Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேவைதான் இந்தத் தடை!

Posted: 18 Mar 2016 01:19 PM PDT

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் அண்மையில் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு (எஃப்.டி.சி.) தடைவிதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு வழக்கம்போல மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தை நாடவிருப்பதாகக் கூறியுள்ளனர்.

வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்

Posted: 18 Mar 2016 01:19 PM PDT

பல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.

வாக்களித்தால் மட்டுமே...

Posted: 18 Mar 2016 01:16 PM PDT

அரசியல் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. அதனால், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார வியூகம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மானியத்துடன் கடனுதவி:மீனவப் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு உறுதி

Posted: 18 Mar 2016 12:53 PM PDT

ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய மீனவர்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் கடனுதவி வழங்க உறுதியளித்துள்ளதாக தேசிய மீனவர் பேரவைத் தலைவர் எம். இளங்கோ தெரிவித்தார்.

விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கத் தடை

Posted: 18 Mar 2016 12:53 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது சென்னை, திருப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

கொடுமலூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

Posted: 18 Mar 2016 12:52 PM PDT

முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கொடுமலூர் ஸ்ரீகுமரன் கோயிலுக்கு பக்தர்கள் சனிக்கிழமை அதிகாலை பாதயாத்திரையாக புறப்பட்டு செல்கின்றனர்.

மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது

Posted: 18 Mar 2016 12:52 PM PDT

மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) தொடங்க இருப்பதாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

"கலைகளை கற்றால் வெற்றி நிச்சயம்'

Posted: 18 Mar 2016 12:52 PM PDT

மாணவர்கள் கலைகளை கற்றுக் கொண்டால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று சின்னத்திரை நடிகர் திருமுருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தேச விரோத வழக்கு:ஜேஎன்யு மாணவர்கள் இருவருக்கு ஜாமீன்

Posted: 18 Mar 2016 12:51 PM PDT

தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தில்லி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்குளம் ஊராட்சியில் நவீன வசதிகளுடன் பயணிகள் நிழற்குடை

Posted: 18 Mar 2016 12:51 PM PDT

கமுதி அருகே உள்ள புதுக்குளம் ஊராட்சியில் மாவட்ட கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காஷ்மீரில் நிபந்தனைகளுடன் அரசு அமைக்க முடியாது: பாஜக

Posted: 18 Mar 2016 12:51 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிபந்தனைகளுடன் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது இறந்ததையடுத்து, அங்கு பாஜகவும்-மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதில், கடந்த இரண்டு மாதங்களாக

உலக ஹாக்கிப் போட்டிகளை ராமநாதபுரத்தில் நடத்த ஏற்பாடு: சங்க நிர்வாகிகள் தகவல்

Posted: 18 Mar 2016 12:51 PM PDT

ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைப் புல்வெளி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் விரைவில், உலக அளவிலான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக ஹாக்கி விளையாட்டு சங்க நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

மெளலிவாக்கம் 2ஆவது கட்டடம் இடிப்பு விவகாரம்: ஆய்வுக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

Posted: 18 Mar 2016 12:51 PM PDT

சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்து நடந்த இடத்துக்கு அருகே அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இடஒதுக்கீடு விவகாரம்:ஹரியாணா அரசுக்கு ஜாட் தலைவர்கள் புதிய கெடு

Posted: 18 Mar 2016 12:50 PM PDT

ஜாட் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற ஹரியாணா மாநில அரசுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அந்த சமூகத் தலைவர்கள் கெடு விதித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தலை புறக்கணிக்க கிராமத்தினர் முடிவு

Posted: 18 Mar 2016 12:50 PM PDT

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை கிராமத்தில், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பிளஸ் 2: "கணிதப் புலிகள்' குறைய வாய்ப்பு

Posted: 18 Mar 2016 12:50 PM PDT

பிளஸ் 2 கணிதத் தேர்வில் சில வினாக்கள் கடினமாக இருந்துள்ளது. இதனால், 200-க்கு 200 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பரமக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 18 Mar 2016 12:49 PM PDT

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்புவனத்தில் மார்ச் 24இல் கடையடைப்பு போராட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

Posted: 18 Mar 2016 12:49 PM PDT

திருப்புவனம் காவல் சார்பு-ஆய்வாளரை இட மாற்றம் செய்ய வலியுறுத்தி மார்ச் 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

Posted: 18 Mar 2016 12:48 PM PDT

மானாமதுரையில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2ஆவது திருமணம் செய்ய முயன்றவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Posted: 18 Mar 2016 12:48 PM PDT

பரமக்குடியில் மனைவிக்கு தெரியாமல் 2ஆவது திருமணம் செய்ய முயன்ற கணவர் உள்பட 5 பேர் மீது அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

மானாமதுரை, திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 18 Mar 2016 12:48 PM PDT

மானாமதுரையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேருக்கு மார்ச் 24 வரை சிறைக் காவல் நீட்டிப்பு

Posted: 18 Mar 2016 12:47 PM PDT

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேருக்கு மார்ச் 24 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பாம்பன் பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை

Posted: 18 Mar 2016 12:46 PM PDT

பாம்பன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சேதமடைந்த காவிரி குடிநீர் திட்ட இணைப்பு குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

Posted: 18 Mar 2016 12:46 PM PDT

தேர்தல் விதிமீறல்: அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு

Posted: 18 Mar 2016 12:46 PM PDT

சிங்கம்புணரி அருகே தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

நாச்சியாபுரம் தனியார் மில்லில் மோசடி: நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு

Posted: 18 Mar 2016 12:45 PM PDT

நாச்சியாபுரம் தனியார் நூற்பாலையில் மோசடி நடந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அதன் இயக்குநர் உள்பட இருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் காவல் சார்பு-ஆய்வாளருடன் தகராறு செய்தவர் மீது வழக்கு

Posted: 18 Mar 2016 12:44 PM PDT

ராமநாதபுரம் சோதனைச் சாவடியில், வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளருடன் தகராறு செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரகண்ட்: குதிரையைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ கைது

Posted: 18 Mar 2016 12:44 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், அண்மையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸாருடன் இருந்த குதிரையைத் தாக்கிய வழக்கில், அக்கட்சியின் எம்எல்ஏ கணேஷ் ஜோஷியை போலீஸார்

பங்குனித் திருவிழா தொடக்கம்

Posted: 18 Mar 2016 12:44 PM PDT

மானாமதுரை தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

சாலைக்கிராமம் பகுதியில் மார்ச் 19 மின்தடை

Posted: 18 Mar 2016 12:43 PM PDT

இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மார்ச் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாபவன் மணியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்:உடலில் நச்சு கலந்திருப்பது சோதனையில் உறுதி

Posted: 18 Mar 2016 12:43 PM PDT

மறைந்த நடிகர் கலாபவன் மணியின் உடல் உள்ளுறுப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ஆய்வகச் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு இன்று கூடுகிறது

Posted: 18 Mar 2016 12:43 PM PDT

தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை (மார்ச் 19) தொடங்கி 2 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லை ஒட்டும் பணி: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

Posted: 18 Mar 2016 12:42 PM PDT

சிவகங்கையில் அரண்மனை வாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி பணியை ஆட்சியர் சு.மலர்விழி தொடக்கி வைத்தார்.

ஆந்திர சட்டப்பேரவைக்குள் செல்ல ரோஜாவுக்கு அனுமதி மறுப்பு:ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்னா

Posted: 18 Mar 2016 12:41 PM PDT

ஆந்திர சட்டப்பேரவைக்குள் செல்ல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜாவுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் பதினெட்டாம்படி ஸ்ரீகருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 18 Mar 2016 12:41 PM PDT

ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தான் விசாரணைக் குழு வருகை தொடர்பாக செயல்திட்டம்

Posted: 18 Mar 2016 12:41 PM PDT

பாகிஸ்தான் கூட்டு விசாரணைக் குழு வருகை தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

1 கோடி பேருக்கு வழங்கப்பட்டது பி.எஃப். தொகை

Posted: 18 Mar 2016 12:40 PM PDT

நிகழ் நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரை சுமார் 1.4 கோடி பேருக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்துள்ளார்.

சட்லஜ்-யமுனை நதி கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்பு:பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 18 Mar 2016 12:40 PM PDT

சட்லஜ்-யமுனை நதிகளை இணைக்கும் கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டந்தோறும் எய்ட்ஸ் சிகிச்சை மையங்கள்:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 18 Mar 2016 12:40 PM PDT

மாவட்டந்தோறும் எய்ட்ஸ் சிகிச்சை மையங்கள் அமைக்கக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல, ஒழுக்கக்கேடானது:ஆர்.எஸ்.எஸ். கருத்து

Posted: 18 Mar 2016 12:39 PM PDT

""ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அதுவொரு சமூக ஒழுக்கக்கேடான செயல்'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

Posted: 18 Mar 2016 12:39 PM PDT

காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்து தூங்கி மூதாட்டியிடம் இரண்டு பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை ஆவடி தீன்ஊர்தி போலீஸார் தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து 15 பவுன் நகைகள் திருட்டு

Posted: 18 Mar 2016 12:39 PM PDT

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இங்கிலாந்து

Posted: 18 Mar 2016 12:38 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Posted: 18 Mar 2016 12:38 PM PDT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வியாழக்கிழமை இறந்து கிடந்தார்.

வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

Posted: 18 Mar 2016 12:37 PM PDT

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 10 பிரிவில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

கடன் தொல்லை: இளைஞர் தற்கொலை

Posted: 18 Mar 2016 12:36 PM PDT

காஞ்சிபுரம் அருகே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து இளைஞர் ஒருவர் இறந்தார்.

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்:அரையிறுதியில் ரயோனிச், கோஃபின்

Posted: 18 Mar 2016 12:36 PM PDT

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 18 Mar 2016 12:36 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த கினார் கிராமத்தில் வயல்வெளிக் கிணற்று மோட்டாரைப் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

சுவிஸ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து, பிரணாய்

Posted: 18 Mar 2016 12:35 PM PDT

சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, பிரணாய் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அதிகபாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு அபராதம்

Posted: 18 Mar 2016 12:35 PM PDT

செங்கல்பட்டு அருகே பரனூர் டோல்பூத்தில் அதிகபாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பேருந்து மோதி விபத்து: காரில் பயணம் செய்த இருவர் சாவு

Posted: 18 Mar 2016 12:35 PM PDT

செங்கல்பட்டு புறவழிச் சாலையில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

Posted: 18 Mar 2016 12:35 PM PDT

டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

மகளிர் உலகக்கோப்பை :நியூஸிலாந்து வெற்றி

Posted: 18 Mar 2016 12:34 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது

Posted: 18 Mar 2016 12:34 PM PDT

சோழவரம் அருகே குடியிருப்புப் பகுதியில் நடமாடிய மண்ணுளிப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள்  ஒப்படைத்தனர்.

இந்தியா-பாக். இன்று மோதல்

Posted: 18 Mar 2016 12:34 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

பிளஸ் 2 கணிதத் தேர்வில் காப்பி: 6 மாணவர்கள் வெளியேற்றம்

Posted: 18 Mar 2016 12:34 PM PDT

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ்2 கணிதத் தேர்வில் காப்பியடித்ததாக 6 மாணவர்கள் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆஸ்திரேலியா வெற்றி

Posted: 18 Mar 2016 12:34 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 103 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி.

கேண்டிடேட்ஸ் செஸ்:6ஆவது சுற்றில் ஆனந்த் வெற்றி

Posted: 18 Mar 2016 12:33 PM PDT

ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஆணவக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 18 Mar 2016 12:33 PM PDT

உடுமலைப்பேட்டையில் கலப்புத் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 27 கடைகளுக்கு பூட்டு

Posted: 18 Mar 2016 12:33 PM PDT

பூந்தமல்லி பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த ஒரு வருடகாலமாக வாடகை செலுத்தாத 27 கடைகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி "சீல்' வைத்தனர்.

மண்டல தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம்

Posted: 18 Mar 2016 12:32 PM PDT

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதர்பாக்கத்தில் மகளிர் தின விழா

Posted: 18 Mar 2016 12:32 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள மகளிர் குழு கூட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் பங்கேற்பு

Posted: 18 Mar 2016 12:29 PM PDT

பள்ளிப்பட்டை அடுத்த கொல்லாலங்குப்பம் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர்  எ.சுந்தரவல்லி தொடக்கி வைத்தார்.

ஐ.நா. தடை மீறல் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Posted: 18 Mar 2016 12:27 PM PDT

ஏவுகணைப் பரிசோதனை மேற்கொள்வதற்கு ஐ.நா. விதித்துள்ள தடையையும் மீறி வட கொரியா நடுத்தரத் தொலைவு ஏவுகணைகளை வெள்ளிக்கிழமை பரிசோதித்ததாக அமெரிக்க, தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றக் குழு அமைப்பு

Posted: 18 Mar 2016 12:26 PM PDT

பிரேசில் அதிபர் டில்மா ரூஸஃபை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அந்நாட்டின் நாடாளுமன்றம் பரிசீலனைக் குழுவொன்றை அமைத்துள்ளது.

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட 817 அதிகாரிகளுக்கு தண்டனை

Posted: 18 Mar 2016 12:25 PM PDT

கடந்த ஆண்டில் ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி ஆண்டு விழா

Posted: 18 Mar 2016 12:24 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த பையம்பாடி ஸ்ரீ சந்தோஷி கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

Posted: 18 Mar 2016 12:24 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா தொழில்நுட்பக் கல்லூரியில், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

மக்கள் நலக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 18 Mar 2016 12:24 PM PDT

மக்கள் நலக் கூட்டணி சார்பாக ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றியச் செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாட்டாளி முன்னேற்றக் கட்சிக் கூட்டம்

Posted: 18 Mar 2016 12:23 PM PDT

கடந்த மார்ச் 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சூப்பர் சிங்கர் 5 முதல் இடம் பிடித்தார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்.

Posted: 18 Mar 2016 12:23 PM PDT

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று,  சூப்பர் சிங்கர் இந்நிகழ்ச்சி திருச்சி,கோவை மற்றும்  சென்னையில் ஆடிசன் நடத்தி முடிக்கப்பட்டு இறுதிச்சுற்று சென்னையில் இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம்

Posted: 18 Mar 2016 12:23 PM PDT

அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணம் வசூலிப்பதாக புகார்

Posted: 18 Mar 2016 12:22 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, விசாரணை நடத்துமாறு நலப்பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

வீரபாண்டி சித்திரை திருவிழா: கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்

Posted: 18 Mar 2016 12:22 PM PDT

சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பால், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராட்டினங்கள், தாற்காலிகக் கடைகள், வாகன கட்டணம் வசூல் உள்ளிட்டவைகளுக்கு ஏலம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உரம், கழிவு நீர் கலப்பால் மாசுபடும் வைகை அணை நீர்

Posted: 18 Mar 2016 12:22 PM PDT

தேனி மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ரசாயன உரங்களால் வைகை அணை தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதனால் மீன் இனம் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தேர்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 18 Mar 2016 12:21 PM PDT

தேர்தல் நேரத்தில் சட்டத்துக்கு விரோதமாக இருமாநில எல்லைப்பகுதி வழியாக பணம், மது, எரிசாராயம், கஞ்சா கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலையைக் கடக்க முயன்றவர் வேன் மோதி சாவு

Posted: 18 Mar 2016 12:20 PM PDT

விருவீடு அருகேயுள்ள நடக்கோட்டையை சேர்ந்தவர் குருசாமி(55). இவர் வத்தலகுண்டு-உசிலம்பட்டி சாலையில் மீனாட்சிபுரத்தில்  சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குருசாமி உயிர் இழந்தார்.

வாக்களித்த சின்னத்தை "விவிபாட்' கருவியில் 7 விநாடிகள் பார்க்கலாம்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்த சின்னத்தை, விவிபாட்  கருவியில் உள்ள திரையில் 7 விநாடிகள் வரை பார்க்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தந.ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விதை உளுந்து வழங்கக்கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

பழனி பகுதியில் விதை உளுந்து வழங்கக்கோரி ஏராளமான விவசாயிகள்  வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பூச்சி மருந்துடன் வந்தவரிடம் விசாரணை

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்துடன் புகார் மனு அளிக்க வந்திருந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

100 சதவீத வாக்குப் பதிவுக்காக தொடர் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்த  மாற்றுக்கட்சியினர்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

பழனியை அடுத்த கொத்தயத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுக்கட்சியினர் தங்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கலாம்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

தேனி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அடையாள அட்டையை 2016-17-ஆம் ஆண்டிற்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தொடர் தீ விபத்து

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

கொடைக்கானல் வனப் பகுதியில் தொடரும் தீ விபத்தினால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காணப்படுகிறது.

ராணுவ வீரரிடம் வழிப்பறி

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

ஆண்டிபட்டி அருகே ராணுவவீரரிடம் வழிப்பறி செய்ததாக வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர்களை கண்டமனூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பெண் தற்கொலை முயற்சி: 4 பேர் கைது

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

கம்பத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த  போலீஸார் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

உடுமலை இளைஞர் கொலை வழக்கில்  கல்லூரி மாணவர் சரண்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

உடுமலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் சகோதரர் முறையிலான கல்லூரி மாணவர் ஒருவர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

பூசாரி தற்கொலை வழக்கு விசாரணை: அரசுத் தரப்பு சாட்சி பிறழ் சாட்சியம்

Posted: 18 Mar 2016 12:19 PM PDT

கோயில் பூசாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பு சாட்சி வெள்ளிக்கிழமை விசாரணையின்போது பிறழ் சாட்சியம் அளித்தார்.

லாரி கடத்தலில் காணாமல் போன 25 ஓட்டுநர்கள்: பிடிபட்ட ஹரியாணா இளைஞர் மூலம் துப்பு துலங்குமா?

Posted: 18 Mar 2016 12:18 PM PDT

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட லாரிகளின் 25 ஓட்டுநர்கள் காணாமல் போனது குறித்து, தற்போது போலீஸாரால் பிடிக்கப்பட்ட ஹரியாணா இளைஞர் மூலம் துப்பு துலங்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறைந்த அழுத்த மின்சாரம்: மாணவ, மாணவிகள் அவதி

Posted: 18 Mar 2016 12:18 PM PDT

ஆண்டிபட்டி அருகே அம்மாபட்டியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் பிரச்னை: அமைதிக் கூட்டம் நடத்த உத்தரவு

Posted: 18 Mar 2016 12:18 PM PDT

தேனி அருகே கோடாங்கிபட்டி, திருச்செந்தூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதிக் கூட்டம் நடத்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார்.

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் இலவச மிதிவண்டி வழங்கப்படுவதாக புகார்: பறக்கும் படை சோதனை

Posted: 18 Mar 2016 12:17 PM PDT

தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

கடமலைக்குண்டில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

Posted: 18 Mar 2016 12:17 PM PDT

கடமலைக்குண்டு பகுதியில் தென்னை, வாழை, கத்திரி மற்றும் பல்வேறு வகையான தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது அறுவடை செய்யும் நிலையில் குரங்குகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதனால் மகசூல் பாதிப்படைந்து, விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து, மலைப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடமலைக்குண்டு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted: 18 Mar 2016 12:17 PM PDT

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

பழனி

Posted: 18 Mar 2016 12:17 PM PDT

மக்கள் நலக் கூட்டணி பிரியாது: முத்தரசன்

Posted: 18 Mar 2016 12:16 PM PDT

மக்கள்நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

பட்டாசு ஆலை தீ விபத்து: சாவு 3 ஆக உயர்வு

Posted: 18 Mar 2016 12:16 PM PDT

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட  தீ விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி சண்முகத்தாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

பலகாரத்தில் பல்லி: கடைக்கு "சீல்'

Posted: 18 Mar 2016 12:16 PM PDT

விருதுநகரில் உள்ள தேநீர் கடையில் பல்லி கிடந்த பலகாரத்தை சாப்பிட்ட நகராட்சி ஊழியருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது புகாரின்படி அந்தகடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம்

Posted: 18 Mar 2016 12:16 PM PDT

ராஜபாளையம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆய்வாளர் பிரபாகரன் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™