Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தகுதியான ஆளின்றி தவிக்கும் தி.மு.க.,

Posted: 16 Mar 2016 08:16 AM PDT

தமிழகத்தில், ஆறு முறை ஆட்சி கட்டிலை பிடித்த கட்சி என்ற பெருமையை பெற்ற, தி.மு.க., இன்று, கூட்டணி பேசக்கூட, தகுதியான ஆட்கள் இன்றி திணறிக் கொண்டிருக்கிறது.

திராவிட கழகத் தலைவர், ஈ.வெ.ரா. வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணா துரை மற்றும் சில தலைவர்கள் பிரிந்து, 1949 செப்., 17ம் தேதி, தி.மு.க.,வை துவக்கினர். கட்சி துவக்கப்பட்ட பின், 1952ல் நடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., பங்கேற்கவில்லை.
இணைந்து போட்டி:
அடுத்து, 1956 மே, 17ம் தேதி முதல், 20ம் தேதி வரை, திருச்சியில் நடந்த, தி.மு.க., இரண்டாவது மாநில மாநாட்டில், தேர்தலில் பங்கேற்க முடிவு ...

தலைமைக்கு பறக்கும் புகார்களால் அ.தி.மு.க.,வினர் திணறல்!

Posted: 16 Mar 2016 11:12 AM PDT

ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் முதல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வரை செய்த முறைகேடுகள், அத்துமீறல்கள் தொடர்பாக தலைமைக்கு பறக்கும் புகார்களை பார்த்து ஒட்டுமொத்த அ.தி.மு.க., வட்டாரமும் திணற துவங்கி உள்ளது. புகார்களுக்கு ஆளானவர்களால்தேர்தல் நெருக்கத்தில் பெரும் குழப்பம் உருவாகி உள்ளதாகவும் கருதப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றதும் அதைத் தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்ததும் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் முக்கியமான கட்டங்கள். இந்த காலகட்டத்தில் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தவும் தனக்கு உதவவும் ஐவரணியை ...

'மட்டம்' போடும் ஆசிரியர்களால் அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு

Posted: 16 Mar 2016 11:14 AM PDT

புதுடில்லி: கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், 'மட்டம்' போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை, ஜெர்மனியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டு வருகிறது. கல்வித் துறையில் உள்ள ஊழல்கள் குறித்த, 448 பக்கங்கள் அடங்கிய, மிக விரிவான அறிக்கையை, ...

காங்., ஆட்சியை குறை கூறிய சோனியா

Posted: 16 Mar 2016 11:15 AM PDT

புதுடில்லி: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசைக் குறை கூறும் வேகத்தில், தவறுதலாக, ஐ.மு., கூட்டணி அரசு என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியது, கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது.டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில், ஆந்திராவில் இருந்து வந்திருந்த காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து பேசிய கட்சி தலைவர் சோனியா, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை குறை கூறுவதற்கு பதிலாக, காங்., தலைமையிலான முந்தைய ஐ.மு., கூட்டணி அரசை குறைகூறினார். அவர் பேசுகையில், ''இரு ஆண்டுகள் முடிந்து விட்டன. எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை; ஐ.மு., கூட்டணி அரசு, எந்த ...

ஜெ.,க்கு 66 கோடி ரூபாய் சொத்து குவிந்தது எப்படி? கர்நாடக அரசு வழக்கறிஞர் கேள்வி

Posted: 16 Mar 2016 11:16 AM PDT

புதுடில்லி: ''தமிழக முதல்வராக, 1991 - 96ல் பதவி வகித்த போது, மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, எப்படி, 66 கோடி ரூபாய் சொத்துகளை குவித்தார்,'' என, கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, கேள்வி எழுப்பினார்.சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடக ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும் தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள், நீதிபதி பினாகி சந்திரபோஸ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, ஜெயலலிதா உட்பட நான்கு ...

அடுத்த தேர்தல் வந்தும் முடிவுக்கு வராத வழக்குகள்: நடைமுறைக்கு வராத உச்ச நீதிமன்ற தீர்ப்பு

Posted: 16 Mar 2016 11:18 AM PDT

அடுத்த சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும், முந்தைய தேர்தல் தொடர்பான வழக்குகள் சிலவற்றுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்துார் தேர்தல் வழக்கு, விசாரணை கட்டத்திலேயே உள்ளது.சட்டசபைக்கோ, லோக்சபாவுக்கோ தேர்தல் நடந்து முடிந்து விட்டால், வெற்றி பெற்றவர்களை எதிர்த்து, தோல்வியடைந்தவர்கள் வழக்கு தொடுப்பது நடக்கும்.தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட, 45 நாட்களுக்குள், தேர்தல் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்; இது தான் விதி. ஆனால், வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் ...

பணம் பறிமுதல்: தமிழகம் முதலிடம்

Posted: 16 Mar 2016 11:18 AM PDT

சட்டசபை தேர்தல் நடைபெறும், ஐந்து மாநிலங்களில், பணம் பறிமுதலில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், ஏப்ரல் மற்றும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, தொகுதிக்கு, மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல், எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.அந்த வகையில், அதிகபட்சமாக தமிழகத்தில், 7.44 கோடி ரூபாய் பறிமுதல் ...

அதிக விலை மின்சாரத்தால் ரூ.1 லட்சம் கோடி கடன்: கருணாநிதி

Posted: 16 Mar 2016 11:20 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:மின் வாரியம், மின் கொள்முதல் செய்ய முடிவு செய்தவுடன், 'டெண்டர்' கோரவும், விலை நிர்ணயம் செய்யவும், ஒழுங்குமுறை ஆணையத்திடம், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக, 2011 முதல், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்படுகிறது. 2012ல், தனியார் நிறுவனங்களிடம், குறுகிய காலத்திற்கு, 1,200 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அப்போது, மத்திய மின் நிலையங்களில், 1 யூனிட் மின் உற்பத்தி செலவு, மூன்று ரூபாய்க்கு கீழே இருந்தது. தனியார் ...

கவுரவ கொலைகள்: மூடி மறைக்கிறதா போலீஸ்?

Posted: 16 Mar 2016 11:21 AM PDT

தமிழகத்தில் நிகழ்த்தப்படும் கவுரவ கொலைகளை, போலீசார் மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்த சங்கர் என்ற வாலிபர், இம்மாதம், 13 பிற்பகலில், கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கவுரவ கொலை, தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. இதனால், திருப்பூர், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது; கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், அவர்களை சிறையிலோ அல்லது நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போதோ, 'போட்டுத்தள்ள' ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டி வருவதாக ...

விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை

Posted: 16 Mar 2016 12:24 PM PDT

புதுடில்லி:'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.'வெளிநாடுகளுக்குச் செல்லும், சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகள், இந்தியாவுக்கு வரும் போது, தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களை, சுங்கத் துறையின் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்' என்ற நடைமுறை, 2015 முதல் அமல்படுத்தப்பட்டது.சர்வதேச விமானங்களில், உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் பயணிகளும், இந்த ...

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி வாய்ப்பை இழந்த ஸ்ரீனிவாசன்

Posted: 16 Mar 2016 02:14 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், 49, நியமிக்கப்படுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த பெடரல் முறையீட்டு கோர்ட் நீதிபதியான மெரிக் கார்லண்ட், 63, நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.மொத்தம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்காலியா, கடந்த மாதம் உயிரிழந்தார். அவருக்குப் பதிலாக, புதிய நீதிபதிக்கான பட்டியலில் ஸ்ரீனிவாசன் மற்றும் மெரிக் கார்லண்ட் ஆகியோரின் பெயர் இறுதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™