Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விஜயகாந்தை இழுக்க தி.மு.க.,வின் கடைசி முயற்சி

Posted: 23 Mar 2016 08:05 AM PDT

தே.மு.தி.க., - ம.ந.கூ.,வுடன் சேர்ந்துவிட்டது. பழம் நழுவி பாலில் விழாமல், 'ப்ரூட் சாலட்' ஆகிவிட்டது. ஆனால், இதற்கு காரணம், தி.மு.க.,வின் முயற்சியின்மை என, யாராலும் குற்றம் சொல்ல முடியாது.வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும்போது, சற்றும் மனம் தளராத, முயற்சியை கைவிடாத விக்கிரமாதித்தனின் கதைபோல, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், மனம் தளராமல், கடந்த, 21ம் தேதி வரை முயற்சி எடுத்துள்ளார்.அன்று, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்திற்கு செல்லும் முன், கருணாநிதி, கோபாலபுரத்தில், 'மாஜி' அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களை சந்தித்தார். அவர்களிடம் ஒரு துண்டு ...

பல நாள் குழப்பத்திற்குப் பின் விஜயகாந்த் தெளிவான முடிவு: ம.ந.கூ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்

Posted: 23 Mar 2016 11:11 AM PDT

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி விஷயத்தில் பல நாள் குழப்பத்திற்கு பின் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெளிவான முடிவெடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணி உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதற்காக மூன்று மாதங்களாக தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., - பா.ஜ., மற்றும் மக்கள் நலக் கூட்டணி தரப்பில் தீவிர பேச்சு நடத்தப்பட்டது. இந்தப் பேச்சை தே.மு.தி.க., தலைமை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் நடத்தி வந்தது.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ...

பயன்படுத்தாத மின்னணு பொருட்களை தூக்கி போடாதீங்க: கடும் அபராதம் செலுத்த வேண்டி வரும்

Posted: 23 Mar 2016 11:13 AM PDT

புதுடில்லி: பழைய மின்னணு பொருட்களை தூக்கி வீசுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அதை தகுந்த முறையில், சேகரித்து, அழிக்கும், புதிய மின்னணு கழிவு நிர்வாக விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆண்டுதோறும், 17 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகின்றன. இதில், 25 சதவீதம் மட்டுமே, முறையாக சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

மாசு ஏற்படுத்துகிறது...:
பழைய மின்னணு பொருட்கள் தெருக்களில் வீசப்படுவதாலும், எரிக்கப்படுவதாலும், அதிலிருந்து நச்சு வாயு வெளியாகிறது; இது, நரம்பு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் உட்பட ...

நடுத்தர குடும்பங்கள் அதிருப்தி: பா.ஜ.,வுக்கு பாதிப்பா?

Posted: 23 Mar 2016 11:15 AM PDT

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு, மத்தியில் அமைந்தப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளில், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதால், நடுத்தர குடும்பங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன. கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மோடி தலைமையிலான, பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு பொருட்கள், சேவைகளின் விலை உயர்ந்ததுடன், சேமிப்புக்கான வட்டிக் குறைப்பு ஆகியவை அரசுக்கு எதிராக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டில் :
குறிப்பாக, ...

தி.மு.க.,வுக்கு எந்த பாதகமும் இல்லை- ஸ்டாலின்; சவலை குழந்தைகளின் சந்தர்ப்பவாத கூட்டணி- தமிழிசை

Posted: 23 Mar 2016 11:21 AM PDT

சென்னை:தமிழக தேர்தல் களத்தில், திடீர்திருப்பமாக, தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து, மற்ற கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்ததால், தி.மு.க.,வுக்கு எந்த பாதகமும் இல்லை. எங்களது தேர்தல் பணியை, நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடக்கிறது.த.மா.கா., தலைவர் வாசன்: மக்கள் நலக் கூட்டணி,- தே.மு.தி.க., கூட்டணி முடிவு அவர்களது உரிமை. தேர்தல் வியூகங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை. ...

அ.தி.மு.க., நேர்காணல்: உற்சாகத்தில் தி.மு.க.,

Posted: 23 Mar 2016 11:23 AM PDT

அ.தி.மு.க.,வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் தகுதி இல்லாதவர்களும், வசூல் வேட்டையாடியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளையும், குற்றப் பின்னணி சிக்கியவர்களையும் அழைத்துள்ளதால், தி.மு.க., தலைமை உற்சாகமடைந்து உள்ளது.

புது முகங்கள்:
வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஆளுங்கட்சியை சுலபமாக வீழ்த்த முடியாது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், ஆளுங்கட்சியின் பலவீனத்தை மையமாக வைத்து, அக்கட்சியை தோல்வி அடைய வைக்கும் வியூகங்கள், தி.மு.க.,வில் வகுக்கப்பட்டு வருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத, புது முகங்களை கொண்ட வேட்பாளர்களை தேர்வு ...

அருணாசலேஸ்வரர் கோவிலில் நகைகள் மாயம்: அறநிலைய துறை கமிஷனரிடம் விசாரிக்க மனு

Posted: 23 Mar 2016 11:24 AM PDT

'திருவண்ணாமலை கோவிலில், காணாமல் போன நகைகள் குறித்த வழக்கில், இதுவரை நடவடிக்கை எடுக்காத, அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.சி.ஐ.டி போலீசில், திருத்தொண்டர் திருச்சபையினர் புகார் கொடுத்துள்ளனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் ௧௯௯௮ல் மாயமாகின. இந்த சம்பவம், ௨௦௧௦ல், தணிக்கை அறிக்கை மூலம் வெளியில் தெரியவந்தது. அதன்பின், இந்து சமய அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில், இந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், ...

தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' : விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்

Posted: 23 Mar 2016 11:27 AM PDT

விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை ...

அதிக குழந்தைகளை பெறுங்கள்: சந்திரபாபு நாயுடு

Posted: 23 Mar 2016 11:28 AM PDT

ஐதராபாத்: ''ஆந்திர மக்கள், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, புதுமையான வேண்டுகோளை, மக்கள் முன் வைத்துள்ளார், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒருங்கிணைந்த ஆந்திராவின் மொத்த மக்கள் தொகை, 8.46 கோடி; இது, அதற்கு முந்தைய, 2001ல் இருந்த மக்கள் தொகை எண்ணிக்கையை விட, 3.49 சதவீதம் குறைவு. இந்நிலையில், விஜயவாடாவில் நடந்த விளையாட்டு சம்பந்தமான கருத்தரங்கில் பேசிய, சந்திரபாபு நாயுடு, ''அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ...

கடைசி பந்தில் வீழ்ந்தது வங்கதேசம்; இந்திய அணி 'திரில்' வெற்றி

Posted: 23 Mar 2016 11:41 AM PDT

பெங்களூரு: வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இந்தியாவில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த 'பிரிவு-2' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணிக்கு ரோகித் 18 ரன்கள் எடுத்தார். சாகிப் 'சுழலில்' தவான் (23) சிக்கினார். கோஹ்லி 24, ரெய்னா 30 ரன்கள் எடுத்தனர். அல் அமின் பந்தில் பாண்ட்யா (15) சிக்கினார். யுவராஜ் 3 ...

அடுத்த ஐந்து ஆண்டுக்கும் நான் தான் முதல்வர்: மம்தா உறுதி

Posted: 23 Mar 2016 01:45 PM PDT

போலியான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க, திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ விவகாரம், தற்போது, பார்லிமென்ட் விதிகள் குழுவின் விசாரணையில் உள்ளது. மேற்கு வங்கத்தில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதுகுறித்து, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்துள்ள பேட்டி:இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்து என்ன?இந்த வீடியோ, பா.ஜ.,வினரால் திரிக்கப்பட்ட ஒன்று. பொய்யானது; அதில் உண்மை இல்லை.இது வெளியிடப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்?வரும், 2019 லோக்சபா தேர்தலில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™