Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தங்க குண்டுமழை...!

Posted: 04 Mar 2016 03:25 PM PST

தென்னை மரம் தோன்றிய வரலாறு..!

Posted: 04 Mar 2016 03:24 PM PST

வார்த்தையில் இருக்கு அரைகிலோ இனிப்பு…!

Posted: 04 Mar 2016 03:22 PM PST

- இதயம் வலிக்கிறது முள்வேலியில் உன் தாவணி! – —————- – கடைக்காரரிடம் கால்கிலோ சர்க்கரை கேட்டாய்… வார்த்தையில் இருந்தது அரைகிலோ இனிப்பு…! – —————— – நீ குப்பை கொட்டினாலும் அன்பை கொட்டுவதாகவே ஆனந்தப்பபடுகிறது குப்பைத் தொட்டிகள்… – ———————– சீர்காழி சிற்பி குமுதம் படம்-இணையம்

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Posted: 04 Mar 2016 03:21 PM PST

- சத்தியமங்கலத்தில் உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வசந்தி என்பவர் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தியை வீட்டு வேலைகளை செய்யுமாறு சார்பு நீதிபதி செல்வம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், துணிகைளை துவைக்க வசந்தி மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் வசந்தியிடம் விளக்கம் கேட்டு நீதிபதி செல்வம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ...

கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

Posted: 04 Mar 2016 03:15 PM PST

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன் போங்க மச்சான் – எனக்கு சொல்லவே வெட்கமா இருக்கு என்றால் என்னாடி விஷயம் என்றேன்? பேஸ்புக்கில் லவ் செஞ்சால் புள்ளையெல்லாம் இப்படித் தான் பிறக்கும் என்றால் – எப்படிடா செல்லம் என்றேன் அனுப்பினாள் பாவி ஓர் போட்டே – அட நானும் அதிர்ச்சியில் உறைந்தேன் – சாய்ந்தேன்!! -

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்!

Posted: 04 Mar 2016 03:12 PM PST

ஸ்பார்க் எனப்படும் வடிவமைப்பு நிறுவனம் ஒன்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் மேம்படுத்த புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளது. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து சின்னஞ்சிறு குடிசைகளை கடற்கரையில் அமைக்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பைன்-கூம்பு வடிவில் அமைக்கப்படவுள்ள இந்த குடிசைகள் சூரிய சக்தியில் இயங்கக்கூடியவை. இரவில் கடற்கரைக்கு வருபவர்கள் இக்குடிசைகளில் தங்கலாம். தினகரன்.

சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Posted: 04 Mar 2016 03:10 PM PST

தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து, மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார். இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி ...

ஏக்கம்

Posted: 04 Mar 2016 03:05 PM PST

ஏக்கம் இழந்து தவிக்கிறேன் இதயந்தன்னை இனியவளே இலகுவாயா? உழுது பார்க்கிறேன் உருவந்தன்னை உற்றவளே உருகுவாயா? எழுதிப் பார்க்கிறேன் எழிலாள்கவிதை என்னவளே ஏற்பாயா? பழுது பார்க்கிறேன் பருவந்தன்னை பழகியவளே பார்ப்பாயா? விழுது வீழ்கிறேன் வேறாய் மாற விரும்பிநீயும் ஏற்பாயோ? தொழுது கேட்கிறேன் தொண்டன் நானும் தலைவிநீ தயங்குவாயோ? அழுது ஆய்கிறேன் அன்பை அடைந்திட அழகேநீ அருளுவாயோ? ச.சந்திரசேகரன்

வாயுபுத்ரர் வாக்கு - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -3 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 04 Mar 2016 12:23 PM PST

இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் . மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -3 தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/8j1hbn3ghzxa2y0/SHIVAA3.pdf

நாகர்களின் இரகசியம் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -2 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 04 Mar 2016 12:23 PM PST

இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் . மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -2 தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6hnhd8hhsb59844/SHIVAA+2.pdf

மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 04 Mar 2016 12:18 PM PST

சிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" ...

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 04 Mar 2016 11:31 AM PST

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

மன்மதன் வந்தானடி - பட்டுகோட்டை பிரபாகர் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 04 Mar 2016 10:53 AM PST

பட்டுகோட்டை பிரபாகர் - மன்மதன் வந்தானடி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . இது வலைதளத்தின் மறு பதிவு . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/soxbok1jsq67w97/A120.pdf

உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

Posted: 04 Mar 2016 10:51 AM PST

  கோழிக்கோடு:  விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, 'உம்மன்சாண்டி...' என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார்; தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார். கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள, அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 'உம்மன்சாண்டி...' ...

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 04 Mar 2016 10:43 AM PST





ஜொ.வா. கைது.

Posted: 04 Mar 2016 10:22 AM PST

ஒரு பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக ஜொள்ளு வாத்தியார், நீதி மன்றத்தில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரை குறுக்கு விசாரணை செய்தார். "உமது பெயர்?" "ஜொள்ளு வாத்தியார்" " எனது கட்சிக்காரர் கந்தனுடைய மனைவியை நீர் கடத்திக்கொண்டுபோய் வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இது உண்மையா?" "அப்பட்டமான பொய். கந்தனுடைய மனைவியை நான் பார்த்தது கூடக் கிடையாது." "அப்படியானால் கந்தனுடைய மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்பது உமக்கு எப்படித் தெரியும்?" "" ஐயா ...

ரிப்போர்ட்டர் - தோமஸ் டி .அப்பாஸ் மொழி பெயர்ப்பு நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 04 Mar 2016 10:09 AM PST

தோமஸ் டி .அப்பாஸ் - ரிப்போர்ட்டர் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . தமிழில் -சிவன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/pp11j8ba95delm8/AC118.pdf

கூட்டத்தலைவர் தான் முதலில் பேச வேண்டும்…!

Posted: 04 Mar 2016 10:00 AM PST

கடந்த 1928-ல், கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்தார் நேரு. 'சாரதா சட்டம்' கொண்டு வருவது பற்றி ஆதரவு, எதிர்ப்பு என, இரு அணிகள் இருந்தன. – அப்போது, கூட்டத்திற்கு, யார் தலைமை தாங்குவது என்று பிரச்னை எழுந்தது. நேரு பேச எழுந்த போது, 'தலைவர் யார் என்று தீர்மானிக்கப்படாமல் இருக்கும் போது, நேரு பேசக்கூடாது…' என்று ஒரு அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மைக்' முன் வந்தார் நேரு. எல்லாரும் அமைதியாக இருக்கும்படி கூறி, தாம் முதலில் பேசப் போவதாக கூறினார். 'கூட்டத்தலைவர் தான் ...

படித்ததில் இடித்தது

Posted: 04 Mar 2016 09:52 AM PST

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் . ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ' ஆமை ஒரு வீட்டிற்குள் ...

அறிவியல் அறிவோம்...!

Posted: 04 Mar 2016 09:50 AM PST


-

இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ.,

Posted: 04 Mar 2016 09:49 AM PST

பெரிய சர்ச்சைக்குப் பிறகு புதிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் ஜான்சிராணி. மகிளா காங்கிரஸ் பிரிவின் தலைவி. காந்தியவாதி ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி. காரசாரமாக பேசுவார் என எதிர்பார்த்துப் போனால் அரசியல்வாதிக்கான அடையாளமே இல்லாமல் இருந்தா அவர். - 'சொந்த ஊர் அழகம்பட்டி. என்னோட அப்பா, அம்மா எனக்க எட்டு வயசு இருக்கும்போதே தவறிட்டாங்க. என் கூடப் பொறந்தவங்க மொத்தம் மூணு சகோதரிகள். பாட்டி பொன்னம்மாள்தான் எங்களை வளர்த்தாங்க. ஸ்கூலிங் முழுக்க நிலக்கோட்டையில் முடிச்சேன். டிகிரி மதுரையில படிச்சேன். அப்புறம் ...

கேள்வி வளையம்...

Posted: 04 Mar 2016 09:49 AM PST

'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்; என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...' என்பர் சிலர்! - இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப் பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும், எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்! - இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா... எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது தான்! - 'பெண்ணிடம் ...

கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்

Posted: 04 Mar 2016 09:48 AM PST

சி.சரவணன் ---------------- நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.! மாதச் சம்பளம் வாங்குபவர் களிடம் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் உள்ள காசாளர்கள், 'ஜனவரி மாத ஆரம்பத்திலே நீங்கள் இவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் வரியை சம்பளத்தில் பிடித்துவிடுவேன்' என்று எச்சரிப்பார்கள். இந்த எச்சரிக்கையை ...

காதல் – மணல் கடிகாரம் போல. …

Posted: 04 Mar 2016 09:44 AM PST


-
–
காதல்
மணல் கடிகாரம் போல.
நெஞ்சு நிரம்ப நிரம்ப
மூளை காலியாகிறது.

– ஜூல் ரெனா
–
———————–
நான் உன்னைக்
காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும்
அது.
சூரியன் குளிர்ந்துபோகும்
வரை
நட்சத்திரங்கள்
முதுமையடையும் வரை
நான் உன்னைக்
காதலிப்பேன்
–ஷேக்ஸ்பியர்

=======

நேர்மையை மதித்த பெர்னார்ட் ஷா

Posted: 04 Mar 2016 09:43 AM PST

பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு அன்பர் அவரது போட்டோவை அனுப்பி, அதில் கையெழுத்திட்டு அனுப்பும்படி கடிதம் எழுதினார். 'இதுபோல் போட்டோவில் கையெழுத்திடும் வழக்கம் பெர்னார்ட் ஷாவுக்கு இல்லை' என்று அவரது காரியதரிசியிடமிருந்து பதில் வந்தது. - உடனே அந்த அன்பர், ''எனக்கும் உங்கள் போட்டோ தேவையில்லை. நீங்கள் போட்டோவில் கையெழுத்திட்டு அனுப்பினால், பின்னாளில் அது நல்ல விலைக்குப் போகுமே என்றுதான் கேட்டேன்'' என்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தைப் படித்து நெகிழ்ந்து போன ஷா, ...

என்னை காயப்போடுகிறது மழை…!

Posted: 04 Mar 2016 09:31 AM PST

- ஊரே சுடுகாடாய்த்தான் காட்சியளிக்கிறது நீ உருக்குப் போயிருக்கும் போதெல்லாம்… – ———————- – நீ வகுப்பாசிரியை என்றால் பெயிலாகிக் கொண்டேதான் இருப்பார்கள் எல்லா மாணவர்களும் – ————————– – உன்னை நனைக்கும் போதெல்லாம் என்னை காயப்போடுகிறது மழை…. – —————– சீர்காழி சிற்பி குமுதம்

அப்துல் ரகுமான் கவிதைகள்

Posted: 04 Mar 2016 09:19 AM PST

உதிரும் சிறகுகள் … - – மழை ஓய்ந்த முன்னிரவில் சாளரத்தின் வழியே அறையில் புகுந்து மின் விளக்கை மொய்த்து முட்டி மோதி சிறகுகள் உதிர்த்து விழும் ஈசல் கூட்டம் – காலையில் திட்டியபடியே செத்த உடல்களோடு சிறகுகள் கூட்டிக் குப்பையில் எறிந்து – ஏதோ இருளை மோகித்து ஏதோ சாளர வழியே நுழைந்து சிறகுகள் உதிர்க்கப் போவோம் நாம். – —————————–

பித்தப் பூக்கள்...!!

Posted: 04 Mar 2016 08:56 AM PST

வாசிப்பில் ரசித்த வைரவரிகள். * '' காதல் என்பது ஆதிமனிதன் நம்மீது திணித்த இயற்கையான பலவீனம் ." ஆனால், ஆண்மை நிறைந்த வாலிபன் ஒருவன் ஆவேசமாய் மறுப்புச் சொன்னான். " காதல் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒன்றிணைக்கிறது. " துயரம் நிரம்பிய முகத்தோடு பெண் ஒருத்தி கூறினாள். " நரகத்திலிருந்து வெளிவந்த கொடிய நாகம் நமது உடம்பில் செலுத்திய விஷமே காதல். பனித்துனி போலத் தூய்மையுள்ள அந்த விஷத்தைத் தாகமுற்ற ஆன்மா மகிழ்வோடு பருகுகிறது. அதைப் பருகி மயங்கியவர்கள் மெல்ல மெல்ல மடிகிறார்கள். ...

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்...

Posted: 04 Mar 2016 06:44 AM PST

எண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. அடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர். இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? யார் அவர்?என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் ...

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Posted: 04 Mar 2016 04:37 AM PST

- பி.ஏ.சங்மா | கோப்புப் படம் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மாரடைப்பால் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவை மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதனையடுத்து மறைந்த முன்னாள் சபாநாயகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சங்மாவுக்கு புகழஞ்சலி: சங்மா மறைவை அறிவித்த சுமித்ரா மகாஜன், "அவையை புன்னகையுடன் சுமுகமாக நடத்துவது எப்படி என்பதை சங்மாவிடமே நான் கற்றுக் கொண்டேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ...

விஜய், மணிரத்னம், சூர்யா... ‘கில்லி’ படங்களுக்குப் பாடல்கள் எழுதிவரும் கவிஞர் வைரமுத்து!

Posted: 04 Mar 2016 04:03 AM PST

- இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிட முடிவு செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து. பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒரு படப்பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: புகழ் மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும் அவரது அறுபதாவது படத்துக்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மணிரத்னம் ...

புத்தகம் வேண்டி

Posted: 04 Mar 2016 04:03 AM PST

திரு அரு .ராமநாதனின் வீர பாண்டியன் மனைவி புத்தகமும் தெய்வத்தின் குரல் புத்தகமும் கிடைக்குமா
ஜெ.செந்தில்குமார்

தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கு மே 16ம் தேதி வாக்குப்பதிவு

Posted: 04 Mar 2016 03:52 AM PST

தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். - புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நஜீம் ஜைதி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். - தேர்தல் குறித்த அறிவிப்பில், - தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்குகிறது. வேட் ...

கொஞ்சம் ஜொள்ளு ...

Posted: 04 Mar 2016 02:51 AM PST

சோமு  வாத்தியார், அவர் வசிக்கும் ஊரிலிருந்த விவசாயி மாடசாமிக்கு இரண்டு லட்சம் கடன் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. மாடசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சோமு வாத்தியார், மாடசாமியின் வீட்டுக்குச் சென்றார். மாடசாமியின் வீட்டுக் கதவை வாத்தியார் தட்டினார். மாடசாமியின் மகள் விமலா கதவைத் திறந்தாள். " யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டாள். " மாடசாமியைப் பாக்கணும்" " உள்ள வாங்க! அப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார் " " மாடசாமிக்கு ...

காற்றில் வரும் மாற்றம்...

Posted: 04 Mar 2016 02:32 AM PST

வாசலுக்கு வரும் 
போது வரும் 
வாடைக்காற்று 
வலிய வந்து 
வசப்படுத்தும் 
உந்தன் வாசத்தை!!! 

உன் கோவத்தால் 

வாடிய முகத்துடன் 
வாடைக்காற்று 
சென்று விட 

கோடைக் காற்றோ 
கோபமாய் 
உள் நுழைகிறதே! 

உந்தன் கோபத்தை 
போல தீப்பிழம்பாய்!!!

தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள்

Posted: 04 Mar 2016 01:29 AM PST

- தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் 'விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. - இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர்.     -   விவாதத்தின் போது  "மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்" ...

இறை அருள் பெற...

Posted: 04 Mar 2016 12:41 AM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™