Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சிதறவிட்ட சில்வண்டுகள்:தெறித்து ஓடிய விஜயகாந்த்

Posted: 13 Mar 2016 08:09 AM PDT

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை முன்னிறுத்தி, சமூக வலைதளங்களில் செயல்படும், அவரது நெருங்கிய நபர்களால் நடத்தப்படும், 'ஓ.எம்.ஜி., - ஒன் மேன் குருப்' என்ற குழு தான், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமையாததற்கான காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைய, மூன்று மாதங்களாக தி.மு.க., சார்பில் பல்வேறு தரப்பினர் மூலம் பேச்சு நடந்தது. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், முக்கிய
பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கூட்டணிக்காக பேச்சு நடத்தினர்.ஒவ்வொருவரும் கூட்டணி ...

மருத்துவ நுழைவு தேர்வில் ' 0': தமிழக கல்வி துறையின் அவலம்

Posted: 13 Mar 2016 08:52 AM PDT

நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.கடந்த, 28 ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர், அகில இந்திய அளவில், தமிழக மாணவர்களின் நிலை குறித்து, தகவல் அறியும் சட்டத்தில், குறிப்பிடத்தக்க தகவல்களை பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு ஆதங்கங்கள் ...

மின் வாரியத்தில் ரூ.7,000 கோடி இழப்பு வந்தது எப்படி?

Posted: 13 Mar 2016 09:06 AM PDT

''தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதற்கு தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தான் காரணம்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய, முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவரது பேட்டி:தமிழ்நாடு மின் வாரியம், சொந்த மின் நிலையங்கள்; மத்திய மின் நிலையங்கள்; தனியார் மின் நிலையங்களில் இருந்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் மூலம், மின் தேவையை பூர்த்தி செய்கிறது.மின் வாரியம், மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்த உடன், 'டெண்டர்' விடவும், விலை நிர்ணயம் செய்யவும், ...

அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதில் உதிரி கட்சிகள் போட்டா போட்டி

Posted: 13 Mar 2016 10:07 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிப்பதில் உதிரி கட்சிகள் இடையே போட்டாபோட்டி நிலவுகிறது. 'கிடைத்தால் 'சீட்', கிடைக்கா விட்டால் காசு' என்பதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனவே இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க., - தி.மு.க., இடையே கூட்டணி ஏற்பட்டால் பலமான கூட்டணி அமைப்பது, தே.மு.தி.க., - தி.மு.க., கூட்டணி ...

மக்கள் கேள்விக்கு மந்திரிகள் பதிலளிப்பது கட்டாயம்: மத்திய தகவல் கமிஷன் அதிரடி தீர்ப்பு

Posted: 13 Mar 2016 10:25 AM PDT

புதுடில்லி:'மத்திய, மாநில அமைச்சர்கள், 'பொது அதிகாரிகள்' என்பதால், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அனுப்பும் கேள்விகளுக்கு, அவர்கள் பதிலளிக்க வேண்டும்' என, மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்து உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், அகமத் நகரைச் சேர்ந்த ஹேமந்த் தாகே என்பவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

12 பக்க தீர்ப்பு:
அதில், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர், பொதுமக்களை சந்திப்பதற்கு ஒதுக்கியுள்ள நேரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ...

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ., மீண்டும் போட்டி?

Posted: 13 Mar 2016 10:46 AM PDT

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட அதிருப்தியை தவிடு பொடியாக்கும் வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதிக்கு, தேவையான நலத்திட்டங்கள் ...

தேர்தல் நடத்தை விதிகள் காப்பாற்றப்படவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 13 Mar 2016 10:52 AM PDT

'அ.தி.மு.க., ஆட்சியில், தேர்தல் நடத்தை விதிகள் காப்பாற்றப்படவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணை, மார்ச், 4ல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பல இடங்களில், தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல், குறுகிய அரசியல் லாபத்திற்காக மீறும் நடவடிக்கைகள் நடக்கிறது.

மறைக்கப்படவில்லை:
முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள், விளம்பரத் தட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படவில்லை. நலத்திட்ட உதவிகளும் அவசரம், அவசரமாக பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. 'அம்மா' ...

'நம்பகத்தன்மையை இழக்கிறது நீதித்துறை'

Posted: 13 Mar 2016 10:54 AM PDT

அலகாபாத்:''நீதித்துறை, தன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:நீதித் துறையில், 'பார்' எனப்படும் வக்கீல்கள் சங்கம் தான் தாயைப் போன்றது. ஆனால், நீதிபதிகள் தயாராக இருந்தும், வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், வழக்குகள் தேங்குகின்றன. நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. உள்ளே இருக்கும் சவால்களை சமாளிக்கும் வகையில்,நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சுய கட்டுப்பாட்டுடன், சிறப்பாக செயல்பட ...

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவச கேபிள், 'பிராட்பேண்ட்'

Posted: 13 Mar 2016 10:57 AM PDT

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், இலவச கேபிள், 'டிவி'யில், 'பிராட்பேண்ட்' சேவை வழங்குவது குறித்து, முக்கிய அறிவிப்பு இடம்பெறும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தி.மு.க.,வில் இரண்டு வித, தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கை; இலவசம் உடைய தேர்தல் அறிக்கை என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டணி மற்றும் அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப, இலவசங்களை முடிவு செய்யலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கேபிள், 'டிவி' மூலம், இலவச ஒளிபரப்பு;அரசு கேபிள் நிறுவனம் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு, இலவச ...

ஜி.எஸ்.டி., நிறைவேறும் அருண் ஜெட்லி நம்பிக்கை

Posted: 13 Mar 2016 11:44 AM PDT

புதுடில்லி: ''பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நம்பிக்கை தெரிவித்துஉள்ளார்.டில்லியில் நடந்த, 'அட்வான்சிங் ஏசியா' என்ற மாநாட்டில், ஜெட்லி பேசியதாவது:வளர்ச்சிக்காக சீர்திருத்த பாதையில் செல்ல, இந்தியா உறுதியாக உள்ளது. எதிர்காலத்தில், உலகின் வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும். பார்லிமென்டில் இரண்டு நாட்களுக்கு முன், ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ரியல் எஸ்டேட் மசோதாவும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாவது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™