Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயி்க்கும் கூட்டணி இது தான்: ஜோதிடர்கள் கணிப்பு

Posted: 06 Mar 2016 07:04 AM PST

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால், என்னென்ன பலாபலன்கள் கிடைக்கும் என, கட்சிகள் கணக்குப் போட்டு வரும் வேளையில், தேர்தல் கமிஷன், தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. 'தேர்தலுக்கு இன்னும், 70 நாட்கள் இருக்க, 'இந்த கிரக நிலைக்கு, இந்த கூட்டணி தான் ஏற்றது' என்கின்றனர் சில ஜோதிடர்கள்.பெரும்பாலானோர், அ.தி.மு.க., வெற்றி பெறும் எனக் கூறுகின்றனர்; ஒரு சிலரோ, ஸ்டாலின் தலைமையில் கூட்டணி இருந்தால், அக்கட்சி நிறைய இடங்களில் வெற்றி பெறும் என்கின்றனர்.ஜோதிடர்கள் கணிப்பு பலிக்கிறதா என்பது, ஓட்டு எண்ணிக்கை அன்று தெரியப் போகிறது. அதற்கு முன், ...

காசு... பணம்... துட்டு...: ஊழலில் மூழ்கி கிடக்கும் போக்குவரத்து கழகங்கள்

Posted: 06 Mar 2016 07:12 AM PST

'டூட்டி' வேண்டுமென்றால் காசு; 'டூட்டி' வேண்டாம் என்றாலும் காசு; 'ரூட்'டை மாற்ற காசு; ரூட்டை மாற்ற வேண்டாம்என்பதற்கும் காசு. இப்படி, மொத்த துறையும் ஊழலில் மூழ்கி கிடக்கிறது என்றால் அது தமிழக போக்குவரத்து கழகங்கள் தான். இந்த துறையில், வழக்கமான செயல்பாடாக மாறிப்போயுள்ள ஊழல், முறைகேடுகளை கொட்டித் தீர்க்கிறார், ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து கழக ஊழியரும், தொ.மு.ச., பொருளாளருமான, கி.நடராஜன்.இது குறித்து, நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:புறப்படும், சேருமிடத்தை தெரிவிக்க பஸ்களில், 'எல்.இ.டி., ரூட் போர்டு' பொருத்தப்படுகிறது. ஒரு போர்டுக்கு, 45 ஆயிரம் ...

பிரிவினை கோரிக்கைக்கும் செவி கொடுத்த தமிழக சட்டசபை!

Posted: 06 Mar 2016 09:13 AM PST

தமிழக சட்டசபை தேர்தலுக்கு என்று தேதி குறித்தாகி விட்டது. கோடை வெயிலின்

தகிப்போடு, தேர்தல் பிரசார சூடும் சேரப் போகிறது. சில நாட்களுக்கு முன், தமிழக சட்ட
சபையின் கடைசி கூட்டம் நடந்து முடிந்து விட்டது. ஜனநாயக சீமான்கள் சட்டசபையையும், கோட்டையையும் ஏக்கத்துடன் பார்த்து விட்டு, தொகுதிக்கு ரயில் ஏறியிருப்பர்.
முன்பெல்லாம், சட்டசபை கடைசி கூட்டத்தில், சில உருக்கமான காட்சிகள் நடக்கும். சபாநாயக ருக்கு எதிர்க்கட்சி தலைவர்களே நன்றி சொல்வர். டாக்டர் யூ.கிருஷ்ண ராவ் சபாநாயகராக இருந்த காலகட்டம் அது. அவரது நடுநிலையான பணிக்கு, அண்ணாதுரை சட்டசபையில் ...

தாக்குதல் நடத்த குஜராத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்?சதியை முறியடிக்க தேசிய பாதுகாப்பு படை விரைவு

Posted: 06 Mar 2016 09:35 AM PST

ஆமதாபாத்:பாகிஸ்தானை சேர்ந்த, 10 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக, புலனாய்வு தகவல் கிடைத்ததை அடுத்து, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளின் சதியை முறியடிப்பதற்காக, 200 வீரர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு விரைந்துள்ளனர். குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ஆனந்திபென் படேல் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. கட்ச் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தாக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டுஉள்ளதாக தெரிகிறது.இதையடுத்து, உச்சக்கட்ட ...

இயற்கையாகவே பெண்களுக்கு மனஉறுதி அதிகம்: மோடி

Posted: 06 Mar 2016 09:38 AM PST

புதுடில்லி:''தொழில்நுட்ப ரீதியாக, பெண்கள், தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்; திறன்வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக, தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஆண்களை விட பெண்களுக்கு மனஉறுதி அதிகம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். டில்லியில், பெண் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் தேசிய மாநாட்டை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்வேறு துறைகளில் ஆளுமைத்தன்மையை, தலைமைப் பண்பை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் தலைவர்கள், தமக்குள் போட்டி மனப்பான்மையை ...

போகிற போக்கில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்: கருணாநிதி காட்டம்

Posted: 06 Mar 2016 09:45 AM PST

தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன. ஆனால் அதற்குள், தன் நினைவுக்கு வந்த திட்டங்களுக்கெல்லாம், முதல்வர் ஜெயலலிதா, அன்றாடம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். இரண்டு மாதங்களில் தேர்தல் வரப் போகிறது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அரசின் திட்டங்களுக்காக அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டி, விளம்பரப்படுத்திக் கொள்கின்ற ஒரே முதல்வர், தமிழகத்தின் முதல்வராகத் தான் இருக்க முடியும்.அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்புகளையும், திட்டப் ...

'அம்மா' சிமென்ட், உப்புக்கு தடை?

Posted: 06 Mar 2016 09:49 AM PST

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்திருப்பதால், 'அம்மா' சிமென்ட் உள்ளிட்ட திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வெளிச்சந்தையில் சிமென்ட் விலை அதிகரித்ததால், 'டான்செம்' எனப்படும், தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் மூலமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 195 ரூபாய்க்கு, பொதுமக்களுக்கு, அரசு விற்பனை செய்து வருகிறது.அரசு கட்டடங்களுக்கும், சிறிய அளவிலான வீடுகள் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும், அம்மா சிமென்ட் விற்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக, அம்மா சிமென்ட் வினியோக அளவில், குறைவு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. ...

ஜெ.என்.யு., விவகாரம்: நீதிபதி பிரதிபா ராணியின் சபாஷ் தீர்ப்பு!

Posted: 06 Mar 2016 09:57 AM PST

மார்ச், 2ல் ஜாமினில் வெளியான, ஜெ.என்.யு., பல்கலையின் மாணவர் சங்க தலைவர் கன்னையா, கடந்த சில நாட்களாக, சுதந்திர போராட்ட தியாகி போல பேசித் திரிகிறார். வடநாட்டு ஊடகங்களும், கன்னையாவை அப்படியே சித்தரித்து வருகின்றன. ஆனால், ஜாமின் தீர்ப்பிலோ, 'உடலில் ஏதேனும் ஒரு உறுப்பில் கிருமி தாக்குதல் ஏற்பட்டால், சாதாரண சிகிச்சையாக, 'ஆன்டிபயாடிக்' கொடுத்து அதை சரி செய்யலாம்... அதுவே முற்றிப் போய் உறுப்பை அழுக செய்தால், அந்த உறுப்பை வெட்டி எறிவது தான் சிகிச்சை. தற்போதைக்கு, மனுதாரரை இயல்பு வாழ்வுக்கு திருப்புவதற்கு, சாதாரண சிகிச்சை மட்டும் கொடுக்கிறேன்' என்று மிக ...

தி.மு.க., - தே.மு.தி.க., போல அ.தி.மு.க.,விலும் நேர்காணல் துவங்கியது: அடுக்கடுக்கான புகார்களால் ஐவர் அணிக்கு ஜெயலலிதா கல்தா

Posted: 06 Mar 2016 10:01 AM PST

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் தி.மு.க., - தே.மு.தி.க.,வைப் போல அ.தி.மு.க.,விலும் நேற்று நேர்காணல் துவங்கியது. அடுக்கடுக்கான புகார்களால் நேர்காணலில் ஐவர் அணியினர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கல்தா கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் ஜன., 20 முதல், பிப்., 6 வரை விருப்ப மனுக்கள் ...

இந்தியாவில் 3 கோடி தேர்தல் வழக்குகள்: தனி 'பெஞ்ச்' அமைத்தால் தீர்வு கிடைக்கும்

Posted: 06 Mar 2016 12:54 PM PST

சென்னை : ''இந்தியாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக, மூன்று கோடி வழக்குகள் உள்ளன. தேர்தல் வழக்குகளுக்காக, கோர்ட்டுகளில், தனி, 'பெஞ்ச்' அமைத்தால் மட்டுமே, விரைவில் தீர்வு காணலாம்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி தெரிவித்தார்.தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழ் சார்பில் சென்னையில் நேற்று நடந்த கருத்தரங்கில் கோபாலசாமி பேசியதாவது:தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தேர்தல் கமிஷன் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு, வழக்குகளை பதிவு செய்கிறது. இவை, எப்போது முடிவுக்கு வரும் என, யாருக்கும் தெரியாது. ...

பறக்கும் படைகளை கண்காணிக்க ஜி.பி.எஸ்.,

Posted: 06 Mar 2016 03:16 PM PST

புதுடில்லி : தேர்தல் முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, அவற்றின் வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், 4ம் தேதி துவங்கி, மே 16ம் தேதி வரை, நடக்கும் இந்த தேர்தல்களில், முறைகேடுகளைத் தடுக்க, பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படைகள், முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்தால், சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று, நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™