Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கானல் நீராகிய 110 விதி: ஆய்வக அறிவிப்பு அம்போ!

Posted: 11 Mar 2016 09:54 AM PST

சுற்றுச் சூழலுக்கு உகந்த, நீடித்த வேளாண் பணிகளை மேம்படுத்துவதற்காக, வேலுார், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தலா ஒரு கிராமம் வீதம், 10 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து இயற்கை கிராமங்கள் உருவாக்கப்படும்.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை வலுப்படுத்தும் கிராமங்கள் அமைக்கப்படும். மேலும், ஏழு புதிய திரவ உயிர் உர உற்பத்தி ஆய்வகங்கள் அமைக்கப்படுவதுடன், அங்கக உரங்களின் சத்துக்களை, ஆய்வு செய்வதற்கு, இரண்டு புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.இதுவன்றி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின், இயற்கை பண்ணைய பணிகளை தரப்படுத்தி, இயற்கை ...

விஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு

Posted: 11 Mar 2016 10:06 AM PST

'சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளதால் அக்கட்சி தலைமையில் புதுக் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேநேரத்தில் விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தி.மு.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணியினரும் மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கி உள்ளனர்.சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., - -பா.ஜ., - -மக்கள் நலக் கூட்டணி தரப்பில் தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. ஆனால் 'தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ...

தி.மு.க., வெற்றி பாதிக்காது: ஸ்டாலின் நம்பிக்கை

Posted: 11 Mar 2016 10:10 AM PST

விஜயகாந்த் முடிவால் தி.மு.க.,வின் வெற்றி பாதிக்காது என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'கூட்டணிக்கு வரலாம்' என, அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அது, கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வரலாம் என்ற, நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட அழைப்பு. அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அவர்களுடைய உரிமையில் நாங்கள் தலையிட முடியாது. இதனால், வரும் தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி பாதிக்காது என்றார்.

உறுதியாக இருப்பாரா?
வேலுாரில், அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி: தேர்தலில் தனித்து ...

விஜயகாந்த் முடிவால் மா.செ.,க்கள் அதிருப்தி

Posted: 11 Mar 2016 10:13 AM PST

தே.மு.தி.க.,வில், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த, 11 ஆண்டுகளாக, பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் செலவழித்துள்ளனர்.தனித்து போட்டியிட்ட போது, தேர்தல் செலவையும், இவர்களே கவனித்தனர்.தற்போது, பல மாவட்ட செயலர்களும்

கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில், சரியான கூட்டணியை தேர்வு செய்வதன் மூலம், இப்பிரச்னையில் இருந்து மீளலாம் என, கணக்கு போட்டனர்.இவர்கள் கனவுகளை தவிடுபொடி ஆக்கும் வகையில், தனித்து போட்டிஅறிவிப்பை, கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். இதோடு, 234 தொகுதிகளுக்கும் ...

'கொக்கி' போடும் கட்சிகளை கண்காணிக்க மின் வாரியம் தயார்

Posted: 11 Mar 2016 10:16 AM PST

'கொக்கி' போட்டு மின்சாரம் திருடி நடத்தப்படும் அரசியல் கட்சி கூட்டங்களை கண்காணிக்க, மின் வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில், வரும் மே, 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகின்றன.கடந்த காலங்களில் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு, பெரும்பாலான கட்சிகள், 'கொக்கி' போட்டு மின்சாரம் திருடி கூட்டங்களை நடத்திவந்தனர். தற்போது கோடைக் காலம் துவங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ...

ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் சட்டம் நிறைவேறியது:கடும் எதிர்ப்புக்கு இடையே ஆளுங்கட்சி அசத்தல்

Posted: 11 Mar 2016 10:24 AM PST

புதுடில்லி:அரசின் மானியங்களைப் பெற, 'ஆதார்' அட்டையை கட்டாயமாக்கும் சட்டம், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.மத்திய அரசின் நிதி, பிற மானிய பலன்கள் மற்றும் சேவைகள், உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'ஆதார்' அட்டையை கட்டாயமாக்கும் சட்ட மசோதா - 2016, லோக்சபாவில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, நிதி மசோதாவாக நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 'இந்த மசோதாவை, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, காங்கிரஸ், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. அதை மீறி, மசோதா விவாதத்துக்கு ...

3 அ.தி.மு.க.,வினரின் தூக்கு ஆயுளாக குறைப்பு: பஸ் எரிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 11 Mar 2016 10:25 AM PST

புதுடில்லி:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கொடைக்கானல், 'பிளசன்ட் ஸ்டே' ஓட்டலுக்கு விதிமீறி அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம், 2000, பிப்., 2ல் தீர்ப்பளித்தது.
சீராய்வு மனு:
இந்த தீர்ப்பை கண்டித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறைகள் வெடித்தன. அப்போது, ...

18ம் தேதி நேரில் ஆஜராக மல்லையாவுக்கு சம்மன்

Posted: 11 Mar 2016 10:30 AM PST

மும்பை: வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்காக, வரும், 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, அமலாக்கப் பிரிவு, சம்மன் அனுப்பியுள்ளது.

பண மோசடி புகார்:
மத்திய அரசின் நிதிசேவை நிறுவனமான ஐ.டி.பி.ஐ., வங்கியில், மோசடி செய்து, 900 கோடி ரூபாய் கடன் பெற்றதாக, 'கிங்பிஷர்' நிறுவன தலைவர் விஜய் மல்லையா, நிறுவனத்தின் அதிகாரிகள், வங்கி உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருந்தது.பண மோசடி புகார் குறித்து, மல்லையா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு, சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தது. மேலும், 'கிங்பிஷர் ...

ஆவிகளுக்கு பயப்படவில்லை:பாவிகளுக்கு பயந்தேன்: சகாயம்

Posted: 11 Mar 2016 10:32 AM PST

மதுரை:''மதுரையில் கிரானைட் முறைகேடு விசாரணைக்காக இரவில் மயானத்தில் படுத்திருந்த போது, ஆவிகளுக்கு பயப்படவில்லை; முறைகேடு செய்த பாவிகளை நினைத்து தான் பயந்தேன்,'' என சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் பேசினார்.

மதுரை பாத்திமா கல்லுாரியில், கல்லுாரி தின விழா நடந்தது. சகாயம் பேசியதாவது:
நேர்மையான தேர்தலை நடத்த இதே மார்ச்சில் தான், நான் மதுரை கலெக்டராக பொறுப்பேற்றேன். மாணவர்கள் ஆழ்ந்து சிந்தித்து நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.மதுரையில் கிரானைட் முறைகேடு விசாரணைக்காக இரவில் மயானத்தில்படுத்திருந்த போது, ...

ராணுவத்தினருக்கு 'மொபைல்': மத்திய அரசு புது திட்டம்

Posted: 11 Mar 2016 01:37 PM PST

புதுடில்லி;''சர்வதேச எல்லையிலும், நக்சல்கள் பாதிப்பு நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, விரைவில், 'மொபைல் போன்'கள் வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி தெரிவித்தார்.

டில்லியில் நேற்று, 'அசோசம்' ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாட்டை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:இன்றைக்கு நம் ராணுவ வீரர்களிடம் மொபைல் போன் இல்லை என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். எல்லையிலும், நக்சல் பாதிப்பு பகுதிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ள அவர்களுக்கு, '3ஜி' ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™