Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அடைக்கலம் தருமா அ.தி.மு.க.,: தவிக்குது த.மா.கா.,

Posted: 19 Mar 2016 07:55 AM PDT

'ஆத்துல போற தண்ணி; அம்மா குடி, ஐயா குடி' என்ற கணக்காக ஆளாளுக்கு அலைந்து கொண்டிருக்கையில், ஆட்சியைப் பிடிக்கிற ஆசை, த.மா.கா.,வுக்கு மட்டும் வரக் கூடாதா என்ன?'பாக்கு போடுவது மாதிரி, சுலபமான காரியமில்லை, பதவியைப் பிடிப்பது' என்று, கருப்பையா மூப்பனார் உணர்ந்ததெல்லாம், பழைய கணக்காகி மறந்து போன நிலையில், 16 மாதங்களுக்கு முன்னால், மறுபடி காங்கிரஸைப் பிளந்து, த.மா.கா., சீசன் - 2வை தொடங்கினார் ஜி.கே.வாசன்.

'பஞ்ச்' டயலாக் :
அப்போதே, காங்கிரஸ் பிரமுகர்களில் தீர்க்க தரிசனம் தெரிந்த பாதிப் பேர், தாய்க் கட்சியிலேயே தங்கி விட்டனர்.கட்சி தொடங்கிய, 16 மாதங்களில், ...

பதிவுத்துறை மீது புகார்: அரசியல்வாதிகள் சொத்து பரிமாற்றங்களை மறைக்க சதி?

Posted: 19 Mar 2016 11:46 AM PDT

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இந்த நேரத்தில், அரசியல் பிரமுகர்கள் பெயரில், பல்வேறு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். இந்த பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை, பொது மக்கள் தெரிந்து கொள்ளாமல் தடுக்க, பத்திரப்பதிவுத் துறை முயற்சிப்பதாக புகார் எழுந்து உள்ளது.

வேறு பெயர்களுக்கு...:
தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் போட்டியிடுவோர், வேட்பு மனுவில், சொத்து விவரங்களை காட்ட வேண்டும். அதனால், இதுபோன்ற நேரங்களில், அரசியல் பிரமுகர்கள் பெயரில் உள்ள சொத்துகள், வேறு பெயர்களுக்கு ...

கூட்டணி சேர யாருமே வராததால் விஜயகாந்த் விரக்தி

Posted: 19 Mar 2016 11:51 AM PDT

தே.மு.தி.க., தலைமையில், தனி அணி அமைக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக அறிவித்த, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேர யாருமே முன் வராததால், கடும் விரக்தி அடைந்து உள்ளார். அவரின் தலைமையை ஏற்க மறுத்து, அனைத்து கட்சிகளும் ஓரங்கட்டுவதால், தவிப்புக்கும் ஆளாகி உள்ளார்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., ...

பழைய பன்னீர்செல்வமாக வந்தார் ஓ.பி.எஸ்.,!

Posted: 19 Mar 2016 11:54 AM PDT

இரு வாரமாக அ.தி.மு.க.,வில் அனலாக வீசிய ஓ.பி.எஸ்., விவகாரம், ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. வெளியில் தலை காட்டாமல், வீடே கதியென கிடந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வமும், நத்தம் விஸ்வநாதனும், நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டணி பேச்சில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,வில், முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற, ஐவர் அணியில் இருந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் இருந்து, திடீரென விலக்கி வைக்கப்பட்டனர். ...

மாற்று வருமானத்தை கவனியுங்க: விவசாயிகளுக்கு மோடி ஆலோசனை

Posted: 19 Mar 2016 12:06 PM PDT

புதுடில்லி:''மழை, பனிப்பொழிவு போன்ற இயற்கை காரணங்களால், விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வருவாய் ஏற்பாடுகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூறினார்.டில்லியில் நேற்று நடந்த, மூன்று நாள் விவசாயிகள் மேம்பாட்டு விழாவை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: பாரம்பரிய முறைகளுடன் நவீன தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். பாசன முறைகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தண்ணீரை வீணடிக்காமல், சிக்கனமாக பயன்படுத்தி, குறைந்த நீரில், அதிக மகசூலைப் ...

ஓ.சி., என்கிற சி.எம்.,

Posted: 19 Mar 2016 12:18 PM PDT

தமிழகத்தில் தேர்தல் நடக்கும் அதே நாளில், கேரளாவிலும் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தை விட குறைவான தொகுதிகள் கொண்ட, பரப்பில் சிறிய மாநிலம்; ஆனால், கட்சிகளின்

எண்ணிக்கை அதிகம். ஜாதிக்கும், மதத்திற்கும் கூக்குரலிட நம்மை விட கட்சிகள் அங்கு ஏராளம்; கோஷ்டி பூசல்களோ சர்வசாதாரணம். எனவே, அரசியல் அக்கப்போர்களுக்கும் பஞ்சமில்லை.இப்போது அங்கு, தேர்தல் களத்தை கலக்கி கொண்டிருப்பது காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியை பற்றிய புத்தகம். 'குஞ்சூஞ்சு கதைகள்' என்ற அந்த புத்தகத்தை எழுதியவர், உம்மன் சாண்டியின் பத்திரிகை செயலராக இருக்கும் பி.டி.சாக்கோ.
நல்ல ...

பிரதமரின் வளர்ச்சிக்குஉதவிய 'டுவிட்டர்'

Posted: 19 Mar 2016 12:22 PM PDT

புதுடில்லி:'தகவல் தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாக பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவராக, பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதற்கு, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தை அவர் அதிகமாக பயன்படுத்தியது தான் காரணம்' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 'டுவிட்டரில்' மோடி அனுப்பியுள்ள, 6,000க்கும் அதிகமான செய்திகள் குறித்து, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை, தகவல் தொழில்நுட்ப பள்ளியின் உதவிபேராசிரியர் ஜோயோஜித் பால் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ள பால், அது குறித்து கூறியதாவது: பல்வேறு ஊடகங்கள் இருந்தபோதும், மக்களை நேரடியாக ...

சென்னையில் ஐதராபாத் நடைமுறை: லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசாருக்கு 'செக்'

Posted: 19 Mar 2016 12:36 PM PDT

சென்னை: தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, அபராதத் தொகையை வசூலிக்கும் போலீசாருக்கு கேமரா வழங்கப்பட்டுள்ளது. சென்னையிலும், அந்த நடைமுறையை அமல்படுத்த ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.ஐதராபாத்தில், வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும், போக்குவரத்து போலீசாரின் கழுத்தில் கேமரா தொங்கவிடப்பட்டு, ஜி.பி.ஆர்.எஸ்., கருவி மூலம் கண்காணிக்கும் நடைமுறை, சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. வாகன ஓட்டியிடம் போக்குவரத்து போலீசார் பேசுவது; வாக்குவாதம் உள்ளிட்ட காட்சிகள் அந்த கேமராவில் தெளிவாக பதிவாகி ...

ரேஷன் பருப்பில் எலி: சட்டசபையில் சர்ச்சை

Posted: 19 Mar 2016 02:11 PM PDT

சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் ரேஷன் கடையில் வினியோகிக்கப்பட்ட பருப்பில், இறந்த எலி கிடந்தது என்றும், அந்தப் பருப்பு மனிதர்கள் பயன்படுத்த லாயக்கற்றது என்பதும் தெரியவந்துள்ளதாக, சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி, இமாச்சல பிரதேசத்தில் உள்ளது. இங்குள்ள ஒரு ரேஷன் கடையில் வினியோகிக்கப்பட்ட பருப்பு பாக்கெட்டில், எலி இறந்து கிடந்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தை, பா.ஜ.,வின் ராஜிவ் சாய்ஜால், சட்டசபையில் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்து உணவுத் துறை ...

வியாபாரிகளிடம் பணம் பறித்தால் 'சஸ்பெண்ட்' : தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Posted: 19 Mar 2016 02:30 PM PDT

சென்னை: ''உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களை உரியவர்களிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்; தாமதம் செய்தாலோ, பணம் பெற்று விடுவித்தாலோ, சம்பந்தப்பட்டோர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை மையமாக வைத்து, 'டுவிட்டர்' இணைய தளத்துடன் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக, 'பேஸ்புக்'கில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுகுறித்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™