Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குவியுது புகார் தவிக்குது கட்சி

Posted: 26 Mar 2016 08:10 AM PDT

டீக்கடைக்காரரும், புளியமரம் குத்தகை எடுத்தவரும், எடுபிடி வேலை பார்த்தவரும் அமைச்சராக, முதல்வராக முடியும் என்றால், அது அ.தி.மு.க.,வில் மட்டுமே சாத்தியம்.

அதே நேரத்தில் அங்கு யாருக்கும் பதவி நிரந்தரமல்ல. அமைச்சராக இருந்தவர், அனைத்து பதவிகளையும் துறந்து, சாதாரண கட்சி உறுப்பினராக இருக்க, சாதாரண கட்சி உறுப்பினர் அமைச்சராவதும், அடிக்கடி நடைபெறும் நிகழ்வு.
இதன் காரணமாகவே, தேர்தலில் போட்டியிட யாருக்கு வேண்டுமானாலும், வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க.,வில், ...

விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்:தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து

Posted: 26 Mar 2016 10:37 AM PDT

பொதுவாக, எந்த வழக்கானாலும், உடனடியாக விசாரணை நடந்து, தீர்ப்பு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் உண்டு. ஆனால், தீர்ப்பு வழங்க, 22 மாதங்கள் எடுத்து கொண்ட தேர்தல் வழக்கு பற்றி யாருக்கு தெரியும். அது நடந்தது, வேறு எந்த நீதிமன்றத்திலும் அல்ல; சென்னை உயர் நீதிமன்றத்தில் தான்.
இந்த வழக்கில் விசாரணை நடந்தது, 20 மாதங்கள்; தீர்ப்புக்காக, தேதி தள்ளி வைக்கப்பட்டு, 22 மாதங்களுக்கு பின், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான வழக்கின் விவரம் இதோ:
கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்., அணி சேர்ந்தது. ...

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு உச்சக்கட்டம்:பயணிகளின் ஷூக்களை கழற்றி சோதனை

Posted: 26 Mar 2016 11:21 AM PDT

புதுடில்லி:பிரஸல்ஸ் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின், முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 'சல்லடை போட்டு' சோதனை செய்த பின்னரே, விமானங்களுக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில், விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும், சமீபத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 35 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பெல்ஜியம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய விமான ...

'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன் கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு

Posted: 26 Mar 2016 11:26 AM PDT

சென்னை:''தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும், 'பூத் சிலிப்' தேர்தல் பார்வையாளர்

மேற்பார்வையில், வீடு வீடாக வழங்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் வழங்கும் பூத் சிலிப்
செல்லாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில
கட்சிகளின் ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை வகித்தார்.
இதில், அ.தி.மு.க., சார்பில், பொள்ளாச்சி ...

ஊழல், வறுமையை ஒழிக்க பிரதமர் மோடி உறுதி:அசாமில் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்

Posted: 26 Mar 2016 11:29 AM PDT

டின்சுகியா:''அசாம் மாநில தேர்தலில் ஊழல், வறுமையை எதிர்த்து போட்டியிடுகிறோம்; வளர்ச்சி, துரித வளர்ச்சி, எல்லா மட்டத்திலும் வளர்ச்சி ஆகிய மூன்று திட்டங்ளை செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அசாம் மாநிலத்தில், காங்., கட்சியை சேர்ந்த தருண் கோகோய் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தற்போதைய சட்டசபை பதவிக்காலம், ஜூன், 5ல் முடிகிறது. இதையடுத்து, ஏப்ரல் 5, 11 என, இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், பா.ஜ.,வின் பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி ...

ராகுல் 'அப்செட்'

Posted: 26 Mar 2016 11:38 AM PDT

'விஜய்காந்த் எப்படியும் நம்மோடு தான் வருவார். அவருக்கு வேறு வழி கிடையாது' என, நம்பியிருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்து, மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து விட்டார் கேப்டன்.

தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த செய்தி, 'ஷாக்' ஏற்படுத்த, இன்னொரு பக்கம், டில்லியிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. விஜய்காந்த், தி.மு.க., -- - காங்., கூட்டணி பக்கம் வராமல் போனது, டில்லியில் உள்ள காங்., தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். குறிப்பாக, ராகுல் படு, 'அப்செட்' என, சீனியர் காங்., தலைவர்கள் ...

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தினமும் ரூ.1,200 கோடி'அவுட்' :மொத்த, சில்லரை விற்பனையில் பெரும் சரிவு

Posted: 26 Mar 2016 11:50 AM PDT

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள தமிழகத்தில், தேர்தல் கமிஷன் நெருக்கடியால்,மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில், 30 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக,

குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, தினமும், 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த, மார்ச், 4 முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை, தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.
பறிமுதல்:இந்த ...

ஜப்பானில் ஒரு வேளாண்மை புரட்சி

Posted: 26 Mar 2016 12:21 PM PDT

புவியியல் பார்வையில், பசிபிக் கடலின் மிக ஆபத்தான பகுதியில் ஒரு சிறு நிலக்கீற்று தான் ஜப்பான். அங்கு எந்நேரமும் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், பல்வேறு சோகங்களையும் ஜப்பான் சந்தித்துவிட்டது. ஆனால், மின்னணு பொருட்கள், சிறிய ரக கார்கள் என, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னோடியாக இருந்து உள்ளது.
அதே போல், தற்போது தாவர தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் உலகத்திற்கே வழிகாட்டி வருகிறது ஜப்பான். ஜப்பானில் கடும் இட நெருக்கடி, பாரம்பரிய சிறு வயல்களை ...

'ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலின்:வைகோ 'பகீர்' குற்றச்சாட்டு

Posted: 26 Mar 2016 01:17 PM PDT

திருச்சி:'சி.பி.ஐ., விசாரணையின் போது, சாஹித் பல்வாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவை சொல்லியதால், சாதிக் பாட்சா துாக்கில் தொங்கினார். எனவே, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளது' என, திருச்சியில், நேற்று, வைகோ குற்றம் சாட்டினார்.

திருச்சியில் வைகோ அளித்த பேட்டி: தி.மு.க., தரப்பில் இருந்து, நேற்று, எனக்கு ஒரு தகவல் வந்தது. கூட்டணிக்காக பேரம் பேசியதாக, நான் கூறிய வார்த்தைகளை வாபஸ் பெறாவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்வோம் என்கின்றனர்.நான் மிகவும் மகிழ்ச்சிய டைந்து உள்ளேன். கடந்த, 2006 சட்டசபை தேர்தலின் ...

உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியா? அவரசக் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை

Posted: 26 Mar 2016 01:30 PM PDT

புதுடில்லி : உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

உத்தர்காண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. இதில் காங். கட்சியின் 9 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.வுக்கு ஆதரவு அளித்து ராவத் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பெரும்பான்மை நிரூபிக்க முதல்வருக்கு 28-ம் தேதி(நாளை) வரை அம்மாநில கவர்னர் கெடு விதித்துள்ளார். இதனையடுத்து உத்தரகாண்ட் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™