Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாளை (14th March )காரடையான் நோன்பு !

Posted: 13 Mar 2016 01:03 PM PDT

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது நாளை (14th March )காரடையான் நோன்பு. மாசி மாத மும் பங்குனியும் கூடும் நேரத்தில் செய்வார்கள். இந்த நோன்பை 'சத்யவான் சாவித்திரி விரதம்' என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)

Posted: 13 Mar 2016 12:33 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Posted: 13 Mar 2016 12:27 PM PDT

கற்பனையிலே உன் உருவம்! குட்டிக்கண்மணியே உனைகாண- ஒரு கூட்டமே காத்திருக்க - நீயோ தாயின் கருவறையில் ஏழு திங்களும் தனி குளிர்அறையில் ஏழு தினங்களும் தனிமையாகவே இருந்துவிட்டு - எங்களை தவிக்கவிடுத்தான் போனாயடி! உன் முகம் பார்க்க முடியாமல் போனாலும் - உன் முழு உருவமும் என் கற்பனையில்! நிழலாய் உன் உருவம் -என் நெஞ்சம் முழுவதுமே!-நான் என்ன பாவம் செயதேனடி- என் என் அன்பு கண்மணியே-உன் பிஞ்சு விரல்களை தொட -என் நெஞ்சம் துடித்தபோதும் நீ - எங்கள் அருகிலே இல்லையடி!! கற்பனையில் உன் பிஞ்சு ...

தங்க நகை விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது!

Posted: 13 Mar 2016 12:20 PM PDT

தங்க நகைகளுக்கு கலால்வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக தங்க நகை வியாபாரிகள் போராடி வரும் நிலையில், தங்க நகை விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி ...

கண்ணதாசனின் வனவாசம்

Posted: 13 Mar 2016 09:39 AM PDT

கண்ணதாசனின் வனவாசம் நூலை பதிவேற்றியுள்ளேன் 
படித்து மகிழவும் 




கண்ணதாசனின் வனவாசம்


http://www.mediafire.com/download/b12ks8o5tzy3w62/Vanavaasam.pdf

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகள்...!

Posted: 13 Mar 2016 08:32 AM PDT

முதல்வர் வேட்பாளர்களான ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை தேர்ந்தெடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் இதோ... - கருணாநிதி : திமுக தலைவர் கருணாநிதி, 2011ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியிலேயே இம்முறையும் போட்டியிட போவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. - விஜயகாந்த் : தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் களமிறங்கப் போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - அன்புமணி : பாமக ...

சிந்திக்க வேண்டிய விஷயம்..!!

Posted: 13 Mar 2016 08:28 AM PDT

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :-படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :-என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :-குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் விருந்தாளி :– அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி – பையன் ...

நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது

Posted: 13 Mar 2016 08:27 AM PDT

சரக்கு விற்ற மல்லையாவும் கடன்காரன்.... சரக்கு சப்ளை செய்த தமிழக அரசும் கடனாளி...... சரக்கு சாப்பிட்ட குடிமகனும் கடன்காரன்....... # எங்கேத்தான் போச்சி பணம் ?? ஒரே கண்பிசனா இருக்கே... -நாமக்கல் : நாமக்கல் அருகே 2. 52 கோடிக்கான நாணயங்கள் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது . இந்த பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் அறிவித்து விட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். - ரூ. 50 ஆயிரத்திற்கு ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(419)

Posted: 13 Mar 2016 07:52 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நதி நீராய் ஓடுதடி.

Posted: 13 Mar 2016 04:52 AM PDT

நதி நீராய் ஓடுதடி. காதல் என்னும் பூக்கள் வந்து தூவும் கண்ணில் வந்து நெஞ்சங்களும் மோதும் உந்தன் பேரும் எந்தன்பேரும் நினைவுகளில் வெள்ளி ஓடத்தில் நீயும் நானும் போவோம் அள்ளி அள்ளி தந்த காரங்கள் எல்லாம் அன்பைச்சொல்லி சொல்லி காட்டுதடி. நினைவெல்லாம் நீ இருக்க கானவாக போனதடி வாழ்க்கை… மல்லிகைப்பூ சூடிருக்கா மங்களமாய் நீ இருக்காய் மாமன் நெஞ்சில் தள்ளாட -நினைக்கிறாய். கண்ணுப்பட்டு கண்ணுப்பட்டு -ஏங்கியதுஉள்ளம். சொந்த மனசும் வெந்து போனதடி சோகத்தில் ஏங்குதடி உள்ளம். வள்ளல் ...

விறகு வெட்டும் தொழிலாளி

Posted: 13 Mar 2016 04:51 AM PDT

விறகு வெட்டும் தொழிலாளி வாழ்க்கை என்னும் புனித பயணத்தை பூக்கள் கொண்டு மாலை போனால் கண்ணீர் என்னும் மழைத்துளிகள். சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில் ஏழு நாட்கள் பட்டினி கிடந்து. ஏழ்மை வாழ்வை போக்கவே. நித்தம் நித்தம் காடும் கரம்பும் கால்கள் எல்லாம்  நடந்திடவே. கானகமே வாழ்க்கையானது. சில நேரம் கண்ணுறங்கும்-போது. ஈறெடுத்த பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது. மனம் எல்லாம் துடியாய் துடித்தது பாச பிணைப்பினால் கடலோரம்  மணல் வீடு கட்டி கரையோரம் வாழும் நண்டுகள் மலையோரம் போனாலும் வாழ இடமுண்டு. மனிதன்தான் ...

ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!

Posted: 13 Mar 2016 04:42 AM PDT

திமுகவின் 'முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல். இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் ...

விபத்துக்களை தடுக்க 3D பெயின்டிங் -அசத்தல் பெண்கள்!

Posted: 13 Mar 2016 04:14 AM PDT

புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் பெரும்பாலும் நடந்தேறுகிறது. ஓட்டுநரின் கவனக் குறைவால் குழந்தைகள், குறிப்பாக பள்ளியை கடக்கும் போதுதான் இந்த விபத்துக்கள் பெரும்பாலும் அரங்கேறுகிறது. இதை தடுக்க புதுமை விரும்பிகளான சௌமியா பண்டியா தக்கர் மற்றும் சகுந்தலா பண்டியா காயத்ரி ஆகியோர் ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளனர். அதாவது நடைபாதையினர் சாலையை கடக்க பயன்படுத்தும் வரிக்குதிரை சாலை கடப்பில், ...

இளையராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியம் வரையும் நிகழ்ச்சி: சென்னையில் தொடங்கியது

Posted: 13 Mar 2016 03:48 AM PDT

- ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து ஓவியம் வரையும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை லயோலா கல்லூரி யில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் ஓவியம் வரைந்து வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சி யில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து ...

காதலும் கடந்து போகும் - திரை விமரிசனம்

Posted: 13 Mar 2016 03:35 AM PDT

- 'சூதுகவ்வும்' நலன் குமரசாமி இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம், மீண்டும் நலன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம், 'பிரேமம்' மலையாளப் படத்தில் செலினாக நடித்த மடோனா செபாஸ்டியன் தமிழில்அறிமுகமாகும் படம் என்ற இந்த காரணங்களே 'காதலும் கடந்து போகும்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. நலன் குமாரசாமியின் படம் என்பதால் படத்தின் மீதான அபரிமிதமான நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம். படம் எப்படி? அடியாளாக இருக்கும் விஜய் சேதுபதி பார் உரிமையாளராக ஆசைப்படுகிறார். படிப்பு ...

தூக்கி அடிச்சுருவேன் !

Posted: 13 Mar 2016 03:35 AM PDT

கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு  ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் . ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் . " வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? " " ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் ...

ஓணம் ஸ்பெஷல் சமையல்

Posted: 13 Mar 2016 01:12 AM PST


-

புத்தகம் தேவை

Posted: 13 Mar 2016 12:58 AM PST

கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் pdf வடிவில் மின்னூலாக வேண்டும் உறவுகளே..

ஆர்.எஸ்.எஸ்.சீருடையில் மாற்றம்

Posted: 13 Mar 2016 12:13 AM PST

- புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 90 ஆண்டு பாரம்பரிய சீருடை முறையை மாற்றிட முடிவு செய்துள்ளது. தற்போது காக்கி அரைக்கால் டவுசர், வெள்ளை நிற சட்டையும் சீருடையாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பின்னர் சீருடையை மாற்றிட முடிவு செய்துள்ளது. இதன்படி அரைக்கால் காக்கி டவுசருக்கு பதில் நீலநிற முழு பேன்ட் என மாற்றிட முடிவு செய்துள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் 90 ஆண்டு பாரம்பரிய சீருடையில் விரைவில் மாற்றம் ...

செயற்கை மார்பகங்களுக்குள் மறைத்து ஒருகிலோ கொக்கைன் கடத்திவந்தப் பெண் பிடிபட்டார்

Posted: 13 Mar 2016 12:06 AM PST

போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் தங்களது உயிருக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியெல்லாம் கவலையேப்படாமல் கடத்தலின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின்மீது மட்டும் எத்தனை கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள்? என்பதை விளக்கும் கண்கண்ட உதாரணமான ஒருசம்பவம், சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் நடந்துள்ளது. - அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் இருந்து இங்குள்ள பெர்லின் நகருக்கு சமீபத்தில் விமானம் மூலம்வந்த சுமார் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நடை, உடை, பாவனைகளில் சந்தேகப்பட்ட பிராங்பர்ட் சர்வதேச விமான ...

கிருத்திகை விரதம்

Posted: 12 Mar 2016 11:52 PM PST

பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை ...

முதுவேனிற்காலம்

Posted: 12 Mar 2016 11:37 PM PST

- அடர்ந்த இரவைப் போர்த்திக்கொண்டு பறவைகள் உறங்கிக் கிடந்த அதுவொரு முதுவனிற்காலம் – தன்னை நகர்த்திக் காட்டும் கடிகாரச் சத்தத்தினும் மெல்லிதாய் நிகழ்ந்தது ஆரவாரிக்கும் சொற்களை அறிந்திராத உன் வருகை. ஆயிரம் கரங்களை ஏந்திச் சுடர்விடும் செஞ்சூரியனைப் போல் எனதருகில் வந்து நீர்சுரக்கும் பாட்டிசைத்தாய் நிலம் கமழும் யாழிசைத்தாய் – யாருமற்ற இப்பூவுலகில் தேசாதி தேசமெல்லாம் தனித்தலையும் உயிர்களாகி நான் உன்னையும் நீ என்னையுமாய் சரண் புகுகின்றோம். – பசித்த பள்ளத்தாக்கில் அசையாத ஓருயிராய்க் ...

கவித கவித...அரசியல் ஆபரேஷன்

Posted: 12 Mar 2016 11:12 PM PST

எலெக் ஷனுன்னா பாருங்க எக்ஸாமினேஷன்ங்க மக்களெல்லாம் யாருங்க? மக்கு ஸ்டூடன்ட் தானுங்க. போட்டி போட்றதென்னவோ பெரிய பெரிய ஆளுங்க தோத்துப் போறதென்னைக்கும் ஓட்டுப் போட்ட நாமங்க - தடியெடுத்தவன் தண்டலு தாங்கலடா நாட்டுல நீயும் நானும் மெண்டலு நிஜத்தச் சொல்றேன் பாட்டுல ஆகமொத்த ஜனத்தொகை ஆறுகோடி தேறுமா அட்டு கட்சி எண்ணிக்கை அதையும் தாண்டி ஏறுமா லட்சம் கோடி ஊழல பேப்பருல படிக்கிறோம் தெருக்கோடிப் பேச்சுல வாழ்க்கையவே முடிக்கிறோம் - லஞ்சத்தை ஒழிப்பதாம் லட்சம் ...

துணிச்சல்கார மம்தா!

Posted: 12 Mar 2016 11:08 PM PST

- பல வெற்றிப்படங்களில் நடித்தவர், நடிகை மம்தா மோகன்தாஸ். இவர், தான் புற்றுநோயாளி என்பதையும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதையும் தயக்கமின்றி கூறுவதுடன், '2009ல் தான் எனக்கு இந்நோய் பற்றி தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நான், சென்னை தனியார் மருத்துவமனையில், ஐந்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். நோயின் தாக்கம் குறைந்த போது, திருமணம் செய்தேன்; ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஓர் ஆண்டிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மீண்டும் நடிக்கத் துவங்கிய போது, நோய் மீண்டும் ...

தெறி இசை வெளியீடு 20 ந்தேதி பிரமாண்டமாக நடக்கிறது

Posted: 12 Mar 2016 11:04 PM PST

- சென்னை அட்லி இயக்கத்தில், விஜய், எமி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது. – ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். – தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் வெளி வரவுள்ள நிலையில் அப்படத்தின் இறுதி கட்ட பணிகள் துரிதமாக ...

இறந்தவரோட விபரத்தை, அந்த ஆளு ஏன் கேட்கிறார்..?!

Posted: 12 Mar 2016 10:59 PM PST


-
தொடரும்...

யோக முத்ரா

Posted: 12 Mar 2016 10:56 PM PST


-

தேர்தல் டிரெண்டுக்கு ஒரு படம்!

Posted: 12 Mar 2016 10:52 PM PST

- தேர்தல் சீஸன் என்பதாலோ என்னவோ அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது 'நல்லவாயன் நாறவாயன்'. பாஸ்கர்ராவ் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ அஜ்மல். ஹீரோயின் ஆருஷி. நாசர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். செகண்ட் ஹீரோ சந்தோஷ். அவருக்கு ஜோடி பன்ச்சி. இசை ஆர்.பி.பட்னாயக். "தமிழில் அரசியல் கதைக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. தற்போதைய பேய் டிரெண்டில் இந்தப் படம் டிஃபரன்டா இருக்கு. இடஒதுக்கீடு, ஓட்டுக்கு பணம் என்று அரசியல் நெடி ரொம்ப காரமாக அடிக்கிற கதை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த ...

எது குறைப் பரசவம்..

Posted: 12 Mar 2016 10:50 PM PST

கருத்தரித்து 37 வாரங்கள் முழுமையடைவதற்கு முன்பு நிகழும் பிரசவம் குறைப்பிரசவம் ஆகும். பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு முதல் காரணம், குறைப்பிரசவம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு இரண்டாவது முக்கிய காரணமும் இதுதான். - - கர்ப்பம் தரித்ததில் இருந்து 28 வாரங்களுக்கும் குறைவான காலத்தில் நிகழ்வது மிதமிஞ்சிய குறைப்பிரசவம் என்றும், 28 வாரங்களிலிருந்து 32 வாரங்களுக்குள் நிகழ்பவை பெரிய அளவிலான குறைப்பிரசவம் என்றும், 32 வாரங்களிலிருந்து 37 வாரங்களுக்குள் நிகழ்பவை தாமதமான ...

தாய்மையின் தவிப்பு

Posted: 12 Mar 2016 10:43 PM PST

- பிரசவித்த அயர்ச்சியில் நான் மயங்கிக் கிடக்கிறேன், பிறந்துவிட்ட அலுப்பில் உலகின் முதல் இரவை கட்டிடம் அதிர அழுதபடி எதிர்கொள்கிறது என் குழந்தை. – தன்னிலை நழுவும் அலுப்பிலும் என்னை எழுப்ப மனசின்றி, குழந்தையின் பசிக்கும் வயிற்றுப்போக்கிற்கும் இடையில் அதன் அலறும் குரலில் நொறுங்கி உதிர்கிறாள் எனது அம்மா.. -. பிரசவித்தவளுக்கும் பிறந்தவளுக்கும் இடையில் அலைவுறும் அவளுக்கு நாங்கள் நேற்று நேர்ந்துகொண்ட சாமியெல்லாம் நேர்த்திக்கடன் செய்யக்கூடும். அவள் உயிருள் நிகழ்கிறது பனிக்குடத்துப் ...

கூட்டணி பற்றி ரொம்ப ஆழமா தலைவர் சிந்திக்கிறாராம்..!

Posted: 12 Mar 2016 10:42 PM PST

- கூட்டணி பற்றி ரொம்ப ஆழமா தலைவர் சிந்திச்சுக்கிட்டு இருக்கார்…'' ''அதுக்காக நீர்மூழ்கிக் கப்பல்ல உட்கார்ந்து யோசிக்கறது நல்லாவா இருக்கு..?'' – ஆர்.சீதாராமன், – ———————————– – கட்சியில அவர் எந்தத் துறையில இருக்கார்..?'' ''ஸ்டிக்கர் ஒட்டுற துறையில இருக்காராம்…'' – – ஏ.மூர்த்தி, – ———————————- – மன்னிக்கணும்! கட்சி ஆபீஸ்னு நினைச்சு உள்ளே வந்துட்டேன். இது என்ன ஏலக் கம்பெனியா..?'' – ''ஐயோ, இது கட்சி ஆபீஸ்தான்! உள்ளே சீட் ஏலம் நடந்துக்கிட்டு இருக்கு…'' – – தீ.அசோகன், – ————————————– – தலைவர் ...

ஸ்பீக்கரு….

Posted: 12 Mar 2016 10:40 PM PST

''பெரியோர்களே… தாய்மார்களே… மற்றும் சி.பி.ஐ. ரெய்டால் திடீர் புகழ் பெறத் தொடங்கியிருக்கும் தலைவர் அவர்களே…'' – – பெ.பாண்டியன், – ——————————— – ''இப்போது கூட்டணிக்காக அலையும் தலைவர், தேர்தல் முடிந்ததும் முன்ஜாமீனுக்காக அலைவார் என்பதை…'' – – பர்வீன் யூனுஸ், – ———————————— – கட்சி வளர்ச்சிக்குத் தடையா யாராவது இருந்தா என்கிட்டே சொல்லுங்க…'' – ''உங்களைப் பத்தி எப்படி தலைவரே உங்ககிட்டேயே சொல்றது..?'' – – தஞ்சை தாமு --------------

மாறாதது!

Posted: 12 Mar 2016 10:27 PM PST

- கடலேதும் வற்றியிருக்கிறதா உலகில்! - கனவிலேனும் சுட்டிருக்கிறதா நிலவு! - என்றாவது மேற்கில் உதித்திருக்கிறதா சூரியன்! - கணமேனும் சுருங்கியிருக்கிறதா தன்னளவில் வானம் - எப்போதாவது வந்தாலும் தன் வண்ணத்திலிருந்து மாறியிருக்கிறதா வானவில்! - எப்போது பொழிந்தாலும் பூமியை நோக்கி தானே இந்த மழை! - மாறவே மாறாத இயற்கையை போல் தான் இருக்கிறேன் நானும்... - தீராத கடலோடும் தீர்ந்து விடாத உன் நினைவுகளோடும்! - -------------------------- — இ.எஸ்.லலிதாமதி, வாரமலர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™