Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............ஊசிப் பிள்ளைக் கதை!

Posted: 19 Mar 2016 01:30 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

அசுரர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட

Posted: 19 Mar 2016 01:06 PM PDT

64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப் பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. இன்றைய அம்மன் கோவில்கள் அனைத்திலும் எப்படியோ சிவனுக்கு முக்கியத்துவம் குறைந்து நுழைவு வாயிலில் தட்சன் என்ற கருப்புசாமியின் ஆதிக்கம் கோலோச்சிக்கொண்டுள்ளது இதில் ஓரளவு உண்மையும் உள்ளது ஆனால் ஆதியில் ஞானிகள் உருவாக்கிய காரணம் மாறி தலைகீழாக நடைமுறையில் உள்ளது என்பதே சமரச வேதத்தின் வெளிப்பாடாகும் ...

கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Posted: 19 Mar 2016 11:42 AM PDT

கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்) பல துண்டு சிதறல்களாக கணினி பற்றிய தகவல்கலைக் கொண்டுவருவேன் சுவாரஸியமாக இருக்கும். ,முதலில் ஒரு தகவல் இது சரியா பிழையா தெரியாது செய்துபார்க்க வில்லை. இந்தப் பிரிவில் இருக்கட்டுமே. கீழ் காணும்படி ஒரு ஓடியோ பாக்ஸ் ற்கான வயர் ஒன்றைகொண்டு மோபைல் பொனில் சுற்றுகிறீர்கள். அதை வெள்ளித் தாள் கொண்டு மூடுகிறீர்கள். இப்போது சார்ஜ் செய்யுங்க|ள் 10 செக்கன்களீல் 75 வீதம் சார்ஜ் ஏறிவிட்டதாக கூறூகிறார்

அன்னக்காவடியும் மூன்று பெண்களும் !

Posted: 19 Mar 2016 09:15 AM PDT

பவதி பிச்சாந் தேஹி ! ஒரு வீட்டின் முன்பாக அன்னக்காவடி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் ! அப்போது பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு வந்தான் . " அம்மா ! பிச்சை போடுங்க தாயே ! " என்று குரல் கொடுத்தான் . உடனே அன்னக்காவடி ," தம்பி ! ஒரு வீட்டின் முன்பாக இருவர் பிச்சை எடுக்கக் கூடாது ; நீ அடுத்த வீட்டுக்குப் போய் பிச்சை எடு ! " " ஐயா ! கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த வீட்டில் பிச்சை எடுக்கிறேன் ; என்னை எடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை ! " " சரி ...

காமத்தை கொன்று விடு...

Posted: 19 Mar 2016 08:51 AM PDT

பட்டாம் பூச்சியாய்  சிறகடிக்கும்  பச்சைக்கிளியை  பள்ளி செல்லும்  பருவத்தே!  பாவிகளால் பாலியல்  வன்புணர்வுக்கு  ஆட்படுத்தி  வாழ்க்கையை  முடித்து கதற கதற  காரியம் சாதிக்கும்  ஆணிணமே  உன் வீரத்தை  காமத்தில் காட்டாதே!  உன் நெறி தவறிய  காமத்தை கொன்று விடு! மிருகமாய் மாறும்  நிலையை விட்டு  நீ  விலகியோடு!!  உன்னை வலியோடு  ஈன்றவளுக்கு  வாழ் நாள் வலியை  தந்துவிடாதே!  உன் தரம் தாழ்ந்த  செயலையும் காமத்தையும்  கொன்று விடு!!  இல்லையேல் நீ வார்த்தைகளால்  வாழ்நாள் ...

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்

Posted: 19 Mar 2016 08:01 AM PDT

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள் மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் . "ஆயுஷ்மான் பவ செளம்யா   "அர்த்தம் என்ன ? மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா , ''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் " சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ? "தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் ...

கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்..

Posted: 19 Mar 2016 07:20 AM PDT

- சூரிய காந்தி எண்ணை பயன்படுத்துவதை விட நல்லது.. நல்லெண்ணையும், கடலை எண்ணையும்.. - பொறிப்பதற்கு கடலை எண்ணையையும், சமையலுக்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தினால்.. எந்த கொழுப்பும் நம்மை அண்டாது.. - சூரிய காந்தி எண்ணையினால், வரும் கொழுப்பு 99% எனில், கடலை எண்ணையினால் வரும் கொழுப்பு வெறும் 5% தான்.. விழிப்புடன் இருப்போம்.. அடுத்த தலைமுறையை காப்போம்! - வாட்ஸ் அப் பகிர்வு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)

Posted: 19 Mar 2016 07:17 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Posted: 19 Mar 2016 07:14 AM PDT

- துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து (164-328 அடி) விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை ...

நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்...

Posted: 19 Mar 2016 07:09 AM PDT

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு பதறவேண்டாம் விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து கொள்ளுங்கள் -- -நாட்டின் வளர்ச்சிக்காக இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால் மேலும் படியுங்கள் விவரம் புரியும் 2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை கலங்கடித்து உள்ளது அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம் இதுல ...

கும்பகோணம் அருகே 32 ஆயிரம் ஜோடி விலையில்லா காலணிகள் பறிமுத‌ல்

Posted: 19 Mar 2016 06:55 AM PDT

கும்பகோணம் அருகே 61 லட்ச ரூபாய் மதிப்புள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான 32 ஆயிரம் ஜோடி விலையில்லா காலனிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த அம்மாபேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், ஹரியானாவில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட விலையில்லா காலணிகளை பறிமுதல் செய்தனர். தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு ‌வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட காலனிகள், சண்டிகரில் இருந்து நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(420)

Posted: 19 Mar 2016 06:21 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும்

Posted: 19 Mar 2016 06:14 AM PDT

வ.எண் எண்ணெய்யின் பெயர் முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid) விகிதம் முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid) விகிதம் 1 சபோலா (கார்டி) ஆயில் 73.3% 9.4% 2 கார்ன் ஆயில் 57.4% 12.7% 3 சன் ஃபிளவர் ஆயில் 52% 17 % 4 சோயா ஆயில் 50.8 % 15 % 5 கடலை எண்ணைய் 31 % 17.4 % 6 நல்லெண்ணைய் — — 7 கடுகு எண்ணைய் 18.1 % 5.5 % 8 பாம் ஆயில் 9 % 53 % 9 தேங்காய் எண்ணெய் 1.8 % 86.3 % 10 நெய் 0.0 % 64.2 % - எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் ...

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

Posted: 19 Mar 2016 05:52 AM PDT

ஆண்களே இந்த பதிவு நமக்காக தான்….! ( ஏன்ன என்ன எப்பவுமே சில பேர் சொல்றாங்க உங்க போஸ்ட் எல்லாமே பெண்களுக்கு மட்டுமே என்று அதனால தான் இந்த பதிவு ) எனவே பெண்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்…! ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! 1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!! 2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி வாரான்.. பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!! 3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் ...

மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்

Posted: 19 Mar 2016 05:46 AM PDT

மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்றும் போது கூறிய குட்டி கதை..!! ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார். ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் ...

இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்

Posted: 19 Mar 2016 05:45 AM PDT

- பூடானின் புதிய இளவசர் பிறப்பையும், அவருடைய நீண்ட ஆயுளுக்காகவும் அந்நாட்டு மக்கள் ஒரு லட்சத்துக்கு 8 ஆயிரம் மரக்க ன்றுகளை நட்டுள்ளனர். மன்னராட்சி நடைபெறும் பூடானில், அரசர் கேசர் நம்ஜைல் மற்றும் அரசி ஜெட்சன் பூமா ஆகியோர் புதிய இளவரசரின் பிறப்பை கடந்த பிப்ரவரி மாதம் 5-ல் அறிவித்தனர். இதையடுத்த கடந்த ஒரு மாதத்தில் பூடானின் 14 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கு 8 ஆயிரம் மரக்கன்றுகளை மக்கள் நட்டு இளவரசரின் பிறப்பைக் கொண்டாடியுள்ளனர். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் தங்கள் அன்பிற்குரிய ...

மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 19 Mar 2016 05:00 AM PDT

- மாமல்லபுரம் கடற்பகுதியில், சங்ககாலத்திற்கு முந்தைய, பாறைகற்களால் ஆன பண்டைய நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் துவங்கி சாலவான்குப்பம், புலிக்குகை பகுதி வரை 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடற்பகுதியில் நில உள்ளமைப்பு அறிவியல் என்ற அதிநவீன முறையை பயன்படுத்தி பண்டைய நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியில் 15 இடங்களில் நவீன கருவி மூலம் ஒலி அனுப்பி புதைந்திருந்த ...

குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!

Posted: 19 Mar 2016 04:30 AM PDT

சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட. பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு ...

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Posted: 19 Mar 2016 04:30 AM PDT

புதுடில்லி: சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. - பொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த மாதம், 16ம் தேதி அறிவித்தது. - அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல், ஜூன் 30ம் தேதி ...

அதிகாலை குளியல் மகத்துவம் !!

Posted: 19 Mar 2016 03:29 AM PDT

- காலையில் படுக்கை தேனீர்அருந்துபவரா நீங்கள்? இது உங்களுக்குத்தான்! - அதிகாலையில் விழித்து எழுபவர்களை பற்றிய இலண்டன் பல்கலை ஆய்வை கீழே படியுங்கள்: - அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யும் செயல்கள் இரட்டிப்பு பலன் தரும் என்று முன்னோர்கள் கூறி அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்கினார்கள். - பாரதியாரும் காலை எழுந்தவுடன் படிப்பு என்கிறார். கோவில்கள், ஆஸ்ரமங்கள், காலை 5-5.30 மணிக்கு, பூஜைக்காக அழைக்கிறார்கள், வேதங்கள் படிக்கிறார்கள். - காலை 3 முதல் 4 வரை தேவகுளியல், மானிடர் குளிக்கலாகாதென்றும், ...

ஹிந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசு முடிவு

Posted: 19 Mar 2016 02:50 AM PDT

ஹிந்துக்களின் பண்டிகைகளான தீபாவளி, ஹோலி ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக அந்தப் பிரிவினரின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளி மற்றும் ஹோலிக்கு பாகிஸ்தானில் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிறிஸ்தவர்களின் ...

உங்களை 1/2 நிமிடத்தில் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ :)

Posted: 19 Mar 2016 02:43 AM PDT

paper is dead?................



உங்களை  1/2 நிமிடத்தில் சிரிக்க  வைக்கும் இந்த வீடியோ புன்னகை

This posting includes an audio/video/photo media file: Download Now

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும்

Posted: 19 Mar 2016 01:09 AM PDT

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? - - அதன் விளக்கம் பின்வருமாறு:- 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத ...

'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு

Posted: 18 Mar 2016 11:53 PM PDT

புதுடில்லி: 'பேஸ்புக்' சமூக வலைதளம், அதன், மென்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு, நான்கு கோடியே, 84 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு மற்றும், 'பாஸ்வேர்டு' பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளால், இணையதளங்கள் செயல்படாமல் பாதிக்கப்படுகின்றன. - விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் மென்பொருள் தவறுகளால் பெரும் விபத்துகள் கூட ஏற்படுகின்றன.சமூக வலைதளமான பேஸ்புக் தன் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் ...

ரயில் நிலைய தூய்மை: பின்தங்கியது தமிழகம்

Posted: 18 Mar 2016 11:50 PM PDT

புதுடில்லி: - - நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி வெளியிடப்பட்ட, துாய்மையான ரயில் நிலையங்களுக்கான பட்டியலில், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்கள் பின்தங்கி உள்ளன. ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்கள், 'ஏ1' என்றும், அதற்கடுத்த நிலையில் உள்ள ரயில் நிலையங்கள், 'ஏ' என்றும் தரம் பிரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோவை, மதுரை ஆகிய நான்கு ரயில் நிலையங்கள், 'ஏ1' பிரிவில் உள்ளன. அரக்கோணம், ...

கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ!

Posted: 18 Mar 2016 09:24 PM PDT

மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்,கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். " தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் 'மர்ம'மான ...

அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!

Posted: 18 Mar 2016 09:17 PM PDT

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி... என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்... ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™