Tamil News | Online Tamil News |
- கண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்
- கூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை: தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,
- தி.மு.க.,வில் 65 பெண்களுக்கு 'சீட்'
- எங்கும் ஸ்டிக்கர்: எதிலும் ஸ்டிக்கர்
- உளவு பார்க்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
- அமைச்சர்கள் எந்த வாக்குறுதியும் அளிக்க கூடாது: தேர்தல் நடத்தை விதியில் தகவல்
- கழிவுநீர் சுத்திகரிப்பு: ரூ.700 கோடி திட்டத்தில் முறைகேடு?
- 'தில்லாலங்கடி' விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி: தீர்ப்பாயம், அமலாக்க துறையின் அதிரடியால் கலக்கம்
- சீர்திருத்தங்களை செய்யுங்கள்: மாநிலங்களுக்கு ஜெட்லி அறிவுரை
- கட்டம் கட்டப்படுகிறார் குமார் விஷ்வாஸ்? அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் அதிரடி
| கண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன் Posted: 07 Mar 2016 10:36 AM PST சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வினியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனாலும், கண்காணிப்பை மீறி, பணம் கொண்டு செல்ல, கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, மே, 16ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருள் கொடுப்பது, மதுபானம் கொடுப்பது, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ... |
| கூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை: தெளிவுபடுத்தியது அ.தி.மு.க., Posted: 07 Mar 2016 10:37 AM PST அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இணைய வாய்ப்பிலை என்பதை தெளிவுபடுத்த, கட்சி நிகழ்ச்சிகளில், சிறுபான்மை சமூகத்தினருக்கு, அ.தி.மு.க., தலைமைமுக்கியத்துவம் அளித்து வருகிறது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை இழக்க நேரிடும் என, அ.தி.மு.க., கருதியது.எனவே, பா.ஜ., உட்பட எந்த கட்சிகளையும், கூட்டணியில் சேர்க்காமல், அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. போட்டியிட்டதில், 37 இடங்களில் வெற்றியும் பெற்றது. ஆனால், சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி என அறிவிக்க, அ.தி.மு.க., தயங்கி ... |
| தி.மு.க.,வில் 65 பெண்களுக்கு 'சீட்' Posted: 07 Mar 2016 10:38 AM PST சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளரரை களமிறக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.லோக்சபா, சட்டசபை மற்றும் பொது மேடைகளில், பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதை, கட்சிகள் ஆதரித்து பேசி வருகின்றன. ஆனால், சட்டசபை தேர்தல்களில், 'சீட்' ஒதுக்கும்போது, அவற்றை செயல்படுத்த தவறி விடுகின்றன. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் முக்கியத்துவம் அளித்து, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகளில், தி.மு.க., தலைமை ஈடுபட்டு வருகிறது. 'தி.மு.க., போட்டியிடும் தனித்தொகுதிகளில், 14 ... |
| எங்கும் ஸ்டிக்கர்: எதிலும் ஸ்டிக்கர் Posted: 07 Mar 2016 10:39 AM PST ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, பயங்கரவாதம் எந்த வகையில்வந்தாலும், அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டு அரசியல் மற்றும் தாஜாஅரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம்.இவற்றுக்காக தான் கருணாநிதியை விடுத்து, ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. ... |
| உளவு பார்க்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள் Posted: 07 Mar 2016 10:39 AM PST அ.தி.மு.க.,வில் ஒருநாள் மட்டும் நேர்காணல் நடந்துள்ள நிலையில், கட்சி தலைமை யாரையாவது நேர்காணலுக்கு அழைத்துள்ளதா? என, கட்சியினர் ஒருவரை ஒருவர் உளவு பார்த்து வருகின்றனர்.சட்டசபை பொதுத்தேர்தலில், தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, அ.தி.மு.க.,வில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும், நேர்காணலுக்குஅழைக்க முடியாது என்பதால், நேர்காணல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்ததாக, கட்சி தலைமை அறிவித்து, ஐந்து பேர் புகைப்படங்களை வெளியிட்டது.அதை தொடர்ந்து, ... |
| அமைச்சர்கள் எந்த வாக்குறுதியும் அளிக்க கூடாது: தேர்தல் நடத்தை விதியில் தகவல் Posted: 07 Mar 2016 10:41 AM PST 'தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், ஆட்சியில் உள்ள கட்சியினர், தங்கள் அலுவலக அதிகாரத்தை, தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது' என, தேர்தல் நடத்தை விதியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம்:*மத்தியிலோ, மாநிலத்திலோ, ஆட்சியில் உள்ள கட்சியினர், தங்கள் அலுவலக அதிகாரத்தை, தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, எவ்வகையிலும் இடமளிக்கக் கூடாது*அமைச்சர்கள் தங்கள் அலுவவலப் பணியையும், தேர்தல் பணிகளையும் இணைத்து, ஒரே நேரத்தில் மேற்கொள்ளக் கூடாது. அரசு இயந்திரத்தையும், பணியாளர்களையும், தங்கள் தேர்தல் பணிக்காக ... |
| கழிவுநீர் சுத்திகரிப்பு: ரூ.700 கோடி திட்டத்தில் முறைகேடு? Posted: 07 Mar 2016 10:42 AM PST சென்னையில் கொடுங்கையூர், கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களில் அமையவுள்ள, கழிவுநீரை பயன்பாட்டிற்கான மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும், 700 கோடி ரூபாய் திட்டத்தில், பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.சென்னை மாநகரில் உற்பத்தியாகும் கழிவுநீர், சென்னை குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இரண்டு கட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நீர்வழித் தடங்களில் விடப்படுகிறது. இந்த வகையில், நாள் ஒன்றுக்கு, 58 கோடி லிட்டர் கழிவுநீர், சுத்திகரிக்கப்படுகிறது. கழிவுநீரின் பெரும்பகுதி கடலிலும், ஒரு குறிப்பிட்ட சதவீதம் ... |
| 'தில்லாலங்கடி' விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி: தீர்ப்பாயம், அமலாக்க துறையின் அதிரடியால் கலக்கம் Posted: 07 Mar 2016 10:43 AM PST மும்பை : 'முறைகேடாக தொழில் செய்தது, வங்கிகளிடம் பெற்ற, 7,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்தது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியது' என, பல பிரச்னைகளில் சிக்கி தவித்து வரும் தொழில் அதிபர் விஜய் மல்லையா, நேற்று, இரண்டு அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி தவித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இவர், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் மதுபான ஆலை உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார். இதில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2010ல், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட, 17 வங்கிகளில் இருந்து, 7,000 கோடி ரூபாய் கடனாகப் ... |
| சீர்திருத்தங்களை செய்யுங்கள்: மாநிலங்களுக்கு ஜெட்லி அறிவுரை Posted: 07 Mar 2016 10:44 AM PST குர்கான் : ''முதலீடுகளை ஈர்க்க, மாநிலங்கள், சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். சாதகமான வர்த்தக சூழல், அரசியல் சூழல் நிலவும் பகுதிகளிலே முதலீடுகள் செய்ய, முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ஹரியானா மாநிலம், குர்கானில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: எங்கு, சாதகமான வர்த்தக மற்றும் அரசியல் சூழ்நிலை நிலவுகிறதோ, அந்த நாடுகளில் முதலீடு செய்வதையே முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். அதனால், மாநிலங்கள், முதலீடுகளை ஈர்க்க சீர்திருத்தங்களை ... |
| கட்டம் கட்டப்படுகிறார் குமார் விஷ்வாஸ்? அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் அதிரடி Posted: 07 Mar 2016 11:44 AM PST பிரஷாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரது வரிசையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து, அக்கட்சியின் முக்கிய தலைவரான குமார் விஷ்வாஸையும் கட்டம் கட்ட, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தயாராகி வருவதால், பரபரப்பு எழுந்துஉள்ளது.ஊழலுக்கு எதிரான, மிகப்பெரிய போராட்டத்தை, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டில்லியில் நடத்தியபோது, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷண் உள்ளிட்ட பலரும், அதற்கு துணை நின்றனர். அந்த குழுவில் முக்கியமானவர், குமார் விஷ்வாஸ். அன்னா ஹசாரேயை விட்டு விலகி, ஆம் ஆத்மி என்ற பெயரில், தனிக் கட்சியை ஸ்ரீகெஜ்ரிவால் ஆரம்பித்ததில், முக்கிய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 08,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |