Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பெண் ஒருவரை அடையாளம் காணுவதற்கு பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது

Posted: 11 Mar 2016 07:48 PM PST

gjy

gjyபெண் ஒருவரை அடையாளம் காணுவதற்கு உதவுமாறு ரொரன்ரோ காவல்த்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Bathurst மற்றும் Harbord வீதிகள் அமைந்துள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த பெண் காவல்த்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண்ணின் ஒளிப்படத்தையும் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர். அவர் 65 இற்கும் 70 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர் என்றும், ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம் உடையவர் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவர் மெல்லிய உடல் கட்டானவர் என்றும், நீல நிறக் கண்கள் மற்றும் வெள்ளி நிறமான தலைமுடி கொண்டவர் என்றும் விபரித்துள்ளனர்.gjy

இந்த பெண்ணை அடையாளம் தெரிந்தவர்கள் 416-808-1400 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 216-222-TIPS(8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post பெண் ஒருவரை அடையாளம் காணுவதற்கு பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது

Posted: 11 Mar 2016 12:06 PM PST

Arrest_-_11252015

Arrest_-_11252015ஆயுதக் கடத்தல் கும்பல் குறித்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர், அது தொடர்பில் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த பத்துப் பேரும் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர், இந்த பத்து பேர் மீதும் இதுவரை சுமார் 111 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் ஒருவருட காலமாக மேற்கொண்டு வரும் குறித்த விசாரணை நடவடிக்கைக்கு "புரஜெக்ட் கிர்பி" எனப் பெயரிடப்படடுள்ளதுடன், இந்த விசாரணை நடவடிக்கை தொடர்பில் ஒன்ராறியோவின் வின்ட்சர் பிராந்திய அதிகாரிகளுடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் இணைந்து ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Arrest_-_11252015

அமெரிக்காவின் மிச்சிக்கன் எல்லைப் பகுதி ஊடாக கனடாவின் ஒன்ராறியோவுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ காவல்த்துறையினர், குறிந்த இந்த நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது, ஏழு கைத்துப்பாக்கிகளையும், ஒரு தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவி்ன் வின்ட்சர் மற்றும் லண்டன் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை காவல்த்துறையினர் மேற்கொண்டிருந்ததாகவும், அதன் போது போதைப் பொருட்கள், ரொக்கப்பணம், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் வீடுடைப்பு சம்பவம் – நான்கு சந்தேக நபர்களுக்கு காவல்த்துறை வலைவீச்சு

Posted: 11 Mar 2016 12:00 PM PST

home_invasion_-_201602010

home_invasion_-_201602010மிசிசாக பகுதியில் இடம்பெற்றுள்ள வீடுடைப்பு சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேக நபர்களுக்கு காவல்த்துறையினர் வலைவீசியுள்ளனர்.

மாவிஸ வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதி சந்திப்புக்கு அருகே, Felicity Crescentஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 12.40 அளவில் இந்த வீடுடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வீட்டினை உடைத்து சந்தேக நபர்கள் உள்நுளைந்த போதிலும், வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.home_invasion_-_201602010

சம்பவ இடத்தில் இருந்து சந்தேக நபர்கள் நால்வர் கார் ஒன்றில் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் தேடி வருவதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுடைப்புச் சம்பவம் தொடர்பில், அல்லது சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 905-453-3311 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

The post மிசிசாகாவில் வீடுடைப்பு சம்பவம் – நான்கு சந்தேக நபர்களுக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™