Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?

Posted: 31 Mar 2016 08:24 AM PDT

'கண்ணாமூச்சி ரே ரே... காதடப்பான் ரே... ரே... கண்டுபிடிப்பார் யாரே...' என்ற பாடல் வரிகளைப் பாடி, சின்ன வயதில் விளையாடாதவர்கள் மிகக் குறைவு. அதேபோல் தான் கள்ளன் - போலீஸ்

விளையாட்டும்.
இந்த விளையாட்டுகளில், ஒளிந்து கொண்டு இருப்பவரையோ, கள்ளனையோ பிடிப்பது சாத்தியமான விஷயம் தான். ஆனால், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகளும், தேர்தல் கமிஷனும் விளையாடும் கள்ளன் - போலீஸ் விளையாட்டில், வழக்கம் போல் இந்த முறையும் தேர்தல் கமிஷன் தோற்று விட்டது என்றே கூற வேண்டும்.
அந்த அளவிற்கு, சேர வேண்டிய இடங்களில் பணம் சென்று சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது ...

இன்று முதல் மதுவிலக்கை அமல்படுத்த பீஹார் தயார்:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் நிதிஷ்

Posted: 31 Mar 2016 11:22 AM PDT

பாட்னா:மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள, ஒரு சில மாநிலங்களின்பட்டியலில் இணைகிறது பீஹார். அங்கு, இன்று முதல்,பூரண மதுவிலக்கை அமல்படுத்தும், முதற்கட்டநடவடிக்கை துவங்குகிறது.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், முதல்வராக உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி, 'ஏப்ரல், 1ம் தேதி முதல், பூரண மதுவிலக்கை அடையும் வகையில், முதற்கட்ட நடவடிக்கை துவங்கும்' என, சமீபத்தில் ...

மல்லையா வெளிநாட்டில் இருப்பது ஏன்?பா.ஜ.,வுக்கு ராகுல் கேள்வி

Posted: 31 Mar 2016 11:22 AM PDT

கவுகாத்தி:''விஜய் மல்லை யாவும், லலித் மோடியும், இன்னமும் வெளிநாட்டில் இருப்பது ஏன்,'' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.

அசாம் மாநில சட்டசபைக்கு, ஏப்ரல், 4ல், முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வும், தக்க வைக்க வேண்டும் என்பதால் காங்கிரசும், கடுமையாக பிரசாரம் செய்துவருகின்றன.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.
திக்போய் என்ற இடத்தில் அவர் ...

தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு

Posted: 31 Mar 2016 11:25 AM PDT

புதுடில்லி:துாய்மை இந்தியா திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், சி.எஸ்.ஆர்., எனப்படும், தொழில் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பில், 30 சதவீதத்தை, இந்த திட்டத்துக்கு ஒதுக்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கம்பெனிகள் சட்டத்தின் படி, ஒவ்வொரு தொழில் நிறுவனமும், தங்களுடைய நிகர வருவாயில் இரண்டு சதவீதத்தை, சமூகப் பங்களிப்பு திட்டங்களுக்காக செலவிட வேண்டும்.
இந்த நிதியில், 30 சதவீதத்தை, கழிப்பிடம் கட்டுவது உள்ளிட்ட துாய்மை இந்தியா திட்டத்துக்கு செலவிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு ...

வெளிநாட்டு வங்கி கணக்குகளை தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 31 Mar 2016 11:27 AM PDT

புதுடில்லி:'லோக்பால்' சட்டம், 2013ல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்படி, நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை பிறப்பித்த உத்தரவு:'லோக்பால்' சட்டத்தின் புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள், தங்கள் பெயரிலோ, வாழ்க்கை துணை பெயரிலோ, தங்களைசார்ந்திருப்பவர்கள் பெயரி லோ வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தால், அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், அசையும் சொத்து கள் இருந்தால், ...

கிரானைட் அதிபரை விடுதலை செய்த மாஜிஸ்திரேட்டிற்கு... கிடுக்கிப்பிடி: ஐகோர்ட் நீதிபதிகள் குழு மேலூர் கோர்ட்டில் விசாரணை

Posted: 31 Mar 2016 11:36 AM PDT

மேலுார்:கிரானைட் மோசடி வழக்கில் இருந்து பி.ஆர்.பி., நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, மதுரை மாவட்டம் மேலுார் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம், மாவட்ட நீதிபதிகள் நேற்று விசாரணை நடத்தினர்; நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

சட்ட விரோதமாக கிரானைட் குவாரி நடத்தியதாக, மதுரையைச் சேர்ந்த பி.ஆர்.பி., நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிசாமி கைது செய்யப்பட்டார். இவர் தவிர வேறு சில நிறுவனங்கள் மீதும் அரசின் நடவடிக்கை பாய்ந்தது.இதன் பின், பி.ஆர்.பி., உள்ளிட்ட பலர் மீது தொடரப்பட்ட கிரானைட் மோசடி வழக்குகள், மேலுார் ...

பொது தேர்வு மாணவர்களுக்கு 'நரேந்திர மோடி பேனா' பரிசு

Posted: 31 Mar 2016 11:59 AM PDT

ஆமதாபாத்;பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 'மோடி பேனா' பரிசாக வழங்கப்படுகிறது.

குஜராத்தில், மாநில கல்வி வாரியத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு, பிரதமர் மோடியின் படம்பொறித்த பேனாக்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. காவி நிற பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனாக்களில், பிரதமர் மோடியின் படத்துடன், பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான, தாமரை சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த பேனாக்களை, தனியார் நிறுவனம் ...

'மாபெரும் வெற்றி':ஜெ., கட்டளை

Posted: 31 Mar 2016 12:11 PM PDT

'இதற்கு முன் பெறாத மிகப்பெரிய வெற்றியை, இந்த தேர்தலில், அ.தி.மு.க., பெற வேண்டும்' என, கட்சி தொண்டர்களுக்கு, பொதுச்செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மும்முனைப் போட்டியில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., - மக்கள் நலக் கூட்டணி - பா.ம.க., என, பலமுனை போட்டி நிலவுகிறது.இதை சாதகமாக நினைக்கும், அ.தி.மு.க., லோக்சபா தேர்தல் பாணியில், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. சிறிய கட்சிகளுக்கு, ஒன்றிரண்டு இடங்களை ஒதுக்கி, அவர்களையும், இரட்டை இலை ...

காங்கிரசுக்கு 32 தொகுதிகள் கருணாநிதி முடிவு; சோனியா மவுனம்

Posted: 31 Mar 2016 12:49 PM PDT

தி.மு.க., கூட்டணியில் குறைந்தபட்சம், 40; அதிகபட்சம், 50 தொகுதிகள் பெற வேண்டும் என, தமிழக காங்கிரசுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

அதுபற்றி, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடந்தது. பொருளாளர் ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பின், காங்கிரசுக்கு, 32 தொகுதிகள் ஒதுக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த தகவலை, தொலைபேசி மூலமாக, காங்., தலைவர் சோனியாவிடம், கனிமொழி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,

சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரம்; மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் டிரம்ப்

Posted: 31 Mar 2016 01:06 PM PDT

வாஷிங்டன் : ''சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் பேசியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், நவம்பர் ௮ல், அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்யும், 'பிரைமரி' தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், குடியரசு கட்சியில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, சிறுபான்மையினர், வெளிநாட்டு பணியாளர்கள் என, பலருக்கு எதிராக பேசி, அவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™