Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மதுவிலக்கு கொள்கை: அ.தி.மு.க.,வை உசுப்பேத்திய கருணாநிதியின் அறிக்கை

Posted: 18 Mar 2016 11:18 AM PDT

மதுவிலக்கு கொள்கை தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை, அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'ரகசியம் கசிந்து விட்டதா' என்ற பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அறிக்கையில் இடம் பெறும் அறிவிப்புகள் குறித்து, ரகசியம் காக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், ஓட்டலில் கூட்டம் நடத்தி, விவாதித்து முடிவெடுக்கின்றனர். அனேகமாக, வரும், 23ல், தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தி.மு.க., தலைவர் ...

ராகுல் பேசியும் மசியாத விஜயகாந்த்: தி.மு.க., கூட்டணியில் சேர தயக்கம்

Posted: 18 Mar 2016 11:26 AM PDT

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அரை மணி நேரம் பேசிய பிறகும், தி.மு.க., கூட்டணியில் சேர, விஜயகாந்த்தும், பிரேமலதாவும் சம்மதம் தெரிவிக்கவில்லை.சட்டசபை தேர்தலில், தன் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, பல கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி உருவாக்கும் முயற்சி நடக்கிறது. அதேநேரத்தில், தே.மு.தி.க.,வை இழுக்கும் முயற்சியை, தி.மு.க., கைவிடவில்லை. இதற்காக, தி.மு.க., - காங்., ஆதரவு தொழிலதிபர்கள் மூலமாக, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் பேச்சு நடத்தப்படுகிறது; உறவினர்கள் மூலமாகவும் முயற்சி நடக்கிறது. ...

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு அனுமதி அளித்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 18 Mar 2016 11:27 AM PDT

புதுடில்லி: அரசு விளம்பரங்களில், மத்திய அமைச்சர்கள், கவர்னர், முதல்வர், மாநில அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த அனுமதியளித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு விளம்பரங்களில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, என்.ஜி.ஓ., அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அரசு விளம்பரங்களில், ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். மத்திய அமைச்சர்கள், கவர்னர், முதல்வர், மாநில அமைச்சர்கள் படங்களை ...

அ.தி.மு.க., வில் பாம்பு கடி: தே.மு.தி.க., காமெடி

Posted: 18 Mar 2016 08:16 AM PDT

அ.தி.மு.க., - இதை உள்ளும், புறமும் அறிந்தவர்கள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை, 'இது அம்மாவால் நடத்தப்படும் சின்னம்மா கட்சி' என்பது தான். இதை அறிந்தவர்கள் மட்டுமே இங்கே தாக்கு பிடிக்க முடியும். அறியாதவர்கள், முனுசாமி வரிசையில் இடம் பிடிக்கலாம். யாரந்த முனுசாமி? வெட்டரிவாளும் கையுமாய், ஊர் எல்லையில், வெட்டவெளியில் நிற்பாரே, அந்த சாமி அல்ல!அரசு துறைகளில், அதிகமான ஐ.ஏ.எஸ்., ஆபீசர்களை கொண்டது உள்ளாட்சித் துறை; ஆட்சியாளர்களுக்கே உத்தரவிடக்கூடிய அதிகாரம் பெற்ற நீதிமன்றங்களை கையாளும் சட்டத்துறை என, சகல வல்லமை பெற்றவராக வலம் வந்த சாமி, இந்த சாமி. முழுப் பெயர் ...

யுவன், யுவதிகளை கவர அ.தி.மு.க., - தி.மு.க., புது யுக்தி

Posted: 18 Mar 2016 10:11 AM PDT

கோவை: தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 38 சதவீதம்; 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம்; புதிய வாக்காளர்கள், 12.6 சதவீதம் பேர். இதில், இளைய சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர, அனைத்து கட்சியினரும், புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதில் பிரசாரம் மேற்கொள்வதில், கட்சியினர் முனைப்பு காட்டுகின்றனர்.தமிழகத்தில் தினமும், 2.5 கோடி பேர், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக, தொலைத்தொடர்பு புள்ளி விவரங்கள் ...

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க.,வில் யோசனை

Posted: 18 Mar 2016 10:58 AM PDT

தி.மு.க., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறுத்து விட்டதால்,

சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. கட்சியின் இளைஞரணி செயலரும், பொருளாளருமான ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, மாவட்ட செயலர்களிடம் யோசனை கேட்க முன்வந்துள்ளது.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், 21ம் தேதி திங்கட்கிழமை, சென்னை, அறிவாலயத்தில்
நடக்கிறது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப் போவதாக மட்டும் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன முடிவு ...

வேலை இல்லை; சாப்பிட வழியும் இல்லை: குவைத்தில் தவிக்கும் 11 தமிழக மீனவர்கள்

Posted: 18 Mar 2016 11:04 AM PDT

மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டுக்குச் சென்ற, 11 தமிழக மீனவர்கள், வேலை இல்லாமலும், சாப்பாட்டுக்கு வழியின்றியும், 10 மாதங்களாக, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் இருந்து, 11 மீனவர்கள், 2015 மே மாதம், குவைத்திற்கு மீன்பிடி தொழில் செய்யச் சென்றனர். லாபத்தில் பாதி தருவதாகக் கூறியதால், அங்குள்ள முதலாளி ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தனர்; ஆனால், சொன்னபடி சம்பளம் தரவில்லை.

போலீசில் புகார்:
அதிருப்தி அடைந்த மீனவர்கள் விளக்கம் கேட்டபோது, அந்த நபர், 'தலா, 4.5 லட்சம் ரூபாய் ஏற்கனவே வாங்கி விட்டீர்கள்' என ...

திருட்டு மின்சாரத்திற்கு துணை போகும் வாரியம்: கட்சிகளுடன் பேச்சு நடத்த தயக்கம் ஏன்?

Posted: 18 Mar 2016 11:09 AM PDT

அரசியல் கட்சி கூட்டங்களுக்காக திருடப்படும் மின்சாரத்திற்கு, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், கோடை வெயில் துவங்கும் முன், தினசரி மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியம் திணறி வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், மின் தேவை அதிகம் உள்ள இரவில், பிரசாரக் கூட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு, மின் வாரியத்தின் மின் சாதனங்களில் இருந்து, முறைகேடாக மின்சாரம் எடுக்கப்படுகிறது.

அறிவுறுத்தல்:
இதையடுத்து, 'மின் திருட்டில் ஈடுபடும் ...

'பாரத் மாதா கி ஜே' கூற மறுத்த ஒவைசிக்கு எதிர்ப்பு விஸ்வரூபம்: ம.பி., சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Posted: 18 Mar 2016 11:18 AM PDT

மும்பை;'பாரத் மாதா கி ஜே' என கூறமாட்டேன் என அறிவித்த, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஒவைசி மீதும், அக்கட்சி எம்.எல்.ஏ., வாரிஸ் பதான் மீதும் நடவடிக்கை எடுக்கவும், கட்சியை தடை செய்யவும் கோரி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ம.பி., சட்டசபையில், ஒவைசிக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.''மக்களிடம் தேச பக்தியை வளர்க்க வேண்டும்; பள்ளி மாணவர்களிடம் தேசிய சிந்தனையை ஏற்படுத்த, 'பாரத் மாதா கி ஜே' வாசகத்தை கூற, எல்லாரையும் பழக்கப்படுத்த வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்.,தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.

'சஸ்பெண்ட்':
இதற்கு, அகில இந்திய ...

'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு

Posted: 18 Mar 2016 02:07 PM PDT

புதுடில்லி: 'பேஸ்புக்' சமூக வலைதளம், அதன், மென்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு, நான்கு கோடியே, 84 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு மற்றும், 'பாஸ்வேர்டு' பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளால், இணையதளங்கள் செயல்படாமல் பாதிக்கப்படுகின்றன. விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் மென்பொருள் தவறுகளால் பெரும் விபத்துகள் கூட ஏற்படுகின்றன.சமூக வலைதளமான பேஸ்புக் தன் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து, சுட்டிக் காட்டுபவர்களுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™