Tamil News | Online Tamil News |
- நம்பகத்தன்மையை இழக்கிறதா? கருணாநிதி
- தேர்தலுக்கு 60 நாள் இருப்பதால் செலவுக்கு பயந்து கட்சி நிர்வாகிகள் பம்மினர் :உள்ளூரில் இருந்தால் கடனாளியாகும் பயத்தால் வெளியூர்களுக்கு ஓட்டம்
- மருத்துவ கல்வி முறையில் உள்ள பிரச்னைகளுக்கு சிகிச்சை: தேசிய அளவில் நுழைவுத்தேர்வு, திறனறி தேர்வு நடத்த திட்டம்
- இளைய தலைமுறை ஓட்டு யாருக்கு?
- 'சீட் வேண்டாம்; பணத்தை கொடுங்கள்!': தே.மு.தி.க.,வில் திடீர் நெருக்கடி
- கேரள ஜோதிடர் குறித்த தேதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?
- அ.தி.மு.க.,வில் 'மிஸ்டர் கிளீன்' யாரு:உளவுத்துறை சர்வே படி 'சீட்'
- நோட்டாவுக்கு ஓட்டளிப்பதால் யாதொரு பயனும் இல்லை
- கன்னையா குமார் மற்றும் 4 பேரை ஜேஎன்யு விலிருந்து வெளியேற்ற பரிந்துரை
- ரூ.300 கோடி தொழில் முதலீட்டு ஒப்பந்தம் 'அம்போ'
| நம்பகத்தன்மையை இழக்கிறதா? கருணாநிதி Posted: 14 Mar 2016 10:58 AM PDT சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில்:'நீதித்துறை, அதன் நம்பகத் தன்மையை இழந்துவருகிறது' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், தன் வேதனையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார். உண்மை தான்! 'நீதித்துறை சவால்களை சந்தித்து வருகிறது.வெளியிலிருந்து வரும் சவால்கள் என்றால், அவற்றை எளிதாக கையாளலாம். ஆனால், நீதித்துறை என்ற, கட்டமைப்புக்குள்ளேயே எழுந்துள்ள சவால்களால் தான் நீதித்துறை, அதன் நம்பகத் தன்மையை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது' என, தெரிவித்திருக்கிறார்.அவரது கருத்து, பெரும்பாலான மூத்த ... |
| Posted: 14 Mar 2016 11:04 AM PDT சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 60 நாட்களுக்கு மேல் உள்ளதால், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் செலவுக்கு பயந்து, பம்மத் துவங்கி உள்ளனர். உள்ளூரில் இருந்தால், கட்சியினருக்கு செலவு செய்து, கடனாளியாக வேண்டியிருக்குமே என்ற பயத்தால், வெளியூர்களுக்கு ஓட்டம் எடுத்துள்ளனர். அ.தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' கிடைக்கும் என்பதை, யாராலும்உறுதியாகக் கூற முடியாது. இதனால், மாவட்ட செயலர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரை, 'வேட்பாளராக அறிவிக்கட்டும்; அதன்பின், செலவை துவங்கலாம்.60 நாளைக்கு செலவிட்டால், சொத்தை விற்றுவிட்டு, கடனாளியாக வேண்டியது தான்' ... |
| Posted: 14 Mar 2016 11:13 AM PDT புதுடில்லி: மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவ, 'சீட்'டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதை தடுக்கவும், நாடு முழுவதுக்கும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும்; மருத்துவ பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவும், பல்வேறு தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதை தடுக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும் ஆலோசனைகளை வழங்க, பார்லிமென்ட் குழு ஆய்வு செய்தது.இந்த குழுவினர், தமிழகத்தின் ஊட்டி, ... |
| Posted: 14 Mar 2016 11:17 AM PDT தமிழக வாக்காளர்களில், 18 முதல், 49 வயதினர், 3.98 கோடி பேர்; 50 முதல், 80 வயதுக்கு மேற்பட்டவர், 1.81 கோடி பேர். எனவே, அடுத்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை, இளைய தலைமுறை ஓட்டுகள் தான்தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அந்த இளைய சக்தி, யார் பக்கம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. 50 சதவீத இளைய தலைமுறை வாக்காளர்கள், சமூக வலைதளங்களின் உதவியால், நாட்டு நடப்பை தெரிந்து, ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.அவர்கள் ஒருங்கிணைந்து, ஒரு கட்சியை ஆதரித்தால், அதற்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஊழலுக்கு எதிரான அணி என சொல்லிக் கொள்பவர்கள், தனித்தனியாக பிரிந்துள்ளதால், ... |
| 'சீட் வேண்டாம்; பணத்தை கொடுங்கள்!': தே.மு.தி.க.,வில் திடீர் நெருக்கடி Posted: 14 Mar 2016 11:19 AM PDT தனித்து போட்டியிட்டால், வெற்றி பெற முடியாது என கருதும், தே.மு.தி.க.,வினர், 'சீட்' கேட்டு செலுத்திய பணத்தை திரும்ப கேட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டனர்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைந்து, 14 இடங்களில் போட்டியிட்டு, தே.மு.தி.க., அனைத்திலும் தோல்வி அடைந்தது.இதனால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் விரும்பினர்; அதை, கட்சித் தலைவர் விஜயகாந்திடமும் வலியுறுத்தினர். அதை ஏற்ற விஜயகாந்த், தி.மு.க., - பா.ஜ., மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல தரப்பினரிடமும் ... |
| கேரள ஜோதிடர் குறித்த தேதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்? Posted: 14 Mar 2016 11:20 AM PDT கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிக்கப்பட்டதும், இம்மாதம், 23 அல்லது, 29ம் தேதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இந்திய குடியரசு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது.இது தவிர, த.மா.கா., - ம.ம.க., ஆகிய கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு வரும் என தெரிகிறது. இக்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை முடித்ததும் வேட்பாளர் தேர்வை, ஜெயலலிதா இறுதி ... |
| அ.தி.மு.க.,வில் 'மிஸ்டர் கிளீன்' யாரு:உளவுத்துறை சர்வே படி 'சீட்' Posted: 14 Mar 2016 11:25 AM PDT மதுரை;அ.தி.மு.க., மீது மக்களுக்கு நல்ல 'இமேஜ்' ஏற்படும் வகையில், இத்தேர்தலில் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும், குற்றங்களுக்கும் ஆளாகாத வேட்பாளர்களை நிறுத்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக உளவுத்துறை சர்வே எடுத்து கொடுத்துள்ளது. கடந்த ஐந்தாண்டில் இலவச திட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி என்பது குறித்து ஆறு மாதங்களாக உளவுத்துறை சர்வே எடுத்தது.இதன் முடிவில், கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் வரவேற்பு பெற்றிருப்பதாகவும், நகர்புறங்களில் வரவேற்பு குறைவு என்றும் தெரியவந்தது. இச்சூழலில், தொகுதிகளில்மக்களின் வெறுப்பு ... |
| நோட்டாவுக்கு ஓட்டளிப்பதால் யாதொரு பயனும் இல்லை Posted: 14 Mar 2016 11:30 AM PDT 'இன்றைய அரசியல் நிலவரத்தை, என் போன்ற மாணவ சமுதாயம் பாராட்ட முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டுமே, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மக்கள் மீது பாசம் வருகிறது.நான், முதன் முறையாக ஓட்டளிக்க இருக்கிறேன். ஆனால், அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. என் ஓட்டு, 'நோட்டா'வுக்குத்தான்' ரம்யா என்ற கல்லுாரி மாணவி, 'தினமலர்' தேர்தல் களம் இணைப்பிதழில் தெரிவித்திருந்த கருத்து இது.முதல்முறை ஓட்டளிக்க இருக்கும், 19 வயது ரம்யாவிற்கே அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு! அப்படியானால், வாட்டும் வெயிலில் வரிசையில் நின்று, பலமுறை ஓட்டளித்து வேட்பாளரை வெற்றியடையச் ... |
| கன்னையா குமார் மற்றும் 4 பேரை ஜேஎன்யு விலிருந்து வெளியேற்ற பரிந்துரை Posted: 14 Mar 2016 12:26 PM PDT புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்த பல்கலை உயர்மட்ட குழு, கன்னையா குமார் மற்றும் 4 பேரை பல்கலையை விட்டு வெளியேற்ற பரிந்துரை செய்துள்ளது.கடந்த பிப்ரவரி 9ம் தேதி அப்சல் குரு நினைவு தினத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த கடந்த 10ம் தேதி குழு ஒன்றை துணைவேந்தர் அமைத்தார். பின்னர் அடுத்த நாள்(11ம் தேதி) இந்த குழு ... |
| ரூ.300 கோடி தொழில் முதலீட்டு ஒப்பந்தம் 'அம்போ' Posted: 14 Mar 2016 01:08 PM PDT சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது போடப்பட்ட, 300 கோடி ரூபாய் ஒப்பந்தம், துவங்கப்படாமலேயே முடங்கிப் போனது தெரிய வந்துள்ளது. 'தமிழகத்தில், சிறு மற்றும் குறுந்தொழில் துறையில், ஐந்து ஆண்டுகளில், 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது' என, அரசு அறிவித்துள்ளது. அதில், 2015ல் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது போடப்பட்ட, 16 ஆயிரத்து, 532 கோடி ரூபாய் ஒப்பந்தங்களும் அடக்கம்.ஆனால், எதிர்க்கட்சிகளோ முதலீட்டாளர் மாநாட்டின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள், ஏட்டளவில் மட்டும் இருப்பதாக புகார் கூறி வருகின்றன. இந்நிலையில், சென்னை அருகே, 300 கோடி ரூபாய் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 15,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |