ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
- ஹாய் நண்பர்களே !
- எனக்கு தெரிந்த என்னை பற்றி
- உனக்கு நீயே தடை
- கங்கை கொண்ட சோழன்
- உறுப்பினர் அறிமுகம் - சரவணன் (saravanan555)
- அனைவருக்கும் வணக்கம்----இளஞ்செழியன்
- சிவசஙகரன்_அறிமுகம்
- என் குலதெய்வம் பாலாம்பிகை திருக்கோவில் சிலமலை
- மகளிர் தின கவிதை எம்.எம்.செந்தில் குமார் !
- ஜே.பி.சந்திரபாபு நினைவுதின சிறப்பு பதிவு.
- முகங்களும் பாவனைகளும்
- தொடரும் பெண்ணின் போராட்டம்.... மகளிர் தின கவிதை சசி
- பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் !
- இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
- தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த தமிழகம்!
- உலக மகளிர் தினம்
- குதூகல ரகசியம் குழி நண்டில் இருக்கு!!!
- ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர்
- நீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்!
- ஆட்டிசம் - அன்பே மருந்து
- ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
| நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! Posted: 08 Mar 2016 11:55 AM PST நாளை சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! சென்னை, சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும்.முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று காட்சி அளிக்கும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூரிய கிரகணம் (9–ந்தேதி) நாளை காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி ... |
| Posted: 08 Mar 2016 11:43 AM PST பெயர்: ச. KAVIYANJALI சொந்த ஊர்: Pudhucherry ஆண்/பெண்: Female ஈகரையை அறிந்த விதம்: Health டிப்ஸ் பாக்கும் போது கிடைத்தது. பொழுதுபோக்கு: SONGS KEKRATHU தொழில்: ACCOUNTANT மேலும் என்னைப் பற்றி: EPOTAIKU YETHUM இல்லை ![]() |
| Posted: 08 Mar 2016 11:41 AM PST பெயர்: RAJEESH சொந்த ஊர்: திரிச்சூர். ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: Google அண்ணன் வழி காட்டினார். பொழுதுபோக்கு: Photography படித்தல் மற்றும் இசை கேட்டல் தொழில்: மருந்தாளுனர் (Pharmacist ) மேலும் என்னைப் பற்றி: தாய் மொழியை விட தமிழை விரும்பும் ஒரு மலாயாளி நான். பிறந்து வளர்ந்தது ஊட்டியில். படித்தது தமிழ் வழியில். வேலை செய்வது துபாயில் நிறைய படித்துகொண்டிருந்தேன் (தமிழ் மலையாளம் மற்றும் ஆங்கிலம்) இப்பொழுது நேரக்குறைவு முடிவதில்லை. எப்போதாவது மனதுக்கு தோன்றுவதை எழுதுவேன். எங்கள் குடும்ப ... |
| Posted: 08 Mar 2016 10:27 AM PST உனக்கு நீயே தடை கருவில் நீ உருப்பெருகையில் கருச்சிதைவு செய்வது உன்னினமே அதையும் மீறி கண்மணி நீ பிறந்துவிட்டால் கள்ளிப்பால் கொடுப்பது உன்னினமே அதையும் மீறி சிறுமி உனைப் புறந்தள்ளி சிறுவனை சீராட்டுவது உன்னினமே அதையும் மீறி பருவம் நீ எய்தியதும் படிப்பை நிறுத்துவதும் உன்னினமே அதையும் மீறி கன்னியாய் நீ நடக்கையிலே கண்டபடி புறங்கூறுதல் உன்னினமே அதையும் மீறி பட்டம் நீ பெறுகையிலே பதவிகளைத் தடுப்பதுவும் உன்னினமே அதையும் மீறி வேலையில் நீ அமர்ந்துவிட்டால் ... |
| Posted: 08 Mar 2016 09:43 AM PST கங்கை கொண்ட சோழன் பாலகுமாரன் நான்கு பாகங்கள் பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 |
| உறுப்பினர் அறிமுகம் - சரவணன் (saravanan555) Posted: 08 Mar 2016 09:22 AM PST பெயர்: சரவணன் சொந்த ஊர்: மதுரை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: GOOGLE பொழுதுபோக்கு: பாடல் கேட்பது தொழில்: சிவில் பொறியாளர். மேலும் என்னைப் பற்றி: |
| அனைவருக்கும் வணக்கம்----இளஞ்செழியன் Posted: 08 Mar 2016 09:18 AM PST பெயர்: இளஞ்செழியன் சொந்த ஊர்: தஞ்சாவூர் ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: இணையதளதேடலில் பொழுதுபோக்கு: பாட்டு கேட்பது தொழில்: மாணவன் மேலும் என்னைப் பற்றி: நான் பி.ஏ தமிழ் படிக்கிறேன். எனக்கு தமிழ் மீது மிகவும் பற்று அதிகம். நம் தமிழ் மொழியை பேணிக்காப்பது நம் கடமை. |
| Posted: 08 Mar 2016 09:16 AM PST நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சிவசங்கரன்,ஊர் சேத்தியாத்தோப்பு.நான் என் வாழ்க்கை முழுவதும் பள்ளிக்கு செல்லும் நல் வாய்ப்பு பெற்றவன், ஆம் ஆசிரியராக பணிபுரிகிறேன்.பொழுதுபோக்காக இணையத்தில் உலவும்போது ஈகரையின் அறிமுகம் கிடைத்தது.ஈகரையின்பால் என்னை ஈர்த்தது இங்கு குவிந்து கிடக்கும் மதிப்புமிக்க மின்நூல்களும் அவைகளை பதிவிட்ட நண்பர்களின் விலைமதிப்பற்ற உழைப்பும் |
| என் குலதெய்வம் பாலாம்பிகை திருக்கோவில் சிலமலை Posted: 08 Mar 2016 08:27 AM PST மதங்க மாமகரிஷியின் ஆஸ்ரமம் ஆரம்பத்தில் திருப்பதிக்கருகில் இருந்தது அங்கேதான் அன்னை நாராயணி யாகத்தீயில் இருந்து பாலாம்பிகையாக வெளிவந்தாள் ஆஞ்சநேயரும் இவரின் ஆஸ்ரமத்திலேயே அவதரித்தார் அவர் அங்கிருந்து சபரிமலை க்கு வந்து ஆஸ்ரமம் அமைத்து ஒளி சரீரம் பெற்றார் அவரைத்தான் பொன்னம்பல மேடு ஜோதிதரிசனமாக இன்றளவும் பார்த்து வருகிறார்கள் மதங்க ரிஷியே தனது சீடரான சபரி அன்னையை ராமர் வருவார் காத்திரு என சபரி மலையில் பணி செய்ய வைத்தவர் இந்தக்கதை எதற்கு என்றால் திருப்பதியிலிருந்து சபரி மலை நோக்கி அவர்கள் ... |
| மகளிர் தின கவிதை எம்.எம்.செந்தில் குமார் ! Posted: 08 Mar 2016 04:47 AM PST எப்படி பெண்ணே முடிகிறது உன்னால் மட்டும், சிறுமியாய், சகோதரியாய் தோழியாய், மனைவியாய் தாயாய், பாட்டியாய் ஒரே பிறவியில் பல அவதாரம் அவதாரங்கள் அனைத்திலும் கருணையே உருவமாய், ஆதலால்தான் பூமியைக்கூட பூமி மாதா என்றழைக்கிறோம் இன்று பெண்கள் தினம் என்றார்கள் இன்று மட்டுமல்ல புவி சுற்றிக்கொண்டிருக்கும் வரை பெண்களுக்கான தினமே, பெண்கள் தினமே!! என்னை இம்மண்ணில் அவதரிக்க வைத்த அன்னைக்கும், உடன் பிறந்த உறவுக்கும், வாழ்க்கைத் துணையாய் இணைந்து இறுதிவரை வரும் மனைவிக்கும், என் அன்பு குட்டி செல்லத்துக்கும், ... |
| ஜே.பி.சந்திரபாபு நினைவுதின சிறப்பு பதிவு. Posted: 08 Mar 2016 02:17 AM PST நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். ... |
| Posted: 08 Mar 2016 02:06 AM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| தொடரும் பெண்ணின் போராட்டம்.... மகளிர் தின கவிதை சசி Posted: 08 Mar 2016 02:06 AM PST என் மீதான சமூகத்தின் பார்வை என் தலையணையை நனைய செய்கிறது! நான் எனக்கான உரிமையை தேடித் தேடித் அலையும் போது காலில் மிதிபடும் எறும்பு போல் சமூகம் என்னை மிதிக்கிறது ' ஒவ்வொரு நாளும் சமமான வாய்ப்புக்காக ஏங்கும் ஏக்கம் என்னை நிலைகுலையச் செய்கிறது!! மறுதலிக்கப்பட்ட உரிமையும் மறுக்கப்பட்ட நியாயமான கோரிக்கையும் நிறைவேறும் வரை எனது இரவுகள் உறக்கம் தொலைந்து போன இரவுகள் தான்!! அதனால் என்ன பெண்ணே? உரிமையும் சமமான வாய்ப்பும் கோரிக்கைகளும் நிறைவேறும் நாள் ... |
| பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் ! Posted: 08 Mar 2016 01:47 AM PST பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் ! அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் ! |
| Posted: 08 Mar 2016 12:03 AM PST 1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது. புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான், மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின் மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க? அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது. மேசைகள் வெளியே இருப்பதற்கு ... |
| தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த தமிழகம்! Posted: 07 Mar 2016 11:28 PM PST தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ... |
| Posted: 07 Mar 2016 08:30 PM PST உலக மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள். * சியா ஜென் : குடும்பம். * குடும்பம் பெண்ணின் விடாமுயற்சி தொடர்கிறது குடும்பம் ஒழுங்காக இருக்கும்போது மனிதனின் எல்லா சமூக உறவுகளும் ஒழுங்காக இருக்கும், விடாமுயற்சியும் ஒழுங்கான முறைகளும் வெற்றியைத் தரும். கதகதப்பான, உதவிகரமான சூழலையும் தன்மைகளையும் உங்களுக்குள் வளர்த்து, அதனால் அடுத்தவர்களிடம் சிறந்ததை வெளிக் கொணருங்கள். * ஆதாரம் : " ஐ சிங் " - ( சீன நாட்டு அறிவுரைகள் ) – நூல். பக்கம் 50. தமிழில் : பி. உதயகுமார் தகவல் " ந.க.துறைவன். |
| குதூகல ரகசியம் குழி நண்டில் இருக்கு!!! Posted: 07 Mar 2016 04:48 PM PST பச்சைப் பசேல் என்று நீண்டு வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களும், கீரை, கொடி, செடி வகை பச்சையங்களும் மட்டுமே விவசாயம் என்றில்லை. விவசாயிகளின் உற்ற தோழனாகவும், பறவைகளின் உணவாகவும், பண்ணைகளில் வளர்த்தெடுக்கப்படும்போது வணிகச் சந்தையின் தங்கமாகவும் நண்டு இனம் இருக்கிறது. மருத்துவக் குணம் வாய்ந்த உணவு நண்டு என்று சொன்னால், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அடுத்த வினாடி விஞ்ஞான உலகம், சொன்னவர் மீது பாயும். இதனாலேயே இதுபோன்ற பல மருத்துவப் பொக்கிஷங்கள் வெளியில் தெரியாமலே அழிந்து விடுகின்றன. இன்றளவிலும் ... |
| ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர் Posted: 07 Mar 2016 04:25 PM PST இங்கிலாந்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாத்யூ பிரிண்டொன் என்பவர் கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது வளர்ப்பு நாய் ஹசில்லுடன் வரும் இவர், அங்குள்ள சாலைகளில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில் பிச்சையெடுத்து விட்டு விலையுயர்ந்த ஆடி காரில் அவர் புறப்பட்டு செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ... |
| நீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்! Posted: 07 Mar 2016 04:11 PM PST எந்நேரமும், எக்கணமும் நாம் அனைவரும் சமரசத்தை நோக்கியே நகர்கிறோம். தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஏதேனும் ஒரு கணத்தில் நாம் யாருடனாவது சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை வரும். அதற்கு நீங்கள் ஒரு பெண்ணோ, ஆணோ, இளமையானவரோ, முதுமையானவரோ நீங்கள் சரியானவரோ, தவறானவரோ என்பது ஒரு விசயமே இல்லை. ஆனால் நீங்கள் பேசும் வார்த்தை உங்களுடைய கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும். நாம் பேசும் வார்த்தைகள் பல்வேறு கோணங்களில் பல கருத்துக்களை உள்ளடக்கிய நோக்கில் அந்த சமரசத்தீர்வு இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய எதிர்கால ... |
| Posted: 07 Mar 2016 04:01 PM PST ஏன் என் குழந்தை மட்டும் கூப்பிட்டா, என்னைத் திரும்பிப் பார்க்கலை; என் கண்ணைப் பார்த்துப் பேசலை; மற்ற குழந்தைகளோட சேர்ந்து சகஜமா விளையாடலை; காரணமே இல்லாம அடிக்குது; கிள்ளுது; ஏன் இத்தனை முரட்டுத்தனமா நடக்குது?' என்பன போன்ற கேள்விகள் ஒரு தாய்க்கு இருந்தால் அவரது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்கிறது மருத்துவம். ''ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகிறது. ஆனால், எல்லோரும் பயப்படுவதுபோல் ஆட்டிசம் என்பது ஒரு மன நோய் அல்ல. இதை 'மூளை முடக்கு' என்கிறது மருத்துவம். ஆட்டிசம் ... |
| ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்! Posted: 07 Mar 2016 03:56 PM PST திமுகவின் 'முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல். இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
