ஈகரை தமிழ் களஞ்சியம் |
- “எதுக்குய்யா? நர்ஸ டச் பண்ணே?”
- நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
- அரிய புத்தங்கள்
- விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும்.
- மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
- இலவசம் எனும் வசியம்
- லூசுக்கும் ஒரே விலைதான்…!! (முக நூலில் ரசித்தவை)
- பிளாஸ்டிக் தின்னி 'பாக்டீரியா'க்கள் !
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு
- செரீனாவை வீழ்த்தி அஸ்ரென்கா வெற்றி
- கிளப்பில் சீட்டாடினேன்னு உண்மையைச் சொல்லுறீங்க..!
- கணவருக்கு காலிஃபிளவர் சமைக்கத் தெரியாதே…!
- -'ட்ரை' ஹோலி கொண்டாடிய நடிகை
- தமிழ்ப்படத்தில் நடிப்பதற்காக இந்தியா வந்தார் ஜாக்கிசான்
- இலவசம் இலவசம் எங்கும் இலவசம்
- புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
- சிரிங்க சிரிங்க...
- இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
- சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால்..............
- எனக்கு எங்க அம்மா வேணும்!
- இனி இல்லை சிக்கல்!
- படித்ததில் பிடித்தது :) --மனை வாங்குவோர் கவனத்திற்கு!
- பகத்சிங் நினைவு தின சிறப்பு பதிவு
- உலக வானிலை தினம் இன்று
- அதிமுகவில் என்ன நடக்கிறது?
| “எதுக்குய்யா? நர்ஸ டச் பண்ணே?” Posted: 23 Mar 2016 01:01 PM PDT - "எதுக்கு இவ்வளவு ஃபாரீனர்ஸ் வந்திருக்காங்க மியூஸிக் டைரக்டர் வீட்டில?" – ""தமிழ் சினிமாவுல பாட்டு எழுதச் சான்ஸ் கேட்டு வந்திருக்கிறார்களாம்!" ஏ.ராஜா – ————————————– – "என்னடா இது… உன் அப்பா கையெழுத்து மாதிரியே இது இல்லையே…" ""டீச்சர்.. உங்களுக்குச் சந்தேகமா இருந்தா சொல்லுங்க.. இப்பவே உங்க கண்ணு முன்னாலேயே போட்டுக் காட்டுறேன்!" – எம்.ஏ.ஆர்., – ———————————— – "இன்னிக்கு விரதம் சார் பாலும் பழமும் மட்டும்தான்…!" ""அதுக்காக பக்கெட்டுல பாலும் வாழைப் பழத்தாரும் கொண்டு ... |
| நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி Posted: 23 Mar 2016 11:37 AM PDT ![]() |
| Posted: 23 Mar 2016 10:33 AM PDT இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். Posted: 23 Mar 2016 10:31 AM PDT விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். |
| மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Posted: 23 Mar 2016 09:58 AM PDT மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இணைந்தார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜயகாந்தை சந்திப்பதற்கு முன்பு மக்கள் நலக் கூட்டணி தலைவர் அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேமுதிக அழைப்பின் பேரில் விஜயகாந்தை சந்திப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், தேமுதிக உடன் இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிவித்தார். இதனைத் ... |
| Posted: 23 Mar 2016 09:56 AM PDT - என்னை உன்னை நம்மை சோம்பேறிகளாக்கிடும் வசியம் நம்தேசத்தின் பொருளாதாரத்தை வீணாக்கிடும் வசியம் உழைப்பவரையும் சோம்பேறிகளாக்கிடும் வசியம் சோம்பேறிகளை உருவாக்கிடும் வசியம் அது இலவசம் எனும் வசியம் இது இல்லாமல் செய்ய வேண்டியது அவசியம் – ————————- களக்காடு வ. மாரிசுப்பிரமணியன் கவிதை மணி படம்- இணையம் |
| லூசுக்கும் ஒரே விலைதான்…!! (முக நூலில் ரசித்தவை) Posted: 23 Mar 2016 09:49 AM PDT ![]() |
| பிளாஸ்டிக் தின்னி 'பாக்டீரியா'க்கள் ! Posted: 23 Mar 2016 08:16 AM PDT வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக் 'பெட்' பாட்டில்கள், உலகெங்கும் மலைபோல குவிய ஆரம்பித்திருக்கின்றன. இவை, மட்காத ரகம் என்பதால், மண்ணில் புதைந்து நச்சுகளை உண்டாக்குபவை. இவற்றை மறுசுழற்சி செய்வது ஒரு தீர்வு என்றாலும், உலகெங்கும் உற்பத்தியாகும் பெட் பாட்டில்களில், 15 சதவீதமே மறுசுழற்சிக்கு வருகின்றன. ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பெட் பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் மூலக்கூறுகளை குறைந்த காலத்தில் சிதைத்து மட்கச் செய்யும் புதுவித பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிலுள்ள கியோட்டோ தொழில்நுட்ப நிலையத்தைச் ... |
| Posted: 23 Mar 2016 06:01 AM PDT |
| ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு Posted: 23 Mar 2016 05:31 AM PDT கோபால்சாமி துரைசாமி நாயுடு ஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். வாழ்க்கை இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் ... |
| செரீனாவை வீழ்த்தி அஸ்ரென்கா வெற்றி Posted: 23 Mar 2016 05:24 AM PDT இண்டியன்வெல்ஸ்: - - அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடை பெற்று வரும் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இறுதிச்சுற்றில் அஸ்ரென்காவும் செரீனாவும் மோதினர். இதில் 13ஆம் நிலை வீராங்கனையான அஸ்ரென்காவிடம் செரீனா 6-4, 6-4 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆண்கள் இறுதிச்சுற்றில் மிலோஸ் ராவோனிக்வை 6-2, 6-0 என்ற செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றார். பட்டம் வென்ற அவர், "ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு கொடுக்கப் படும் பரிசுத் தொகை கூடுதலாக வேண்டும்," என்றார். ... |
| கிளப்பில் சீட்டாடினேன்னு உண்மையைச் சொல்லுறீங்க..! Posted: 23 Mar 2016 04:07 AM PDT - நோயாளி: டியூப் மாத்திரையோடு இன்னொரு மாத்திரையும் தர்றீங்களே! அது எதுக்கு டாக்டர்? டாக்டர்: டியூப் மாத்திரை பஞ்சர் ஆகாம இது பாத்துக்கும். நாஞ்சில் சு.நாகராஜன், – ————————————– – மனைவி: வழக்கமா ஓவர் டைம் பார்த்ததாலே லேட்டாயிடுச்சுன்னு பொய் சொல்லாம கிளப்பில் சீட்டாடினேன்னு உண்மையைச் சொல்லுறீங்க..! – கணவன்: நீ என்னைத் தேடி ஆபீஸ் பக்கம் வந்ததா வாட்ச்மேன் போன் செய்தான். அதான்! – கரம், – ————————————— – "உங்க மனைவிக்குப் பேய் பிடிச்சு ஒரு மாதம் ஆகுது – இதுகூடத் தெரியாமல் ... |
| கணவருக்கு காலிஃபிளவர் சமைக்கத் தெரியாதே…! Posted: 23 Mar 2016 03:47 AM PDT உனக்குத்தான் காலிஃபிளவர் பிடிக்குமே, ஏன் வேண்டாங்கறே? – என் கணவருக்கு காலிஃபிளவர் சமைக்கத் தெரியாதே…! – எஸ்.சோனியா – ——————————— – கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரதட்சணை வாங்குறது தப்புன்னு சொன்னீங்க, இப்ப சரிதான்னு சொல்றீங்க…? – அப்போ என் பொண்ணோட கல்யாணம், இப்போ என் பையனுக்குக் கல்யாணம்…! – எர். ராஜம் – ———————————- – என்னப்பா, ஹீரோ ஹீரோயின் மற்றும் நடிகர்கள் எல்லாம் 'வெயிட்'டாக இருக்காங்க..? – அப்படியாவது கதை கொஞ்சம் வெயிட்டா இருக்குமேன்னுதான்…! – சியாமளா – ————————————- |
| Posted: 23 Mar 2016 01:40 AM PDT - மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை பொய்த்து பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. - மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார் கேசரீ. அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.அங்கு பிரபலமாக அவர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். - தண்ணீரை யாரும் வீணாக்காதீர்கள் என்று கூறுவதற்கு அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கலர் பொடிகளை ஆசை தீர தூவி ஹோலி கொண்டாடியுள்ளார். |
| தமிழ்ப்படத்தில் நடிப்பதற்காக இந்தியா வந்தார் ஜாக்கிசான் Posted: 23 Mar 2016 01:13 AM PDT - ஜாக்கிசான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட படம் 'குங்பூ யோகா'. – இப்படம் இந்தியா மற்றும் சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் இந்திய-சீன நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். – தமிழில் தனுஷுடன் 'அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக பல படங்களில் கலக்கிய சோனு சூட்டும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். – மேலும், ஆரிப் ரகுமான் போன்ற இந்திய நடிகர்களுடன், சீன நடிகர்களான ... |
| Posted: 23 Mar 2016 01:09 AM PDT இலவசம் இலவசம் எங்கும் இலவசம் இலவச மருந்து பெற்றே மயக்குவோம்! – பரவசம் பரவசம் என்றும் பரவசம் வாழ்வில் எங்களுக்கு இனிப் பரவசமே! – வீடும் மாடும் (செல்வம்) ஆடும் இலவசம் இனி பாடுபடும் வாழ்க்கை இனி இல்லையே! – பணம் தேடித்திரிய வேண்டியதில்லையே ஆனந்தமாய் கூடிக்கூடி ஆடிபாடி வாழ்வோமே! – (தெளிந்த பின்) – வாழ்க்கை கருகியது கண்ணுக்குத் தெரியுது இலவசம் இனி இல்லை இழந்தோம் உழைப்புச் சக்தி – உழைக்க உடலும் மறுக்குது பிழைக்க வழியொன்றுமில்லை வசிய மருந்துக்கும் வழியில்லை பசிப்பிணி வயிறு பற்றியெரிகிறது காலதேவன் ... |
| புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Posted: 22 Mar 2016 11:27 PM PDT எளிமை - - தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு கோலைக் கேட்டார். - அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள். - "ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம். அதற்குள் ... |
| Posted: 22 Mar 2016 11:21 PM PDT முன்னொரு காலத்தில், மலைக்கோட்டை என்னும் நாட்டை முட்டாள் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். யாருக்கும் தோன்றாத விந்தையான எண்ணங்கள் அவனுக்கு தோன்றும். உடனே அவற்றைச் சட்டமாக்கி விடுவான். அதனால் மக்களுக்கு துன்பம் ஏற்படுமே என்று சிறிதும் சிந்திக்க மாட்டான். தண்டனைக்கு அஞ்சிய மக்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர். ஒருமுறை- ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தான். அதன் இரு கரைகளிலும் மக்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அரசன், 'இனி யாரும் ஆற்றின் இடது கரையில் துணி துவைக்கக் ... |
| இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Posted: 22 Mar 2016 11:20 PM PDT ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது. 'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, ... |
| சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால்.............. Posted: 22 Mar 2016 11:02 PM PDT சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால், உடனே, அவ்விடத்தை விட்டு நாம் வெளியேறி விட வேண்டும். இந்த பல்புகளுக்குள் இருக்கும் மெர்க்குரி திரவம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகத்தை விட, அதிக விஷத் தன்மை உடையது. இதை நுகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படும். மேலும், பல்பு உடைந்து விட்டால், 15 நிமிடத்திற்கு பின், கைகளில் படாமல், துடைப்பத்தால் சுத்தப்படுத்தவும். உடைந்த பல்பை சேகரித்து, குப்பைத் தொட்டியில் போடாமல், பாலிதீன் பையில் போட்டு, ... |
| Posted: 22 Mar 2016 10:52 PM PDT முழங்காலுக்கிடையில், தலையைப் புதைத்து, சத்தமே எழாமல், உடல் குலுங்க அழும், அம்மாவையே பார்த்தாள் தாமரை. மனசு பொங்க, தாயின் அருகே அமர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தாள். உதடுகள் துடிக்க, நடுங்கும் கரங்களினால், ஆதுரமாய் மகளின் கைகளைப் பற்றினாள் இந்திரா. ''அழாதம்மா...'' என்றாள் தாமரை. அடுத்த கணம், அடக்க மாட்டாமல் வெடித்துக் கதறிய சத்தம் கேட்டு, உள்ளேயிருந்து ஓடி வந்தனர், தேவகியம்மாளும், சந்துருவும்! ''யே தாமரே... உனக்கு எத்தனை முறை சொல்றது... அவகிட்டே போகாதன்னு... அவ பைத்தியம்டீ,'' என்று எரிந்து ... |
| Posted: 22 Mar 2016 10:27 PM PDT மார்ச் 23, பங்குனி உத்திரம் ! தெய்வங்களுக்குரிய திருமண நாளாகக் கருதப்படுகிறது பங்குனி உத்திரம். இந்நாளில் தான், சிவன் - பார்வதி, ரங்கநாதர் - கமலவல்லி தாயார், முருகன் - தெய்வானை போன்றோரின் திருமணங்கள் நடந்ததாக, புராணங்கள் கூறுகின்றன. பழநி மற்றும் சபரிமலையில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாஸ்தா அவதரித்ததும் இந்நாளில் தான்! சிவனுக்கும், மோகினியாக மாறிய விஷ்ணுவுக்கும் பிறந்தவரே சாஸ்தா! மகிஷி என்னும் அரக்கி, ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவரால் தான், தனக்கு அழிவு வர ... |
| படித்ததில் பிடித்தது :) --மனை வாங்குவோர் கவனத்திற்கு! Posted: 22 Mar 2016 10:21 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| பகத்சிங் நினைவு தின சிறப்பு பதிவு Posted: 22 Mar 2016 09:22 PM PDT தியாகம், சேவை, அன்பு, கருணை, தேசபக்தி, பொதுநலம், அடக்கம், அர்ப்பணிப்பு, ஆகியவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டின் நன்மைக்கும் இன்றியமையாத பண்புகள். வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவதில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடமும், வாழ்க்கையை வணிக நோக்கில் அணுகி கொண்டிருப்பவர்களிடமும் மேற்சொன்ன சில தனிமனித பண்புகள் இன்று மறைந்து கொண்டிருக்கிறது. காரணம் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிகளிலும் இருந்த நமது நாட்டின் தியாகச் சுடர்களின் படங்களும், அவர்கள் நமக்குவிட்டுச் சென்ற பாடங்களும் ... |
| Posted: 22 Mar 2016 09:14 PM PDT வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. "வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்' என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், ... |
| Posted: 22 Mar 2016 07:48 PM PDT அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர். ஒரு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

