Tamil News | Online Tamil News |
- மாப்பு வச்சிட்டாருய்யா ஆப்பு
- தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல்: ஏப்ரல் 22ல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: ஓட்டு எண்ணிக்கை மே 19ம் தேதி
- ரயில்வே லெவல் கிராசிங் தொல்லையிலிருந்து விமோசனம்: ரூ.51 ஆயிரம் கோடியில் மெகா திட்டம் துவக்கம்
- கேள்விக்கு பதில் தராமல் என்னை விமர்சிப்பதா? பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல்
- 'விஜயகாந்தை பேசி முடிங்க':கனிமொழிக்கு கருணாநிதி உத்தரவு
- அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை 11ம் தேதி வெளியீடு?
- அரசின் கடன் சுமை அதிகரிப்பு: தர்மசங்கடத்தில் அ.தி.மு.க.,
- தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
- தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது: தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள்
- ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை
| Posted: 04 Mar 2016 07:42 AM PST 'கேப்டன் தம்பி... அரசியல்ல நீயும், 'சாணக்கியன்'னு நிரூபிச்சுட்டியேப்பா! என் கண்கள் பனிக்கிறது; இதயம் இனிக்கிறது! நீ நல்லா வருவே!' - வருகிற 8ம் தேதி, விஜயகாந்தை உச்சி முகர்ந்து, கலைஞர் இப்படி வாழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அப்படி ஒரு அரசியல் விளையாட்டைத் தான், அமித்ஷாவின் துாதுவராக வந்த, தமிழக பா.ஜ.,தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜாவடேகரிடம், விஜய்காந்த் நேற்று முன்தினம் நிகழ்த்தியிருக்கிறார். ஆம்! கேப்டன் வீசிய கூட்டணி நிபந்தனை அம்புகளில், பா.ஜ., சுத்தமாய் பஞ்சர்!நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், தமிழக பா.ஜ., தலைவர்களுக்குக் கூட தெரிவிக்காமல், ... |
| Posted: 04 Mar 2016 10:42 AM PST தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16ல் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்; இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்., 22ல் துவங்கும்; மே 19ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே, 22ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைகளின் பதவிக் காலமும் மே மாதத்தில் முடிகின்றன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி டில்லியில் ... |
| ரயில்வே லெவல் கிராசிங் தொல்லையிலிருந்து விமோசனம்: ரூ.51 ஆயிரம் கோடியில் மெகா திட்டம் துவக்கம் Posted: 04 Mar 2016 11:05 AM PST புதுடில்லி: வரும், 2019க்குள், நாட்டின் அனைத்து நெடுஞ்சாலைகளையும், ரயில்வே லெவல் கிராசிங்குகளின் குறுக்கீடுகளில் இருந்து விடுவிக்கும், 'சேது பாரதம்' எனப்படும் கனவுத் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். '50 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவும்' என்றும் கூறினார். டில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'சேது பாரதம்' திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மனித உடலுக்கு, ரத்த நாளங்கள் சக்தியையும், வேகத்தையும் அளிப்பதை போன்று, நாட்டின் ... |
| கேள்விக்கு பதில் தராமல் என்னை விமர்சிப்பதா? பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல் Posted: 04 Mar 2016 11:11 AM PST கவுகாத்தி: ''லோக்சபாவில், நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார். புரிதல் வளரவில்லை: லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, நேற்று முன்தினம், பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'சிலர் ஆள் தான் வளர்கின்றனர்; புரிதல் வளரவில்லை. எதிர்க்கட்சிக்கு தாழ்வு மனப்பான்மை' என, காங்கிரசையும், ராகுலையும் விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், அசாம் ... |
| 'விஜயகாந்தை பேசி முடிங்க':கனிமொழிக்கு கருணாநிதி உத்தரவு Posted: 04 Mar 2016 11:16 AM PST தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்தை கொண்டு வருவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டாலும், இன்னும் தொகுதி எண்ணிக்கை முடிவடையாததால், கூட்டணியை சுமுகமாக பேசி முடிக்கும் பணியை, கனிமொழியிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை, தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, தான் எடுத்திருக்கும் முடிவு குறித்து ஏற்கனவே, தி.மு.க., தரப்பில் தன்னை சந்தித்த கனிமொழி ஆதரவாளரான அரசியல் ஆலோசகரிடம், விஜயகாந்த் தெரிவித்து விட்டார். ஆனாலும், அவர் பா.ஜ., தரப்பினரிடமும், ... |
| அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை 11ம் தேதி வெளியீடு? Posted: 04 Mar 2016 11:20 AM PST சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வைத்தால், மக்களுக்கு என்னவெல்லாம் செய்து கொடுப்போம் என்பதை தெரியப்படுத்த, ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, அக்கட்சி தேர்தல் அறிக்கை, முக்கிய பங்கு வகித்தது. ரேஷன் கடைகளில், கிலோ ஒரு ரூபாய்க்கு, 20 கிலோ அரிசி வழங்கப்படும்; வீடுகளுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்படும் என அறிவித்தது, மக்களிடம் பெரும் வரவற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, 2011 சட்டசபை தேர்தலின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களுக்கு அ.தி.மு.க., முக்கியத்துவம் அளித்தது. 20 கிலோ அரிசி இலவசமாக ... |
| அரசின் கடன் சுமை அதிகரிப்பு: தர்மசங்கடத்தில் அ.தி.மு.க., Posted: 04 Mar 2016 11:24 AM PST தமிழக அரசின் கடன் சுமை, அ.தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தையும், எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., ஆட்சியில், அரசின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்தது. இது, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட, தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.*சிறப்பு திட்டங்கள் மூலம், தமிழகத்தை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1.20 லட்சம் கோடி ரூபாய், கூடுதல் வருமானத்தை, ஐந்து ஆண்டுகளில் ஈட்ட, நடவடிக்கை மேற்கொள்வோம்*பிரத்யேக திட்டங்களின் மூலம், தமிழகத்தை, ஒரு ... |
| தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு Posted: 04 Mar 2016 11:28 AM PST சென்னை:''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன*தேர்தல் பிரசாரம் செய்வோர், வெவ்வேறு ஜாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, தற்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், பரஸ்பரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது*ஓட்டுகளை பெற, ... |
| தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது: தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள் Posted: 04 Mar 2016 11:36 AM PST புதுடில்லி: 'மூன்று மாணவியர் பலியாகக் காரணமாக இருந்த, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம், உணர்ச்சிவசத்தால் நடந்தது; திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல' எனக்கூறி, அந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தங்கள் தண்டனையைக் குறைக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்தனர்.கொடைக்கானல், பிளசன்ட்ஸ்டே ஓட்டலுக்கு விதிகளை மீறி, அனுமதி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, 2,000 பிப்ரவரி, 2ல், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ... |
| ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை Posted: 04 Mar 2016 12:26 PM PST புதுடில்லி;'உலகிலேயே மிகவும் மலிவாக, 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, 'ஆட்காம்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்ப்புகள்: 'எங்களின் மொபைலை, தங்களது பெயரில், அவர்கள் விற்க முற்பட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், ஆட்காம் எச்சரித்துள்ளது.டில்லியை அடுத்துள்ள நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய்க்கு, 'பிரீடம் - 251' என்ற பெயரில், ஸ்மார்ட் மொபைல் போனை வழங்கப் போவதாக அறிவித்ததில் இருந்து பல்வேறு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |