Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வாணியம்பாடியில் பலத்த கோடை மழை:பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 16 Mar 2016 01:32 PM PDT

வாணியம்பாடியில் புதன்கிழமை பகலில் சுட்டெரித்த வெயிலால் கடும் வெப்பம் நிலவியது. மாலையில் கருமேகங்கள் திரண்டு திடீரென பெய்த பலத்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வெற்றி

Posted: 16 Mar 2016 01:32 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

செங்கத்தில் சூரிய ஒளியில் பொன் நிறத்தில் ஜொலித்த நந்தி

Posted: 16 Mar 2016 01:31 PM PDT

செங்கத்திலுள்ள ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை கோயில் ராஜகோபுரத்தில் பட்டு எதிரொலித்த சூரிய ஒளியில் பொன் நிறத்துடன் அங்குள்ள நந்தி ஜொலித்தது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் முன் திரண்டனர்.

பங்குனி பிரம்மோற்சவ 4-ஆம் நாள்சேஷ வாகனத்தில் ஏகாம்பரநாதர் பவனி

Posted: 16 Mar 2016 01:30 PM PDT

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான புதன்கிழமை உற்சவமூர்த்திகள் சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 39 லட்சம்

Posted: 16 Mar 2016 01:29 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 19 நாளில் ரூ. 39 லட்சம் ரொக்கம், 60 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தினர்.

பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Posted: 16 Mar 2016 01:29 PM PDT

அரக்கோணத்தில் புதை சாக்கடை திட்டப் பணிகளின் போது, மின் கம்பத்தின் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் சாதனங்கள் செயலிழந்தன. இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் இழப்பீடு கோரி போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூரில் திமுக போட்டியிடும்:துரைமுருகன்

Posted: 16 Mar 2016 01:29 PM PDT

திருப்பத்தூரில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

6 நகரங்களில் 100 டிகிரி வெயில்: சேலத்தில் 102 டிகிரி

Posted: 16 Mar 2016 01:28 PM PDT

தமிழகத்தில் திருப்பத்தூர், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, மதுரை உள்ளிட்ட 6 நகரங்களில் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில்

வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு

Posted: 16 Mar 2016 01:28 PM PDT

அரக்கோணத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து வெள்ளி, ரொக்கம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை திருடிய மர்ம நபர்கள், அந்த ஏடிஎம் அட்டையின் மூலம் ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை திருடியுள்ளனர்.

தங்க நகைக்கு உற்பத்தி வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்

Posted: 16 Mar 2016 01:28 PM PDT

தங்க, வைர நகைகளுக்கு ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 28.20 லட்சம் பறிமுதல்

Posted: 16 Mar 2016 01:28 PM PDT

பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 28.20 லட்சம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படை குழுவினரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தரமான கான்கிரீட் தயாரிப்பு குறித்த கருத்தரங்கம்

Posted: 16 Mar 2016 01:27 PM PDT

தரமான கான்கிரீட் தயாரிப்பது தொடர்பாக கட்டடக் கலைஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் பறக்கும் படையினர் சோதனை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள சேலைகள் பறிமுதல்

Posted: 16 Mar 2016 01:27 PM PDT

அரக்கோணம் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை நடத்திய சோதனையில் உரிய ரசீது இல்லாத ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 16 Mar 2016 01:27 PM PDT

வேலூரில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தியதாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

பல சுவைகளில் ஆவின் குச்சி ஐஸ் அறிமுகம்

Posted: 16 Mar 2016 01:27 PM PDT

கோடை வெயிலில் குழந்தைகளைக் குளிர்விக்கும் விதமாக, ஆவினில் பல்வேறு சுவைகளில் "குச்சி ஐஸ்' வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

தொழிற்சங்க அங்கீகாரம்தொழிலாளர்களிடம் நேரடி விசாரணை

Posted: 16 Mar 2016 01:26 PM PDT

அரக்கோணம் எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் தொழிற்சங்க அங்கீகாரம் பெறுவதற்கான தொழிற்சங்க உறுப்பினர் குறித்த நேரடி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

தடகளத்தில் சாதிக்கும் வேலூர் மாற்றுத்திறனாளி வீரர்:அரசு வேலை கனவு நிறைவேறுமா?

Posted: 16 Mar 2016 01:26 PM PDT

துபையில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் வேலூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று: ஏப்ரல் 1-முதல் அமல்

Posted: 16 Mar 2016 01:25 PM PDT

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து

சாலை விபத்தில் தாய், அண்ணன் சாவு: சோகத்திலும் தேர்வெழுதிய மாணவர்

Posted: 16 Mar 2016 01:25 PM PDT

வாணியம்பாடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், அண்ணன் இருவரும் இறந்தனர். அந்தத் துயரத்தோடு மாணவர் ஒருவர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினார்.

விபத்தில் பள்ளி மாணவர் சாவு

Posted: 16 Mar 2016 01:25 PM PDT

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் இறந்தார். மாணவரின் தந்தை பலத்த காயம் அடைந்தார்.

பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பள்ளிக் கல்வித் துறை மறுப்பு

Posted: 16 Mar 2016 01:25 PM PDT

பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

Posted: 16 Mar 2016 01:24 PM PDT

அணைக்கட்டு அருகே வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் ஏதுமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலைவாய்ப்பு முகாம்

Posted: 16 Mar 2016 01:24 PM PDT

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை, பாடியிலுள்ள டி.வி.எஸ். சுந்தரம் கிளைடான் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

மூதாட்டியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

Posted: 16 Mar 2016 01:24 PM PDT

பாணாவரம் அருகே மூதாட்டியை தாக்கிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைவு

Posted: 16 Mar 2016 01:24 PM PDT

ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் ரூ.21,888-க்கு விற்பனையானது.

வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வுப் பேரணி

Posted: 16 Mar 2016 01:24 PM PDT

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு

Posted: 16 Mar 2016 01:23 PM PDT

தேசத் துரோக சட்டத்தை சட்ட ஆணையம் மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

விவிஐபி வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்:நடவடிக்கை கோரும் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted: 16 Mar 2016 01:23 PM PDT

தில்லியில் விவிஐபி வாகனங்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தில்லியில்கேட்பாரற்றுக் கிடந்த 962 சடலங்கள் மீட்பு

Posted: 16 Mar 2016 01:22 PM PDT

தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 962 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பங்குனி பிரம்மோற்சவ 4-ஆம் நாள்: சேஷ வாகனத்தில் ஏகாம்பரநாதர் பவனி

Posted: 16 Mar 2016 01:22 PM PDT

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான புதன்கிழமை உற்சவமூர்த்திகள் சேஷ வாகனத்தில்

தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது:மத்திய அரசு தகவல்

Posted: 16 Mar 2016 01:22 PM PDT

தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி முதல்வரை மிரட்டவில்லை:தில்லி அமைச்சர் விளக்கம்

Posted: 16 Mar 2016 01:22 PM PDT

தில்லியில் பள்ளிக் கட்டடத்தின் பெயர்ப் பலகையில் தனது மனைவியின் பெயரைப் பொறிக்குமாறு பள்ளியின் பெண் முதல்வரை தாம் மிரட்டவில்லை என்று அந்த மாநில அமைச்சர் சந்தீப் குமார் புதன்கிழமை கூறினார்.

ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் 15ஆம் ஆண்டு விழா; ராதாகல்யாண மஹோத்ஸவம்:ஏப்ரல் 2, 3-இல் நடைபெறுகிறது

Posted: 16 Mar 2016 01:21 PM PDT

தில்லி ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் 15ஆம் ஆண்டு விழா, ராதா கல்யாண மஹோத்ஸவம் ஏப்ரல் 2, 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

ஸ்ரீ ராஜாராம் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம்: மார்ச் 23-இல் தொடக்கம்

Posted: 16 Mar 2016 01:21 PM PDT

அகில பாரத ஸாது சமாஜம் சார்பில் தசரதபுரியில் உள்ள ஸ்ரீ ராஜாராம் கோயிலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் மார்ச் 23 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அங்காள பரமேஸ்வரி கோயில் தேர்த் திருவிழா

Posted: 16 Mar 2016 01:21 PM PDT

உத்தரமேரூர் வட்டம், அனுமந்தண்டலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்த் திருவிழா

மலை மந்திரில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Posted: 16 Mar 2016 01:21 PM PDT

தில்லி உத்தர சுவாமிமலை (மலை மந்திர்) ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சாலை விபத்து நிவாரணம் விவகாரம்:தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி மீண்டும் உத்தரவு

Posted: 16 Mar 2016 01:20 PM PDT

சாலை விபத்தில் உயிரிழந்தவர் தொடர்புடைய வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை

மந்திராலயம் ராகவேந்திர சுவாமிக்கு தேவஸ்தான பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

Posted: 16 Mar 2016 01:19 PM PDT

மந்திராலயம் ராகவேந்திர சுவாமிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.

பத்மாவதி தாயாருக்கு நவரத்தினங்கள் பதித்த தங்க டாலர் சங்கிலி நன்கொடை

Posted: 16 Mar 2016 01:16 PM PDT

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நவரத்தினங்கள் பதித்த தங்க டாலர் சங்கிலி நன்கொடையாக வழங்கப்பட்டது.

உதகை அருகே விஷம் வைத்துப் புலி கொலை?

Posted: 16 Mar 2016 01:13 PM PDT

உதகை அருகே பேமந்து பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என

"சிறந்த நெசவாளர் விருது' பெற்ற காஞ்சிபுரம் தொழிலாளி

Posted: 16 Mar 2016 01:12 PM PDT

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார்.

இந்திய பனோரமா திரைப்பட விழா: பெங்களூரில் இன்று தொடக்கம்

Posted: 16 Mar 2016 01:12 PM PDT

மத்திய செய்தி - ஒளிபரப்புத் துறையின் திரைப்படப் பிரிவு, கர்நாடக செய்தி - மக்கள் தொடர்புத் துறை, கர்நாடக திரைப்பட அகாதெமி

பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

Posted: 16 Mar 2016 01:09 PM PDT

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

செங்கத்தில் சூரிய ஒளியில் பொன் நிறத்தில் ஜொலித்த நந்தி

Posted: 16 Mar 2016 01:08 PM PDT

செங்கத்திலுள்ள ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை கோயில் ராஜகோபுரத்தில் பட்டு எதிரொலித்த சூரிய ஒளியில்

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 39 லட்சம்

Posted: 16 Mar 2016 01:07 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 19 நாளில் ரூ. 39 லட்சம் ரொக்கம், 60 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளியை

திருமலை கோயிலில் நடிகை பானுப்பிரியா வழிபாடு

Posted: 16 Mar 2016 01:07 PM PDT

திரைப்பட நடிகை பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில்

தாம்பரம் கல்குவாரிக்குள் பாறைகள் சரிவு

Posted: 16 Mar 2016 01:03 PM PDT

தாம்பரத்தை அடுத்த எருமையூரில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிக்குள் நள்ளிரவில் பாறைகள் சரிந்து விழுந்தன.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.18 கோடி

Posted: 16 Mar 2016 01:01 PM PDT

திருமலையில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தபின் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Mar 2016 12:52 PM PDT

விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.18 லட்சம் வரை நஷ்டஈடு வழங்காமல் இருந்ததால் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்யுமாறு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்ததையடுத்து பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 16 Mar 2016 12:51 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பும்,கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து  வேதானூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை புதன்கிழமை நடத்தின.

பொதுத்தேர்வில் முறைகேடு: பரமக்குடி தனியார் பள்ளிகளின் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

Posted: 16 Mar 2016 12:50 PM PDT

பரமக்குடி தனியார் பள்ளிகளில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரையடுத்து அங்கு பணியாற்றிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு புதன்கிழமை உத்தரவிட்டார்.

பள்ளி ஆண்டு விழா

Posted: 16 Mar 2016 12:49 PM PDT

கடலாடி அரசு நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்ப்பு: ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

Posted: 16 Mar 2016 12:49 PM PDT

ராமேசுவரத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பல்வேறு போராட்டங்களை நடத்த நாட்டுப் படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாற்றம் தேடும் நம் கல்விமுறை

Posted: 16 Mar 2016 12:49 PM PDT

மனிதனை சிறந்த வழியை நோக்கி மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்பதை அகிலமே அறியும். இங்ஙனம் மாற்றத்தை உருவாக்கும் கல்வி முறையிலேயே

பாம்பன் ரயில் பாலத்திலிருந்து மீன்பிடிக்கும் மீனவர்களை தடுக்க வலியுறுத்தல்

Posted: 16 Mar 2016 12:48 PM PDT

பாம்பன் ரயில் பாலத்திலிருந்து மீன்பிடிக்கும் மீனவர்களை தடுத்து பாலத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

Posted: 16 Mar 2016 12:48 PM PDT

நம் நாட்டின் பல இடங்களிலும் அரசுக்கு எதிரான பல போராட்டங்கள் வெடிப்பதும், அதை சட்டம்-ஒழுங்கு நடவடிக்கையாக எதிர்கொண்டு சரியான

ராமநாதபுரத்தில் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்: ஆட்சியர்

Posted: 16 Mar 2016 12:48 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் 1800 425 7038 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

பிரச்னை ஜாதியல்ல, ஜாதீயம்!

Posted: 16 Mar 2016 12:47 PM PDT

கௌரவக் கொலைகள் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள்; கொதிப்படைகிறார்கள்; சமூகத்தையும் ஆளுங்கட்சியையும், காவல் துறையின் பொறுப்பின்மையையும் குறை சொல்கிறார்கள். அவர்களை கொலைக்கு காரணமாக்குகிறார்கள். ஊடகங்கள் சிறப்புப் பேட்டிக்கு முந்துகின்றன.

ஓய்வூதியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

Posted: 16 Mar 2016 12:47 PM PDT

பரமக்குடி ஓய்வூதியர் சங்கச் செயற்குழுக் கூட்டம், அதன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெண்ணை வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

Posted: 16 Mar 2016 12:47 PM PDT

திருப்பாலைக்குடியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததாக திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

முத்துபேட்டை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 16 Mar 2016 12:46 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள முத்துபேட்டை கெளசானல் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைகள் சார்பாக தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓரியூர் இணைப்புச் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க கோரிக்கை

Posted: 16 Mar 2016 12:46 PM PDT

எஸ்.பி. பட்டிணம் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து ஓரியூர் பகுதிக்கு வரும் இணைப்புச் சாலையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 16 Mar 2016 12:45 PM PDT

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பத்தூரில் த.மு.மு.க. பொதுக் குழுக் கூட்டம்

Posted: 16 Mar 2016 12:44 PM PDT

திருப்பத்தூரில் ம.ம.க., த.மு.மு.க. கட்சிகளின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

Posted: 16 Mar 2016 12:44 PM PDT

சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65,450-ஐ   தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

குன்றக்குடி தலையாரி மீது மோசடி வழக்கு

Posted: 16 Mar 2016 12:43 PM PDT

தென்கரை அதிகரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பரத் என்பவருக்கு வேலை வாங்கித் தருவதாக குன்றக்குடி தலையாரி சண்முகபாண்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ரூ.1.5 லட்சத்தை வாங்கினாராம். வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் அவர் திரும்பத் தரவில்லையாம். இதனால் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் நாச்சியாபுரம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் சண்முகபாண்டி மீது மோசடி வழக்குப் பதிந்தார்.

பாகிஸ்தான்: முஷாரஃப் வெளிநாடு செல்ல தடை நீக்கம்

Posted: 16 Mar 2016 12:42 PM PDT

தேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு

நகைத் தொழிலாளியிடம் மோசடி: முதியவர் கைது

Posted: 16 Mar 2016 12:42 PM PDT

காரைக்குடி அருகே நகைத் தொழிலாளியிடம் 6 பவுன் தங்க நகையை வாங்கிவிட்டு  திருப்பித் தராமல் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சாக்கோட்டை போலீஸார் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனர்.

இளைஞரை கடத்திய மர்ம நபர்கள்: காவல்நிலையத்தில் தாய் புகார்

Posted: 16 Mar 2016 12:42 PM PDT

இளையான்குடியைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் கடத்தப்பட்டதாக அவரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப், ஹிலாரி தொடர்ந்து முன்னேற்றம்

Posted: 16 Mar 2016 12:42 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, முக்கிய மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

Posted: 16 Mar 2016 12:41 PM PDT

சிங்கம்புணரி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இளையான்குடியில் பள்ளி மாணவி கடத்தல்: வழக்குரைஞர்கள் உள்பட 4 பேர் கைது

Posted: 16 Mar 2016 12:41 PM PDT

இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெல்ஜியம்: பாரீஸ் தாக்குதலில் தொடர்புடையவர் சுட்டுக் கொலை

Posted: 16 Mar 2016 12:41 PM PDT

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் அந்த நாட்டுப் போலீஸாரும், பிரான்ஸ் நாட்டுப் போலீஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய

இளையான்குடி அருகே மாமியார், மருமகளை தாக்கி நகைகள் கொள்ளை

Posted: 16 Mar 2016 12:40 PM PDT

இளையான்குடி அருகே மாமியார், மருமகளை உருட்டுக்கட்டையால் தாக்கி நகைகளை  கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

Posted: 16 Mar 2016 12:39 PM PDT

சிவகங்கை அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சிறப்பு சார்பு - ஆய்வாளர், அவரது மனைவி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

வட கொரியா: அமெரிக்க மாணவருக்கு 15 ஆண்டு கடுங்காவல்

Posted: 16 Mar 2016 12:39 PM PDT

வட கொரியாவின் பிரச்சாரப் பதாகையைத் திருடியதாக, அமெரிக்க மாணவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

மானாமதுரை கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 16 Mar 2016 12:39 PM PDT

மானாமதுரை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி மூலவர் ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் அபிஷேகங்கள்,அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது.

தென்கரை பள்ளியில் ஆண்டு விழா

Posted: 16 Mar 2016 12:38 PM PDT

திருப்பத்தூர் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேருந்தில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி; பாகிஸ்தானில் பயங்கரம்

Posted: 16 Mar 2016 12:38 PM PDT

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

Posted: 16 Mar 2016 12:38 PM PDT

மானாமதுரை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.

மாணவர் அறிவியல் போட்டி: இந்திய வம்சாவளியினர் அபாரம்

Posted: 16 Mar 2016 12:38 PM PDT

அமெரிக்காவில் மாணவர்களின் அறிவியல் திறனுக்கான "இன்டெல் டேலன்ட் சர்ச்' போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள்

கோவிலூர் தனியார் ரசாயன ஆலையை அகற்றக் கோரி  பொதுமக்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்க முயற்சி

Posted: 16 Mar 2016 12:37 PM PDT

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூர் தனியார் ரசாயன ஆலையை அரசு அகற்ற முன்வராததால், செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர்.

ராமநாதபுரம்

Posted: 16 Mar 2016 12:37 PM PDT

அதிகாரிகளை கண்டித்து கல்லல் ஊராட்சி துணைத் தலைவர் ராஜிநாமா மனு

Posted: 16 Mar 2016 12:37 PM PDT

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி துணைத் தலைவர் எம். சுவாமிநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் செவ்வாய்க்கிழமை மனு செலுத்தினார்.

திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்

Posted: 16 Mar 2016 12:36 PM PDT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மேற்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் அக்னிச் சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்

Posted: 16 Mar 2016 12:35 PM PDT

தமிழகம் முழுவதும் மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதத் திருவிழா தொடங்க உள்ள நிலையில், மண்பாண்டப் பொருள்களுக்கு பெயர்போன சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அக்னிச் சட்டிகள், ஆயிரங்கண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு

Posted: 16 Mar 2016 12:35 PM PDT

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதை கடைகள் ஆக்கிமிப்பால் பயணிகள் நிற்க இடமின்றி பரிதவிக்கின்றனர்.

மாவட்ட சுகாதாரத்துறை அலுவலக நடைபாதையில் கழிவு நீர்க் கசிவு: ஊழியர்கள், பொதுமக்கள் அவதி

Posted: 16 Mar 2016 12:34 PM PDT

விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலக வளாக நடைபாதையில் கழிப்பறை கழிவு நீர்க் கசிவால் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

புதுப்பட சி.டி.கள் பறிமுதல்

Posted: 16 Mar 2016 12:34 PM PDT

அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி விற்பனை செய்த புதுப்பட சி.டி.க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

Posted: 16 Mar 2016 12:33 PM PDT

சாத்தூர் அருகே தோட்டத்தில் பணியாற்றியவரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை,போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியுடன் திருமணம்: கல்லூரி மாணவர் கைது

Posted: 16 Mar 2016 12:33 PM PDT

சாத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்தில் சோதனை: கல்லூரி ஊழியரிடம் ரூ.1.90 லட்சம் பறிமுதல்

Posted: 16 Mar 2016 12:32 PM PDT

அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் கல்லூரி ஊழியர்  கொண்டு சென்ற ரூ.1.90 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

செண்டுமல்லி பயிரிட்டால் வருடம் முழுவதும் வருமானம்

Posted: 16 Mar 2016 12:32 PM PDT

தோட்டக்கலை பயிர்களிலேயே அதிக அளவில் தினமும் வருவாய் தரக்கூடியதும், ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கக் கூடியது

ராஜபாளையம் அரசு மதுக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

Posted: 16 Mar 2016 12:31 PM PDT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 44 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளது.

சிவகாசியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 16 Mar 2016 12:31 PM PDT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் விருதுநகர் மாவட்டம் சார்பில் சிவகாசியில் திங்கள்கிழமை மாலை வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி!

Posted: 16 Mar 2016 12:31 PM PDT

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தடகளம்: சிவகாசி மாணவர்கள் சாதனை

Posted: 16 Mar 2016 12:31 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

மனைவியை தாக்கிய மருத்துவர் மீது வழக்கு

Posted: 16 Mar 2016 12:30 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னையில் மனைவியைத் தாக்கியதாக அரசு மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோயில்களில் கண்காணிப்பு கேமரா, காவலர்கள் நியமனம்: சிவகாசி டிஎஸ்பி வலியறுத்தல்

Posted: 16 Mar 2016 12:29 PM PDT

சிவகாசி பகுதியில் உள்ள அனைத்து கோயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கவும், காவலர்களை நியமிக்கவும் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாசப்பெருமாள் வலியுறுத்தினார்.

இண்டியன் வெல்ஸ்: நான்காவது சுற்றில் ஜோகோவிச், நடால்;காலிறுதியில் செரீனா, ரத்வான்ஸ்கா

Posted: 16 Mar 2016 12:29 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™