Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஸ்ட்ரோக் வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!!

Posted: 26 Mar 2016 11:31 AM PDT

ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை, பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்திற்குள், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று விட்டால், அந்நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுவதுமாக மாற்றி விடலாம் என்கிறார் நரம்பியல் நிபுணர்!! - அவர் சொல்வது அதற்குத் தேவை, 1)பாதிக்கப்பட்ட நபரின் பாதிப்பைக் கண்டு பிடித்து அங்கீகரிப்பது, - 2)பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு , 'ஸ்ட்ரோக்' என அடையாளம் கண்டறியப்படுவது, - 3)மூன்றாவதாக அந்நபரை சரியான மருத்துவ வசதிக்குட்படுத்துவது!! - 3 மணி நேரத்திற்குள்! இது ...

நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு

Posted: 26 Mar 2016 11:17 AM PDT


-

செருப்பு தைக்கும் கலை !

Posted: 26 Mar 2016 11:04 AM PDT

செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம். இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...........சிங்கமும் சுண்டெலியும் !

Posted: 26 Mar 2016 10:52 AM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா?

Posted: 26 Mar 2016 10:51 AM PDT

ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ- வைரலாகும் வீடியோ சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேமுதிகவுக்கு திமுக ரூ500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். ...

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Posted: 26 Mar 2016 10:50 AM PDT

நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை. பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக ...

நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் காலமானார்!

Posted: 26 Mar 2016 10:20 AM PDT


-

நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம்,
உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று
காலமானார். அவருக்கு வயது 84.

1968-ம் வருடம் கே.ஆர். விஜயாவைத் திருமணம் செய்தார்
வேலாயுதம். இந்தத் தம்பதியருக்கு ஹேமலதா என்கிற ஒ
ரு மகள் உண்டு.

வேலாயுதத்தின் இறுதிச்சடங்கு கோழிக்கோட்டில்
நாளை நடைபெற உள்ளது.
-
தினமணி

குரு ?

Posted: 26 Mar 2016 09:56 AM PDT

குரு இல்லாத வித்தை பாழ் என்றுதான் சொன்னார்கள் குரு மூலமாக கடவுளை வணங்கவேண்டும் குரு இல்லாமல் கடவுளை வணங்க கூடாது அதேபோல கடவுளை விட்டுவிட்டு குருவை மட்டும் வணங்கினாலும் பிரயோஜனமில்லை குரு என்பவர் கிரகம் போல சுய ஒளி அற்றவர் ராசி நட்சத்திரங்களின் சக்தி கிரகத்தின் வழியாக ஊடுறுவி பூமியில் விழுகிறது கிரகம் ராசிக்கு ராசி மாறும் போது நன்மை செய்த கிரகம் தீமை செய்யும் கிரகமாக மாறுகிறது காரணம் கிரகம் சுயேச்சை ஆனதல்ல அதைப்போல இறைவன் மற்றும் அவர் தொடர்பிலுள்ள தேவர்களைப்பொறுத்துதான் குருவின் ...

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 26 Mar 2016 07:48 AM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

அனுபவத் துளிகள்

Posted: 26 Mar 2016 07:44 AM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

ரமணி ஹைக்கூ

Posted: 26 Mar 2016 07:40 AM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

ரமணியின் கவிதைகள்

Posted: 26 Mar 2016 07:29 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!

Posted: 26 Mar 2016 07:26 AM PDT

1. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம – 2. ATM – Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்) – 3. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க.. – 4. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்த காணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!! – 5. காய்கறி ...

என்னை பற்றி

Posted: 26 Mar 2016 07:21 AM PDT

பெயர்: ஜெகதீஷ் சொந்த ஊர்: சென்னை (தமிழ்நாடு) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள்  வாயிலாக பொழுதுபோக்கு: பாடல்கள் ,சினிமா படங்கள் பார்ப்பது. மலை வாழ் தளங்கள் சுற்றுலா செல்வது.தமிழ் புத்தகங்கள் படிப்பது. பங்கு சந்தை. தொழில்: மென்பொருள்  துறையில்.. மேலும் என்னைப் பற்றி: சமீப காலமாக புத்தகங்கள் மேல் ஈர்ப்பு அதிகமாகி விட்டது.. ஈகரை வலை தளத்தை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பார்கிறேன். மிக்க பயனுள்ளதாக உள்ளது.. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?-

Posted: 26 Mar 2016 07:19 AM PDT

1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ? – 2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ? – 3.காப்பர் நாடு எது ? – 4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ? – 5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ? – 6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ? – 7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது? – 8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ? – 9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன -? 10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ? – ——————————– விடை ...

துன்பம் வரும்போது, பின நிற்பவர்கள்…!!

Posted: 26 Mar 2016 07:11 AM PDT

1. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம – 2. ATM – Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்) – 3. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க.. – 4. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்த காணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!! – 5. காய்கறி ...

வள்ளலார் பட்டியலிட்ட பாவங்கள்…

Posted: 26 Mar 2016 07:10 AM PDT

பாவங்களின் 42 வகை வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார். அவை வருமாறு: – 1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. – 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. – 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு ...

கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது?

Posted: 26 Mar 2016 07:08 AM PDT

எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க? கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்…!! – —————————– – ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாம் நடிகர்கள்…. – மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்…!! – ஆசிரியர்: ????? – ——————————– – மனைவிக்கு தினமும் பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? – பாசம் மனைவி மேலே இல்லடா… பூக்காரி மேல!!! – ——————————— – ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல ...

அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே...?!

Posted: 26 Mar 2016 07:06 AM PDT


-

-

உன்னதமான நட்பு…

Posted: 26 Mar 2016 06:37 AM PDT

- உலகிலேயே மிக உன்னதமானது நட்பு – பேகன் – ஒரு நண்பரை இழந்தால், ஓர் அங்கத்தை இழப்பது போன்றது – கதே – ஒருவனுடைய விதியானது, அவனுடைய நண்பர்களால் முடிவு செய்யப்பட்டுகின்றது – கதே – - – நண்பர்களைப் பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை – ஸ்டீவென்ஸ் – மூன்றஃ நண்பர்கள் இருந்து அவர்களை இழந்தவனுக்கு நீ நான்காவது நண்பனாகச் சேர வேண்டாம் – லவேட்டர் -

வாய்ப்பு – ஒரு பக்க கதை

Posted: 26 Mar 2016 06:35 AM PDT

''ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பாரு!'' என்று அப்பா திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம் மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன புண்ணியம்? - அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது. 'இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது' என்ற நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான். - 'எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது' என்ற அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள் வந்து போயின. – தான் ...

ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க...(சினிமா ரசிகர்களுக்கா)

Posted: 26 Mar 2016 05:58 AM PDT


-

-
நன்றி- வண்ணத்திரை
-

நான் சாத்தானாகிட வேண்டும்

Posted: 26 Mar 2016 05:46 AM PDT

கல்நெஞ்சம் கொடு - என்னுள்
கருணையுள்ளம் எடு
விதி ஆணையிட்டதினாலே
விடியாப்பொழுதாய் இருந்திடாதே
விடியல் வேண்டும் - பல
விதிகள் மீறவேண்டும்
கேட்பதெல்லாம் தருபவனே -இன்று
பாதைமாறி கேட்கிறேன்
நான் மேலும்சாத்தானாகிடவேண்டும்...

பார்வை – ஒரு பக்க கதை

Posted: 26 Mar 2016 04:35 AM PDT

- தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.''போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!'' – கணவனிடம் சொன்னாள். – ''இது 2016. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?'' என்றான்.''இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் ...

உதவி – ஒரு பக்க கதை

Posted: 26 Mar 2016 04:33 AM PDT

- – ''அவளுக்கு அன்பா அட்வைஸ் பண்ணு! திட்டாதே'' என்றார் ஆறுமுகம். - ''ஒரே மகளாச்சே, உள்ளூர்ல கட்டிக் கொடுப்போம்னு நினைச்சோம். இப்ப அதுவே பெரும் தொல்லையா போச்சே! நாம இங்கே இருக்கறதாலதானே அவ ஓடி ஓடி வர்றா! பேசாம நாம வெளியூர் போயிடலாமா?'' – ஆறுமுகத்திடம் கேட்டாள் பூரணி. - ''இந்த யோசனை உனக்குத்தான் பாதகமா அமையும்!'' - ''எப்படிச் சொல்றீங்க?'' – ''ஆமா! நமக்கோ வயசாகிப்போச்சு! அடிக்கடி நீ உடம்பு வலி, கால் குடைச்சல்னு படுத்துக்கிறே! நீ உடம்புக்கு முடியாம படுக்கிறபோது, நம்ம மகள் ...

புது பைக் வேண்டும் – சிறுகதை

Posted: 26 Mar 2016 04:32 AM PDT

உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும். இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள் குமைந்தார்கள். – என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள் யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள். வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள். – அம்மா, "இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா வீட்டுக்காரர் ...

உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்

Posted: 26 Mar 2016 03:40 AM PDT

- அரவிந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம். —————————————— ஃபார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் பெயர் இடம்பெற்றுள்ளது. அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ் என்பவர் முதலிடம் வகிக்கும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் கேஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலகை மாற்றவும் இந்தக் காரணத்திற்காக பிறருக்குத் தூண்டுகோலாகவும் இருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்த ...

‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்

Posted: 26 Mar 2016 03:38 AM PDT

- கேசில்நுவோ டி போர்ட்டோவில் கால் கழுவும் புனிதச் சடங்குக்குப் பிறகு அகதி ஒருவரின் காலை முத்தமிடும் போப். | படம்: ராய்ட்டர்ஸ். ————————————— – 'நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம்' என்று கூறியுள்ளார் போப் பிரான்சிஸ். முஸ்லிம், கிறித்துவ, இந்து அகதிகள் கால்களைக் கழுவி முத்தமிட்ட போப், நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்றார். பிரஸல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதை அடுத்து ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (157)

Posted: 26 Mar 2016 03:33 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கோல்டு வார்!

Posted: 26 Mar 2016 03:08 AM PDT

மக்களோ, அரசோ, இயல்பு வாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். - உள்நாட்டுக் கறுப்புப் பணத்தில் பெரும்பகுதியாக தங்கம், இருக்கிறது என்பதால், மக்கள் தங்கம் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. - இறக்குமதி வரி அதிகரிப்பு. தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம் மீதான கலால் வரியும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ...

கமல் படத்தில் சரிகா?

Posted: 26 Mar 2016 01:54 AM PDT

- * கமல், ஸ்ருதி நடிக்கும் படத்தின் இந்திப் பதிப்பில் கவுரவ வேடத்தில் தோன்ற, படக் குழுவினர் சரிகாவிடம் பேசி வருகின்றனர். - * சரப்ஜித் வாழ்க்கையைக் கதையாகக் கொண்ட படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை படம் பார்த்தவர்கள் பாராட்டித் தள்ளுகிறார்களாம். மே மாதம் படம் ரிலீசாகிறது. - * ஷாருக்கானின் 'தில்வாலே' படத்தைத் தொடர்ந்து, அவரது 'ஃபேன்' படத்துக்கும் புரமோஷன் செய்கிறார் சல்மான்கான். - - * சோனாக்‌ஷி சின்ஹா வேறு படங்களில் பிசியாக இருப்பதால் ஏ.ஆர்.முருகதாசின் 'அகிரா' ...

சாக்கு மூட்டையில் பணம் கிடந்த விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

Posted: 26 Mar 2016 01:25 AM PDT

சேலம்: நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் கிடந்த விவகாரம் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பேளுக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் 2 சாக்கு மூட்டைகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் என இரண்டு சாக்கு மூட்டையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பணம் தற்போது போலீசாரால் கைப்பற்றி செல்லப் பட்டதாக ...

வண்ணங்களின் பிறப்பிடம் …

Posted: 26 Mar 2016 12:40 AM PDT

- அவளின் விரல்களில் அமர்ந்திருந்தது வண்ணத்துப்பூச்சி பறந்து செல்வதற்கு மனமற்று அவளையே வனமென்று கொண்டது விரல்களை கிளையென்றும் உதடுகளை மலரென்றும் அமர்ந்தமர்ந்து உணர்ந்தது வண்ணத்துப்பூச்சி தன்னில் பதிந்த வண்ணங்களை அகற்ற விரும்பாது அவள் சேகரிக்கிறாள் தன் மேனியெங்கும் பல வண்ணங்களை பிறகு அவளே வண்ணத்துப் பூச்சியென பறக்கிறாள் அவளது ஆகாயத்தில் அவளது தோட்டத்தில் அவளது உதடுகள் மலர்கின்றன அவளது கைகள் விரிகின்றன நிலத்திலிருந்து எழுந்த தருணம் அவளிடமிருந்து பறக்கிறது ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகள் ...

ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை

Posted: 26 Mar 2016 12:23 AM PDT

திருப்பதி, மார்ச் 25: வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி முதல் அன்னமாச்சார்யா குருபூஜை நடைபெற உள்ளது. – ஆந்திர கவிஞர் அன்னமாச்சார்யாவின் 513-ஆவது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அன்னமாச்சார்யா பிறந்த ஊரான தாளபாக்கம், திருப்பதி, திருமலையில் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் நடத்த உள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதி அலிபிரியிலிருந்து படி உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பின்னர் மாலை திருமலையில் கோஷ்டிகானம், கர்நாடக ...

சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?

Posted: 26 Mar 2016 12:17 AM PDT

பாஜக அரசு, கிசான் விகாஸ் பத்திரம் (கே.வி.பி.), தேசியச் சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.), பொது வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம், தபால் அலுவலகக் கால வைப்புநிதித் திட்டம் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வட்டி வீதத்தைக் குறைத்தது சாமானிய மக்கள் மீதான ஒரு பேரிடி. – ஏப்ரல் 1 முதல் இந்த வட்டிக்குறைப்பு அமலுக்கு வரும். அத்துடன் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி வீதம் தேவைக்கேற்ப மாற்றப்படும் என்று தெரிகிறது. – சாமானிய ...

ஏப்.1 முதல் மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் எண்ணிக்கை உயர்வு

Posted: 25 Mar 2016 11:32 PM PDT

- ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும் லோயர் பெர்த்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. - மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50 - 60ல் இருந்து, தற்போது 80 - 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. - இனி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு ஒவ்வொரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியிலும், ஆறு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். - தற்போது நான்கு பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது ...

கப்பல், படகுகளுக்கு பிரியாவிடை…!

Posted: 25 Mar 2016 10:43 PM PDT

- – இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றிய ராஜ்கமல் எனும் ரோந்துக் கப்பல், 6 இடைமறிக்கும் அதிவேகப் படகுகள் (Interceptor Boats) ஆகியன அந்தமான், நிகோபர் பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. – சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியின்போது, ரோந்துக் கப்பல், படகுகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. – இந்தக் கப்பல்களில் இருந்த வீரர்கள், அதிகாரிகளை கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி தல்கா பாராட்டினார். பின்னர் வாத்தியங்கள் ...

அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்

Posted: 25 Mar 2016 09:17 PM PDT

- -டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள். – இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு முன்னேறியது. – அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. – சாமுவேல்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். – ———————-

ரூ.39 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சைப் பழம்!

Posted: 25 Mar 2016 09:15 PM PDT

- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இரட்டை குன்று முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில், ஒரு எலுமிச்சைப் பழம் ரூ.39 ஆயிரத்துக்கு ஏலம் போனது. – திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்று முருகன் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. – விழாவின் ஒரு பகுதியாக கோயில் எலுமிச்சைப் பழங்களை ஏலம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™