Tamil News | Online Tamil News |
- இந்தோனேஷியாவில் நில நடுக்கம்: 'சுனாமி' எச்சரிக்கையால் கடும் பீதி
- கால்நடைத்துறை மந்திரி பதவியில் இருந்து சின்னையா டிஸ்மிஸ்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜெயலலிதா அதிரடி
- நிவாரணம் கிடைக்கல: 4 லட்சம் குடும்பங்கள் புலம்பல்
- யாரையும் தப்ப விட மாட்டோம்: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசத்திற்கு ஜெட்லி பதில்
- 'தன்னிச்சையாக செயல்படாதீர்கள்': ராகுல்
- கறுப்பு பணம்: யாருக்கும் மன்னிப்பு தரவில்லை
- பொய் உண்மையாகி விடாது: கருணாநிதி
- தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு
- ஆளுங்கட்சியினருக்கு சிறு வணிக கடன்: திவாலாகும் நிலையில் கூட்டுறவு வங்கிகள்
- 6.84 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- கூட்டணிக்கு முன் காங்., - கம்யூ., கைகோர்ப்பு
- வங்கிகளின் வாராக்கடன் நிலை மோசம்: சி.பி.ஐ.,
| இந்தோனேஷியாவில் நில நடுக்கம்: 'சுனாமி' எச்சரிக்கையால் கடும் பீதி Posted: 02 Mar 2016 09:25 AM PST ஜகார்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 7.9 ஆக பதிவானது. அந்த நாட்டின் சில பகுதிகளுக்கு, 'சுனாமி' எச்சரிக்கை விடப்பட்டதால், மக்கள், பீதி அடைந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், சுமத்ரா தீவை மையமாக வைத்து, கடலுக்கடியில், 10 கி.மீ., ஆழத்தில், நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 7.9 ஆக பதிவானது.அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் இதை உறுதி செய்தது. நில நடுக்கத்தை தொடர்ந்து, இந்தோனேஷிய அரசு நிர்வாகம், மேற்கு மற்றும் வடக்கு சுமத்ரா கரையோர பகுதிகளுக்கு, சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ... |
| Posted: 02 Mar 2016 10:29 AM PST சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், அ.தி.மு.க.,வில், களை எடுக்கும் பணியை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி உள்ளார். கால்நடைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து, நேற்று, சின்னையா நீக்கப்பட்டார்; அவரது மாவட்டச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டது. அதேநேரத்தில், சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கரின், மாவட்டச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வில், கடந்த சில தினங்களாக, அதிரடி நடவடிக்கைகள் தொடர்கின்றன. மூத்த அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்களான, வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் உட்பட, சிலரின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனின் ... |
| நிவாரணம் கிடைக்கல: 4 லட்சம் குடும்பங்கள் புலம்பல் Posted: 02 Mar 2016 10:32 AM PST தமிழக அரசின் வெள்ள நிவாரணம், இன்னும், நான்கு லட்சம் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. ஓரிரு நாட்களில், சட்டசபை தேர்தல் தேதி வெளியாக உள்ளதால், நிவாரண நிதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், விடாது கொட்டித் தீர்த்த பருவ மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது; ஏராளமானோர், வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.அதனால், நான்கு மாவட்டங்களிலும், குடிசைகளை இழந்தோருக்கு, 10 ஆயிரம் ரூபாய்; வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு, 5,000 ரூபாய் என, 30.5 லட்சம் ... |
| யாரையும் தப்ப விட மாட்டோம்: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசத்திற்கு ஜெட்லி பதில் Posted: 02 Mar 2016 10:35 AM PST புதுடில்லி: ''ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் தப்ப விட மாட்டோம்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, திட்டவட்டமாக தெரிவித்தார்.லோக்சபா நேற்று காலை கூடியதும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் அவரது மகன் கார்த்தி குறித்த விவகாரத்தை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மீண்டும் கிளப்பினர். அவர்களை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானப்படுத்த முயன்றார். பின், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு,''இப்பிரச்னை குறித்து, விவாதிக்க தயார்,'' என்றார். இதையடுத்து, விதி எண், 193ன் கீழ், விவாதம் ... |
| 'தன்னிச்சையாக செயல்படாதீர்கள்': ராகுல் Posted: 02 Mar 2016 10:38 AM PST புதுடில்லி: ''அமைச்சர்கள் உட்பட யாரையும் கலந்தாலோசிக்காமல், தன்னிசையாகச் செயல்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், குற்றஞ்சாட்டினார். பார்லிமென்டில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, ராகுல் நேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:மும்பை தாக்குதலுக்குப் பின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், பாகிஸ்தான் தனித்து விடப்பட்டது.ஆனால், யாருடனும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக, திடீரென பாகிஸ்தானுக்கு மோடி சென்றதன் மூலம், ஒரு சிறு கூண்டுக்குள் ... |
| கறுப்பு பணம்: யாருக்கும் மன்னிப்பு தரவில்லை Posted: 02 Mar 2016 10:43 AM PST புதுடில்லி: ''கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கவில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜெட்லி, டில்லியில் நேற்று, தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். அவர் கூறியதாவது: கறுப்பு பணம்: உள்நாட்டில் கறுப்பு பணம் பதுக்கியோர், தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பாக, மத்திய அரசு குறுகிய கால சாளரமுறையை துவக்கியது. இதன்கீழ், கணக்கில் காட்டாத கறுப்பு பணம் மற்றும் சொத்துகள் பற்றிய தகவல்களை அளித்து, அத்தொகை மீது, 30 சதவீத வரி, 15 சதவீத அபராதத் தொகை மற்றும் கூடுதல் வரி ... |
| பொய் உண்மையாகி விடாது: கருணாநிதி Posted: 02 Mar 2016 10:46 AM PST சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், கவர்னர் உரையில், மாநிலத்தின் மின் உற்பத்தி திறன், கடந்த நான்கு ஆண்டுகளில், 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது என, கூறப்பட்டுள்ளது. அப்போதே, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மோகன்ராஜ், இதுபற்றி கூறும்போது, தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில், மின் உற்பத்தி பற்றிவிவரம் கேட்டதாகவும், அதற்கு, ஒரு மெகாவாட் கூட, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மின் உற்பத்தி செய்யப்படவில்லை என, தெரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவும், மின்துறை அமைச்சரும், எந்தவிளக்கத்தையும், காதில் போட்டுக் கொள்ளாமல், ... |
| தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு Posted: 02 Mar 2016 10:49 AM PST ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் தி.மு.க., -தே.மு.தி.க., இடையே, கூட்டணி உறுதியாவது, தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பரபரப்புகள் அதிகரித்துள்ளன. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க.,- - பா.ஜ., -- மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகின்றன.கடந்த மாதம், 28ம் தேதி, மத்திய அமைச்சர் ஜாவடேகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி பேச்சு நடத்தினார்.தி.மு.க., தரப்பில், திரைமறைவு பேச்சு அரங்கேறி வருகிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், வேட்பாளர் நேர்காணலில், தி.மு.க., கூட்டணி ... |
| ஆளுங்கட்சியினருக்கு சிறு வணிக கடன்: திவாலாகும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் Posted: 02 Mar 2016 10:57 AM PST முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, 5,000 ரூபாய், சிறு வணிக கடனை, ஆளும் கட்சியினருக்கு மட்டும் வழங்குவதால், கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2015 இறுதியில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில், வட்டி இல்லாமல், 5,000 ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, ஜனவரியில் துவக்கி வைத்தார். இதற்காக, சென்னை, காஞ்சி உட்பட, 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இவற்றில், கடன் கேட்டு, நான்கு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், கடன் வழங்குவதில் ... |
| 6.84 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் Posted: 02 Mar 2016 11:03 AM PST சென்னை: தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி மூலம், 6.84 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, பிப்., 15ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடந்தது. இப்பணியின் போது, வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்கள்; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பெயர்கள்; தி.மு.க.,வினர் கொடுத்த, போலி வாக்காளர் பட்டியல் என, மொத்தம், 6.84 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. நீக்கப்பட்டவர்கள் விவரம்: இறந்தவர்கள் - 3 லட்சம் பேர் ... |
| கூட்டணிக்கு முன் காங்., - கம்யூ., கைகோர்ப்பு Posted: 02 Mar 2016 12:33 PM PST கோல்கட்டா;தமிழகத்துடன், மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசை வீழ்த்தவும், பா.ஜ.,வை தலையெடுக்க விடாமல் செய்யவும் வியூகம் வகுத்து வருகிறது, காங்கிரஸ். இதற்காக, மார்க்.கம்யூ., கட்சி யுடன் கூட்டணி அமைக்கவும் பேச்சு நடத்தி வருகிறது. கூட்டணி குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மார்க்.கம்யூ., கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். இரு கட்சிகளும் பல்வேறு கூட்டு போராட்டங்களை நடத்தியுள்ளன.திரிணமுல் ... |
| வங்கிகளின் வாராக்கடன் நிலை மோசம்: சி.பி.ஐ., Posted: 02 Mar 2016 03:00 PM PST மும்பை ; ''வங்கிகளின் வாராக்கடன், மூன்று லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; இதுகுறித்த விசாரணையை தாமதப்படுத்தினால், கடன் செலுத்தத் தவறியோர், பணத்துடன் தப்பித்து விடுவர்,'' என, சி.பி.ஐ., இயக்குனர் அனில் சின்ஹா எச்சரித்துள்ளார். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், சி.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் 7வது மாநாடு நேற்று நடந்தது. இதில், சி.பி.ஐ., இயக்குனர் அனில் சின்ஹா பேசினார். அவர் பேசியதாவது: கடந்த, 2009ல், 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் வாராக்கடன், 2015ல், மூன்று லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில், 4.36 சதவீதம், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 03,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |