Mar 2016 07:31 PM PDT

ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும் வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றை மத்திய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. 'ரியல் எஸ்டேட் மசோதா- 2015' என்னும் இந்த மசோதா கடந்த வாரம் டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேறியது.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: கர்நாடக அரசின் வாதம் இன்றும் தொடருகிறது

Posted: 15 Mar 2016 07:08 PM PDT

புதுடெல்லி, மார்ச்.16- சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. மேல்முறையீட்டு மனுவின் மீதான இறுதி விசாரணை பிப்ரவரி 23-ந்தேதி தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே தன்னுடைய வாதத்தை 11-ந்தேதி நிறைவு செய்தார். 5-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய வாதத்தை தொடங்கினார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தனிக்கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மட்டுமே விசாரணையின்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். புதிதாக வேறு எந்த ஆவணங்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்றனர். இதற்கு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, இரண்டு தொகுப்புகள் அடங்கிய ஆவணங்களின் துணையுடன் மட்டுமே எங்கள்

விவசாய வருமானம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் லட்சம் கோடி வரி ஏய்ப்பு: விசாரணை நடப்பதாக அருண் ஜெட்லி தகவல்

Posted: 15 Mar 2016 06:54 PM PDT

டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் ஒரு பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசியதாவது:- விவசாய வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. இதை பயன்படுத்தி, விவசாய வருமானம் என்று கூறிக்கொண்டு, ரூ.2 ஆயிரம் லட்சம் கோடி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™