Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க.,வில் புது வேட்பாளர் பட்டியல்?

Posted: 15 Mar 2016 09:05 AM PDT

சட்டசபை தேர்தலில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட,அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கும், பெண்களுக்கும், அதிக வாய்ப்பு அளிப்பது; ஏற்கனவே தயார் செய்த வேட்பாளர் பட்டியலுக்கு பதிலாக, புதிய பட்டியல் தயார் செய்யப்படுவது, அ.தி.மு.க., பழைய நிர்வாகிகளிடம் கலக்கத்தையும், புதியவர்களிடம் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் வித்தியாசமானது, ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க., இக்கட்சியின் பொதுச் செயலராக, முதல்வர் ஜெயலலிதா உள்ளார். கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ...

உ.பி., சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., மேலிடம் தயாராகிறது: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மோடி பாடம்

Posted: 15 Mar 2016 10:19 AM PDT

புதுடில்லி: தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைக்கு, அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தற்போது தயாராகி வருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ., ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆளும் அசாமில் மட்டுமே, ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பிலும், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரியில் கால்பதிக்கும் நோக்கத்திலும் தேர்தல் பிரசார யுக்திகளை வகுத்து வருகிறது.இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தல்தான், கட்சியின் வளர்ச்சியை ...

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு

Posted: 15 Mar 2016 10:27 AM PDT

புதுடில்லி: 'ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து, மத்திய அரசு, ஜன., 7ல் அறிவிப்பாணை பிறப்பித்தது.இதை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து, மத்திய அரசும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்யும்படி, ஜன., 12ல் உத்தரவிட்டது.
இந்த வழக்குகள், ...

விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் நான்கு பிடி 'வாரன்ட்'

Posted: 15 Mar 2016 10:29 AM PDT

ஐதராபாத்: செக் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவுக்கு எதிராக, ஜாமினில் வரமுடியாத, நான்கு புதிய 'வாரன்ட்' உத்தரவுகளை, ஐதராபாத் கோர்ட் பிறப்பித்துள்ளது.

மதுபானங்கள் தயாரிக்கும், 'யுனைடெட் ஸ்பிரிட்ஸ், 'விமான சேவை நிறுவனமான, கிங்பிஷர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் விஜய் மல்லையா. இவர், வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை.
தப்பி ஓட்டம்:
இதனால், அப்பணத்தை மீட்க, வங்கிகள் சட்டரீதியிலான நடவடிக்கையை எடுத்து
வருகின்றன. இதையடுத்து, இம்மாத துவக்கத்தில், மல்லையா, நாட்டை ...

தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி? தி.மு.க., எடுக்கிறது ரகசிய சர்வே

Posted: 15 Mar 2016 10:41 AM PDT

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறாததை தொடர்ந்து, அக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்பினர், 234 தொகுதிகளிலும், சர்வே எடுக்கும் பணியை துவக்கி உள்ளனர்.

தி.மு.க., - காங்., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணிக்கு, 39 சிறிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
கடும் அதிர்ச்சி:
ஆனால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றால், 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என, ஏற்கனவே ஸ்டாலின் ஆதரவு
தரப்பினர் சர்வே மூலம் அறிந்திருந்தனர். அதனாலேயே, ...

அ.தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகளை மாற்றுங்கள் : தேர்தல் கமிஷனில் தி.மு.க., மனு

Posted: 15 Mar 2016 10:53 AM PDT

சென்னை : 'சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட, 10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும், 34 டி.எஸ்.பி.,க்களை, தேர்தல் பணியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனிடம், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், முதல்வர் ஜெயலலிதா, அவரது செயலர் வெங்கடரமணன் ஆகியோர் அறிவுரைப்படி செயல்படுகிறார். அரசியல் நிலவரம் குறித்து, தினமும் அறிக்கை அனுப்புகிறார்.திருச்சி போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்துார், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் போல் செயல்பட்டார். மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் ...

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி: வாகன சோதனையில் ரூ.7.40 கோடி பறிமுதல்

Posted: 15 Mar 2016 11:07 AM PDT

சென்னை: தமிழகம் முழுவதும், பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

கடந்த 12ம் தேதி, திருவண்ணாமலையில், 27 நைலான் புடவைகள்; தஞ்சாவூரில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை, சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த 13ம் தேதி, கோவை மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்; தர்மபுரி மாவட்டத்தில், ஏழு நாடுகளின் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்; திண்டுக்கல் மாவட்டத்தில், 1.53 லட்சம்; கிருஷ்ணகிரி ...

அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடாகிறது: ஓ.பி.எஸ்.,யைத் தொடர்ந்து நத்தம் ஆதரவாளர்களும் காலி

Posted: 15 Mar 2016 11:17 AM PDT

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பதவி பறிப்பை தொடர்ந்து, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் செல்வாக்கோடு வலம் வந்த, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர், கட்சித் தலைமையின் கோபத்திற்கு ஆளாகிஉள்ளனர்.
புறக்கணிப்பு:
அதன் எதிரொலியாக, அவர்களின் முக்கியத் துவம் குறைக்கப்பட்டுஉள்ளது. வேட்பாளர் நேர்காணல், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு ...

காற்றாலைகளில் காலி இடம்: சோலார் மின் நிலையம் வருமா?

Posted: 15 Mar 2016 11:20 AM PDT

மின் வாரிய காற்றாலைகள் உள்ள காலி இடத்தில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, மதுரை - புலியங்குளம்; துாத்துக்குடி - முள்ளக்காடு, கயத்தாறு; திருப்பூர் - கேதானுார்; கோவை - சுல்தான்பேட்டை; குமரி - முப்பந்தலில், 17 மெகாவாட் திறன் உடைய, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, ஆண்டுக்கு, 1.50 கோடி யூனிட் மின்சாரம்
கிடைக்கிறது. காற்றாலை மின் நிலைய வளாகத்தில், பல ஏக்கரில் காலி இடம் உள்ளது.
காற்றாலைகளில், ஆண்டுதோறும் மே மாதம் முதல், செப்., வரை, அதிக மின்சாரம் கிடைக்கும். ...

இந்திய மாணவர்களுக்கு டிரம்ப் திடீர் ஆதரவு

Posted: 15 Mar 2016 12:43 PM PDT

வாஷிங்டன்: இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக பேசி, பரபரப்பை ஏற்படுத்திய, டொனால்டு டிரம்ப், தற்போது, இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் தங்கி இருக்க ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், வரும் நவம்பரில், அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, 'பிரைமரி' தேர்தல்கள் நடக்கின்றன. இதில், குடியரசு கட்சியில் வேட்பாளர் போட்டியில், ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார். எனினும், பல்வேறு பிரச்னைகளில், சர்சசைக்குரிய வகையில் அவர் பேசி வருகிறார். 'அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும், இந்தியர்களால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™