Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


துர்முகி வருட பஞ்சாங்கம்

Posted: 11 Mar 2016 08:57 AM PST

துர்முகி வருடம் - சித்திரை மாத பஞ்சாங்கம்

நண்பர்களே.. துர்முகி வருட பஞ்சாங்கம் ஒரு மாதத்திற்கு ஒரு படம் என்ற வகையில் கொடுத்துள்ளேன். இமேஜ் பதிவிறக்கம் செய்து அந்தந்த மாதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். மொபைல்களில் சேமித்துக்கொள்ளலாம்.

தலை முடி கொட்டுவதை நிறுத்த…

Posted: 11 Mar 2016 08:20 AM PST

- தலை முடி கொட்டுவதை நிறுத்த… வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல், தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பாருங்கள். எந்தக் காரணத்தால் முடி கொட்டினாலும் நின்று விடும். – அதோடு இந்தக் கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரவும் உதவும். – உங்க வீட்டு பெண் குழந்தைகள் தலையில் பொடுகு நிறைய இருக்கா. வில்லக்காய் பொடி, சிகைக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். வில்லக்காயை நன்றாக காய வைக்கவும். காய வைத்த ...

கல்யாணம் ஆன புதுசுல தேவயாணின்னு அன்பா கூப்பிடுவார்..!!

Posted: 11 Mar 2016 08:18 AM PST


-

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி…

Posted: 11 Mar 2016 08:16 AM PST

- – உலகின் மிகக் குளிர்ச்சியூட்டி, கண்களை கவர்ந்திழுக்கும் நீர்விழ்ச்சியும் இதுதான். – ஜிம்பாப்வே… ஜாம்பியா நாடுகளின் எல்லையாக, 'ஷெம்பெஜி' நதியுள்ளது. இந்த நதியிலிருந்து கொட்டுவது தான், 'விக்டோரியா நீர் வீழ்ச்சி' இதன் உயரம் 108 மீட்டர். அகலம் 1708 மீட்டர். உலகின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி விழும் பகுதியை கொண்டதும் இது தான். – அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு உயரம்… நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி கனடாவில் உள்ளது. இதனை, 'குதிரை லாடம் நீர் வீழ்ச்சி' என அழைப்பர். ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 11 Mar 2016 07:48 AM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்

Posted: 11 Mar 2016 06:59 AM PST

விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான் தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன். அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது... " 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய ...

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!

Posted: 11 Mar 2016 06:50 AM PST

சென்னை: சட்ட.சபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும் கூட்டணிக்கு அழைத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொளகிறேன். தேமுதிக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி ...

விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

Posted: 11 Mar 2016 06:48 AM PST

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பால் தங்களுக்கான சாதக பாதகங்கள் குறித்த கூட்டல் கழித்தல் கணக்குகளை போடத்தொடங்கிவிட்டன மற்ற கட்சிகள். கடந்த ஒரு வருடமாக விஜயகாந்த் திமுக பக்கம் சாய்வார், பாஜக பக்கம் தாவுவார், மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் நடந்து ஓய்ந்த நிலையில், நேற்று நடைபெற்ற சென்னை தேமுதிக மகளிரணி மாநாட்டில், நாங்க தனித்தே போட்டியிடுவோம் என்ற விஜயகாந்தின் அறிவிப்புக்கு பின்னரே, கூட்டணி ...

சவுக்கார்பேட்டை திரை விமர்சனம் !

Posted: 11 Mar 2016 05:18 AM PST

கரு : வி.சி .வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி ஜோடி பேயாக நடித்து வெளிவந்துள்ள ,'வாலி' டைப் கதை . ஆனால், அதுபேய் அண்ணனுக்கும் ,பேய் தம்பிக்குமிடையே எனும் வித்தியாச கரு காட்சி படுத்தப்பட்டிருப்பது புதுமை. கதை : வெளியூரில் வசிக்கும் ஸ்ரீக்கும் , அவரது காதலி ராய்லட்சுமிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. தலைவாசல் 'விஜய் - ரேகா தம்பதியின் வாரிசான ஸ்ரீகாந்த்., தன் காதலியுடன் அதற்காக ஊருக்கு வருகின்றார் . அப்படி ,வந்த இடத்தில் அவரது அப்பா தலைவாசல் விஜய் வாங்கிய கடனும் , அதன் அநியாய ...

கணிதன் - திரை விமர்சனம் !

Posted: 11 Mar 2016 04:56 AM PST

போலிச் சான்றிதழ்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகாரவர்க்கத்தினரின் கூட்டு பற்றியும் அதன் நுண் அரசியலையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் 'கணிதன்'. அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் கவுதம் (அதர்வா). பிபிசி சேனலில் புலனாய்வுச் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் சமயத்தில், போலிச் சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ...

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Posted: 11 Mar 2016 04:55 AM PST

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா? எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க. அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் ...

ஆறாது சினம் - திரை விமர்சனம்!

Posted: 11 Mar 2016 04:52 AM PST

குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை. அதிரடியான என்கவுன்ட்டர் காட்சியுடன் தொடங்கிறது ...

போக்கிரி ராஜா - திரை விமர்சனம் !

Posted: 11 Mar 2016 04:47 AM PST

கொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்? அதுதான் 'போக்கிரி ராஜா'. அடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், ...

பிச்சைக்காரன் - திரை விமர்சனம் !

Posted: 11 Mar 2016 04:43 AM PST

அம்மாவைக் காப்பாற்றுவதற்காகப் பிச்சைக்காரனாக வாழும் ஒரு மகனின் கதைதான் இயக்குநர் சசியின் பிச்சைக்காரன். அடையாளம், அந்தஸ்து ஆகியவற்றைத் துறப்பதுடன், தான் எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பதை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது ஆகியவை இதற்கான நிபந்தனைகள். அம்மாவுக்காக இவற்றை ஏற்றுப் பிச்சைக்காரனாக மாறும் விஜய் ஆண் டனிக்குத் தொழில் எதிரி, காதல், உள்ளூர் ரவுடிகள் எனப் பல தடைகள். இவற்றைத் தாண்டி நினைத்ததை முடித்தாரா, அவரது அம்மா குணமடைந்தாரா? படம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை ...

கம்ப ரசம்

Posted: 11 Mar 2016 04:23 AM PST

- பழ ரசம் பருகியிருப்பீர்கள். மிளகு ரசம் பருகியிருப்பீர்கள். இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா? கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி. பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்! வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி . இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான். இராமனை ...

தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த தமிழகம்!

Posted: 11 Mar 2016 03:48 AM PST

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 11 Mar 2016 03:24 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

இன்னும் எத்தனை நாடகங்கள்?

Posted: 11 Mar 2016 02:04 AM PST

ஒரே 'அரிச்சந்திர மயான காண்டம்' நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. போயும் போயும் சாவிலுமா தனது சதிகார அரசியலைப் பாய்ச்ச வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும். 'தேசத் தாயாக' தன்னை உருவகப்படுத்திக் கொள்வார். கருணாநிதி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பதுங்க ஆரம்பித்தால், ஜெயலலிதா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™