Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்க தடை

Posted: 20 Mar 2016 11:21 AM PDT

தமிழகத்தில், தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட, வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி விடுவிப்பது, சட்டசபை தேர்தல் காரணமாக, தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், கடந்த சில மாதங்களில் துவங்கப்பட்ட, பல பணிகள் பாதியில் முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஒப்பந்தம்:
இந்த நிதி, இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கும்; இன்னொரு பகுதி சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு ...

பல மாநிலங்களில் பா.ஜ., காலூன்றும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி நம்பிக்கை

Posted: 20 Mar 2016 11:23 AM PDT

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நேற்று நடந்த, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள பல மாநிலங்களில், பா.ஜ., கால் பதிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.டில்லியில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், இரண்டாவது நாளாக நேற்று நடந்தது. இதில், தேசியவாதம் தொடர்பான விவாதங்களே அதிகமாக நடந்தன. நேற்றைய கூட்டத்துக்கு பின், நிருபர்களை சந்தித்துப் பேசிய, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:கருத்துச் சுதந்திரமும், தேசியவாதமும், அத்தியாவசியமாக, ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. மக்கள், தம் ...

போலீசுக்கு போகாதீங்க: தே.மு.தி.க., நிர்வாகிகள் கெஞ்சல்

Posted: 20 Mar 2016 11:24 AM PDT

'ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினார்...' என்பது, 'நானா பழம்?' என, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டவருக்குப் பொருந்தும் போல.'என்னோடு சேர்ந்து பாருங்கள்... என்னோடு சேர்ந்து ஆடுங்கள்...' என, 'டூயட்' ரேஞ்சுக்கு ஆரம்பித்து, 'மூன்றாம் பிறை' பட கமல் பாணியிலெல்லாம் கெஞ்சி, இறுதியில், 'பாலும் பழமும்' பட ரேஞ்சுக்குச் சென்ற, தி.மு.க.,வுக்கு, 'பெப்பே' காட்டுவதாய் நினைத்து, 'தனித்துப் போட்டி' என அறிவித்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்கு, இப்போது புது சிக்கல்எழுந்திருக்கிறது.எழாதா பின்னே! ஒண்ணா, ரெண்டா... தமிழகத்தில், பொதுத் தொகுதியில் போட்டியிட, 10 ஆயிரம் ...

மந்திரிகள் வீடுகளை நோட்டமிடும் உளவுத்துறை

Posted: 20 Mar 2016 11:25 AM PDT

அமைச்சர்களின் செயல்பாடுகளில், கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் மற்றும் பினாமி பெயரில் சேர்த்துள்ள சொத்துகள், ஊருக்குள் நடத்திய கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் திரட்டித் தருமாறு, உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

சமாதானம்:
அ.தி.மு.க., ஐவரணியில் இருந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வாதன், பழனியப்பன் ஆகியோர், தலைமையின் கோபத்திற்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து, ஐவர் அணி குழு, நால்வர் அணியாக சுருக்கப்பட்டு, அதில், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இணைந்தனர். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ...

நேரு குடும்பத்தை மறவாத ஜெ.,

Posted: 20 Mar 2016 11:26 AM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு அலுவலக மேஜையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா மற்றும் ராஜிவ் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அவர், நேரு குடும்ப நட்பை மறக்காமல் உள்ளதாக, காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், மார்ச், 6ல், போயஸ் தோட்ட இல்லத்தில், முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தால் வெளியிடப்பட்டன. ஜெயலலிதாவின் மேஜை முன், நான்கு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதல் படம், ...

பணம் பறக்கிறது; பறக்கும்படை 'கப்சிப்': கருணாநிதி கண்டனம்

Posted: 20 Mar 2016 11:27 AM PDT

சென்னை : போலீஸ் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் எடுத்து செல்வதை, தேர்தல் கமிஷனின் பறக்கும் படை கண்டு கொள்வது இல்லை என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத்தேர்வில், வேதியியல், கணிதம் கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்ததால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் ஆறுதல் அடையும் வண்ணம் நல்ல தீர்வு காண வேண்டும். நெய்வேலிபழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை, 'என்.எல்.சி., இந்தியா லிமிடெட்' என, ...

சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., வழக்கு: தேர்தலுக்கு முன் தீர்ப்பு வருமா?

Posted: 20 Mar 2016 11:28 AM PDT

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் முடிவு, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வருமா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதத்தை, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, தலா நான்கு ஆண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக ...

இடியாப்ப சிக்கலில் புகையிலை மசோதா

Posted: 20 Mar 2016 11:29 AM PDT

புதுடில்லி: புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவதில், அரசு துறைகள் ஒவ்வொன்றும் ஆளுக்கொரு ஆலோசனைகளை கூறுவதால், 'அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்' என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவகையில் புகையிலை தொழிலை வரன்முறைப்படுத்தும் நோக்கில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு திருத்த சட்டம் கொண்டு வர, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக, எம்.பி., திலிப் காந்தி தலைமையில் பார்லிமென்ட் ...

கூட்டணி அரசுக்கு தி.மு.க., தயாரில்லை என ஸ்டாலின் திட்டவட்டம்!

Posted: 20 Mar 2016 11:30 AM PDT

''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படாது; அமைச்சரவையில், கூட்டணி கட்சிகள் இடம் பெறவும் வாய்ப்பு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் இருக்கும் சில கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்க்க, பலமான கூட்டணியை உருவாக்க, தி.மு.க., முயன்றது. அதற்காக, தே.மு.தி.க., - காங்., உட்பட, சில கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்காமல், ...

லஷ்கர் பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு

Posted: 20 Mar 2016 02:01 PM PDT

புதுடில்லி: இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது.சிவராத்திரியை ஒட்டி, குஜராத்தின் சோமநாதர் ஆலயம் மற்றும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களையும் தாக்கும் நோக்குடன், 10 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாக, உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தொலைபேசி ஒட்டுகேட்பு:
இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஊடுருவிய, 10 பயங்கரவாதிகளில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™