Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பொன்னுத்தாயி!

Posted: 15 Mar 2016 12:45 PM PDT

''கீரெ... கீரெ... அரக்கீர... சிறுகீரெ... பொன்னாங்கண்ணிக்கீர...'' தலையில் கூடையும், இடுப்பில் மூட்டையுமாக மெல்ல நடந்து வரும் பொன்னுத்தாயிக் கிழவியின் குரல், அந்த தெருவின் கடைசி வரை கணீரென்று ஒலித்தது. பல வீட்டு இல்லத்தரசிகள் வாசலுக்கு வந்து தயாராக நின்றனர். ''ஏம்மா... சிறு கீரை கட்டு எவ்வளவு?'' ''10 ரூபா...'' ''அய்யோடா... என்னது கீரையப் போய் இந்த விலை விக்கிறே...'' ''என்னம்மா... அவ்வளவு எளக்காரமாப் பேசற... ரெண்டு கட்டு வாங்கி கடைஞ்சேன்னா, குடும்பம் மொத்தத்துக்கும் ஆவும். 20 ரூபாயில, ...

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?

Posted: 15 Mar 2016 12:37 PM PDT

'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர், பல் விலக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் பண்ணையார்கள், வேப்பங்குச்சியை எடுத்து, வயல் வரப்புகளில் வலம் வந்தபடி, வீடு திரும்பும் வரை பல் தேய்க்கின்றனர்; பல் எனாமலுக்கு, ...

ஆரோக்கியத்தின் அடையாளம்!

Posted: 15 Mar 2016 12:33 PM PDT

மாற்றத்திற்கு உட்பட வேண்டியவன் மனிதன். சில மாற்றங்கள் நம்மை ஆரோக்கியமாக்கும்; சில அர்த்தமுள்ளதாக்கும்; சில, நம்மை அழிக்கவும் கூடும். மூன்றாவது வகையான மாற்றங்களால் தான், இன்றைய சமுதாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை, நம் பழக்க வழக்கங்கள் நவீனமாகி போனதால், உடல் உழைப்பு குறைந்து, இயல்பாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும், நாகரிகத்தின் பெயரில் இழந்து வருகிறோம். அதற்கு மிக பெரிய உதாரணம், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும், மேற்கத்திய முறை கழிப்பறைகள்! இதைக் கேட்டு பலரும் முகம் ...

கடவுளை சரணடைந்தால்......

Posted: 15 Mar 2016 12:29 PM PDT

'தரையில் நடப்பவனுக்கு தான் மேடு, பள்ளம், ஆண், பெண், மரம், விலங்கு ஆகிய பேதங்கள் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு, ஒரு வித்தியாசமும் தெரியாது; எல்லாம் ஒன்று போல தெரியும். மனம் பக்குவம் அடைந்தவர், உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அவ்வாறு இருக்கையில், தான் படைத்த உயிர்களிடையே இறைவன் பேதம் பார்ப்பாரா...' என்றார் கிருபானந்த வாரியார். தெய்வம் ஒருபோதும் பேதம் பார்க்காது என்பதை, யானை, பாம்பு முதலானவைகள் பூஜை செய்து, நன்னிலை பெற்றதை இதிகாச புராணங்கள் நமக்கு விளக்கியுள்ளன. அதனால், தெய்வம் எக்காலத்திலும் ...

கூச்சல் கூட சுகமே!

Posted: 15 Mar 2016 12:25 PM PDT

இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பங்களாக்கள் கொண்டது, எங்கள் குடியிருப்பு. அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், இங்கு அதிகம். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள், அமைதியாக இருக்கும். காலை நடை பயிற்சியின் போது, ''யோவ் ராமசாமி... உன் தெரு கடைசியில இருக்குற அந்த ஓட்டு வீட்டுல, என்னய்யா எப்பப் பாத்தாலும் ஒரே சத்தமா இருக்கு... பேசாம, அவங்கள காலி பண்ண சொல்லணும்யா... இவங்களால நம்ம குடியிருப்புக்கே கெட்டபேரு,'' என்றார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர். நான் பதில் பேசவில்லை. ஏனென்றால், ...

தெரிஞ்சுக்கோங்க!.......பலாக்காய், 600 காய்கறிகளுக்கு சமம் !

Posted: 15 Mar 2016 12:22 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படித்ததில் பிடித்தது :) --மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!

Posted: 15 Mar 2016 12:20 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

கணவனோட, 'குடி'த்தனம் தாங்கமுடியலே!

Posted: 15 Mar 2016 12:13 PM PDT

- நீங்கள் சொல்லப்போகும் ஒரு வார்த்தையில்தான் என் உயிர் ஊசலாடுகிறது. என்னை கல்யாணம் செய்து கொள்வீர்ளா? - ஊஹூம்...அதெல்லாம் முடியாது! - அப்பாடா...நான் பிழைச்சேன்! - ------------------------------------ - அந்த போலி டாக்டருக்கு துணிச்சல் அதிகம்...! - எப்படி சொல்றே? - நேம் போர்டில் எல்.கே.ஜி.ன்னு போட்டிருக்காரே..! - -------------------------------------- - அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே? - சிறுநீரகத்தில் கல் இருக்கிறதுனு போனதுக்கு கருங்கல்லா, கிரானைட்டா, மார்பிளான்னு ...

மாப்பிள்ளைப் பையன் ஊமை - பரவாயில்லையா?

Posted: 15 Mar 2016 12:13 PM PDT

- என்ன கல்யாண சீர் எல்லாம் பித்தளைப் பாத்திரங்களாக இருக்கு..? - மாப்பிள்ளைக்குப் பேரீச்சம் பழம் ரொம்ப பிடிக்குமாம்...!! - ---------------------------------------- - மாப்பிள்ளைப் பையன் ஊமை - பரவாயில்லையா? - பரவாயில்லை...எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே..! - ----------------------------------------- - என்னோட சின்ன சண்டை வந்தாலும் கூட என் கணவர் உடனே கோர்ட்டுக்குப் போயிடுவாரு...! - நிஜமாவா? - ஆமாம்...அவர் கோர்ட்டுலதான் குமாஸ்தாவா இருக்காரு...! - ---------------------------------------- - ஆதிக்கம் - கைப்பிள்ளையோடு ...

உருவ பொம்மையை கொளுத்தினா நல்ல வாசம் வருதே...!!

Posted: 15 Mar 2016 12:12 PM PDT

உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!!

Posted: 15 Mar 2016 12:10 PM PDT


-
"உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை?''

""என்கிட்டே நல்லா சண்டை போடறா எதிர்ப்பு சக்தி இல்லைன்னு
இப்படிப் பொய் சொல்றீங்களே டாக்டர்''
--
எம்.அலையரசு, தம்மம்பட்டி

கல்யாணம் ஆன புதுசுல தேவயாணின்னு அன்பா கூப்பிடுவார்..!!

Posted: 15 Mar 2016 12:10 PM PDT


-

கூட்டணிக்கு வராத கட்சியினரை கண்டபடி திட்டிப் பேச …

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

- ''மெக்கானிக்கல் டிப்ளமோ படித்த எங்கள் தலைவரால் மட்டுமே பழுதான அரசு எந்திரத்தை சரி செய்ய முடியும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்!'' – – அ.ரியாஸ், – —————————————– – அந்தக் கட்சில கோஷ்டிச் சண்டை ரொம்ப அதிகமாயிடுச்சா?'' – ''ஆமாம். கட்சி ஆபீசுக்குள்ள பதுங்கு குழியெல்லாம் வெட்டி வெச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்..!'' – – அஜித், – ———————————————– – ''அடுத்தபடியாக… கூட்டணிக்கு வராத கட்சியினரை கண்டபடி திட்டிப் பேச தலைவர் அவர்களை அழைக்கிறேன்!'' – – பெ.பாண்டியன், – ——————————————-

சிரிப்போ சிரிப்பு - தொடர் பதிவு

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

பொருத்தமான பெயர்.
-

தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்கணுமாம்!!

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

- - கட்சிக்காக தலைவர் உயிரைக்கூட குடுப்பாரு…'' – ''அதுக்காக… குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னா 'ஸ்டிக்கர்'னா வைக்கிறது..?'' – – சி.சாமிநாதன், – ———————————— – தலைவர் மேல சி.பி.ஐ. புதுசா வழக்கு போட்டிருக்காமே..?'' – ''ஆமாம்! அவர் வீட்ல ரெய்டு செய்த அதிகாரிகள் முதுகுல ஸ்டிக்கர் ஒட்டினாராம்!'' – – பர்வீன் யூனுஸ், – ——————————————- – ''தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்கணும்னு நீங்கதானேய்யா சொன்னீங்க..?'' – ''அதுக்காக நமீதா, அஞ்சலி, நயன்தாரா படங்களைப் போட்டு அறிக்கையை ...

அந்த டாக்டர் தமிழார்வம் மிக்கவரு..!!

Posted: 15 Mar 2016 12:07 PM PDT


-
தொடரும்...

"பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...''

Posted: 15 Mar 2016 12:05 PM PDT

"என்னுடைய கை, கால் எல்லாம் பயங்கரமாக நடுங்குது டாக்டர்?'' - "உங்க மனைவியை ஒரு வாரம் அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுங்க, நார்மல் ஆயிடுவீங்க'' - எம்.ஏ., தம்மம்பட்டி. - -------------------------------------------- - "ஹலோ! நான் திருமதி.ராஜம் அவர்களின் கணவன் கணேசன்தான் பேசுறேன்!'' - "-"ஓ... நீங்க உங்க வீட்டுல உங்க மனைவி பக்கத்துலே இருந்து பேசுறீங்க... நான் சொல்றது சரிதானே!'' - கு.அருணாசலம் - --------------------------------------------- - "ஐயா... சாமி...?'' - "பக்கத்து ...

கூட்டணி பற்றி ரொம்ப ஆழமா தலைவர் சிந்திக்கிறாராம்..!

Posted: 15 Mar 2016 12:00 PM PDT

- கூட்டணி பற்றி ரொம்ப ஆழமா தலைவர் சிந்திச்சுக்கிட்டு இருக்கார்…'' ''அதுக்காக நீர்மூழ்கிக் கப்பல்ல உட்கார்ந்து யோசிக்கறது நல்லாவா இருக்கு..?'' – ஆர்.சீதாராமன், – ———————————– – கட்சியில அவர் எந்தத் துறையில இருக்கார்..?'' ''ஸ்டிக்கர் ஒட்டுற துறையில இருக்காராம்…'' – – ஏ.மூர்த்தி, – ———————————- – மன்னிக்கணும்! கட்சி ஆபீஸ்னு நினைச்சு உள்ளே வந்துட்டேன். இது என்ன ஏலக் கம்பெனியா..?'' – ''ஐயோ, இது கட்சி ஆபீஸ்தான்! உள்ளே சீட் ஏலம் நடந்துக்கிட்டு இருக்கு…'' – – தீ.அசோகன், – ————————————– – தலைவர் ...

ஸ்பீக்கரு….

Posted: 15 Mar 2016 12:00 PM PDT

''பெரியோர்களே… தாய்மார்களே… மற்றும் சி.பி.ஐ. ரெய்டால் திடீர் புகழ் பெறத் தொடங்கியிருக்கும் தலைவர் அவர்களே…'' – – பெ.பாண்டியன், – ——————————— – ''இப்போது கூட்டணிக்காக அலையும் தலைவர், தேர்தல் முடிந்ததும் முன்ஜாமீனுக்காக அலைவார் என்பதை…'' – – பர்வீன் யூனுஸ், – ———————————— – கட்சி வளர்ச்சிக்குத் தடையா யாராவது இருந்தா என்கிட்டே சொல்லுங்க…'' – ''உங்களைப் பத்தி எப்படி தலைவரே உங்ககிட்டேயே சொல்றது..?'' – – தஞ்சை தாமு --------------

இறந்தவரோட விபரத்தை, அந்த ஆளு ஏன் கேட்கிறார்..?!

Posted: 15 Mar 2016 11:59 AM PDT


-
தொடரும்...

ஸ்டிக்கரை தலைகீழா ஒட்டிட்டாராம்..!

Posted: 15 Mar 2016 11:56 AM PDT

''தலைவர் என்ன சொல்றார்..?'' – ''ஏமாற்றத்தைத் தவிர்க்க ஆன்லைன்லயும் கூட்டணிக்கு முன்பதிவு செய்யலாம்ங்கறார்!'' – – பெ.பாண்டியன், – ————————————— ''ஸ்டிக்கரை ஒட்டினதுக்காகவா அவரைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க..?'' ''ஆமா, தலைகீழா ஒட்டிட்டாராம்..!'' – – தீ.அசோகன், – ————————————- – ''நாற்பதும் நமதே…''''தலைவரே! தமிழ்நாட்டுல 234 தொகுதிகள் இருக்கு!'' ''கூட்டணியில நமக்கு ஒதுக்கப் போற தொகுதிகளைச் சொன்னேன்யா…'' — – பர்வீன் யூனுஸ், – ————————————

ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Posted: 15 Mar 2016 11:56 AM PDT

''தலைவர் கட்சியை விட்டு விலகப் போறாரா… எதுக்கு?'' ''கட்சிக்காக இரவு, பகல் பார்க்காமல் போஸ்டர் ஒட்டினவருக்கு சீட் தராமல், நேற்று வந்து ஸ்டிக்கர் ஒட்டினவருக்கு சீட் கொடுத்துட்டாங்களாம்..!'' – – மு.க.இப்ராஹிம், – ———————————– – ஸ்பீக்கரு… ''கூட்டணிக்கு வருபவர்களுக்கு 234 தொகுதிகளையும் கொடுக்கத் தயார். எனக்கு அவர்கள் முதலமைச்சர் பதவியை கொடுக்கத் தயாரா?'' — – பெ. பாண்டியன், – ———————————- – ''கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து தலைவரை ஏன் நீக்கிட்டாங்க..?'' – ''2021 ...

குரு தட்சணை!

Posted: 15 Mar 2016 11:39 AM PDT

முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அக்பர்: பைஸி! இதோ, இந்தப் பூக்களைப் பாருங்கள். வடிவம், வண்ணம், வாசம் வேறுபட்டா லும் இவை சுரக்கும் தேன் ஒன்றுதான். இதைப் போலவே பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றின் சாரம் ஒன்றுதான். பைஸி: நன்றாகச் சொன்னீர்கள்! அக்பர்: ஆனால், இந்த மதவாதிகள் தங்கள் பூவில்தான் தேன் இருக்கிறது. மற்றப் பூக்களில் தேன் இல்லை என்கிறார்கள். பைஸி: எல்லாப் பூக்களிலும் தேன் இருக்கிறது என்பது தேனீக்களுக்குத்தான் ...

நீதிக்கதை = சோதனை

Posted: 15 Mar 2016 11:34 AM PDT

திருடக்கூடாது- சிறுகதை

Posted: 15 Mar 2016 11:30 AM PDT

''மாடியில வடாம் காயப் போடுறேன்… சாயந்திரம் போய்ப் பாத்தா ஒண்ணு விடாம காணாம போயிடுதுன்னு நானும் பத்து நாளா சொல்லிட்டு இருக்கேன். நீயும் சரி, உங்கப்பனும் சரி… கேக்குறதில்லை!'' – – அம்மா இப்படி சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். வழக்கமான புலம்பல் என்று நானும் விட்டிருந்தேன். இதற்காக ஒருநாள் மதியப் பசிக்கு வடாம் கிடைக்காமல் செய்தபோதுதான் அவள் எத்தனை தீவிரமாகச் சொல்லி இருக்கிறாள் என்பது புரிந்தது. – அது யாரது வடாமை லவட்டுவது? காக்கை, குருவியாக இருக்கலாம். ஆனாலும் அம்மா, கொசு வலைக்கூட்டுக்குள் தான் ...

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Posted: 15 Mar 2016 11:27 AM PDT

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு ...

தெளிவான தேர்வு – சிறுகதை

Posted: 15 Mar 2016 11:21 AM PDT

மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ் அப்பில் வினய், 'முத்தமிடவா?' என்று கேட்டிருந்தான். முரளி, 'எப்போது தனிமையில் சந்திக்கலாம்?' என்று கேட்டிருந்தான். – அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். – ''அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?'' என்றாள் கிரிஜா.''என்ன சொல்லலாம்? ...

ரமணியின் கவிதைகள்

Posted: 15 Mar 2016 08:31 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ரமணி ஹைக்கூ

Posted: 15 Mar 2016 07:55 AM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

அனுபவத் துளிகள்

Posted: 15 Mar 2016 07:50 AM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

தமிழ் மகனே கேளடா...

Posted: 15 Mar 2016 07:45 AM PDT

தமிழ் மகனே கேளடா தலைவணங்கா தமிழன் நீயடா தங்க தமிழா கேளடா தாய்மொழி மறந்த்து ஏனடா? தரனியை வென்றவன் நீயடா- சிலர் தரங்கெட்டு போனது ஏனடா? பல திசைகள் கண்டவன் நீயடா பாரினில் வாழத் தவிப்பது ஏனடா? விண்வெளியை அறிந்தவன் நீயடா வீண் கவலைக் கொள்வது ஏனடா? கலைகளைக் கண்டவன் நீயடா- அவை களவு போனது ஏனடா? உலகில் மூத்தவன் நீயடா உன் பெருமை மறந்தது ஏனடா? நாகரீகம் அறிந்தவன் நீயடா நிலைமாறி கிடப்பது ஏனடா? - ---------------- வாணி

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 15 Mar 2016 07:43 AM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

பாமரர் தேவாரம்

Posted: 15 Mar 2016 07:27 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

பொய்யான வானவில்

Posted: 15 Mar 2016 07:03 AM PDT

பள்ளிப்பருவத்தில் வானவில்லின் ஏழு நிறங்களையும் மனதில் வைக்க "Roy G. Biv" அல்லது "VIBGYOR" என்றெல்லாம் ஞாபகம் வைத்திருப்போம். இதன் பொருள் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏதாவது ஒரு வரிசைப்படி எடுத்துக்கொண்டிருப்போம். இவை முதன்முதலில் நியூட்டனால் கூறப்பட்ட வானவில்லின் அறிவியல் தன்மையில் இருந்து பெறப்பட்டவை. அவர் முதன்முதலில் இதைப் பற்றிக் கூறும்போது ஊதா மற்றும் இண்டிகோவினை நிறங்களாகச் சேர்க்கவில்லை. மனிதனின் மனதுள் தோன்றும் குளறுபடியான எண்ணங்களின் ...

இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்

Posted: 15 Mar 2016 05:23 AM PDT

பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ...

மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்!

Posted: 15 Mar 2016 04:14 AM PDT

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும், திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். சில ...

நோய் தீர்க்கும் ராகங்கள்!

Posted: 15 Mar 2016 03:20 AM PDT

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு ...

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Posted: 15 Mar 2016 03:07 AM PDT

சமையல் கற்று வருகிறார், நமீதா..! - தன்னுடைய தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் ஒரே நடிகை நமீதாதான். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர், சென்னையில் ஓட்டல்களில் தங்குவதில்லை. வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். தனது காருக்கு டிரைவர் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. சென்னை நகருக்குள் அவரே கார்  ஓட்டுகிறார். இப்போது அவர்  தென்னிந்திய சமையல் கற்று வருகிறார். நமீதாவுக்கு இட்லி, சாம்பார், பொங்கல் ஆகியவை பிடித்த உணவு - தினத்தந்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™