Tamil News | Online Tamil News |
- நத்தம் கதி என்ன?
- செப்டம்பருக்குள் ரூ.4,000 கோடியை திருப்பி தருவதாக மல்லையா அறிவிப்பு
- 'அசாமில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி, அமைதி பறிபோய்விடும்': சோனியா குற்றச்சாட்டு
- சொத்து குவிப்பதை நிறுத்தாத ஜெ.,: சுப்பிரமணியன் சாமி வாதம்
- சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்ய இனி அச்சமில்லை: மத்திய அரசு விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
- வாயால் கெட்டதாம் கவுதாரி: பஞ்சபாண்டவர் அணியில் தொடர் சர்ச்சை
- சிறுதாவூரில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தம்: விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவு
- அரசு பங்களாவுக்கு பாக்கியா? தேர்தலில் போட்டியிட முடியாது
- போக்கு காட்டிய தே.மு.தி.க.,வை கரைக்கும் வேலை துவங்கியது: தி.மு.க.,வில் ஐக்கியமானார் வட சென்னை மா.செ.,
- மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்: பிரதமர் மோடி பேச்சு
| Posted: 30 Mar 2016 07:52 AM PDT பொதுவாக யாகங்கள் நடத்தப்படும்போது, அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தெய்வத்திற்கும், நெய் உள்ளிட்ட உணவு பொருட்களில் ஒரு பகுதி, 'ஹவிஸ்' என்ற பெயரில் வழங்கப்படும். தக் ஷனின் யாகத்தை, சிவபெருமான் அழித்ததே இந்த 'ஹவிஸ்' ஒதுக்கப்படாத பிரச்னையால் தான் என, புராணங்களை படித்தவர்கள் கூறுவதுண்டு. நிலை அப்படி இருக்க, இன்று தெய்வத்துக்கு நிகராக போற்றப்படும் அரசர்களுக்கும், 'ஹவிஸ்' உரிமை உண்டல்லவா?அரசருக்கு சேர வேண்டியதை, சில அமைச்சர்கள் சரியாக கொண்டு சேர்க்காததால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, அவர்கள் வீட்டில் சோதனை எல்லாம் நடத்தப்பட்டதாக நிறைய தகவல்கள், ஓரிரு ... |
| செப்டம்பருக்குள் ரூ.4,000 கோடியை திருப்பி தருவதாக மல்லையா அறிவிப்பு Posted: 30 Mar 2016 11:48 AM PDT புதுடில்லி: வங்கிகளில் பெற்ற கடன் தொகையில், 4,000 கோடி ரூபாயை, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்ற, 'கிங்பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார். முன்னதாக, நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கக் கோரியும், அவரது பாஸ்போர்ட்டை முடக்கக் கோரியும், எஸ்.பி.ஐ., தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இந்த ... |
| 'அசாமில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி, அமைதி பறிபோய்விடும்': சோனியா குற்றச்சாட்டு Posted: 30 Mar 2016 11:49 AM PDT சிவசாகர்: ''பா.ஜ., கூட்டணி, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தக் கூடிய, ஆபத்தான கூட்டணி; அசாமில் அந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் அமைதி, வளர்ச்சி பறிபோய்விடும்,'' என, காங்., தேசிய தலைவர் சோனியா பேசினார்.அசாமில், முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்., அரசு உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, அசாமில் நேற்று நடந்த, காங்கிரசின் பிரசார கூட்டங்களில் சோனியா பேசியதாவது:அசாமில் பா.ஜ., கூட்டணி அரசு அமைந்தால், 15 ஆண்டுகளாக கோகோய் தலைமையிலான சிறந்த அரசு மேற்கொண்ட, அமைதிமற்றும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். அந்த கூட்டணி, மதத்தின் பெயரால், மக்களை ... |
| சொத்து குவிப்பதை நிறுத்தாத ஜெ.,: சுப்பிரமணியன் சாமி வாதம் Posted: 30 Mar 2016 11:50 AM PDT புதுடில்லி: ''தமிழக முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பதை தொடர்கிறார்,'' என, சுப்ரீம் கோர்ட்டில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வாதிட்டார். சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை, கர்நாடகா ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்குகள், நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன் விசாரணையில் உள்ளன.நேற்று, இந்த வழக்கில், புகார்தாரரான, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ... |
| Posted: 30 Mar 2016 11:51 AM PDT புதுடில்லி: சாலை விபத்துக்களில் சிக்குவோருக்கு உதவி செய்யச் செல்வோரை, போலீசாரின், தொல்லை மற்றும் அலைக்கழிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் வழக்கு வம்பு வருமோ என, இனி அச்சமடையத் தேவையில்லை. சாலை விபத்துக்களில் சம்பவ இடத்தில் பலியாவோரை விட, உடனடியாக அவர்களைக் காப்பாற்றி, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத காரணத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற ... |
| வாயால் கெட்டதாம் கவுதாரி: பஞ்சபாண்டவர் அணியில் தொடர் சர்ச்சை Posted: 30 Mar 2016 11:53 AM PDT மக்கள் நலக் கூட்டணியுடன், எந்த நேரத்தில் தே.மு.தி.க., இணைந்ததோ தெரியவில்லை... துவங்கிய நாள் முதல், இன்று வரை சலசலப்புகள் தொடர்கின்றன. காட்சி 1: தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் இழுக்க, தி.மு.க., தரப்பில், 500 கோடி ரூபாயும், 80 'சீட்' தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக, வைகோ வாய் திறக்க, கூட்டணிக்குள் கருத்து மோதல் பற்றிக் கொண்டது.இதை சற்றும் எதிர்பாராத தே.மு.தி.க., அதிர்ச்சி அடைந்தது. வைகோ பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'அப்படி எந்த பேரமும் நடக்கவில்லை' என்றார். இந்த சலசலப்பை கூட்டணி கட்சி தலைவர்கள் சரி செய்வதற்குள், அடுத்த ... |
| சிறுதாவூரில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தம்: விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவு Posted: 30 Mar 2016 11:54 AM PDT சென்னை: ''காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் பங்களா அருகே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. புகாரில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:சென்னை, சிறுதாவூரில் பங்களா அருகே கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக, எதிர்க்கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையில், புகார்மீது உண்மை இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை ... |
| அரசு பங்களாவுக்கு பாக்கியா? தேர்தலில் போட்டியிட முடியாது Posted: 30 Mar 2016 11:55 AM PDT புதுடில்லி: 'அரசு பங்களாக்களில் குடியிருந்ததற்கான, மின்சாரம், தண்ணீர், டெலிபோன் என, எந்த கட்டண பாக்கியும் இல்லை என்ற சான்றிதழை, வேட்பு மனுவுடன், வேட்பாளர்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அரசு பங்களாக்களில் குடியிருக்கும், எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதை காலி செய்யும் போது, மின் கட்டணம், டெலிபோன் கட்டணம், குடிநீர் கட்டணம் என, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதை அவர்களிடமிருந்துவசூலிப்பது எளிதாக இல்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 'லோக்சபா மற்றும் ... |
| Posted: 30 Mar 2016 11:57 AM PDT கூட்டணிக்கு வராமல் போக்கு காட்டிய, தே.மு.தி.க.,வை கரைக்கும் வேலை துவங்கியது. அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலர், நேற்று தி.மு.க.,வில் ஐக்கியமானார்.தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, தே.மு.தி.க.,வை இழுக்கும் முயற்சியில், தி.மு.க., தலைமை இறங்கியது. திரைமறைவில் நடந்த பேச்சுகள் மூலம், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன. ஒரு பக்கம், தொகுதிகள்; மறுபக்கம் பேரம் என்ற ரீதியில் நீடித்த பேச்சின் முடிவு, தங்களுக்கு சாதகமாவே இருக்கும் என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக நம்பியது.அதன் காரணமாகவே, நீண்ட அரசியல் அனுபவமிக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி இறங்கி வந்து, ... |
| மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்: பிரதமர் மோடி பேச்சு Posted: 30 Mar 2016 01:32 PM PDT பிரஸல்ஸ்: ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஓட்டு வங்கி அரசியலில் தங்களுக்கு நம்பிக்கையில்லை, எங்களுக்கு ஓட்டுப்போடாத மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும் கூறிய பிரதமர், சிலர் வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக கூறினார்.பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். பிரதமர் பேசியதாவது: உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் கலாசாரத்தால் ஒன்றிணைந்துள்ளோம். தலைவர்கள் வெளிநாட்டு தூதர்களை சந்திப்பது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 31,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |