ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பூஞ்சோலை
- கடல்
- கார்மேகம்
- பிறந்த நாள் கொண்டாடும் பழ முத்து ராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம்
- ஆண்கள் யோக்கியமானவர்களே....!
- தவறு யார் செய்தது?
- எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’
- நாவலை திரைக்காவியமாக மாற்றமுடியும் …
- மனைவி ‘கொயட்’டா இருக்கணும்,..!
- கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!
- நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை
- வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;
- கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.
- ஓமனில் தெரிந்த சூர்யபகவான் :)...dont miss this, photo attached :)
- வரலாற்றில் இன்று - மார்ச்
- தஞ்சை பெரிய கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்?
- தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...
- தமிழில் இன்னமும் வெளிவராத சிறப்பியல்கள் என்னென்ன?
- பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா)
- பிரிட்டிஷ் குடியுரிமை: ராகுலுக்கு லோக்சபா குழு சம்மன்
| Posted: 14 Mar 2016 03:14 PM PDT பூஞ்சோலை பட்டாம்பூச்சிகள் படபடக்க சிட்டுக்குருவிகள் சிறகடிக்க மொட்டுக்கள் இதழ்விரிக்க மெட்டுக்கள் மெல்லச்சுரக்க குழந்தைகளின் குதூகலமாய் இளமையின் சுவாசமாய் கிழடுகளின் ஆசுவாசமாய் கவிகளின் கற்பனையாய் உழைப்பவனின் உன்னதத்தால் உருவான பூஞ்சோலை ச.சந்திரசேகரன் |
| Posted: 14 Mar 2016 02:45 PM PDT கடல் ஆழிப்பெருங்கடல் பூமியின் திரவஉடல் இறைவனின் மழைமடல் நீரினத்தின் போர்த்திடல் மீனவர்களின் பொருளாதாரம் படகோட்டிகளின் வாழ்வாதாரம் அந்நியர்களின் கொலைக்களம் கடத்துபவனின் விளைநிலம் கவிஞனின் கற்பனைவளம் நீந்துபவனின் சாதனைக்களம் பெருங்கடலே பலரின் பலம் ச.சந்திரசேகரன் |
| Posted: 14 Mar 2016 02:09 PM PDT கார்மேகம் கார்மேகமே நீ நிறைமாத கர்ப்பிணியோ? நீ பிரசவிக்கும் மழை எனும் மழலைக்காக காத்துக் கிடக்கும் கூட்டம் இதோ, விவசாயி - வேளாண்மைக்காக சென்னைவாசி - குடிநீருக்காக கிழடுகள் - வெப்பம் தணிக்க கவிஞன் - கற்பனைக்காக பள்ளி மாணவர்கள் - விடுமுறைக்காக மக்கள் - அரசின் ஐந்தாயிரத்திற்காக ஆளும் கட்சி - ஓட்டுக்காக எதிர் கட்சி - விமர்சிக்க எனவே, கார்மேக கர்ப்பிணியே அளவோடு நீ பெற்று, எங்களை வளமோடு வாழ்விப்பாயாக. ச.சந்திரசேகரன் |
| பிறந்த நாள் கொண்டாடும் பழ முத்து ராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம் Posted: 14 Mar 2016 12:07 PM PDT பிறந்த நாள் கொண்டாடும் பழ முத்து ராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம் அதிவேகப் பதிவாளர் என அறியப்பட்டவர் இவர் அரிதாக காணப்படுகிறார் , இப்போதெல்லாம் , வேலை நிமித்தம் தான் காரணம் . வளமும் நலமும் உம்மை வலம் வர , வாழ்த்துகள் ரமணியன் |
| Posted: 14 Mar 2016 10:46 AM PDT ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பாத்த அழகான ஒரு பெண் : "நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ? ஆண் : " வேண்டாம். நன்றி சகோதரி… " அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்… கருத்து .. . . .. . . . . . . . . . . . . .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட மனைவி வந்துக்கிட்டிருந்தா..!! – ————–. |
| Posted: 14 Mar 2016 09:33 AM PDT தவறு யார் செய்தது? மனதை குலைக்கும் பார்வை! மௌனமான ஓர் ஆழமான புன்னகை! வறுமையின் ஏக்கம் கண்களில்! வறுமையின் கோரம் ஒட்டிய கன்னம்! எண்ணெய் இடாத தலை எண்ணமெல்லாம் ஏழ்மையின் நிலை! வாட்டிய வறுமை வாடு(ழு)ம் குழந்தை ' தவறு யார் செய்தது?! அப்பாவானவனின் அசிரத்தையால் வந்த குழந்தை! மூட்டையை முதுகில் சுமந்து மூச்சு முட்டி இயன்ற பணமெல்லாம் மூச்சு முட்ட குடிப்பதற்கு!? பாவம் அவன் என்ன செய்வான்? அருகிலேயே அரசு மதுபானக் கடை இருக்க '! வருமானம் அரசுக்கு போகட்டுமே ... |
| எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’ Posted: 14 Mar 2016 05:02 AM PDT - தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில் எழுப்பினாள் மனைவி. ''ஏங்க, 'பெங்களூரு நாட்கள்'ல யாரெல்லாம் ஹீரோயின்ஸ்?'' ''திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.'' '' 'கில்லி' படத்துல த்ரிஷா பேர் என்ன?'' ''தனலக்ஷ்மி.'' ''2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?'' ''98'' ''நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?'' ''வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம் முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?'' ''நேத்து என்னோட ... |
| நாவலை திரைக்காவியமாக மாற்றமுடியும் … Posted: 14 Mar 2016 02:41 AM PDT - ஒரு நாவலை திரைக்காவியமாக மாற்றமுடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது 'தில்லானா மோகனாம்பாள்'. ஆனந்த விகடனில், 'கலைமாமணி' என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை இது. அதை தனது திரைக்கதை வசனத்தினாலும், இயக்கத்தினாலும் திரைக் காவியம் ஆக்கியவர் ஓ.பி.நாகராஜன். தமிழின் சிறந்த பத்து படங்களை எந்தக் காலகட்டத்தில் தேர்வு செய்தாலும் அதில் தில்லானா மோகனாம்பாளுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். கதைச்சுருக்கம் சிக்கல் சண்முகசுந்தரம் (சிவாஜி கணேசன்) புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான். ... |
| மனைவி ‘கொயட்’டா இருக்கணும்,..! Posted: 14 Mar 2016 02:16 AM PDT @ArchanaArchuu கணவன் 'டயட்'ல இருக்கணும், மனைவி 'கொயட்'டா இருக்கணும், குழந்தை 'க்யூட்'டா இருக்கணும். அப்போ குடும்பம் சூப்பரா இருக்கும்! - -------------------------- @theeviravaathi கடவுளும் ஒரு சுயநலவாதிதான்; தன்னை நினைக்காமல் விட்டுவிடுவோம் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னையைக் கொடுத்துக்கொண்டே இருப்பான்! - ------------------------------- வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் படங்கள் ஒட்டப்படும் .# இனி 'வேட்பாளர கடைசியா வோட்டு கேட்டு வரும்போது பார்த்தது'னு ... |
| கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல! Posted: 14 Mar 2016 02:06 AM PDT மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை - தமிழருவி மணியன் # முதல்முதல்ல டிரெயின்ல போறீங்க... வித்அவுட்லயாவது போங்க பாஸ்! - - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் - ----------------------------- - பிரியாணி விரும்பிகளின் கனிவான கவனத்திற்கு... ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டோர் கூட்டாக பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. - - வேடியப்பன் எம் முனுசாமி - ---------------------------------- - தமிழக மக்கள்: அமைச்சரே! நீ என்ன பண்ற, ஊரெல்லாம் அம்மா ஸ்டிக்கர் ... |
| நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை Posted: 14 Mar 2016 01:42 AM PDT நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை சாப்பிடக் கூடாதது 1. சர்க்கரை. 2. கரும்பு. 3. சாக்லெட். 4. குளுக்கோஸ். 5. காம்பளான். 6. குளிர் பானங்கள். 7. சாம் வகைகள். 8. பால் கட்டி. 9. திரட்டுப்பால். 10. பனிக்கூழ். 11. வாழைப்பழம். 12. பலாப்பழம். 13. மாம்பழம். 14. நுங்கு. 15. சப்போட்டா. 16. சீதாப்பழம். 17. உலர்ந்த திராட்சை. 18. சேப்பங்கிழங்கு. 19. உருளைக்கிழங்கு. 20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு. அளவோடு சாப்பிடலாம் 1. கம்பு. 2. ஓட்ஸ். 3. அரிசி. 4. அவல். 5. இரவை. 6. பார்லி அரிசி 7. ... |
| வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Posted: 14 Mar 2016 01:30 AM PDT -- தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'அம்மா கணக்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம். சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. 'நில் ... |
| கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு. Posted: 14 Mar 2016 01:07 AM PDT சிறுவயதிலேயே நாடக மேடையில் ஏறிய கே.வி.மகாதேவன், பிறகு துணை இசை அமைப்பாளராகப் பணிபுரிந்து, இசை அமைப்பாளராக உயர்ந்தார். கே.வி.மகாதேவனின் சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் ஆகும். தந்தை - வெங்கடாசலம். தாயார்- லட்சுமி அம்மாள். மகாதேவனின் தந்தை வெங்கடாசலம், இசைஞானம் உடையவர். அதனால் சிறு வயதிலேயே மகாதேவன் தந்தையிடம் பாடக்கற்றுக் கொண்டார். பின்னர் திருச்சியில், விஸ்வநாத பாகவதரிடம் பயிற்சி பெற்று, மேடை கச்சேரிகளில் பாடினார். அந்த காலத்தில் பார்க்க அழகாக இருந்து, பாடவும் தெரிந்த சிறுவர்களை ... |
| ஓமனில் தெரிந்த சூர்யபகவான் :)...dont miss this, photo attached :) Posted: 14 Mar 2016 12:28 AM PDT இது அபூர்வமானதாக இருந்ததால் தனி திரியில் போட்டிருக்கேன் தினமலர் |
| Posted: 14 Mar 2016 12:09 AM PDT ![]() |
| தஞ்சை பெரிய கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? Posted: 13 Mar 2016 11:10 PM PDT மு. குமரன், பண்ணந்தூர், கிருஷ்ணகிரி: தஞ்சை பெரிய கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? விளக்குங்களேன்? -[color:8296= #006600] பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில் - - தட்சிணமேரு (தெற்கு இமயமலை) என்று அழைக்கப்படுகின்ற தஞ்சை பெரிய கோவிலை ஒரு சிறிய கேள்வி பதிலில் விளக்கவது கடினம். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் இக்கோவில் குறித்த அரிய நூல் ஒன்று எழுதியிருக்கிறார்கள். - சில ஆண்டுகளுக்கு முன்பாக டிஸ்கவரி சேனல் தமிழ் ஒளிபரப்பில் இக்கோவில் எப்படி கட்டப்பட்டிருக்கும் என்பதை மிக நுட்பமாக ... |
| தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்... Posted: 13 Mar 2016 09:25 PM PDT - ஒரு கிராமத்திற்கு துறவி ஒருவர் வருகை தந்தார். அங்கிருந்த கோயிலில் தங்கினார். அங்கு காலைக்கடன் முடித்து விட்டு, நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்; அலங்காரம் செய்து வழிபடுவார். பிறகு தியானத்தில் ஈடுபடுவார். - கிராம மக்களுக்குக் கவனிப்பாரற்று இருந்த கோயிலில் சாமியார் வந்து தங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஊர் ஜனங்கள் இறைவனை வணங்குவர், துறவியையும் வணங்கிச் செல்வர். - பக்தர்கள் அவருக்குத் தேவையானதை அளித்து ஆதரித்தனர். பக்தர்கள், அவ்வப்போது சாமியாரிடம் ... |
| தமிழில் இன்னமும் வெளிவராத சிறப்பியல்கள் என்னென்ன? Posted: 13 Mar 2016 09:13 PM PDT தாமஸ் மனோகரன், முதலியார்பேட்டை, புதுச்சேரி-4: தமிழில் இன்னமும் வெளிவராத சிறப்பியல்கள் என்னென்ன? -[color:af80= #660000] பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில் - உலகின் மிகப் பழைய மொழிகளில், செம்மொழிகளில் ஒன்றாக நம் தமிழ்மொழியின் வரிவடிவம், அழகிய வளைவுகளைக் கொண்டது. 'ல', 'ழ', 'கொ', 'கோ' இவ்வெழுத்துக்களின் வளைவுகளைக் கண்ட ஜெர்மானிய மொழியியல் அறிஞர் ஒருவர், 'கூர்மையான சொரசொரப்பான கூழாங்கற்றகள், வழவழப்பான உருண்டைக் கற்களாக மாறுவதற்கு அக்கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆற்றுநீரில் ... |
| பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) Posted: 13 Mar 2016 09:07 PM PDT பாகிஸ்தான் போகும் ரயில் -குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) http://www.mediafire.com/download/wgu8ao4gjoit2a1/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+-++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf இந்த ... |
| பிரிட்டிஷ் குடியுரிமை: ராகுலுக்கு லோக்சபா குழு சம்மன் Posted: 13 Mar 2016 08:44 PM PDT - புதுடில்லி: குடியுரிமை பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, லோக்சபா உறுப்பினர்களுக்கான நடத்தைக் கண்காணிப்பு குழு சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் ராகுல் தன்னை பிரிட்டிஷ் குடிமகனாக அறிவித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. இது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்கையில், சுப்ரமணியன் சாமி பழிவாங்கும் நோக்கில் இந்த பிரச்னையைப் பெரிதுபடுத்துவதாகவும், அதற்கு பா.ஜ., தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறினர். தற்போது இது குறித்து அத்வானி தலைமையிலான ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
