Tamil News | Online Tamil News |
- வங்கிகளுக்கு ரூ.9,000 கோடி பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா ஓட்டம்: பாஸ்போர்ட்டை அரசு முடக்கும் முன் லண்டனுக்கு பறந்தார்
- சென்னை தி.மு.க., கோட்டையாக வேண்டும் : கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு
- ஆறாவது முறை அமரப்போவது யார்? ஜெ., - கருணாநிதி கடும் போட்டி
- 'கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!'
- எம்.பி.,க்கள் தொகுதி நிதி உயருமா? லோக்சபாவில் அமைச்சர் பதில்
- யமுனை நதியில் வாழும் கலை அமைப்பு விழாவுக்கு அனுமதி: ரூ.5 கோடி அபராதம் விதித்தது பசுமை தீர்ப்பாயம்
- மசோதாக்களை நிறைவேற்ற உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி கோரிக்கை
- திரைமறைவு பேரம்: குழப்பும் தமிழக கட்சிகள்
- ஓரங்கட்டப்பட்ட ஐவரணிக்கு அ.தி.மு.க.,வில் புதிய பொறுப்பு
- தேர்தலில் கறுப்பு பணம்: தடுக்க 30 மத்திய பார்வையாளர்கள்
| Posted: 09 Mar 2016 07:15 AM PST புதுடில்லி: பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு வாரம் முன் லண்டன் சென்று விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வங்கிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி விஜய் மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுபான உற்பத்தி விமானப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் கொடி கட்டிப் பறந்த பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை சட்ட நடவடிக்கைகள் துரத்திக் ... |
| சென்னை தி.மு.க., கோட்டையாக வேண்டும் : கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு Posted: 09 Mar 2016 07:27 AM PST 'சென்னை மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், கோட்டை விட்ட தொகுதிகளை, இம்முறை எப்படியும் கைப்பற்றியாக வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை, சென்னை மாவட்டத்தில், தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றி, அசைக்க முடியாத கட்சியாக இருந்து வந்தது.ஆனால், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கோட்டை என கருதப்பட்ட, சென்னை மாவட்ட தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது. மொத்தம் உள்ள, 16 தொகுதிகளில், கொளத்துாரில் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெ. ... |
| ஆறாவது முறை அமரப்போவது யார்? ஜெ., - கருணாநிதி கடும் போட்டி Posted: 09 Mar 2016 07:32 AM PST இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பி.சி.ராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜோதிபாசு, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளனர்.தமிழகத்தில், 1967 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அண்ணாதுரை முதல்வரானார். அவர் 1969ல் மறைந்ததும், கருணாநிதி முதல்வரானார். அதன்பின், 1971 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் வெற்றி பெற, கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானார்.அதன்பின், தொடர்ந்து மூன்று தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவரது மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட, 1987 ... |
| 'கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!' Posted: 09 Mar 2016 07:50 AM PST கல்வித்துறை என்பது கையூட்டு துறை என மாறிவிட்டது. கையூட்டுக்கான ஏஜன்ட்களாக அதிகாரிகள் செயல்பட்டது ஊரறிந்த உண்மை. ஐந்து ஆண்டுகளில், கல்வித்துறையில், ஆறு அமைச்சர்கள் மாறிவிட்டனர். இதில், ஒரு அமைச்சர் கூட கல்வித்துறை குறித்து, 'அ' னா, 'ஆ' வன்னா கூட, படிக்க அனுமதிக்கப்படவில்லை. துறையை பற்றியே அமைச்சருக்கு தெரிய விடாமல், பார்த்து கொண்ட ஆட்சி தான், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி. அதேபோல், ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறையின், ஏகாதிபத்திய அதிகாரியாக திகழ்ந்தவர் முதன்மை செயலர் சபிதா. இவர் அரசு அதிகாரி என்பதை விட, அரசு செலவில் இலவச திட்டங்களை வகுத்து கொடுத்து, இலவச ... |
| எம்.பி.,க்கள் தொகுதி நிதி உயருமா? லோக்சபாவில் அமைச்சர் பதில் Posted: 09 Mar 2016 08:11 AM PST புதுடில்லி : எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்துவது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, மத்திய அரசு, லோக்சபாவில் நேற்று தெரிவித்தது.லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தில், பா.ஜ., - எம்.பி., சுபாஷ் பாம்ரே, எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்துவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ''மஹாராஷ்டிராவில், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆறு முதல், ஏழு சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட லோக்சபா தொகுதிக்கு, ஐந்து கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த தொகையை ... |
| யமுனை நதியில் வாழும் கலை அமைப்பு விழாவுக்கு அனுமதி: ரூ.5 கோடி அபராதம் விதித்தது பசுமை தீர்ப்பாயம் Posted: 09 Mar 2016 08:19 AM PST புதுடில்லி : டில்லியில், யமுனை நதிக் கரையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, சர்வதேச கலாசார விழா நடத்த அனுமதியளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்த விழாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்துக்கு இழப்பீடாக, 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.டில்லியில், யமுனை நதிக்கரையில், மார்ச், 11 முதல், மூன்று நாட்களுக்கு சர்வதேச கலாசார விழா நடத்த, ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவை தடுத்து நிறுத்தக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த் ஆர்யா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர், தேசிய ... |
| மசோதாக்களை நிறைவேற்ற உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி கோரிக்கை Posted: 09 Mar 2016 08:25 AM PST புதுடில்லி: ''நீண்ட காலத்துக்குப் பிறகு, பார்லிமென்ட் செயல்படுவதற்கு அனுமதி அளித்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி. அதேபோல் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி தாருங்கள்,'' என, எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். திருத்தங்கள்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தீர்மானத்தில், 300க்கும் மேற்பட்ட திருத்தங்களை செய்ய எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. ஜனாதிபதி பதவிக்கு மதிப்பளித்து, அந்த திருத்தங்களை விலக்க வேண்டும் என்று ... |
| திரைமறைவு பேரம்: குழப்பும் தமிழக கட்சிகள் Posted: 09 Mar 2016 10:22 AM PST தமிழக கட்சிகளின் திரைமறைவு பேரத்தால், கூட்டணி எதுவும் இறுதி கட்டத்தை எட்டாமல், குழப்பமான சூழல் நிலவுகிறது.தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் முனைப்பில் தீவிரமாகி உள்ளன. சுத்தி சுத்தி: ஒருபக்கம், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ள அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம், கூட்டணி அமைப்பதிலும் தீவிரமாக உள்ளன. இதற்காக, பல கட்டங்களிலும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு அழைத்து செல்ல வேண்டும் என, தி.மு.க., - பா.ஜ., ... |
| ஓரங்கட்டப்பட்ட ஐவரணிக்கு அ.தி.மு.க.,வில் புதிய பொறுப்பு Posted: 09 Mar 2016 10:26 AM PST அ.தி.மு.க.,வில், ஐவர் அணிக்கு புதிய பொறுப்பாக, தொகுதிகளை பிரித்துக் கொடுத்து, பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில், அதிகார மையமாக வலம் வந்த பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், இடைப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோரை, அ.தி.மு.க., தலைமை ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில், எல்லாமே ஐவர் அணி என்ற நிலை மாறி, முதல் நேர்காணல், ஐவர் அணி இல்லாமல் நடந்தது. அதே நேரத்தில், அவர்களை, தொகுதிகளில் தேர்தல்பணி மேற்கொள்ள, உத்தரவு பிறப்பித்துள்ளது தலைமை. அந்த வகையில், 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு, 34 தொகுதிகள் போக, 200 ... |
| தேர்தலில் கறுப்பு பணம்: தடுக்க 30 மத்திய பார்வையாளர்கள் Posted: 09 Mar 2016 01:10 PM PST புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, வருமான வரித் துறையைச் சேர்ந்த, 30 அதிகாரிகளை, மத்திய பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது.தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, ஏப்ரல், 4 முதல், மே, 16 வரை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், முறைகேடுகளைத் தடுக்க, தேர்தல் கமிஷன், பறக்கும் படைகளையும், தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.தேர்தலின் போது, கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்க, வருமான வரித் துறையைச் சேர்ந்த, 30 அதிகாரிகளை, மத்திய தேர்தல் பார்வையாளர்களாக, தேர்தல் கமிஷன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 10,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |