ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்
- பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - இது என்னுடைய 45000வது பதிவு :)
- 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
- நெடுங்குன்றக் காட்சிகள் !
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)
- அய்யா வழி
- வாழ்வா, சாவா ஆட்டம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல்
- ஈச்சங்குலை...!!
| வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம் Posted: 25 Mar 2016 12:34 PM PDT வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ் |
| பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - இது என்னுடைய 45000வது பதிவு :) Posted: 25 Mar 2016 11:52 AM PDT பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது 45000வது பதிவு கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான் ஒழிக்கணும் என்று தோன்றுகிறது. 'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு' என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் ... |
| 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Posted: 25 Mar 2016 11:40 AM PDT இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று. உடனே, profile பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு திரும்பிப் ... |
| Posted: 25 Mar 2016 11:32 AM PDT நெடுங்குன்றக் காட்சிகள் ! காஞ்சிபுர மாவட்டத்தில் நெடுங்குன்றம் என்றொரு மலை உள்ளது. கோயில் எதுவும் இம் மலை மேல் இல்லை. மலையைச் சுற்றி வேலிக்கருவை மண்டிக்கொண்டு பிற தாவரங்களை அழித்துக்கொண்டுள்ளது !மலை அருகே ஏரி ஒன்றும் உள்ளது! இம் மலையைச் சுற்றிப் பெரும்பாலும் தலித் மக்களே குடியிருக்கிறார்கள். நான் எனது தாவர ஆய்விற்காக 24-3-16 அன்று அங்கு சென்றிருந்தபோது எடுத்த படங்கள் !- |
| Posted: 25 Mar 2016 09:55 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 25 Mar 2016 06:42 AM PDT - பல நாள் பட்டினி போடப்பட்ட புலி. கூண்டுக்குள் பசியால் பலமாக உறுமிக் கொண்டிருந்தது. குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டி இழுத்து வரப்பட்ட அந்த மகானை அந்த கூண்டிற்குள் தள்ளி அடைத்தார்கள். புன்னகையோடு தண்டனையை ஏற்கத் தயாராக இருந்தார் அந்த மகான். அகோரப் பசி கொண்ட புலி அவரை கடித்துக் குதறப் போகிறது என்று நினைத்தனர். ஆனால் அந்தப் புலி, பூனைக்குட்டி போல் அவரது காலடியில் வந்து படுத்துக் கொண்டது. அவரை தண்டிக்க நினைத்தவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். அப்படிப்பட்ட பெருமை ... |
| வாழ்வா, சாவா ஆட்டம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல் Posted: 24 Mar 2016 09:14 PM PDT - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. - இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா ஆட்டமாகும். - பாகிஸ்தான் இதுவரை 3 ஆட்டங்களில் மோதி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கலாம். - மாறாக தோற்கும்பட்சத்தில் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும். - ஆஸ்திரேலியா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. ... |
| Posted: 24 Mar 2016 05:38 PM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |