Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள்

Posted: 10 Mar 2016 06:19 PM PST

l

lஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.

எடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களையும், எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

* தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

* ப்ளாக்பெரியில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் டயட்டில் இருக்கும் போது இதனை உட்கொள்ளலாம்.

* இதேபோன்று வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்ளலாம்.78

* பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமுள்ள அதேநேரத்தில் சர்க்கரை குறைவாகவுள்ள பப்பாளி பழத்தை சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.

* தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 10 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, உடல் எடையும் குறையும்.

* உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.

The post உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மருத்துவ செய்தி சர்க்கரை நோயாளிகளுக்கான “செம்பருத்தி பூ தோசை”

Posted: 10 Mar 2016 06:16 PM PST

gt

gtஎந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையின் கொடை தான் செம்பருத்தி.

அழகுக்காக பலரும் வளர்த்தாலும் இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும், இதன் இலைகளை கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் சீராகவும் இருக்க உதவுகிறது.

தொடர்ந்து இதை பயன்படுத்தினால் ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.gt

இந்த பூவைக் கொண்டு தோசை செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது.

அதுமட்டுமின்றி பெண்கள் மாதவிடாய் நேரங்களில் சாப்பிட்டு வருவதும் நல்லது.

செய்முறை

செம்பருத்தி இதழ்களை அரைத்து தோசை மாவுடன் கலக்கிக் கொள்ளவும்.

இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்த்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

The post மருத்துவ செய்தி சர்க்கரை நோயாளிகளுக்கான "செம்பருத்தி பூ தோசை" appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு – ரொரன்ரோ இளைஞர் தேடப்படுகிறார்

Posted: 10 Mar 2016 06:14 PM PST

g

gஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் முகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் ரொரன்ரோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில், ஈட்டோபிக்கோவில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கீழ்த் தளத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர், ரொரன்ரோவைச் சேர்ந்த 20 வயதான Tyler Cameron என்பவர் மீது கைது ஆணை பிறப்பித்துள்ளனர்.g

குறித்த அந்த நபர் மீது தாக்குதல், ஆயுதப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது இதற்கு முன்னர் குற்றச்செயல்கள் தொடர்பிலான பதிவுகள் எவையும் இல்லாத போதிலும், தற்போது அவர் ஆயுதங்களுடன் நடமாடக்கூடும் என்பதனால் அபாயகரமானர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அவர் தற்போது 2000 ஆண்டு தயாரிப்பான வெள்ளை நிற, BWKS 218 என்ற இலக்கத் தகட்டுடனான BMW ரக காரை பயன்படுத்தக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், அவரின் நிழற்படத்தினையும் வெளியிட்டுள்ளதுடன், அவர் தொடர்பில் தகவல் அறிந்தோர்  தம்மை 416-808-2306 என்ற இலக்கத்தில் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை 416-222-8477 (TIPS) என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு – ரொரன்ரோ இளைஞர் தேடப்படுகிறார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார் ஒபாமா

Posted: 10 Mar 2016 06:00 PM PST

o

oவிரைவில் கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையேயான சந்திப்பின் போதே அவர் இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.

தான் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் எதிர்வரும் கோடை காலத்தில் கனடாவுக்கு வருகை தரவுள்ளதாகவும், அப்போது கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் அரசமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு இன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் அதி உச்ச அரச வரவேற்பும் விருந்துபசாரமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.o

கடந்த 19 வருடங்களில் முதன் முறையாக கனேடிய தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உச்சபட்ச விருந்து வரவேற்பின் போது, நூற்றுக்கணக்கான கொடிகள் பறக்கவிடப்பட்டு, இராணுவ இசை முழங்க, பீரங்கி மரியாதைகள் செலுத்தப்பட்டு வெள்ளை மாளிகையில் ஜஸ்டின் ரூடோ வரவேற்கப்பட்டுள்ளார்.

The post கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார் ஒபாமா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™