Tamil News | Online Tamil News |
- பார்லி.,யை தொடர்ந்து முடக்கும் காங்கிரசுக்கு...தாழ்வு மனப்பான்மை ராகுலுக்கு பக்குவம் இல்லை என்றும் மோடி பேச்சு
- ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு
- பி.எப்., தொகைக்கு வரி விதிப்பதா? 'வாபஸ்' பெற ராகுல் வலியுறுத்தல்
- 2.5 : 2.5 ! : விஜயகாந்த், பா.ம.க.,வை வளைக்க பா.ஜ., புது பார்முலா !: தே.ஜ., கூட்டணியை தக்கவைக்க கடைசி கட்ட முயற்சி
- பெங்களூரில் வந்தாச்சு! 'பைக் - டாக்சி' திட்டம்
- தேர்தல்களில் வெல்வது எப்படி? புத்தகம் எழுதுகிறார் சாணக்கியர்
- 8ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் விஜயகாந்த்
- கலகலத்தது பஞ்ச பாண்டவர் அணி அடுத்து என்ன நடக்குமோ என பீதி
- ஜெ., - கருணாநிதி பிரசாரத்திற்கு தயாராகும் சொகுசு வேன்கள்
- விலையை குறைத்தன நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு ரூ.2,700 கோடி மிச்சம்
- 'கால் டிராப்'புக்கு இழப்பீடு கிடைக்குமா?
| Posted: 03 Mar 2016 10:06 AM PST புதுடில்லி:''எதிர்க்கட்சிகள், தாழ்வு மனப்பான்மை காரணமாகவே, பார்லிமென்டை செயல்பட விடாமல் முடக்குகின்றன. 60 ஆண்டுகளாக தங்களால் எதையும் செய்ய முடியவில்லையே. இப்போது தே.ஜ., கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுகிறதே என்ற பொறாமை உணர்வால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, குற்றம் சாட்டினார். பார்லிமென்டில், ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய, 75 நிமிட உரையின் முக்கிய அம்சங்கள்:இந்தியா போன்ற ஜனநாயக நாடு, அதிகாரிகளின் கருணையை ... |
| ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு Posted: 03 Mar 2016 10:16 AM PST முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, பார்லி.,யில், காங்கிரஸ் கட்சியினர், நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்தில், காங்., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்தை கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நேற்று காலையில், மூத்த காங்., எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.இந்த விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க ... |
| பி.எப்., தொகைக்கு வரி விதிப்பதா? 'வாபஸ்' பெற ராகுல் வலியுறுத்தல் Posted: 03 Mar 2016 10:20 AM PST புதுடில்லி:''பி.எப்., தொகைக்கு வரி விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், வேண்டுகோள் விடுத்துள்ளார். வட்டிக்கு மட்டுமே...'தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும், பி.எப்., தொகையில் இருந்து, திரும்ப எடுக்கும், 60 சதவீத தொகைக்கு, வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, 'வட்டிக்கு மட்டும் வரி விதிக்கப்படும்'என, விளக்கம் அளித்தது, மத்திய அரசு.இந்நிலையில், 'இந்த திட்டத்தை திரும்பப் ... |
| Posted: 03 Mar 2016 10:24 AM PST விஜயகாந்தையும், பா.ம.க.,வையும் வளைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் தக்கவைக்க டில்லி பா.ஜ., தலைமை புது பார்முலா வகுத்துக் கொடுத்து, கடைசி கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி, 'விஜயகாந்தும், அன்புமணியும் ஆளுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக பதவி வகிக்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் தே.மு.தி.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க, பா.ஜ., விரும்புகிறது. இதற்காக சில ... |
| பெங்களூரில் வந்தாச்சு! 'பைக் - டாக்சி' திட்டம் Posted: 03 Mar 2016 10:29 AM PST பெங்களூரு : 'கால் - டாக்சி' வெற்றியை தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா ஆகியவை, பெங்களூரில், சோதனை அடிப்படையில், 'பைக் - டாக்சி' சேவையை துவங்கியுள்ளது. பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து, பெரும் சவாலாகி வரும் நிலையில், வசதியான பயணத்திற்கு, 'கால் - டாக்சிகள்' உதவுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களான, உபேர், ஓலா போன்றவை, கட்டணங்களை பெருமளவு குறைத்து, மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன. குறைவான செலவு : இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும், குறைவான செலவில் செல்ல ஏதுவாகவும், பல நாடுகளில், 'பைக் - ... |
| தேர்தல்களில் வெல்வது எப்படி? புத்தகம் எழுதுகிறார் சாணக்கியர் Posted: 03 Mar 2016 11:02 AM PST புதுடில்லி:தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், 'தேர்தல்களில் வெல்வது எப்படி?' என்பது பற்றி, 'தி எலெக் ஷன் கேம்' என்ற தலைப்பில், நரேந்திர மோடிக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த, ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், புத்தகம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி, மகத்தான வெற்றியைப் பெற, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர், பிரஷாந்த் கிஷோர். பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் சாணக்கியர் என்று அறியப்படும் இவர், தற்போது, அம்மாநில அமைச்சர் அந்தஸ்துக்கு இணையாக, நிதிஷ்குமாரின் ... |
| 8ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் விஜயகாந்த் Posted: 03 Mar 2016 11:20 AM PST தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சில் நீடித்த இழுபறிக்கு, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தலையீடு காரணமாக, தீர்வு கிடைத்துள்ளது. அதனால், வரும், 8ம் தேதி, கருணாநிதியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முறைப்படி சந்தித்து, கூட்டணியை உறுதி செய்கிறார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணிக்கு, தே.மு.தி.க.,வை இழுக்க, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தொடர் பேச்சு நடத்தினர். ஆனாலும், எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர், ... |
| கலகலத்தது பஞ்ச பாண்டவர் அணி அடுத்து என்ன நடக்குமோ என பீதி Posted: 03 Mar 2016 11:33 AM PST அ.தி.மு.க.,வில், முதல்வர் ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ஐவர் அணி கலகலத்து போய் உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வில், முதல்வர் ஜெயலலிதா, 'ஒன் வுமன் ஆர்மி'யாக செயல்பட்டு வருகிறார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அமைச்சர்கள் உட்பட அனைவரும், அவரது கண் அசைவுக்கேற்ப செயல்பட்டு வருகின்றனர்.கடந்த, 2011ல், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின், அவ்வப்போது அமைச்சரவை மாற்றம் நடந்து வந்தது. அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை விட, முன்னாள் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.பன்னீருக்கு அதிர்ஷ்டம்: இந்நிலையில், சொத்து ... |
| ஜெ., - கருணாநிதி பிரசாரத்திற்கு தயாராகும் சொகுசு வேன்கள் Posted: 03 Mar 2016 11:41 AM PST அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசார சொகுசு வாகனங்கள், கோவையில் தயாராகி வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கோவை, சிவானந்தா காலனியிலுள்ள தனியார் நிறுவனத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய, பிரசார சொகுசு வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.முதல்வர் ஜெ.,,வுக்கு, டி.என்.22, ஜெ 1415 என்ற பதிவெண் கொண்ட, 12 பேர்பயணிக்கும் வகையில், 'போர்ஸ்' நிறுவன வாகனம், முழு வீச்சில் தயாராகிறது. முன்புற ... |
| விலையை குறைத்தன நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு ரூ.2,700 கோடி மிச்சம் Posted: 03 Mar 2016 11:50 AM PST மின் வாரியம், மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்த, மூன்று தனியார் நிறுவனங்கள், தங்களின் விலையை அதிரடியாக குறைத்ததால்,வாரியத்திற்கு, 2,700 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை சமாளிக்க, இந்து பாரத், மகாநதி, ஐ.எல்.எப்.எஸ்., கோஸ்டல், ஜிண்டால், டி.பி.பவர், பால்கோ, ஜி.எம்.ஆர்., பாரிவேல், அதானிக், ஓ.பி.ஜி., ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, 15 ஆண்டுகளுக்கு, தினமும், 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, 2013 அக்டோபரில் ஒப்பந்தம் செய்தது. மின்சாரத்திற்கான விலையாக, ஒவ்வொரு நிறுவனங்களும், ஒரு விலையை குறிப்பிட்டன. இறுதியாக, மின் வாரியம், ஒரு ... |
| 'கால் டிராப்'புக்கு இழப்பீடு கிடைக்குமா? Posted: 03 Mar 2016 01:55 PM PST புதுடில்லி : 'கால் டிராப்'களுக்கு இழப்பீடு வழங்கும்படி, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தொலை தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை, சுப்ரீம் கோர்ட், இன்று விசாரிக்க உள்ளது. மொபைல் போனில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, பாதியிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது, 'கால் டிராப்' எனப்படுகிறது. இந்த, கால் டிராப் காரணமாக பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு, 'ஒரு கால் டிராப்புக்கு, ஒரு ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்; அதிகபட்சம், ஒரு நாளைக்கு மூன்று கால் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |