Tamil News | Online Tamil News |
- இந்த அவமானம் தேவையா? கோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ.,
- தமிழகத்தை வென்ற பீகார்: போட்டி தேர்வில் பின்னடைவு
- 'கெய்ல்' சீராய்வு மனு தள்ளுபடி: அ.தி.மு.க.,வுக்கு புது நெருக்கடி
- பி.எப்., தொகைக்கு வருமான வரி விதிக்கும் திட்டம் 'வாபஸ்': நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் மத்திய அரசு முடிவு
- மின் வாரியத்தில் ரூ.11,000 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு: குழு விசாரணை நடத்துமா புதிதாக அமையும் அரசு?
- 'பெண்களுக்கு அங்கீகாரம் வேண்டும்': மகளிர் தின ஸ்பெஷல் - பார்லி.,யில் பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
- பொய் பெயரில் புகார் அளித்தால் நடவடிக்கை கிடையாது: சி.வி.சி.,
- வங்கி கடனை செலுத்தாத எம்.பி.,க்கள் யார் யார்?
- 'கனிந்தது பழம்; பாலில் விழும்': தே.மு.தி.க., குறித்து கருணாநிதி பதில்
- அரசு பள்ளிகளில் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்
- மின் சப்ளை நிலவரம் எப்படி:மத்திய அரசு அறிக்கை கேட்பு
| இந்த அவமானம் தேவையா? கோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ., Posted: 08 Mar 2016 07:41 AM PST 'மத்தியில் ஆட்சி பொறுப்பு; எட்டு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பு என, ஆட்சி அதிகாரங்கள் பல இருந்தும் என்ன பிரயோஜனம்? விஜயகாந்த் என்ற தனி மனிதனிடம் கேவலப்பட்டல்லவா கிடக்கிறது கட்சி?' என, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன் நின்று, புலம்பிக் கொண்டிருந்தார், நீண்டகால, பா.ஜ., உறுப்பினர் ஒருவர்.கட்சியின் உள்விவகாரங்களை நன்கு அறிந்த அவரை ஓரங்கட்டி விசாரித்ததில், தமிழக பா.ஜ.,வின் கோஷ்டி கானங்களை நார் நாராக கிழித்து தொங்க விட்டார். அவர் கூறியதாவது:தேசியம் குறித்து ஆரம்ப காலம் தொட்டு, எனக்கு அலாதி பிரியம் உண்டு. அந்த ஆர்வத்தில் தான், திராவிட ... |
| தமிழகத்தை வென்ற பீகார்: போட்டி தேர்வில் பின்னடைவு Posted: 08 Mar 2016 08:31 AM PST தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சிதிட்டங்கள் என்று தமிழகம் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள், இந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னோடி திட்டங்களாகவே உள்ளன.ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு, இந்திய ஆட்சிப் பணி தேர்வு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ் போன்றவற்றில், தமிழக மாணவர்களின் சேர்க்கையும் வேலைவாய்ப்பும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவே.சென்ற ஆண்டு நடைபெற்ற, ஐ.ஐ.டி.,க்கான, ஜே.இ.இ., தேர்வில், இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்கள், நம் அண்டை மாநிலமான ஆந்திரப் ... |
| 'கெய்ல்' சீராய்வு மனு தள்ளுபடி: அ.தி.மு.க.,வுக்கு புது நெருக்கடி Posted: 08 Mar 2016 10:15 AM PST 'கெய்ல்' விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ஏழு மாவட்டங்களில், அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகம் வழியாக கேரளாவுக்கு, குழாய் மூலமாக எரிவாயு எடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், மத்திய அரசின் கெய்ல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில், 358 கி.மீ., துார விவசாய நிலங்களில், எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புவலுத்து வருகிறது.தேசிய ... |
| Posted: 08 Mar 2016 10:19 AM PST புதுடில்லி : தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து,இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிப்பை, வாபஸ் பெறுவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமீபத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, 'தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, திரும்பப்பெறும் இ.பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி விதிக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 'ஓய்வூதியத் திட்டத்தில், ... |
| மின் வாரியத்தில் ரூ.11,000 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு: குழு விசாரணை நடத்துமா புதிதாக அமையும் அரசு? Posted: 08 Mar 2016 10:22 AM PST தமிழ்நாடு மின் வாரியத்தில், ஓராண்டில் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதும், 2014க்கு முன்வரை நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, தனி குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.*மின் வாரியம், 2013ல், 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,330 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில், அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது *ஜி.எம்.ஆர்., பிள்ளை பெருமாள் நல்லுார், சமல்பட்டி, மதுரை பவர் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தமிழ்நாடு மின் வாரியம், ஒரு யூனிட் ... |
| 'பெண்களுக்கு அங்கீகாரம் வேண்டும்': மகளிர் தின ஸ்பெஷல் - பார்லி.,யில் பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 10:24 AM PST புதுடில்லி : மகளிர் தினத்தை முன்னிட்டு, பார்லிமென்டில் இரண்டு சபைகளிலும் பேசிய பெண் எம்.பி.,க்கள், 'மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறாவிட்டாலும், சட்டசபை, பார்லிமென்டில், பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும், நிலைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தன்று, பார்லிமென்டில், பெண் எம்.பி.,க்கள் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்படி, மகளிர் தினமான நேற்று, ... |
| பொய் பெயரில் புகார் அளித்தால் நடவடிக்கை கிடையாது: சி.வி.சி., Posted: 08 Mar 2016 10:27 AM PST புதுடில்லி : 'அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய் பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், சி.வி.சி., அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிராக, புகார் அளிப்போர், தம் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். பெயர் குறிப்பிடாமலோ, பொய்யான பெயர்களுடனோ, அரசு ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்கள் மீது ... |
| வங்கி கடனை செலுத்தாத எம்.பி.,க்கள் யார் யார்? Posted: 08 Mar 2016 10:28 AM PST புதுடில்லி : வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததாக, பிரபல தொழிலதிபரும், பார்லிமென்ட் எம்.பி.,யுமான விஜய் மல்லையா, மிகப் பெரும் சிக்கலில் சிக்கிஉள்ளார். இவரைப் போலவே, நுாற்றுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள், வங்கிக் கடனைச் செலுத்தாமல் உள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான் மிகவும் அதிகம். 'பல்வேறு வங்கிகளிடமிருந்து கடனை வாங்கி, அதை செலுத்தாதவர்களில், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்களின் எண்ணிக்கை நுாற்றுக்கும் அதிகமாக இருக்கும்' என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சிலர், சில லட்சங்களையும், பலர், பல ஆயிரம் ... |
| 'கனிந்தது பழம்; பாலில் விழும்': தே.மு.தி.க., குறித்து கருணாநிதி பதில் Posted: 08 Mar 2016 10:31 AM PST சென்னை அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே கேள்வி, தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விட்டதா? பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.தே.மு.தி.க., கூட்டணி முடிவாவதில், ஏன் இந்தத் தாமதம்; இழுபறிக்கு என்ன காரணம்; அவர்களின் கோரிக்கை என்ன?இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேரும் என, நம்புகிறீர்களா?நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.தி.மு.க., தேர்தல் அறிக்கை எப்போது ... |
| அரசு பள்ளிகளில் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம் Posted: 08 Mar 2016 10:33 AM PST தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசால் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை எப்படி செலவு செய்து, மார்ச்சுக்குள் கணக்கு கொடுப்பது என்பதே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் ... |
| மின் சப்ளை நிலவரம் எப்படி:மத்திய அரசு அறிக்கை கேட்பு Posted: 08 Mar 2016 01:15 PM PST வரும் நிதியாண்டிற்கான, செயல் திட்ட விவரத்தை வழங்கும்படி, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய அரசுக்கு, தமிழகத்தில் - என்.எல்.சி., கல்பாக்கம், வல்லுார், என்.டி.பி.எல்., கூடங்குளம்; ஆந்திரா - சிம்ஹாத்ரி, ராமகுண்டம்; ஒடிசா - தால்சர்; கர்நாடகா - கைகா ஆகிய இடங்களில், அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 5,429 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரிய அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த ஆண்டுக்கு, 1.35 கோடி டன் நிலக்கரியை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |