Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம்:ஜெயலலிதா அறிவிப்பு
- திமுக மூழ்குகிற கப்பல், யார் ஏறினாலும் மூழ்கிவிடுவார்கள்
- கடைக்காரர்களிடம் "பில்' கேட்டு வாங்கிய 54 பேருக்கு தில்லி அரசு பரிசு: அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது
- "பாரதம்' எனப் பெயர் மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
- அப்சல் குரு விவகாரம்: ஜேஎன்யு மாணவர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து
- திருநங்கைகள் சட்டம் அவசியம்: மக்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- தேமுதிக முடிவு காங்கிரஸ்,திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது
- பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதிகள்: தேர்தல் ஆணையம் தகவல்
- மத்திய அரசின் அச்சகம் கோவையிலேயே செயல்படும்: திமுக எம்.பி.க்கு அமைச்சர் பதில்
- தேமுதிகவில் வேட்பாளர் தேர்வு தொடக்கம்
- தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: மூவரின் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைப்பு
- விவசாயி தாக்கப்பட்ட சம்பவம்:3 காவலர்கள் பணியிட மாற்றம்
- புது தில்லி
- போதை பொருள் கடத்தல்: நைஜீரியர் கைது
- திருநெல்வேலியில் காணாமல்போன ஆசிரியை, மாணவர் திருப்பூரில் சிக்கினர்
- வடக்கு தில்லி மார்க்கெட்டில் இலவச வை-ஃபை சேவை
- நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதி சீட்டு இன்றி நுழைந்த நபர்
- சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு
- டிஇஆர்சி தலைவர் நியமனத்தை எதிர்த்து மனு: மத்திய, தில்லி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- தெற்கு ரயில்வேக்கு புதிய மக்கள் தொடர்பு அதிகாரி
- ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த எச்சரிக்கை
- கொலை மிரட்டல் வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ.-வுக்கு முன் ஜாமீன்
- அமைச்சரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார்:விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
- நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு:பிடிபட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு:மேலும் 7 பேரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்!
- சாலை விபத்தில் துணை நடிகர் சாவு
- குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்துக்கு நிதி குறைக்கப்படவில்லை: மேனகா காந்தி
- கெயில்: அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்
- தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
- தேமுதிக முடிவு காங்கிரஸ், திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது
- ஆட்டோ கவிழ்ந்ததில் தொழிலாளி சாவு
- போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
- கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம்
- கல்லூரி கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை
- சிறுவன் மர்மச் சாவு
- கொலை செய்வதாக மிரட்டியதால் வெட்டிக் கொன்றோம்: ரௌடி கொலை வழக்கில் கொலையாளி வாக்குமூலம்
- விபத்தில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
- வாகனச் சோதனையில் சிக்கிய கருத்தடை மாத்திரைகள்
- பறக்கும் படை குழுவினரின் சோதனையில் ரூ. 80 லட்சம் பறிமுதல்
- சோளீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
- ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா நாளை தொடக்கம்
- வியாக்ரபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு
- 100 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற வரதநாராயண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
- 79 ஏரிக் கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்
- கடன் தொல்லையால் கழுத்தை அறுத்துக் கொண்டவர் சாவு
- வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவர் சாவு
- மின்மாற்றியின் உதிரி பாகம் விழுந்து தொழிலாளி சாவு
- காஞ்சிபுரம்
- தேவரனையக் கயவர்!
- ஒருபோதும் ஒருபொழுதை வீணாக்காமல்...
- கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு...
- பலா பழம்னு இவருக்கு தெரியாமல் போச்சே..!
- 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- நேஷனல் ஹெரால்டு வழக்கு:சுப்பிரமணியன் சுவாமியின் புதிய மனு விசாரணைக்கு ஏற்பு
- திமுகவுக்கு பின்னடைவு இல்லை: மு.க.ஸ்டாலின்
- இஷ்ரத் ஜஹான் வழக்கு:பொதுநல மனுவை ஏற்க மறுப்பு
- தனித்து விடப்படும் மக்கள் நலக் கூட்டணி?
- அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி:விஜயகாந்த், பிரேமலதா உச்ச நீதிமன்றத்தில் மனு
- 4 ஆண்டுகளுக்கு மகப்பேறு வேண்டாம்:பெண் போர் விமானிகளுக்குவிமானப் படை அறிவுறுத்தல்
- "நேதாஜி ஆவணங்களின் அடுத்த தொகுப்பு மே 13-க்குப்பின் வெளியிடப்படும்'
- விரைவில் எய்ம்ஸ் போன்ற ஆயுஷ் மருத்துவமனை:மக்களவையில் தகவல்
- அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களின் பதவியை பறிப்பதற்கான மசோதா: மக்களவையில் அறிமுகம்
- ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து:குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸார் திட்டம்
- குஜராத் அணுமின் நிலையத்தில் கனநீர் கசிவு
- வெளிநாட்டினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்
- "வாழும் கலை' நிகழ்ச்சியை அரசியலாக்கக் கூடாது
- ஓவியர் சக்தி பர்மனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
- மேற்கு வங்கம்: தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு:காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நம்பிக்கை
- நீதிபதிகள் ஓய்வூதிய மசோதா:நாடாளுமன்றம் ஒப்புதல்
- ரயில் பெட்டிகளில் தூய்மை: புதிய சேவை அறிமுகம்
- ஓரினச் சேர்க்கை விவகாரம்:சசி தரூரின் மசோதா மக்களவையில் தோற்கடிப்பு
- பயிற்சி ஆட்டம்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
- கோப்பை எங்களுக்கே: டூபிளெஸ்ஸிஸ்
- குத்துச்சண்டை :விஜேந்தர்-அலெக்சாண்டர் இன்று மோதல்
- சந்தோஷ் டிராபி கால்பந்து:இறுதிச்சுற்றில் சர்வீசஸ்-மகாராஷ்டிரம் மோதல்
- மார்ட்டின் குரோவுக்கு பிரியா விடை
- பாகிஸ்தான் அணிக்கு பச்சைக் கொடி
- வங்கதேசம்-அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
- நெதர்லாந்தை வெளியேற்றியது மழை
- ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம்
- மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, மதுரை
- சிரியா, ரஷிய விமானத் தாக்குதலில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு
- ஸிகா வைரஸ் ஆராய்ச்சிக்கு பிரேசில் ரூ.18 கோடி நிதி உதவி
- அரபு லீக் அமைப்புக்கு புதிய பொதுச் செயலர்
- நிதானம் தேவை: ஈரானுக்கு பான் கி-மூன் அறிவுறுத்தல்
- அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டுப் புரளி: ஒருவர் கைது
- அகதிகள் கடத்தலைத் தடுக்க ஏஜியன் கடல் பகுதியில் 5 நேட்டோ கப்பல்கள்
- தொழில்துறை உற்பத்தி 1.5% சரிவு
- சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
- உலகின் அதிவேக "ரிட்லி' சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்
- மகளிருக்கான தேனா வங்கியின் சிறப்பு சேமிப்புக் கணக்குத் திட்டம்
- வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
- "கம்ப்யூடெக்ஸ் தைபே' கண்காட்சி மே 31-இல் தைவானில் தொடக்கம்
- நிதி நிறுவனங்கள் மோசடி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அலுவலர் நியமனம்
- பாக் ஜலசந்தி கடலில் புதிய வழித்தடம் அமைக்க அளவை கப்பல் ஆய்வு
- துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- காஞ்சிபுரத்தில் நகைக் கடைகள் அடைப்பு
- லிங்கா படக் கதையை வரும் 14-இல் சமர்ப்பிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு
| அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம்:ஜெயலலிதா அறிவிப்பு Posted: 11 Mar 2016 01:46 PM PST தென் சென்னை தெற்கு, தேனி மாவட்டங்களைச் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| திமுக மூழ்குகிற கப்பல், யார் ஏறினாலும் மூழ்கிவிடுவார்கள் Posted: 11 Mar 2016 01:45 PM PST திமுக மூழ்குகிற கப்பல், அதில் யார் ஏறினாலும் அவர்களும் மூழ்கி விடுவார்கள் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| Posted: 11 Mar 2016 01:45 PM PST தாங்கள் வாங்கும் பொருள்களுக்கான "பில்'லை, கடைக்காரர்களிடம் பொதுமக்கள் கேட்டுவாங்குவதை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், 54 பேருக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை ரொக்கப் பரிசு வழங்கியது. |
| "பாரதம்' எனப் பெயர் மாற்றக் கோரிய மனு தள்ளுபடி Posted: 11 Mar 2016 01:44 PM PST இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| அப்சல் குரு விவகாரம்: ஜேஎன்யு மாணவர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து Posted: 11 Mar 2016 01:44 PM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாக நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பாக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட 8 மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இடைநீக்க நடவடிக்கை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. |
| திருநங்கைகள் சட்டம் அவசியம்: மக்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல் Posted: 11 Mar 2016 01:43 PM PST திருநங்கைகள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம் என்று மக்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். |
| தேமுதிக முடிவு காங்கிரஸ்,திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது Posted: 11 Mar 2016 01:43 PM PST தேமுதிகவின் அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது திமுகவுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். |
| பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதிகள்: தேர்தல் ஆணையம் தகவல் Posted: 11 Mar 2016 01:43 PM PST தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| மத்திய அரசின் அச்சகம் கோவையிலேயே செயல்படும்: திமுக எம்.பி.க்கு அமைச்சர் பதில் Posted: 11 Mar 2016 01:42 PM PST மத்திய அரசின் அச்சகம் கோவையிலேயே செயல்படும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினருக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ பதில் அளித்துள்ளார். |
| தேமுதிகவில் வேட்பாளர் தேர்வு தொடக்கம் Posted: 11 Mar 2016 01:42 PM PST சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தேமுதிக வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: மூவரின் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைப்பு Posted: 11 Mar 2016 01:42 PM PST தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் சிறையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| விவசாயி தாக்கப்பட்ட சம்பவம்:3 காவலர்கள் பணியிட மாற்றம் Posted: 11 Mar 2016 01:41 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே டிராக்டர் ஜப்தி நடவடிக்கையின்போது, விவசாயியை தாக்கியதாக 3 காவலர்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். |
| Posted: 11 Mar 2016 01:41 PM PST |
| போதை பொருள் கடத்தல்: நைஜீரியர் கைது Posted: 11 Mar 2016 01:41 PM PST தில்லியில் போதை பொருள் கடத்தியதாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தில்லி காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: |
| திருநெல்வேலியில் காணாமல்போன ஆசிரியை, மாணவர் திருப்பூரில் சிக்கினர் Posted: 11 Mar 2016 01:41 PM PST திருநெல்வேலியில் கடந்த ஆண்டு காணாமல்போன பள்ளி ஆசிரியை, மாணவரை தனிப்படை போலீஸார் திருப்பூரில் பிடித்து, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். |
| வடக்கு தில்லி மார்க்கெட்டில் இலவச வை-ஃபை சேவை Posted: 11 Mar 2016 01:40 PM PST வடக்கு தில்லியிலுள்ள சந்த் நகர் மார்க்கெட் பகுதியில், சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு இலவச வை-ஃபை சேவையை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. |
| நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதி சீட்டு இன்றி நுழைந்த நபர் Posted: 11 Mar 2016 01:40 PM PST உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல், நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஒருவர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தின் உச்சநிலை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. |
| சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு Posted: 11 Mar 2016 01:40 PM PST மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் 5 நாள்களாக நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி, வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. |
| டிஇஆர்சி தலைவர் நியமனத்தை எதிர்த்து மனு: மத்திய, தில்லி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 11 Mar 2016 01:39 PM PST தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆர்சி) தலைவர் நியமனத்துக்கு எதிரான மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவற்றுக்கு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. |
| தெற்கு ரயில்வேக்கு புதிய மக்கள் தொடர்பு அதிகாரி Posted: 11 Mar 2016 01:39 PM PST தெற்கு ரயில்வேயின் புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக டி. ஓம் பிரகாஷ் நாராயண் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த எச்சரிக்கை Posted: 11 Mar 2016 01:38 PM PST தில்லியில் செல்லிடப்பேசி செயலி (ஆப்ஸ்) மூலம் இயங்கும் கால் டாக்ஸி சேவைகளுக்கு உடனடியாக தடை விதிக்காவிட்டால், வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தில்லி டாக்ஸி, ஆட்டோ உரிமையாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. |
| கொலை மிரட்டல் வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ.-வுக்கு முன் ஜாமீன் Posted: 11 Mar 2016 01:38 PM PST செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதிக்கு நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| அமைச்சரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார்:விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Mar 2016 01:38 PM PST அமைச்சரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்டும் புகார் குறித்து திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் Posted: 11 Mar 2016 01:38 PM PST தில்லியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் தொடங்கியுள்ள 3 நாள் உலக கலாச்சார திருவிழா மற்றும் ஒரே நாளில் நடைபெற்ற 20 ஆயிரம் திருமண நிகழ்ச்சிகள், திடீர் மழை ஆகியவை காரணமாக தலைநகர சாலைகளில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகினர். |
| Posted: 11 Mar 2016 01:38 PM PST மதுரையில் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட 5 பேரை ஏப்.18 வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிடிபடாமல் உள்ள மேலும் 7 பேரை கைது செய்யவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. |
| நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்! Posted: 11 Mar 2016 01:37 PM PST நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமையும், அதற்கு முந்தைய நாள்களிலும் முன்வைத்தனர். அதன் விவரம் வருமாறு: |
| சாலை விபத்தில் துணை நடிகர் சாவு Posted: 11 Mar 2016 01:37 PM PST சாலை விபத்தில் துணை நடிகர் இறந்தார். |
| குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்துக்கு நிதி குறைக்கப்படவில்லை: மேனகா காந்தி Posted: 11 Mar 2016 01:35 PM PST ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்திற்கு (ஐசிடிஎஸ்) நிதி குறைக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. |
| கெயில்: அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் Posted: 11 Mar 2016 01:34 PM PST தமிழக விளை நிலங்கள் வழியாக குழாய்களை பதிப்பது தொடர்பாக இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) வெளியிட்டுள்ள மத்திய அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக வலியுறுத்தியது. |
| தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் Posted: 11 Mar 2016 01:33 PM PST நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் இன்னல்களுக்கு ஆளாகி வரும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக வலியுறுத்தியது. |
| தேமுதிக முடிவு காங்கிரஸ், திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது Posted: 11 Mar 2016 01:33 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது திமுகவுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். |
| ஆட்டோ கவிழ்ந்ததில் தொழிலாளி சாவு Posted: 11 Mar 2016 01:32 PM PST வெங்கல் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் தொழிலாளி இறந்தார். மூவர் பலத்த காயம் அடைந்தனர். |
| போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 11 Mar 2016 01:32 PM PST கொளத்தூரில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் Posted: 11 Mar 2016 01:31 PM PST இணையதளம் மூலம் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்ட கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரி கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை Posted: 11 Mar 2016 01:30 PM PST குன்றத்தூர் அருகே கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்து பொறியியல் மாணவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 11 Mar 2016 01:29 PM PST புழல் அருகே சிறுவன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| கொலை செய்வதாக மிரட்டியதால் வெட்டிக் கொன்றோம்: ரௌடி கொலை வழக்கில் கொலையாளி வாக்குமூலம் Posted: 11 Mar 2016 01:29 PM PST தன்னை கொலை செய்வதாக செல்லிடப்பேசியில் மிரட்டியதால், ரௌடியைக் கொலை செய்தோம் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார். |
| விபத்தில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி Posted: 11 Mar 2016 01:28 PM PST விபத்தில் உயிர் இழந்த மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து கழகத்துக்குச் சொந்தமான பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| வாகனச் சோதனையில் சிக்கிய கருத்தடை மாத்திரைகள் Posted: 11 Mar 2016 01:28 PM PST உரிய ஆவணம் இன்றி ஆந்திரத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வாகனச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன. |
| பறக்கும் படை குழுவினரின் சோதனையில் ரூ. 80 லட்சம் பறிமுதல் Posted: 11 Mar 2016 01:27 PM PST மகளிர் குழுவினருக்கு வழங்க தனியார் குறுங்கடன் நிதி நிறுவனத்தினர் கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தினர் பணத்துக்கான உரிய ஆவணங்களை வழங்கியதையடுத்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. |
| சோளீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம் Posted: 11 Mar 2016 01:26 PM PST பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள சோளீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்தர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா நாளை தொடக்கம் Posted: 11 Mar 2016 01:24 PM PST காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| வியாக்ரபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு Posted: 11 Mar 2016 01:23 PM PST உத்தரமேரூரை அடுத்த திருப்புலிவனத்திலுள்ள புகழ்பெற்ற வியாக்ரபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. |
| 100 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற வரதநாராயண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 11 Mar 2016 01:23 PM PST 100 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிப்பட்டு வரதநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 79 ஏரிக் கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம் Posted: 11 Mar 2016 01:22 PM PST திருத்தணி வட்டத்தில் உள்ள 79 ஏரிகளுக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| கடன் தொல்லையால் கழுத்தை அறுத்துக் கொண்டவர் சாவு Posted: 11 Mar 2016 01:21 PM PST காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவர் சாவு Posted: 11 Mar 2016 01:21 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். |
| மின்மாற்றியின் உதிரி பாகம் விழுந்து தொழிலாளி சாவு Posted: 11 Mar 2016 01:20 PM PST காஞ்சிபுரம் அருகே மின்மாற்றியின் உதிரிப் பாகம் விழுந்து தொழிலாளி ஒருவர் வியாழக்கிழமை இரவு இறந்தார். |
| Posted: 11 Mar 2016 01:18 PM PST |
| Posted: 11 Mar 2016 11:32 AM PST அரசுடைமை வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் திருப்பித் தராமல் வெளிநாட்டுக்குப் போய்விட முடியும் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. விஜய் மல்லையா விவகாரம் திடீர் சம்பவமல்ல. இது இப்படித்தான் நடக்கும் என்பது கடன் கொடுத்த வங்கிகளுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள கண்காணிப்பு அமைப்புகளுக்குமே நன்றாகத் தெரியும் என்பதுதான் உண்மை. |
| ஒருபோதும் ஒருபொழுதை வீணாக்காமல்... Posted: 11 Mar 2016 11:31 AM PST பல சமயங்களில் வாசலுக்கே பந்தல் போட முடியாதவர்கள் வானத்துக்குப் பந்தல் போடுவதாக அளப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? |
| கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு... Posted: 11 Mar 2016 11:30 AM PST தனக்கே உரித்த இயல்பின்படி மூத்த அண்ணன் மனப்பான்மையுடன் இந்தியாவைக் கண்டித்திருக்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் செனட்டர்கள் எனப்படும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் (பிப். 25). |
| பலா பழம்னு இவருக்கு தெரியாமல் போச்சே..! Posted: 11 Mar 2016 11:24 AM PST |
| 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் Posted: 11 Mar 2016 11:20 AM PST இலங்கை சிறைகளில் உள்ள 68 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். |
| நேஷனல் ஹெரால்டு வழக்கு:சுப்பிரமணியன் சுவாமியின் புதிய மனு விசாரணைக்கு ஏற்பு Posted: 11 Mar 2016 11:19 AM PST நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின் கடந்த 2010-11ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு விவரங்களைக் கோரி |
| திமுகவுக்கு பின்னடைவு இல்லை: மு.க.ஸ்டாலின் Posted: 11 Mar 2016 11:18 AM PST தேமுதிக கூட்டணிக்கு வராததால் திமுகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| இஷ்ரத் ஜஹான் வழக்கு:பொதுநல மனுவை ஏற்க மறுப்பு Posted: 11 Mar 2016 11:18 AM PST லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி எனக் கூறப்படும் இளம்பெண் இஷ்ரத் ஜஹானை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற விவகாரத்தில், குஜராத் காவல் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. |
| தனித்து விடப்படும் மக்கள் நலக் கூட்டணி? Posted: 11 Mar 2016 11:17 AM PST தனித்துப் போட்டி என்ற தேமுதிகவின் முடிவால், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தனித்து விடப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், இப்போதும்கூட தெளிவான |
| அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி:விஜயகாந்த், பிரேமலதா உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 11 Mar 2016 11:15 AM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது சென்னை, திருப்பூர் ஆகிய மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இருவரின் சார்பிலும் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| 4 ஆண்டுகளுக்கு மகப்பேறு வேண்டாம்:பெண் போர் விமானிகளுக்குவிமானப் படை அறிவுறுத்தல் Posted: 11 Mar 2016 11:14 AM PST போர் விமானங்களை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பெண் விமானிகளை 4 ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று இந்திய விமானப் படை அறிவுறுத்தியுள்ளது. |
| "நேதாஜி ஆவணங்களின் அடுத்த தொகுப்பு மே 13-க்குப்பின் வெளியிடப்படும்' Posted: 11 Mar 2016 11:14 AM PST நேதாஜி தொடர்பான ஆவணங்களின் அடுத்த தொகுப்பு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு, வெளியிடப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். |
| விரைவில் எய்ம்ஸ் போன்ற ஆயுஷ் மருத்துவமனை:மக்களவையில் தகவல் Posted: 11 Mar 2016 11:13 AM PST "அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனை (எய்ம்ஸ்) போன்ற இந்திய பாரம்பரிய (ஆயுஷ்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் விரைவில் நாடு முழுவதும் அமைக்கப்படும்' என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களின் பதவியை பறிப்பதற்கான மசோதா: மக்களவையில் அறிமுகம் Posted: 11 Mar 2016 11:12 AM PST நாடாளுமன்றத்தில் அவை அலுவல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.பி.க்களின் பதவியைப் பறிப்பதற்கான மசோதா, மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து:குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸார் திட்டம் Posted: 11 Mar 2016 11:12 AM PST ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேச அந்த மாநில காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர். |
| குஜராத் அணுமின் நிலையத்தில் கனநீர் கசிவு Posted: 11 Mar 2016 11:12 AM PST குஜராத் மாநிலம் காக்ரபார் அணுமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கனநீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. |
| வெளிநாட்டினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் Posted: 11 Mar 2016 11:11 AM PST ""இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்; அதில் எந்தவித சந்தேகமும் எழக் கூடாது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| "வாழும் கலை' நிகழ்ச்சியை அரசியலாக்கக் கூடாது Posted: 11 Mar 2016 11:10 AM PST ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் "வாழும் கலை' அமைப்பின் உலக கலாசாரத் திருவிழா நிகழ்ச்சியை அரசியலாக்கக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| ஓவியர் சக்தி பர்மனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது Posted: 11 Mar 2016 11:10 AM PST இந்தியாவுக்கும், பிரான்ஸýக்கும் இடையிலான கலாசார உறவை மேம்படுத்த பாடுபட்டதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சக்தி பர்மனுக்கு "நைட் ஆஃப் தி லீஜியன்' என்ற, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. |
| மேற்கு வங்கம்: தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு:காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நம்பிக்கை Posted: 11 Mar 2016 11:09 AM PST மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பிரச்னைக்கு இன்னும் சில நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. |
| நீதிபதிகள் ஓய்வூதிய மசோதா:நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 11 Mar 2016 11:09 AM PST உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடங்கல்களை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. |
| ரயில் பெட்டிகளில் தூய்மை: புதிய சேவை அறிமுகம் Posted: 11 Mar 2016 11:09 AM PST குறுஞ்செய்திகள், செல்லிடப்பேசி செயலி, வலைதளம் ஆகியவற்றின் உதவியுடன் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய பயணிகள் கோரிக்கை விடுக்க வகை செய்யும் "எனது பெட்டியை சுத்தம் செய்க' என்ற இணையவழிச் சேவையை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெள்ளிக்கிழமை |
| ஓரினச் சேர்க்கை விவகாரம்:சசி தரூரின் மசோதா மக்களவையில் தோற்கடிப்பு Posted: 11 Mar 2016 11:08 AM PST மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், ஓரினச் சேர்க்கை தொடர்பாக கொண்டு வந்த தனிநபர் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. |
| பயிற்சி ஆட்டம்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் Posted: 11 Mar 2016 11:06 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சனிக்கிழமை மோதுகின்றன. |
| கோப்பை எங்களுக்கே: டூபிளெஸ்ஸிஸ் Posted: 11 Mar 2016 11:06 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். |
| குத்துச்சண்டை :விஜேந்தர்-அலெக்சாண்டர் இன்று மோதல் Posted: 11 Mar 2016 11:05 AM PST இந்தியாவின் விஜேந்தர் சிங்-ஹங்கேரியின் அலெக்சாண்டர் ஹார்வத் இடையிலான தொழில்முறை குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| சந்தோஷ் டிராபி கால்பந்து:இறுதிச்சுற்றில் சர்வீசஸ்-மகாராஷ்டிரம் மோதல் Posted: 11 Mar 2016 11:04 AM PST 70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ், மகாராஷ்டிரம் ஆகிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. |
| மார்ட்டின் குரோவுக்கு பிரியா விடை Posted: 11 Mar 2016 11:04 AM PST கடந்த 3-ஆம் தேதி புற்றுநோயால் மரணமடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மார்ட்டின் குரோவின் இறுதிச்சடங்கு ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை |
| பாகிஸ்தான் அணிக்கு பச்சைக் கொடி Posted: 11 Mar 2016 11:03 AM PST பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. |
| வங்கதேசம்-அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு Posted: 11 Mar 2016 11:03 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் வங்கதேசம்-அயர்லாந்து இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. |
| Posted: 11 Mar 2016 11:02 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து-ஓமன் அணிகள் இடையிலான முதல் சுற்று ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. |
| ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம் Posted: 11 Mar 2016 11:02 AM PST ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டனர். |
| மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, மதுரை Posted: 11 Mar 2016 11:02 AM PST மதுரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை லயோலா, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருநெல்வேலி பிஎஸ்என், செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. |
| சிரியா, ரஷிய விமானத் தாக்குதலில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு Posted: 11 Mar 2016 11:01 AM PST சிரியாவின் பால்மைரா பகுதியில் அரசுப் படையினரும், ரஷியப் படையினரும் நிகழ்த்திய விமானத் தாக்குதலில் 20 இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. |
| ஸிகா வைரஸ் ஆராய்ச்சிக்கு பிரேசில் ரூ.18 கோடி நிதி உதவி Posted: 11 Mar 2016 10:59 AM PST ஸிகா வைரஸ் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 28 லட்சம் டாலர் (சுமார் ரூ.18 கோடி) வழங்கப்படுவதாக பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்செலோ காஸ்ட்ரோ தெரிவித்தார். |
| அரபு லீக் அமைப்புக்கு புதிய பொதுச் செயலர் Posted: 11 Mar 2016 10:58 AM PST அரபு லீக் அமைப்பின் புதிய பொதுச் செயலராக, எகிப்து நாட்டைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். |
| நிதானம் தேவை: ஈரானுக்கு பான் கி-மூன் அறிவுறுத்தல் Posted: 11 Mar 2016 10:57 AM PST அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்த வாரம் இரண்டு முறை ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்ட ஈரான், அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அறிவுறுத்தியுள்ளார். |
| அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டுப் புரளி: ஒருவர் கைது Posted: 11 Mar 2016 10:57 AM PST ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு எடுத்து வந்ததாகப் புரளியைக் கிளப்பிய நபர் போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அகதிகள் கடத்தலைத் தடுக்க ஏஜியன் கடல் பகுதியில் 5 நேட்டோ கப்பல்கள் Posted: 11 Mar 2016 10:56 AM PST போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை நேட்டோ கப்பல்கள் ஏஜியன் கடல் பகுதியில் மேற்கொள்ளத் தொடங்கின. |
| தொழில்துறை உற்பத்தி 1.5% சரிவு Posted: 11 Mar 2016 10:55 AM PST பொருளாதார மந்த நிலையை எடுத்துக்காட்டும் விதமாக சென்ற ஜனவரியில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.5% சரிவடைந்தது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை Posted: 11 Mar 2016 10:55 AM PST முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. |
| உலகின் அதிவேக "ரிட்லி' சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் Posted: 11 Mar 2016 10:54 AM PST பெல்ஜியத்தின் ரிட்லி நிறுவனம் உலகின் அதிவேக "ஸ்போர்ட்ஸ்', இதர வகை சைக்கிள்களை டி.ஐ.சைக்கிள் நிறுவனத்தின் மூலம் சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. |
| மகளிருக்கான தேனா வங்கியின் சிறப்பு சேமிப்புக் கணக்குத் திட்டம் Posted: 11 Mar 2016 10:54 AM PST சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேனா வங்கி, மகளிருக்கான "தேனா ஸ்திரீ சக்தி' என்ற சிறப்பு சேமிப்புக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் Posted: 11 Mar 2016 10:53 AM PST மதுராந்தகம் வழக்குரைஞர்கள் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "கம்ப்யூடெக்ஸ் தைபே' கண்காட்சி மே 31-இல் தைவானில் தொடக்கம் Posted: 11 Mar 2016 10:53 AM PST தைவான் வெளியுறவு வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தைபே உலக வர்த்தக மையம் இணைந்து நடத்தும் 2016-ஆம் ஆண்டுக்கான "கம்ப்யூடெக்ஸ் தைபே' கண்காட்சி மே 31 முதல் ஜூன் 4 வரையில் தைவான் தலைநகர் தைபேயில் நடைபெற உள்ளது. |
| நிதி நிறுவனங்கள் மோசடி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 11 Mar 2016 10:53 AM PST காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனங்களின் மோசடி குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அலுவலர் நியமனம் Posted: 11 Mar 2016 10:52 AM PST ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், துணைத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| பாக் ஜலசந்தி கடலில் புதிய வழித்தடம் அமைக்க அளவை கப்பல் ஆய்வு Posted: 11 Mar 2016 10:51 AM PST பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்காக புதிய வழித்தடம் அமைக்க மண்டபம், பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான அளவை கப்பல் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. |
| துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 11 Mar 2016 10:51 AM PST விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு துரோணாச்சார்யா விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்விருதுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| காஞ்சிபுரத்தில் நகைக் கடைகள் அடைப்பு Posted: 11 Mar 2016 10:51 AM PST தங்க, வைர நகைகளின் மீது கலால் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| லிங்கா படக் கதையை வரும் 14-இல் சமர்ப்பிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Mar 2016 10:51 AM PST கதை திருடப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் லிங்கா திரைப்படத்தின் கதையை வருகிற 14-ஆம் தேதி தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |