Tamil News | Online Tamil News |
- தே.மு.தி.க.,வுடன் பேசவில்லை என்கிறார் ஸ்டாலின்: கூட்டணி சேர கருணாநிதியின் ஆசைக்கு முட்டுக்கட்டை
- தெலுங்கானா எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுக்கு 'ஜாக்பாட்':சம்பளத்தை 3 மடங்கு உயர்த்த அரசு திட்டம்?
- இந்திய அணுசக்தி கட்டமைப்புக்கு ஆபத்து: எச்சரிக்கிறது அமெரிக்கா
- சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை
- பறக்கும் படை சோதனை : தமிழகம் முழுவதும் 17 நாளில் ரூ.12 கோடி பறிமுதல்
- திருப்போரூரில் ஜெ., போட்டியிட வேண்டும் : அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் வலியுறுத்தல்
- கர்நாடக தமிழர்கள்; தமிழக கன்னடர்கள் : இரு மாநில பா.ஜ., கூட்டு திட்டம்
- தற்கொலைப்படை தாக்குதல்: பிரஸல்ஸ் நகரில் 34 பேர் பலி
- 20 பேருக்கு ஒருத்தர்: அ.தி.மு.க., அதிரடி வியூகம்
- கேரளா சட்டசபை தேர்தல்: நடிகர்கள், கிரிக்கெட் வீரரை களமிறக்குகிறது பா.ஜ.,
| தே.மு.தி.க.,வுடன் பேசவில்லை என்கிறார் ஸ்டாலின்: கூட்டணி சேர கருணாநிதியின் ஆசைக்கு முட்டுக்கட்டை Posted: 22 Mar 2016 10:12 AM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கூட்டணி ஆசைக்கு முட்டுக்கட்டை போடுவது போல, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், 'தே.மு.தி.க.,வுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை' எனக் கூறியிருப்பது, கூட்டணி விஷயத்தில் இருவருக்கும் இடையே உள்ள முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.காங்கிரஸ் - ம.ம.க.,வுடன் கைகோர்த்துள்ள, தி.மு.க., ஆளுங்கட்சிக்கு எதிராக, பலமான கூட்டணியை ஏற்படுத்த விரும்புகிறது. அதனால், தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு கொண்டு வர முற்படுகிறது. இதற்காக பலமுறை விஜயகாந்துக்கு, கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார்.இம்மாதம், 6ம் தேதி அளித்த பேட்டியில், 'பழம் கனிகிறது; விரைவில் பாலில் ... |
| தெலுங்கானா எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுக்கு 'ஜாக்பாட்':சம்பளத்தை 3 மடங்கு உயர்த்த அரசு திட்டம்? Posted: 22 Mar 2016 10:38 AM PDT ஐதராபாத்:புதிய மாநிலமாக உருவாகியுள்ள, தெலுங்கானா மாநில, எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களின் சம்பளத்தை, மூன்று மடங்காக உயர்த்த, அந்த மாநில சட்டசபைக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அரசு ஏற்கும்பட்சத்தில், அவர்கள் மாதந்தோறும், 3.5 லட்சம் ரூபாயை ஊதியமாகப் பெறுவர்.ஆந்திரா மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு, நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா மாநிலம், 2014, ஜூன், 2ல் உதயமானது. 2014ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. புதிய மாநிலமாக உருவாகி, இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், ... |
| இந்திய அணுசக்தி கட்டமைப்புக்கு ஆபத்து: எச்சரிக்கிறது அமெரிக்கா Posted: 22 Mar 2016 11:25 AM PDT வாஷிங்டன்: 'இந்தியாவில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளுக்கு, பாகிஸ்தானில் இருப்பதைப் போல், பெரியளவில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை; ஆனால், உள்ளிருப்பவர்களால் அதிக ஆபத்து உள்ளது' என, அமெரிக்காவில் இருந்து வெளியான ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.அமெரிக்காவின் மாசாசூஸெட் மாகாணத்தில் உள்ள, புகழ்பெற்ற, 'ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல்' கல்வி மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளுக்கு, நாட்டுக்குள்ளேயே செயல்படும் சிலரால், ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. கடந்த, 2014ல், சென்னை அருகே உள்ள கல்பாக்கம் ... |
| சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை Posted: 22 Mar 2016 11:25 AM PDT சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, கடந்த கல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியானது. இதில், அண்ணா பல்கலை, 293வது இடம் பிடித்தது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் இடம் பெற்ற, 'பிரிக்ஸ்' நாடுகளின் பல்கலை பட்டியலில், அண்ணா பல்கலை, 151வது இடமும்; சென்னை பல்கலை, 78வது இடத்தையும் ... |
| பறக்கும் படை சோதனை : தமிழகம் முழுவதும் 17 நாளில் ரூ.12 கோடி பறிமுதல் Posted: 22 Mar 2016 11:36 AM PDT சென்னை: தமிழகம் முழுவதும், 20ம் தேதி வரை, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, 12 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான, தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இம்மாதம், 4ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் மாநிலம் முழுவதும், பறக்கும் படையினரும், கண்காணிப்பு குழுவினரும், வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சில்வர் குடங்கள்: சோதனையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்கள் இல்லாமல், எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், சில்வர் குடங்கள், அரிசி மூட்டைகள், காஸ் ஸ்டவ், கேரம்போர்டு, ... |
| திருப்போரூரில் ஜெ., போட்டியிட வேண்டும் : அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் வலியுறுத்தல் Posted: 22 Mar 2016 11:40 AM PDT திருப்போரூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட வேண்டும்' என, அப்பகுதி, அ.தி.மு.க.,வினரும், பொதுமக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, அப்பகுதியில் பலத்த பேச்சு அடிபடுகிறது. அதற்கான காரணங்களாக கூறப்படும் அம்சங்கள்:*ஜெயலலிதா ஓய்வெடுக்க, அடிக்கடி வந்து செல்லும், பங்களா, சிறுதாவூர், பையனுார் ஊராட்சிகளில் உள்ளது*இந்த தொகுதியில் போட்டியிட்டால், பிரசாரம் செய்வது எளிது என, ஜெயலலிதா கருதுகிறார்*போட்டியிட்டால், வெற்றி ... |
| கர்நாடக தமிழர்கள்; தமிழக கன்னடர்கள் : இரு மாநில பா.ஜ., கூட்டு திட்டம் Posted: 22 Mar 2016 11:42 AM PDT பெங்களூரு: தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களையும், தமிழகத்தில் வசிக்கும் கன்னடர்களையும் பயன்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலின்போது, எல்லைப்பகுதி மக்கள் பிரதிநிதிகளை, பிரசாரத்துக்கு பயன்படுத்தியதால், அங்கு, பா.ஜ., வெற்றி பெற்றது. இதே திட்டத்தை, தமிழக சட்டசபை தேர்தலிலும் கையாள, கர்நாடக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள, பா.ஜ., மத்திய அலுவலகத்தில், தமிழக சட்டசபை பிரசார முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின், ... |
| தற்கொலைப்படை தாக்குதல்: பிரஸல்ஸ் நகரில் 34 பேர் பலி Posted: 22 Mar 2016 11:47 AM PDT பிரஸல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ்சில், விமான நிலையத்திலும், மெட்ரோ போக்குவரத்து நிலையத்திலும் நேற்று, சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 34 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில், நேற்று காலை ஊடுருவிய தற்கொலைப்படை பயங்கரவாதி, சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தான்; சில நொடிகளில் அங்கே, மற்றொரு குண்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.சிறிது நேர இடைவெளியில், பிரஸல்ஸ் நகரில், ஐரோப்பிய யூனியன் தலைமையகம் அமைந்துள்ள ... |
| 20 பேருக்கு ஒருத்தர்: அ.தி.மு.க., அதிரடி வியூகம் Posted: 22 Mar 2016 12:12 PM PDT வார்டு வாரியாக, 20 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்து, தேர்தலில் அதிக ஓட்டுகளைப் பெற, அ.தி.மு.க.,வினர் வியூகம் வகுத்துள்ளனர். பொறுப்பாளர்: வாக்காளர்களைக் கவரவும், ஓட்டுகளைப் பெறவும், ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகம் வகுத்து, களத்தில் இறங்கி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, வார்டு வாரியாக உள்ள ஓட்டுகளை கணக்கிட்டு, 20 வாக்காளர்களுக்கு, ஒரு பொறுப்பாளரை நியமித்து வருகின்றனர். இவர்கள், அவ்வப்போது வாக்காளர்களை சந்தித்து, அவர்களை கட்சிக்கு ஓட்டு போட வைக்கும் வகையில், திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்; அவர்கள் கூறும் பிரச்னை மற்றும் ... |
| கேரளா சட்டசபை தேர்தல்: நடிகர்கள், கிரிக்கெட் வீரரை களமிறக்குகிறது பா.ஜ., Posted: 22 Mar 2016 01:50 PM PDT திருவனந்தபுரம்:கேரள சட்டசபை தேர்தலில், திரையுலகினரை களமிறக்குவதில் கட்சிகள் இடையே போட்டி நிலவி வரும் நிலையில், பிரபல நடிகர் கொல்லம் துளசி, இயக்குனர் ராஜசேனன் ஆகியோரை, களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. கேரள சட்டசபைக்கு, மே, 16ம் தேதி, தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடது ஜனநாயக முன்னணிக்கு இடையே தான் நேரடி போட்டி உள்ளது.அதே நேரத்தில், கேரளத்தில், கால்பதிக்கும் நோக்கத்துடன், பா.ஜ., களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்த கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியலில், பல்வேறு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 23,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |