Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு தேவை: அனைத்துக் கட்சிகளிடம் வலியுறுத்தல்

Posted: 05 Mar 2016 12:04 PM PST

ஊழல் செயல்கள், தேர்தல் குற்றங்களைத் தவிர்த்து அமைதியாகத் தேர்தலை நடத்திட அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சு. கணேஷ்.

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

Posted: 05 Mar 2016 12:03 PM PST

புலிவலம் ஊராட்சியில் 7 நாட்கள் நடைபெற்ற புதுக்கோட்டை லெணா விலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

வளாக நேர்காணல்: சுதர்சன் கல்லூரி மாணவர்கள் 102 பேர் பணிக்குத் தேர்வு

Posted: 05 Mar 2016 12:02 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணல் முகாமில் பங்கேற்ற மாணவர்களில் 102 பேர் பணி வாய்ப்பு பெற்றனர்.

புதுக்கோட்டை

Posted: 05 Mar 2016 12:01 PM PST

எரிவாயு நிறுவனங்களுக்கு ஓய்வூதியர்கள் கண்டனம்

Posted: 05 Mar 2016 12:01 PM PST

எரிவாயு நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆதார் எண் அளிக்காதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படுமென குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

Posted: 05 Mar 2016 12:00 PM PST

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான  சு. கணேஷ்.

அரசு மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

Posted: 05 Mar 2016 11:59 AM PST

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதுகை பூங்கொத்து அமைப்பின் சார்பில் உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையைத் தொடங்காவிட்டால் ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்:ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

Posted: 05 Mar 2016 11:59 AM PST

தேசியக் கூட்டுப் போராட்டக் குழுவின் (என்ஜெசிஏ) 36 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்காவிட்டால் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளரும், போராட்டக் குழுவின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஜி.மிஸ்ரா தெரிவித்தார்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மஸ்தூர் சாவு

Posted: 05 Mar 2016 11:59 AM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மஸ்தூர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

"பரோல்' கேட்டு சிறை அதிகாரியிடம் நளினி மனு

Posted: 05 Mar 2016 11:59 AM PST

அண்மையில் மரணமடைந்த தனது தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க "பரோல்' அனுமதி கோரி, வேலூர் சிறைக் கண்காணிப்பாளரிடம் நளினி மனு அளித்துள்ளார்.

சுமை ஆட்டோ மோதி ஒருவர் சாவு

Posted: 05 Mar 2016 11:59 AM PST

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சுமை ஆட்டோ மோதியதில் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு: 4-ஆவது நாளாக நகைக் கடைகள் அடைப்பு:ரூ.1,400 கோடி வர்த்தகம் பாதிப்பு

Posted: 05 Mar 2016 11:58 AM PST

தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நகைக் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

Posted: 05 Mar 2016 11:58 AM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை, மணப்பத்தூர் கிராமத்தில் உள்ள திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி இயங்கிய சிறுவர் இல்லம் முடக்கம்

Posted: 05 Mar 2016 11:58 AM PST

செங்கல்பட்டு புறநகரில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் சிறுவர் இல்லம் முடக்கப்பட்டது. அதில் தங்கியிருந்த 25 பெண் குழந்தைகள் உள்பட 60 பேர் வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் காலமானார்

Posted: 05 Mar 2016 11:57 AM PST

விளவங்கோடு எம்எல்ஏவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடி (50), சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

எச். ராஜா மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு

Posted: 05 Mar 2016 11:57 AM PST

பாரதியஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் இரா. உலகநாதன், துணைச் செயலர் டி. தண்டபாணி ஆகியோர் அரியலூர் மாவட்டக் காவல் கண்கணிப்பாளர் அனில்குமார்  கிரியிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Posted: 05 Mar 2016 11:57 AM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

"அனைவருக்கும் வாழ்க்கையில் வழிகாட்டுகிறது திருக்குறள்'

Posted: 05 Mar 2016 11:57 AM PST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது வாழ்க்கையிலும் திருக்குறள் வழிகாட்டுகிறது என்றார் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

வெற்றியூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 05 Mar 2016 11:56 AM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு பாதுகாப்பு துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாமகவுடனும் பாஜக பேச்சுவார்த்தை

Posted: 05 Mar 2016 11:56 AM PST

மக்களவைத் தேர்தலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஏமூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

Posted: 05 Mar 2016 11:55 AM PST

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என ஏமூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பிரம்மதீர்த்தம் சாலையில் கழிவுநீர்க் கால்வாயை தூர் வார வலியுறுத்தல்

Posted: 05 Mar 2016 11:55 AM PST

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் கால்வாயைத்  தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழல் புகாருக்குள்ளான திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார்

Posted: 05 Mar 2016 11:55 AM PST

ஊழல் புகாருக்கு உள்ளான திமுகவுடன் ஊழலை எதிர்க்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா

Posted: 05 Mar 2016 11:55 AM PST

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் கிளை சார்பில் கரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

Posted: 05 Mar 2016 11:55 AM PST

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் இளைஞர் எழுச்சி நாள் விழா

Posted: 05 Mar 2016 11:55 AM PST

அரவக்குறிச்சியில் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாள் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் ஓராண்டு சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 05 Mar 2016 11:55 AM PST

வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டிபி. ராஜேஷ் எச்சரித்துள்ளார்.

"விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Posted: 05 Mar 2016 11:55 AM PST

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விதிமீறல்களை கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. நந்தகுமார்.

தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் கீழ் எம்எல்ஏ-க்களின் அலுவலகங்களுக்கு சீல்

Posted: 05 Mar 2016 11:55 AM PST

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை முன்னிட்டு,பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்களை பூட்டி சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருமானூரில் பெண்களுக்கு கணினி பயிற்சி

Posted: 05 Mar 2016 11:55 AM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார சேவை மையத்தில் புது வாழ்வு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி ஆகியவற்றுக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளாடுகள் வளர்ப்பு பயிற்சி

Posted: 05 Mar 2016 11:55 AM PST

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் வெள்ளாடுகள் வளர்க்கும் பயிற்சி முகாம் வேளாண் துறை சார்பில் அண்மையில் நடைபெற்றது.

அரளி விதை சாப்பிட்ட வியாபாரி சாவு

Posted: 05 Mar 2016 11:55 AM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே எள் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டதால் அரளி விதையைச் சாப்பிட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். 

விக்கிரமங்கலம்-கும்பகோணம் இடையே பேருந்து இயக்க கோரிக்கை

Posted: 05 Mar 2016 11:55 AM PST

பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி விக்கிரமங்கலத்தில் இருந்து கும்பகோணத்துக்கு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்க கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவிகள் விடுதியில் அத்துமீறல்:அமைச்சர் மீது நடவடிக்கை தேவை

Posted: 05 Mar 2016 11:55 AM PST

மாணவிகள் விடுதியில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்தை பாட வேண்டும்

Posted: 05 Mar 2016 11:54 AM PST

அனைத்து தனியார் பள்ளிகளும் தேசிய கீதம் பாடுவதை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது அவதூறு வழக்கு

Posted: 05 Mar 2016 11:53 AM PST

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தனசேகரன் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

வெண்ணிக் குயத்தியார் பாடலில் மனிதப்பண்பு!

Posted: 05 Mar 2016 11:53 AM PST

புறநானூற்றுப் புலவர்கள் மனிதத்தையும் அதன் உரிமையையும் பெருமையையும் ஆற்றலையும் போற்றி வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மதிப்பீடாகப் "புலவர்கள் வெற்றி பெற்ற அரசரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுபவர்' என்ற கருத்தோட்டமே நம் கண்முன் நிற்கும்.

மங்கையும் மலர்ப் பொய்கையும்

Posted: 05 Mar 2016 11:52 AM PST

மலர் நிறைந்த பொய்கையும் மீன் நிறைந்த வானமும் எப்பொழுதும் கவிஞர் மனத்தைக் கவரும் இயற்கைக் காட்சிகளாகும். இத்தகைய இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புற்ற கவிஞர் திருத்தக்கதேவர் தரும் காட்சிகளைக் காண்போம்.

தவறு ஒன்று,தண்டனை இரண்டா?

Posted: 05 Mar 2016 11:51 AM PST

"குற்றமற்ற ஒருவர் தண்டிக்கப்படுவதைவிட, குற்றம் இழைத்த பத்து பேர் தப்பிப்பது மேல்' என்பார் சர்.வில்லியம் பிளாக்ஸ்டோன். ஒருவர் செய்த குற்றத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம். ஒரு தவறுக்காக ஒருவருக்கு இரண்டு முறை இடர்ப்பாடு தருவதை (Double Jeopardy) சட்டம் அனுமதிப்பதில்லை.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 05 Mar 2016 11:50 AM PST

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணி அறக்கட்டளை சார்பில் முதலாவது ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பத்திரிகை உலகின் ஜாம்பவானான அவர் மறைந்து பதினான்கு ஆண்டுகளாகியும், அவரது நினைவைப் போற்றும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையே என்கிற ஆதங்கத்துக்கு வடிகால் கிடைத்தது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல்.

சொல் தேடல் -50

Posted: 05 Mar 2016 11:48 AM PST

ஒருவனுக்கு நல்ல நட்பு வட்டம் விரிகிறபோது இனிய இந்திரலோகம் எழுகிறது; தீ நட்பு ஏற்படும்போது வாழ்க்கை வெளியேற முடியாத கடுநரகமாகிறது. இதனால்தான் திருவள்ளுவர் வேறு எதனை விடவும் நட்புக் குறித்து நீள நினைந்து நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களைத் தந்துள்ளார்.

ராகுலின் நடவடிக்கையால் காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்

Posted: 05 Mar 2016 11:25 AM PST

தேச விரோத கோஷம் எழுப்பிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்துக்கு ராகுல் காந்தி சென்றதற்காக காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

தொழிலதிபர்களின் நலனுக்காகவே பாடுபடுகிறார் மோடி:ராகுல் காந்தி தாக்கு

Posted: 05 Mar 2016 11:24 AM PST

மாதாந்திர ஊதியம் பெறும் மக்களுடைய வாழ்நாள் சேமிப்புக்கு (இபிஎஃப்) வரி விதிப்பதும், கருப்புப் பணம் பதுக்கும் சில தொழிலதிபர்களின் நலனைக் காப்பதும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

யாகூப் மேமனுக்கு ஆதரவு திரட்டியவர் ரோஹித் வேமூலா:கன்னையாவுக்கு வி.கே. சிங் பதில்

Posted: 05 Mar 2016 11:23 AM PST

"மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனுக்கு ஆதரவாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோஹித் வேமூலா'' என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

அரசியல் பிரமுகர்களை தேர்தல் அதிகாரிகள் சந்தித்தால் கடும் நடவடிக்கை

Posted: 05 Mar 2016 11:23 AM PST

தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்துப் பேசக் கூடாது. அப்படி யாரும் சந்தித்துப் பேசினால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் 12 மசோதாக்கள் தாக்கல்

Posted: 05 Mar 2016 11:22 AM PST

நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் 12 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேமுதிகவால் பணிகள் தாமதமா? மு.க.ஸ்டாலின் பதில்

Posted: 05 Mar 2016 11:21 AM PST

கூட்டணியில் தேமுதிக இணைவது தாமத மாவதால், திமுகவின் பணிகள் தாமதிக்கிறதா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

Posted: 05 Mar 2016 11:21 AM PST

நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவிடம் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை

Posted: 05 Mar 2016 11:21 AM PST

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொலி காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை:ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

Posted: 05 Mar 2016 11:18 AM PST

நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், கட்சிக் கொடி கட்டிக் கொண்டுவந்த வாகனத்தில் முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்: பழ.கருப்பையா

Posted: 05 Mar 2016 11:16 AM PST

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், எழுத்தாளர் பழ.கருப்பையா பங்கேற்கிறார்.

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காயிதே மில்லத் விருதுக்கு தேர்வு

Posted: 05 Mar 2016 11:15 AM PST

அரசியல், பொது வாழ்க்கையில் நேர்மையாக சேவைப்பணி ஆற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உள்ளிட்ட 3 பேர் காயிதே மில்லத் விருதுக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

6,000 கிராமங்களுக்கு மின்வசதி :மத்திய அரசு தகவல்

Posted: 05 Mar 2016 11:13 AM PST

நாட்டில் மின்வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின்வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

38 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர ஆலைகள்: ஒடிஸா அரசு திட்டம்

Posted: 05 Mar 2016 11:13 AM PST

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 38 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

"காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளின் தவறுகளை மறைக்க முயலுகிறார் ராகுல்'

Posted: 05 Mar 2016 11:12 AM PST

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளின் தவறுகளை மறைக்க ராகுல் காந்தி முயலுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சிவராத்திரி விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்?

Posted: 05 Mar 2016 11:12 AM PST

சிவராத்திரி விழாவின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏஎம்யு பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில்:மத்திய அரசின் கோப்பை திருப்பி அனுப்பினார் பிரணாப்

Posted: 05 Mar 2016 11:12 AM PST

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏஎம்யு) நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கோப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியுள்ளார்.

அருணாசல் அமைச்சரவை விரிவாக்கம்

Posted: 05 Mar 2016 11:11 AM PST

அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல், தனது அமைச்சரவையை சனிக்கிழமை விரிவாக்கம் செய்தார்.

நிதீஷ் அரசின் மதுவிலக்கு கொள்கை ஏமாற்றுவேலை:மாஞ்சி விமர்சனம்

Posted: 05 Mar 2016 11:11 AM PST

பிகாரில் குறிப்பிட்ட சில வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கும் முதல்வர் நிதீஷ் குமாரின் முடிவை ஏமாற்றுவேலை என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி விமர்சித்தார்.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் தப்பிக்க முடியாது:ஜேட்லி எச்சரிக்கை

Posted: 05 Mar 2016 11:09 AM PST

வங்கிகளில் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசின் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்தார்.

மேகாலயம் கொண்டுவரப்பட்டது சங்மா உடல்

Posted: 05 Mar 2016 11:08 AM PST

மறைந்த மக்களவை முன்னாள் தலைவர் சங்மாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேகாலயா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது.

தாணே படுகொலை விவகாரம்:கடன் தொல்லை காரணமா?

Posted: 05 Mar 2016 11:07 AM PST

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தியா உடனான பேச்சுவார்த்தை முயற்சி முறிந்துவிடவில்லை:பாக். தூதர் அப்துல் பாசித்

Posted: 05 Mar 2016 11:07 AM PST

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் சூழலில், "இந்தியா உடனான பேச்சுவார்த்தை முயற்சி முறிந்துவிடவில்லை' என்று இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் அப்துல் பாசித் தெரிவித்தார்.

எல்லை வழியாக ஊடுருவி வந்த வங்கதேசத்தினர் 35 பேர் கைது

Posted: 05 Mar 2016 11:07 AM PST

திரிபுரா மாநிலம், தலாய் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 35 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

"ஜேஎன்யு சர்ச்சையால் நாட்டின் பெயருக்கு களங்கம்'

Posted: 05 Mar 2016 11:07 AM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டது போன்ற சம்பவங்களால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

பெண் காவலரைத் தாக்கிய சிவசேனை தொண்டர் மீது நடவடிக்கை:பாஜக மகளிர் அணி வலியுறுத்தல்

Posted: 05 Mar 2016 11:06 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தில், போக்குவரத்து பெண் காவலரை சிவசேனைக் கட்சித் தொண்டர் தாக்கியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மகளிர் அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: பாஜக

Posted: 05 Mar 2016 11:06 AM PST

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கன்னையா குறித்து வெறுப்பூட்டும் பேச்சு:உ.பி.பாஜக நிர்வாகி நீக்கம்

Posted: 05 Mar 2016 11:03 AM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் நாவைத் துண்டிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகிகுல்தீப் வார்ஷ்ணய், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.

பொறுப்புடைமைஅமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது

Posted: 05 Mar 2016 11:03 AM PST

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) உள்ளிட்ட பொறுப்புடைமை அமைப்புகள் மத்திய அரசால் சீர்குலைக்கப்பட்டு வருவதாக வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார்.

வெறுப்புணர்வைத் தூண்டுவோரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்

Posted: 05 Mar 2016 11:01 AM PST

வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசுவோரை பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர் கான் வலியுறுத்தினார்.

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

Posted: 05 Mar 2016 11:01 AM PST

தில்லியில் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சாலை விபத்தில் பள்ளி மாணவர் சாவு

Posted: 05 Mar 2016 11:01 AM PST

கிரேட்டர் நொய்டாவின் மண்டி ஷியாம் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அரசு பேருந்து மோதி 13வயது பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

இபிஎஃப் தொகை மீதான வரியைத் திரும்பப் பெற வேண்டும்:ஜேட்லிக்கு மோடி அறிவுரை?

Posted: 05 Mar 2016 11:00 AM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொகை மீது வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருத்தி விவசாயிகள் போராட்டத்தை வைத்து அரசியல் செய்கிறது காங்கிரஸ்:ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு

Posted: 05 Mar 2016 11:00 AM PST

மகாராஷ்டிரத்தில் பருத்தி விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டிய பருத்தி ஆலை அதிபர், பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கூறி நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ்

தற்கொலைக்கு முயன்ற திபெத்திய இளைஞர் மரணம்

Posted: 05 Mar 2016 11:00 AM PST

சீனாவுக்கு எதிரான போராட்டத்தின்போது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட 16 வயது திபெத்திய இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்தது பிஎஸ்எஃப்

Posted: 05 Mar 2016 11:00 AM PST

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கட்ச் கடலோரப் பகுதிக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த மது பானத்தை விற்ற காவலர் தலைமறைவு

Posted: 05 Mar 2016 10:59 AM PST

தில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானத்தை விற்ற காவலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண்ணிடம் தவறாக நடந்ததாகப் புகார்:ஆந்திர அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு

Posted: 05 Mar 2016 10:59 AM PST

ஹைதராபாதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில், ஆந்திர அமைச்சர் ராவேல கிஷோர் பாபுவின் மகன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிரக் ஏற்றி காவலர் கொலை: ஓட்டுநரை மடக்கி பிடித்த போலீஸார்

Posted: 05 Mar 2016 10:59 AM PST

வடக்கு தில்லியின் திமர்பூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் மீது டிரக்கை ஏற்றி கொலை செய்த ஓட்டுநரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

புது தில்லி

Posted: 05 Mar 2016 10:58 AM PST

ஆசிய கோப்பையை வெல்வது யார்?இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

Posted: 05 Mar 2016 10:58 AM PST

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்கதேசம் இடையிலான இறுதி ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தவணை முறையில் பொருள்கள் வாங்கி மோசடி: 3 பேர் கைது

Posted: 05 Mar 2016 10:58 AM PST

வடமேற்கு தில்லியின் அசோக் விஹார் பகுதியில் போலியான ஆவணங்கள் அளித்து மின்சாதனப் பொருள்கள் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மில்லர் அதிரடி; ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

Posted: 05 Mar 2016 10:57 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

கல்விச் சட்ட விதிகளை மறுஆய்வு செய்யக் குழு அமைப்பு

Posted: 05 Mar 2016 10:57 AM PST

அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில்,  பள்ளிக் கல்விச் சட்டம் மற்றும் விதிகளை மறுஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது.

"நரேந்திர மோடி' செயலியை பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

Posted: 05 Mar 2016 10:57 AM PST

"நரேந்திர மோடி' செல்லிடப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளது.

அப்ரிதிக்கு ஏற்றம் தந்த உலகக் கோப்பை

Posted: 05 Mar 2016 10:56 AM PST

இரண்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2009-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. 12 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி, இங்கிலாந்தின் லார்ட்ஸ், ஓவல், டிரென்ட்பிரிட்ஜ் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற்றது

ஈபிஎஃப் வரி விதிப்பு: தில்லியில் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Mar 2016 10:56 AM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய மகளிர் காங்கிரஸார் தில்லியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெட்ரோ ரயில்நிலையத்தில் தவறவிட்ட ரூ. 1.33 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த படை வீரர்

Posted: 05 Mar 2016 10:55 AM PST

தில்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் தவறவிட்ட பணப்பையை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) மீட்டு உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

கராச்சி இலக்கிய திருவிழாவில் பங்கேற்க கேஜரிவால் ஒப்புதல்

Posted: 05 Mar 2016 10:54 AM PST

பாகிஸ்தானில் வரும் 2017-இல் நடைபெற உள்ள கராச்சி இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

கன்னையா குமார் பாதுகாப்பு விவகாரம்: ஜேஎன்யு நிர்வாகத்துக்கு தில்லி போலீஸ் கடிதம்

Posted: 05 Mar 2016 10:53 AM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் சந்திப்புகள் தொடர்பாக தகவல் அளிக்கும்படி, ஜேஎன்யு நிர்வாகத்தை தில்லி போலீஸ் கேட்டு கொண்டுள்ளது.

உலக டேபிள் டென்னிஸ்: வரலாறு படைத்தது இந்தியா

Posted: 05 Mar 2016 10:53 AM PST

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளன.

செய்திகள் சில வரிகளில்...

Posted: 05 Mar 2016 10:53 AM PST

செய்திகள் சில வரிகளில்...

"ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க தில்லி நிறுவனம் முடிவு

Posted: 05 Mar 2016 10:53 AM PST

குறைந்த விலையில் செல்லிடப்பேசி தருவதாக அறிவித்த "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாக தில்லியைச் சேர்ந்த "அட்வான்டேஜ் கம்யூட்டர்ஸ்'  நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஎம்யு பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில்: மத்திய அரசின் கோப்பை திருப்பி அனுப்பினார் பிரணாப்

Posted: 05 Mar 2016 10:52 AM PST

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏஎம்யு) நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கோப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியுள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி:வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழர்

Posted: 05 Mar 2016 10:52 AM PST

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பதவிக்கு நியமனமாக வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்:பென் கார்ஸன் விலகல்

Posted: 05 Mar 2016 10:52 AM PST

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிட்ட பென் கார்ஸன், அந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பணியிடத்தில் ஏற்றத்தாழ்வு: பிச்சை எடுத்துப் பிழைக்கும் திருநங்கை

Posted: 05 Mar 2016 10:51 AM PST

தில்லியில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த திருநங்கை அங்கு நிலவிய ஏற்றத்தாழ்வு காரணமாக வெளியேறி தற்போது வேலை கிடைக்காமல் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். கிரன் சகி என்ற அந்த திருநங்கை, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவராவார். தனது நிலை குறித்து அவர் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்: மோடிக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

Posted: 05 Mar 2016 10:51 AM PST

மனை வணிக (ரியல் எஸ்டேட்) மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எஃப்-16 விமானங்கள்: அரசாணை வெளியிட்டது அமெரிக்கா

Posted: 05 Mar 2016 10:50 AM PST

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு எட்டு எஃப்-16 போர் விமானங்களை வழங்குவதற்கான அரசாணையை அமெரிக்கா வெளியிட்டது.

ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு'

Posted: 05 Mar 2016 10:50 AM PST

புது தில்லி பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குத் திட்டத்தை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தொடங்கியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™