Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினசரி செலவை சமாளிக்க முடியுமா: தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் கலக்கம்

Posted: 05 Mar 2016 07:13 AM PST

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி தள்ளிப் போனது, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளர் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டால், ஓட்டுப்பதிவு வரை, தினசரி லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்பதால், வேட்பாளர் பட்டியல் தாமதமாக வெளியானால் நல்லது என்ற மன நிலையில் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேட்பு மனு தாக்கல், ஏப்., 22ல் துவங்குகிறது. மே, 16 ஓட்டுப்பதிவு நடைபெறு கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கும் ஓட்டுப்பதிவுக்கும் இடையில், 72 நாட்கள் உள்ளன.பிரதான ...

வளர்ச்சி அரசியலா? வார்த்தை அரசியலா?

Posted: 05 Mar 2016 08:23 AM PST

கடந்த, 1957 சட்டசபைத் தேர்தல் களம். காஞ்சிபுரத்தில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். அனல் பறக்கும் பிரசாரத்தின் இறுதிக்கட்டம். தொகுதியில் அண்ணாவிற்குப் பெருகும்ஆதரவு கண்ட, குறிப்பிட்ட ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், அண்ணாதுரையை கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சிக்கும் விதமாக ஒரு பெரிய அட்டையை, அவர் வீட்டுக்கு எதிரில் வைத்துச் சென்றனர்.

கோபத்தில் கொப்பளித்த தி.மு.க., தொண்டர்கள், அட்டையை வைத்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூக்குரலிட்டனர்.அப்போது அண்ணாதுரை, 'யார் மீதும் எந்த நடவடிக்கை யும் தேவையில்லை. உடனே ஒரு ...

கரைபுரண்டு ஓடிய 45 சதவீத கமிஷன்

Posted: 05 Mar 2016 08:33 AM PST

பொதுப்பணித் துறையில், கட்டடங்கள் மற்றும் நீர்வளத் துறை என, இரண்டு பிரிவுகள் உள்ளன.

கட்டடங்கள் பிரிவு மூலம் துறைக்கு தேவையான கட்டடங்கள் மட்டுமின்றி, அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன; கட்டடங்களின்பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வளத் துறை மூலம் மாநிலத்தின் நீர் கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் நடக்கின்றன. இத்துறையின் கீழ், நீராய்வு நிறுவனம், அணைகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளும் இயங்குகின்றன.
கடந்த ஐந்து ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், ...

வளர்ச்சிக்கு புதிய ரயில் திட்டங்கள்: தமிழக அரசு தாமதித்தால் சிக்கல்

Posted: 05 Mar 2016 09:10 AM PST

தமிழக வளர்ச்சிக்கான, புதிய ரயில் பாதை திட்டங்களை நிறைவேற்ற, ரயில்வே துறையுடன், தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ரயில்வே பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு, 2,157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை என, மொரப்பூர் - தர்மபுரி திட்டம் மட்டுமே, அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, பல புதிய ரயில் பாதை திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம். இதற்கு, மற்ற மாநிலங்கள் ரயில்வேயுடன் இணைந்து கூட்டு ...

கானல் நீராகிய 110 விதி: வேளாண்மைக்கு நிதி எங்கே?

Posted: 05 Mar 2016 09:12 AM PST

வேளாண்மைக்கு நிதி எங்கே?வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை திட்டங்களுக்கான, தரமான இடு பொருட்கள் உரிய தருணத்தில், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு நோக்க அமைப்பு, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.இதற்காக, ஒரு கோடி ரூபாய் சம பங்கு தொகையும், வட்டியில்லா சுழல் நிதியாக, 100 கோடி ரூபாயும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த, 11.49 கோடி ரூபாய் என மொத்தம், 112.49 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்படும் என, 110 விதியின் கீழ், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், ...

யாருமே வரலையே... தவிக்கிறது பா.ஜ.,

Posted: 05 Mar 2016 10:03 AM PST

லோக்சபா தேர்தலில் தோள் கொடுத்த கட்சிகள், தற்போது, கூட்டணிக்கு வர மறுப்பதால், 'யாருமே வரலையே' என்ற விரக்தியில், தமிழக பா.ஜ., தவிக்கிறது.

20 சதவீத ஓட்டு:
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து, வலுவான கூட்டணியை பா.ஜ., அமைத்தது. அத்தேர்தலில், நிறைய தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டாலும், பா.ஜ.,வுக்கு, 5.45 சதவீத ஓட்டுகளும், கூட்டணிக்கு, 20 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதே சதவீத ஓட்டுகள், சட்டசபை தேர்தலில் கிடைக்குமானால், முத்திரை பதிக்க முடியும் என, பா.ஜ., மேலிடம் கணக்குப் போட்டது. அதனால், மீண்டும் அந்த கூட்டணிக்கு உயிரூட்ட ...

சுதந்திரமான தேர்தல் நடவடிக்கையை அசைக்கும் இலவசங்கள்!

Posted: 05 Mar 2016 10:05 AM PST

தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடு வதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 2013 ஜூலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: *தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்படும் எந்த வகையான இலவசங்களும், மக்களிடம் தனிப்பட்ட முறையில் அழுத்தத்தை கொடுக்கும். இது, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடவடிக்கையை அசைக்கும்*தேர்தலில் அனைவரும் சமநிலையில் போட்டியிடுவதற்கான சூழலை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு உரிய ...

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்கு தடை இல்லை: நிதி ஆதாரங்களையும் காட்ட வேண்டும் என்கிறது தேர்தல் கமிஷன்

Posted: 05 Mar 2016 10:09 AM PST

'தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட, அரசியல் கட்சிகளுக்கு தடையில்லை; இருப்பினும், அதற்கான நிதி ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில், பிரதான கட்சிகளில் ஒன்றான தி.மு.க., 2006 சட்டசபை தேர்தலில், 'ஆட்சிக்கு வந்தால் இலவச கலர், 'டிவி' வழங்கப்படும்' என, அறிவித்தது. அந்த தேர்தலில், தி.மு.க.,வின் இலவச அறிவிப்பு மட்டுமே பிரதான விவாதப் பொருளாக இருந்தது.இதை தொடர்ந்து, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு, 'லேப் டாப்' போன்றவை வழங்கப்படும்' என, ...

துர்க்மெனிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எரிவாயு திட்டம்: ஆப்கன், பாக்., நாடுகளும் இணைந்து துவக்க முதலீடு ஒப்பந்தம்

Posted: 05 Mar 2016 10:13 AM PST

இஸ்லாமாபாத்: மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க்மெனிஸ்தானில் இருந்து, தெற்கு ஆசிய நாடுகளான, ஆப்கன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு, இயற்கை எரிவாயுவை கொண்டு வரும், 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'டாபி' எரிவாயு குழாய் திட்டம், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அந்த திட்டத்திற்கான, 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான துவக்க முதலீடு ஒப்பந்தத்தில், இந்த நான்கு நாடுகளும், சமீபத்தில் கையெழுத்திட்டு, குழாய் பதிக்க முதலீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை பெரிதும் ...

எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற மத்திய அரசு வியூகம்: பார்லி.,யில் விவாதத்துக்கு வரும் முக்கிய மசோதாக்கள்

Posted: 05 Mar 2016 10:31 AM PST

புதுடில்லி : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில், பார்லிமென்ட் கூட்டம் சுமுகமாக நடந்ததை அடுத்து,முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள், வரும் வாரம் விவாதிக்கப்பட உள்ளன. இதற்காக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி 23ல் துவங்கியது. முதல் வாரம், பல்வேறு பிரச்னைகளால், பார்லி மென்ட் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் அமளியால், எவ்வித மசோதாவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

சுமுகமாக நடக்க...:
இரண்டாவது வாரம், நிலைமையில் நல்ல ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™