Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மும்முனை தாக்குதல்

Posted: 25 Mar 2016 08:50 AM PDT

விஜயகாந்த், கருணாநிதியுடன் கைகோர்ப்பார் என்ற எண்ணத்தில், அவரது கட்சியினரும், மற்ற கட்சியினரும் பல கணக்குகளை போட்டு வைத்திருந்தனர். தற்போது, எல்லாம் தவிடுபொடியாகி விட்டதால், கூட்டல்களும் கழித்தல்களும் மீண்டும் வேகமாக துவங்கியுள்ளன. மாறும் இந்த

கணக்குகளால், தே.மு.தி.க., மும்முனை தாக்குதலை சந்திக்கப் போகிறது!
முனை 1: ஏற்கனவே கடந்த மார்ச், 22ம் தேதி, நம் நாளிதழின் தேர்தல் களம் இணைப்பில், தே.மு.தி.க.,வின் செல்வம் படைத்த, 25 மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., குறி வைத்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. அதை செய்யலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருந்த, ...

தொகுதி பங்கீடு விவகாரத்தில் எல்லா கூட்டணிகளிலும் சலசலப்பு:அதிகம் எதிர்பார்ப்பதால் கூட்டணிகள் சிதறும் அபாயம்

Posted: 25 Mar 2016 10:22 AM PDT

தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் தலைமையில், மூன்று பிரதான கூட்டணிகள் அமைந்துள்ளன. இம்மூன்றிலும், தொகுதி பங்கீடு விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் இடம் பெற்ற கட்சிகள் ஒவ்வொன்றும், அதிகம் எதிர்பார்ப்பதால், கூட்டணிகள் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற காத்திருக்கும், த.மா.கா., 24 இடங்களை எதிர்பார்க்கிறது. ரகசிய பேச்சின் முடிவில், அக்கட்சிக்கு, 16 இடங்களை ஒதுக்க, அ.தி.மு.க.,
தலைமை முன்வந்துள்ளது. அதிலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில், ஏற்க முடியாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், ...

பாதுகாப்பு துறையை குறி வைக்கும் அனில் அம்பானி

Posted: 25 Mar 2016 10:27 AM PDT

மும்பை:தொழிலதிபர் அனில் அம்பானி, தொலைதொடர்பு, மின்சாரம், ஊடகம், உள்ளிட்ட பல துறைகளில் கால் பதித்துள்ளார். இருந்தபோதிலும், வளமான வர்த்தக வாய்ப்புள்ள, பாதுகாப்பு துறையில் பலமாக காலுான்ற, அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக, ஒரு சில துறைகளில் இருந்து வெளியேறி, கடன்களை அடைத்து விட்டு, தொலைதொடர்பு சேவையுடன், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையொட்டியே, அவர், கடந்த ஆண்டு, கப்பல் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பிபாவவ் டிபென்ஸ் நிறுவனத்தை, 2,400 கோடிரூபாய்க்கு ...

காஷ்மீரில் மீண்டும் பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி:ஆட்சியமைக்க இன்று உரிமை கோருகிறார் மெகபூபா

Posted: 25 Mar 2016 10:33 AM PDT

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில், இரண்டு மாத ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தில், பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயகக் கட்சியும், பா.ஜ.,வும் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க முன்வந்துள்ளன. இந்த இரு கட்சி எம்.எல்.ஏ.,க்களும், இன்று, கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, 2014, நவம்பர், டிசம்பர் மாதங்களில், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 87 இடங்களில், பி.டி.பி., 28 இடங்களையும், பா.ஜ., 25 இடங்களையும், முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, 15 இடங்களையும், காங்கிரஸ், 12 இடங்களையும், பிற ...

63 கேட்கிறது காங்கிரஸ்; 25ல் நிற்கிறது தி.மு.க.,:கருணாநிதி - ஆசாத் பேச்சில் இழுபறி

Posted: 25 Mar 2016 11:09 AM PDT

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்த, தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. இழுபறியில் முடிந்ததால், மேலிட துாதர் குலாம் நபி ஆசாத் அதிருப்தியுடன் டில்லி திரும்பினார்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கியது. இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. தே.மு.தி.க., மறுப்பு காரணமாக, கூட்டணி பலமின்றி இருக்கும், தி.மு.க.,விடம் போதுமான அளவுக்கு கறந்து விடலாம் என, காங்கிரஸ் கணக்கு ...

110ஐ பங்கிடுவதில் சிக்கல்: ம.ந.கூ.,யில் பிரச்னை

Posted: 25 Mar 2016 11:20 AM PDT

விஜயகாந்த் அணியில், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கிய, 110 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில், நான்கு கட்சிகளுக்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.

தே.மு.தி.க.,வுடன், மக்கள் நலக் கூட்டணி செய்த தொகுதிப் பங்கீட்டின் படி, 124 தொகுதிகள், தே.மு.தி.க.,வுக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. மீதி, 110 தொகுதிகள், ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., - வி.சி.,க்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்த நான்கு கட்சிகளில், ம.தி.மு.க.,வுக்கு கூடுதல் தொகுதிகளும், அதற்கு அடுத்து, விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒதுக்கப்படும். மீதி தொகுதியை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளும் என்ற ...

தி.மு.க., பேரம் பேசியதா? வைகோ பேச்சுக்கு பிரேமலதா மறுப்பு

Posted: 25 Mar 2016 11:23 AM PDT

கூட்டணிக்காக விஜயகாந்திடம், தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில், பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், வைகோ மற்றும் பிரேமலதா இடையே, திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., - -பா.ஜ.,- மற்றும் மக்கள் நலக் கூட்டணி போன்றவை விரும்பின.
மகளிர் அணி:இதற்காக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், விஜயகாந்தை நேரடியாக சந்தித்துப் பேசினர். தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடத்தப்பட்டது. இந்நிலையில், இம்மாதம், 10ம் தேதி, சென்னையில், தே.மு.தி.க., சார்பில், மகளிர் அணி பொதுக்கூட்டம் ...

பிரபலங்களை தோற்கடிக்க அ.தி.மு.க., - தி.மு.க., வியூகம்

Posted: 25 Mar 2016 11:25 AM PDT

சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி தலைவர்களை தோற்கடிக்க, பிரபலங்கள் மற்றும் அமைச்சர்களை நிறுத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அதே பாணியை பின்பற்ற தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி வாய்ப்பு:தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், முதன்முறையாக, சட்டசபை தேர்தலில், பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள் சிதறி விடும் என்பதால், ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என, கணிக்கப்படுகிறது.
இதை சாதகமாக பயன்படுத்தி, தேர்தலில், இதுவரைஎந்த கட்சியும் பெறாத அளவிற்கு, ...

'பார்ச்சூன்' உலக தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 25 Mar 2016 11:35 AM PDT

புதுடில்லி;'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் தலைசிறந்த, 50 தலைவர்கள் பட்டியலில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 47, இடம்பெற்றுள்ளார்.

மூன்றாவது ஆண்டாக, பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், 42வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், இவர் தான்.
''உலகிலேயே, மிகவும் மாசுள்ள நகரமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள டில்லி யில், வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில், போக்குவரத்தில் மாற்றம் செய்ததன்மூலம், மிகப்பெரிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™