மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வாழும் கலையின் சர்வதேச கலாச்சார விழாவிற்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆதரவு
- உலக கலாச்சார விழா விவகாரம்: அபராத தொகை ரூ.5 கோடியை செலுத்த 4 வாரம் அவகாசம் கேட்டது வாழும் கலை அமைப்பு
- ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி: 7 பெரிய பைகளுடன் விமானத்தில் தப்பிய விஜய் மல்லையா
- காளஹஸ்தி கோவிலுக்கு ஜடாமுடி கோலத்தில் வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா
- பெண்கள் பற்றி இழிவான பேச்சு: நடிகர் பாலகிருஷ்ணாவை கைது செய்ய வேண்டும் மேலும் ஒரு வக்கீல் புகார்
- தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி கூடாரம் காலியானது: கட்சி தாவிய 12 எம்.எல்.ஏ.க்களும் ஆளும் கட்சி உறுப்பினராக அங்கீகாரம்
- திருப்பதி கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஐதராபாத் ஐகோர்ட்டு தடை
- இந்தியாவில் இருந்து தப்பிச்செல்லவும் இல்லை - தலைமறைவாகவும் இல்லை: விஜய் மல்லையா
- டெல்லி மேல்-சபைக்கு ஏ.கே.அந்தோணி வேட்புமனு தாக்கல்
- மூடநம்பிக்கையால் மாற்றுத்திறனாளி குழந்தையின் கால்களை உரக்குழியில் புதைத்து வைத்த தம்பதி
- பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
- காவிரி நடுவர்மன்ற தலைவர் மாற்றம்: சட்ட கமிஷன் தலைவராக நியமனம்
- அடுத்த தலைமுறைக்கான மார்க்-3 ராக்கெட் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
- சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் முடிந்தது: விசாரணையை 15-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது
- டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தற்கொலை
- இஸ்ரத் ஜகான் என்கவுண்ட்டர் வழக்கு: தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அரசியல் இருக்கக்கூடாது - ராஜ்நாத் சிங் பேச்சு
- பெற்றோரை கவனிக்கும் கடமை திருமணமான மகளுக்கும் உண்டு: நாக்பூர் ஐகோர்ட்டு கருத்து
- ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா சாமி தரிசனம்
- இந்திய வரலாற்றை புரிந்து கொள்ள வெளிநாட்டு ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டும்: வரலாற்று பேராசிரியர் சுரேந்திரா பேச்சு
- சிறை செல்லத் தயார், அபராதம் கட்டமாட்டேன்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதி
| வாழும் கலையின் சர்வதேச கலாச்சார விழாவிற்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆதரவு Posted: 10 Mar 2016 11:23 PM PST யமுனை நதியின் வெள்ளச்சமவெளியில் உலக கலாச்சார விழா நடத்துவற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இதை அரசியலாக்க கூடாது என்று கூறியுள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விழா நடத்துவதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். |
| Posted: 10 Mar 2016 11:14 PM PST ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான 'வாழும் கலை' அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் இன்று முதல் 13–ந் தேதிவரை, 'உலக கலாசார திருவிழா' நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தில் திருவிழா நடக்கிறது. |
| ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி: 7 பெரிய பைகளுடன் விமானத்தில் தப்பிய விஜய் மல்லையா Posted: 10 Mar 2016 10:03 PM PST ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி செய்து லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா 7 பெரிய பைகளை விமானத்தில் எடுத்து சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா மதுபான |
| காளஹஸ்தி கோவிலுக்கு ஜடாமுடி கோலத்தில் வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா Posted: 10 Mar 2016 09:51 PM PST பெங்களூர் நித்யானந்தா பீட மடாதிபதியாக இருக்கும் நித்யானந்தா நேற்று காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்தார். அவருடன் நடிகை ரஞ்சிதா உள்பட சுமார் 10 சீடர்களும் வந்தனர். வழக்கமாக நித்யானந்தா காவி தலைப்பாகை அணிந்து இருப்பார். ஆனால் |
| பெண்கள் பற்றி இழிவான பேச்சு: நடிகர் பாலகிருஷ்ணாவை கைது செய்ய வேண்டும் மேலும் ஒரு வக்கீல் புகார் Posted: 10 Mar 2016 09:39 PM PST என்.டி.ராமராவ் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த 'சாவித்திரி' என்ற படத்தின் பாடல் |
| Posted: 10 Mar 2016 09:21 PM PST தெலுங்கானா சட்ட சபையில் தெலுங்குதேசம் கட்சிக்கு 15 உறுப்பினர்கள் இருந்தனர். தேர்தல் முடிந்த ஒரு சில நாட்களிலேயே தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலசானி ஸ்ரீனிவாச யாதவ், கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் |
| திருப்பதி கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஐதராபாத் ஐகோர்ட்டு தடை Posted: 10 Mar 2016 09:09 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் மாடவீதியில் இருந்தது. இது பாழடைந்து போனதாலும், பிரமோற்சவத்தின் போது வாகன சேவைக்கு இடையூறாக இருந்ததாலும் கடந்த 2003–ம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. |
| இந்தியாவில் இருந்து தப்பிச்செல்லவும் இல்லை - தலைமறைவாகவும் இல்லை: விஜய் மல்லையா Posted: 10 Mar 2016 08:27 PM PST வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறி, லண்டனில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று தனது டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ள விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:- |
| டெல்லி மேல்-சபைக்கு ஏ.கே.அந்தோணி வேட்புமனு தாக்கல் Posted: 10 Mar 2016 08:06 PM PST கேரளா, அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதன்படி கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.அந்தோணி உள்பட 3 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. |
| மூடநம்பிக்கையால் மாற்றுத்திறனாளி குழந்தையின் கால்களை உரக்குழியில் புதைத்து வைத்த தம்பதி Posted: 10 Mar 2016 08:01 PM PST பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ஹூல்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் பசவராஜ். திருமணம் ஆனவர். இவர் தனது மனைவி மற்றும் பிறந்து 9 மாதங்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். பசவராஜின் குழந்தை கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆகும். |
| பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு Posted: 10 Mar 2016 06:43 PM PST மத்திய அரசின் பொது மருத்துவ நுழைவுத்தேர்வு திட்டத்துக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர் கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்தனர். |
| காவிரி நடுவர்மன்ற தலைவர் மாற்றம்: சட்ட கமிஷன் தலைவராக நியமனம் Posted: 10 Mar 2016 06:18 PM PST காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் (வயது 66) பதவி வகித்து வந்தார். நேற்று அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் 21-வது சட்ட கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட |
| அடுத்த தலைமுறைக்கான மார்க்-3 ராக்கெட் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல் Posted: 10 Mar 2016 04:04 PM PST ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று ராக்கெட் ஏவப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், பேசியதாவது:- இஸ்ரோவின் சாதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி-32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் 7 |
| Posted: 10 Mar 2016 03:53 PM PST சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. |
| டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தற்கொலை Posted: 10 Mar 2016 01:45 PM PST டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் துஷ்யந்த் (வயது 25). உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தெற்கு டெல்லியில் பெர்சராய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு தங்கி படித்து வந்தார். துஷ்யந்த் நேற்று காலை அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். |
| Posted: 10 Mar 2016 12:39 PM PST குஜராத் மாநிலத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான் பிரச்சினை குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் நேற்று பதில் அளித்து பேசியதாவது:- 2004-ம் ஆண்டு ஆமதாபாத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட |
| பெற்றோரை கவனிக்கும் கடமை திருமணமான மகளுக்கும் உண்டு: நாக்பூர் ஐகோர்ட்டு கருத்து Posted: 10 Mar 2016 12:03 PM PST அமராவதியை சேர்ந்த ஒரு பெற்றோர் அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் பல கோடி ரூபாய் சொத்தை விற்று தனது மூத்த மகனை படிக்க வைத்ததாகவும், ஆனால் வயதான காலத்தில் அவன் எங்களை பார்த்து கொள்ளவில்லை என |
| ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா சாமி தரிசனம் Posted: 10 Mar 2016 12:03 PM PST ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், நித்யானந்தா தியானபீட நிறுவனர் நித்யானந்தாவும், பிரபல நடிகை ரஞ்சிதாவும் நேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர். |
| Posted: 10 Mar 2016 11:11 AM PST இந்தியாவின் வரலாற்றை நன்றாக புரிந்து கொள்வதற்காக வெளிநாட்டு மொழிகளில் கிடைக்க கூடிய நாட்டின் வரலாற்று சம்பவங்கள் தொடர்புடைய சில ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வரலாற்று பேராசிரியர் சுரேந்திர கோபால் இன்று வலியுறுத்தியுள்ளார். |
| சிறை செல்லத் தயார், அபராதம் கட்டமாட்டேன்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதி Posted: 10 Mar 2016 10:51 AM PST சிறை சென்றாலும் செல்வேனே தவிர, அபராதத் தொகையை செலுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 5 கோடி ரூபாய் அபராத தொகையை இன்று மாலை 5 மணிக்குள் 'வாழும் கலை அமைப்பு செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |