Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எதற்காக?

Posted: 06 Mar 2016 11:04 AM PST

பெண் எனும் பகடைக்காய்: ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எதற்காக? உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதான மசோதா அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்து தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே பேசப்படுவது சலிப்பூட்டுகிறது. இந்த அறிவிப்பும் 14-வது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஏகமனதாக நிறைவேறுகிறது. இதன் பின், கட்சி சார்ந்த சுயநல நோக்கமும், எதிர்பார்ப்புகளுமே அடங்கியிருப்பதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. 33 ...

'லிங்காஷ்டகம்' தமிழில் பாடி இருக்கிறார் SPB!

Posted: 06 Mar 2016 10:51 AM PST

'லிங்காஷ்டகம்' தமிழில் பாடி இருக்கிறார் SBP கேட்டு பலனடையுங்கள்

சிவனின் 'மகா மிருத்துன்ஜய மந்திரம்' சிவராத்திரி அன்று சொன்னால் பலன் அதிகம்!

Posted: 06 Mar 2016 10:51 AM PST

சிவனின் 'மஹா மிருத்துன்ஜய மந்திரம்' இது, நாளை சொன்னால் பலன் அதிகம்....இந்த வீடியோவிலேயே சமஸ்க்ருதத்திலும் ஆங்கிலத்திலும் படிக்க எளிதாக போட்டிருக்கிறார்கள்.......பாடும்போதே நாம் படிக்க முடியும்....அப்படியும் கஷ்டமாய் இருக்கு என்றால், இதை போட்டுவிட்டால் 108 முறை காதிலாவது கேட்டு பலன் பெறலாமே.......... மேலும் நாளை வருவது சோமவார மஹா சிவராத்திரி ! நாளை ஒருநாள் சிவராத்திரி விரதம் இருப்பதால் 3 கோடி சிவராத்திரிகள் விரதம் இருந்த பலன் கிடைக்குமாம், பேப்பரில் போட்டிருக்கிறார்கள் ................ ...

இன்று - 6-3-2016- திருமண நாள் காணும் செந்திலை வாழ்த்தலாம் வாங்க :)

Posted: 06 Mar 2016 10:49 AM PST

இன்று - 6-3-2016- திருமண நாள் காணும் செந்திலை வாழ்த்தலாம் வாங்க 5 ஆண்டுகளை அருமையாக கடந்து, இன்று தங்களின் 6 வது வருடத்தில் அடியெடுத்துவைக்கும் செந்தில் கீதா தம்பதிகளுக்கு எங்களின்  மனமார்ந்த வாழ்த்துகள் ! இன்று போல என்றும் வாழ்க வென வாழ்த்துகிறேன்! வாழ்க பல்லாண்டுகள்!!

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Posted: 06 Mar 2016 09:40 AM PST

விரைவில் தொலைந்த மன அமைதி ... இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!. எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு... தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...! நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை ...

பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் !

Posted: 06 Mar 2016 08:20 AM PST

பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் ! கேரளாவில் பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் அவருக்கு வயது 45 கொச்சி மருத்துவமனையில் உடலநலகுறைவால் உயிர் பிரிந்தது... விவரங்கள் விரைவில்... ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். சமீபத்தில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன் நடிப்புக்காக‌ மிகவும் பேசப்பட்டது தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய சினிமா விருதுகளை கலாபவன் மணி பெற்றுள்ளார். விகடன்

வள்ளுவர் காட்டும் அம்மா !

Posted: 06 Mar 2016 08:19 AM PST

"அம்மா " என்ற சொல் திருக்குறளில் இல்லையென்றாலும் " தாய் " , " அன்னை " , " ஈன்றாள் " ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார் . வள்ளுவர் மனைவி வாசுகியா என்பதில் கருத்து மாறுபாடு இருந்தாலும் ,வள்ளுவர் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றவர் என்பதும் , தாயின் மீது பெருமதிப்புக் கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது . பெண்பிள்ளை வளர்ந்து பருவத்திற்கு வந்துவிட்டால் , தாயானவள் அவளைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனிக்கவேண்டும் . வயிறாரச் சாப்பிடுகிறாளா , சரியாகத் தூங்குகிறாளா , நேரத்திற்கு வீடு வந்து சேருகிறாளா ...

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா?

Posted: 06 Mar 2016 06:58 AM PST

புதிதாக வீடு கட்டி குடி புகுந்திருக்கிறீர்கள். திடீரென்று ஓராண்டுக்குள்ளேயே வேறு ஊருக்கு மாற்றலாகிவிடுகிறது. அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்படியான சூழல் ஏற்படுகிறது. வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் ஆகவேண்டும். வெறுமனே, "இத்தனை ரூபாய் வாடகை. 5 மாசம் முன்பணம்" என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. இருபது ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய ...

பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Posted: 06 Mar 2016 06:35 AM PST

டாக்டர் ஜான் மரிய சேவியர், உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது இப்போது அதிகரித்துவருகிறது. ஆனால், ஒரு பிளாஸ்டிக் பொருளை வாங்குவதற்கு முன்னர் அது எந்த வகையான பிளாஸ்டிக் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். மொத்தம் ஏழு வகையான பிளாஸ்டிக் வகைகளில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1, 2, 3 முதல் 7 வரையான இந்த எண்கள், பிளாஸ்டிக் பொருட்களில் மறுசுழற்சி முக்கோண குறியீட்டுக்குள் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த ஏழு எண்களுக்கும் ஒவ்வொரு ...

ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா?

Posted: 06 Mar 2016 06:33 AM PST

நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், பலவகையிலும் வசதியானதுதான். ஆனால் அதன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவதுதான் பிரச்சினை. சரி, ஏன் ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? இலவச அப்ளிக்கேஷன்கள் மற்றும் சில விளையாட்டுகளை டவுன்லோடு செய்யும்போது அவற்றில் இடம்பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றன. எனவே, அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யாதீர்கள். சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களையும் 'ஆன்' செய்து வைத்திருப்பார்கள். ...

அனுமந்தபுரம் அழகிய கோலங்கள்

Posted: 06 Mar 2016 06:22 AM PST

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம் என்னும் சிறிய கிராமம். சிவபெருமானின் மூத்த புதல்வர் வீரபத்திரரர் சாமி கோவில் இங்கு உள்ளது. தக்கன் நடத்திய வேள்வியை அழிக்கவும் அவனுக்கு துணையாக இருந்த விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் முதலான தேவர்களைகைக் கொன்று துவசம் செய்யவும் சிவபெருமானால் படைக்கப் பட்டவர் வீரபத்திரர். தக்கன் வேள்வியை அழித்து தேவாதி தேவர்களைக் ...

முயற்சி

Posted: 06 Mar 2016 04:34 AM PST

முயற்சி முயல்வோம் முயல்வோம் முன்னமே முயல்வோம் முடியுமென முனைப்போடு  முன்னமே முயல்வோம் முடியாமை விலக்கி முன்னமே முயல்வோம் முடிந்தபின் வருந்தாமல் முன்பே முயல்வோம் முடியாதென வருந்தாமல் முன்பே முயல்வோம் முடிக்கும் முனைப்போடு முன்பே முயல்வோம் முன்வைத்த காலை பின்வாங்கா முயல்வோம் முளைவிட்ட முயற்சியை மூடாமல் முயல்வோம் முட்டுக்கட்டைகளை முறித்துவிட முயல்வோம் மூடுபனி அகற்றி முன்னேற முயல்வோம் முட்டையில் ஜனித்த உயிர்போல முயல்வோம் முடிவாய் எல்லையை அடைந்திட முயல்வோம் ச.சந்திரசேகரன் ...

-சொந்தமாக இரண்டு பதுங்கு குழிகளும் இருக்காம்...!!

Posted: 06 Mar 2016 02:00 AM PST

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Posted: 05 Mar 2016 10:46 PM PST

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா? - கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. - - - முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும், இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி. - சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம் முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி தியானம் ...

பதக்கப் பெண் லாவண்யா!

Posted: 05 Mar 2016 10:39 PM PST

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஓர் இளம்பெண். அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த லாவண்யா. மேடையில் 32 பதக்கங்களை வழங்க லாவண்யாவை அழைத்தபோது எழுந்த கரவொலியால் அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கமே அதிர்ந்தது. ஐந்து வயதில் தந்தையை இழந்தவர் லாவண்யா. கிராமச் சூழலில் தமிழ்மொழி வழிக் கல்வி பயின்றவர். கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு நிலவிய முற்றிலும் ...

அன்னைத் தமிழுக்கு ஹார்வர்டில் ஓர் இருக்கை!

Posted: 05 Mar 2016 10:21 PM PST

அன்னைத் தமிழுக்கு ஹார்வர்டில் ஓர் இருக்கை! - ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் ஒரு தமிழ் அர்ப்பணம்! உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் செய்தி, தமிழர்களை நெஞ்சம் நிமிர்த்த வைத்திருக்கிறது. தமிழர்க்கு இது எத்தனை பெருமை வாய்ந்தது என்பதையும் இதனால் உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதையும் எடுத்துக்கூறும் 'ஹார்வர்டு தமிழ் இருக்கை கீதம்', ...

தாய்மொழிக் கல்வியின் அவசியம்!

Posted: 05 Mar 2016 10:19 PM PST

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்கிறோம். ஆனால், பொருளாதார நிபுணர்களின் பார்வையில் அதிக மனிதவளம் கொண்ட நாடு சீனா ஆகும். விளையாட்டுப் பொருட்கள், வெடிக்கும் மத்தாப்பு, எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்கள் தயாரிப்பிலும் மேலோங்கி நிற்கிறது சீனா. இதற்கான அடிப்படைக் காரணம், தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதுதான். மழலையர் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அனைத்தும் தாய்மொழியில் கற்கிறார்கள். அளப்பரிய மனித வளமும் இயற்கை வளமும் கொண்ட இந்தியா, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் ...

எப்படி விழுந்து கும்பிட்டனர் ?

Posted: 05 Mar 2016 10:17 PM PST

எப்படி விழுந்து கும்பிட்டனர் ?

திருவாலங்காட்டு வட ஆரண்யேசுவரர் கோயிலில் ஒரு சிறிய புடைப்புச் சிற்பம் தரையில் பதிக்கப்பட்டுள்ளது ! அதை உற்று நோக்கினேன் (5-3-16) ; எப்படித் தரையில் விழுந்து கும்பிட்டிருக்கிறார்கள் என்ற ஒரு வரலாற்றுச் செய்தி அதில் உள்ளதை உணர்ந்தேன் ! -

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Posted: 05 Mar 2016 10:09 PM PST

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்: இன்று அவரது நினைவு நாள்! எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு. திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் ...

ஆலங்காட்டுக் காட்சிகள் !

Posted: 05 Mar 2016 09:51 PM PST

ஆலங்காட்டுக் காட்சிகள் ! ஓர் ஆய்வுக்காகத் திருவாலங்காட்டு (திருவள்ளூர் மா.) வட ஆரண்யேசுவரர் கோயிலுக்குச் சென்றேன் (5-3-16) ; ஆய்வாளர்களுக்காக அங்கிருந்த கோபுரச் சிற்பங்கள் முதலியவற்றின் படங்கள்!-

நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா?

Posted: 05 Mar 2016 09:40 PM PST

உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன. இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்! என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, பெரிதாகக் கத்துவார். குளுக்கோஸ் ஊசி ஏற்ற ஆள் கிடைக்கா விட்டால், குளுக்கோஸ் டி, 'பாக்கெட்' ஒன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது ...

அன்பு!

Posted: 05 Mar 2016 09:40 PM PST

ஒரு மலைப்பகுதியில் உள்ள காட்டில் வேடன் ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள்- அவன் வழக்கம் போலவே, கையில் ஆயுதங்களுடன் வேட்டையாடச் சென்றான். நீண்ட நேரமாகக் காட்டில் அலைந்து திரிந்தும், அவனுக்கு எந்த விலங்கையும் வேட்டையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சோர்வோடு ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அந்த மரத்தை அண்ணாந்து பார்த்தான். மரக்கிளையில் தேனடை ஒன்று இருப்பது தெரிந்தது. உடனே துள்ளியெழுந்தான் அந்த வேடன். தன்னிடம் இருந்த பொருட்களைக் கொண்டு தீப்பந்தம் ஒன்றினை தயார் செய்தான். பின்னர், தீப்பந்தத்தைக் ...

பணிவு!

Posted: 05 Mar 2016 09:34 PM PST

ஒரு ஊரில் துமிலன் என்ற பெரியவர் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தன்னால் எதுவும் முடியும்; யார் உதவியுமின்றித் தன்னால் எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்ற பெருமையில் யாரையும் மதிக்க மாட்டார். அவர் மகன் துஷாருக்கு இவரது பெருமை குணம் பிடிக்காது. அவரை எப்படி திருத்துவது என்று யோசித்தபடியே தோட்டத்திற்குள் நுழைந்தான். அவன் தந்தை தோட்டத்தில் தொரட்டியைக் கொண்டு மிக உயர்ந்த முருங்கை மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறிக்க முயன்றார். எவ்வளவோ முயன்றும் அவரால் பறிக்க முடியவில்லை. இதைப் பார்த்துக் ...

படித்ததில் பிடித்தது :) --குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்!

Posted: 05 Mar 2016 09:31 PM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

மார்ச் 7, மகா சிவராத்திரி!

Posted: 05 Mar 2016 09:19 PM PST

மார்ச் 7, மகா சிவராத்திரி! 'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது. தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை செய்வதில்லை. கண்விழித்து சிவனை வழிபடுகிறோம். இப்படி கண்விழிக்க காரணம் என்ன? காலையில் சூரியன் உதயமானதும், கண் விழித்து நம் அன்றாடக் ...

தெரிஞ்சுக்கோங்க!.......'இயர் போன்' பயன்படுத்துகிறீர்களா?

Posted: 05 Mar 2016 09:14 PM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து!

Posted: 05 Mar 2016 09:11 PM PST

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல் !! சென்னை: 'சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலையின் புவி அமைப்பியல் துறை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த, விஞ்ஞானிகளின் இரண்டு நாட்கள் கருத்தரங்கை, அண்ணா பல்கலையில் நடத்தின. கருத்தரங்கில், விஞ்ஞானிகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™