Tamil News | Online Tamil News |
- காத்து கிடக்கும் ஜாதி கட்சிகள்
- தனித்து போட்டி:தே.மு.தி.க., விஜயகாந்த் அறிவிப்பு:பழம் நழுவி கீழே விழுந்தது
- கூட்டணியா, தனித்து ஆட்சியா?
- மல்லையாவை தப்ப விட்டதாக காங்., புகாருக்கு பதிலடி: ஐ.மு., அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு
- விண்ணில் கடல்சார் செயற்கைக்கோள் செலுத்தி 'இஸ்ரோ' அபார சாதனை
- ஏழை பெண்களுக்கு ரூ.8,000 கோடியில்இலவச காஸ் இணைப்பு அரசு ஒப்புதல்
- அ.தி.மு.க.,வில் அதிரடி முடிவு:குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' இல்லை!
- கம்யூ., மேலிடத்துடன் அ.தி.மு.க., பேச்சு?நீடிக்குமா மக்கள் நல கூட்டணி
- இஷ்ரத் வழக்கில் ஆவணம் மாயம்! ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்
- ராணுவத்தினரை இழித்து பேசிய கன்னையா குமார் மீது வழக்கு
- ரூ.5 கோடி செலுத்துவதற்கு பதில் சிறை செல்ல தயார்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
| காத்து கிடக்கும் ஜாதி கட்சிகள் Posted: 10 Mar 2016 07:40 AM PST தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்கு, 'சீட்' கிடைக்குமா என, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றனர். காக்க வைத்து கடைசி நேரத்தில், கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தான், ஜாதிக் கட்சிகளால் பேரம் பேச முடியாது என, பெரிய கட்சிகள் கருதுவதால், கூட்டணியை உறுதி செய்யாமல், இழுத்தடிக்கின்றனர். தமிழகத்தில், ஜாதிக்கு ஒரு கட்சி மட்டுமல்ல; ஒரு ஜாதிக்கு, நான்கைந்து கட்சிகள் கூட இருக்கின்றன. தேர்தல் நேரத்தில், பெரிய கட்சிகளிடம் கூட்டணி பேசி, 'சீட்' பெறுவது மட்டுமே இவர்களது, ஒரே லட்சியம்.தென் மாவட்டங்களில் ... |
| தனித்து போட்டி:தே.மு.தி.க., விஜயகாந்த் அறிவிப்பு:பழம் நழுவி கீழே விழுந்தது Posted: 10 Mar 2016 09:55 AM PST மூன்று மாதங்களாக இருந்து வந்த அரசியல் பரபரப்புகளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்தார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக, சென்னையில் நடந்த மகளிர் தின விழா பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். இவர், கூட்டணிக்கு வருவார் என்பதை மனதில் வைத்து, 'பழம் கனிந்து வருகிறது; விரைவில் பாலில் விழும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சொன்னது மாறிப் போய், பழம் நழுவி கீழேவிழுந்து விட்டது! சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க.,- - பா.ஜ., -மக்கள் நலக் கூட்டணி தரப்பில், தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. ... |
| Posted: 10 Mar 2016 10:02 AM PST தமிழகத்தில், மே, 16ல், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், தேர்தலில், காங்கிரஸ் உட்பட, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ள தி.மு.க., தேர்தலுக்குப் பின், தனித்து ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி அளித்த சிறப்பு பேட்டி: கூட்டணி அமைக்கும் விஷயத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை, இம்முறை நீங்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை? கூட்டணி அமைக்கும் விஷயத்தில், எப்போதும், ... |
| மல்லையாவை தப்ப விட்டதாக காங்., புகாருக்கு பதிலடி: ஐ.மு., அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு Posted: 10 Mar 2016 10:06 AM PST புதுடில்லி;கடன் மோசடியில் சிக்கிய விஜய் மல்லையாவை, வெளிநாடு தப்ப அனுமதித்ததாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு, 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான், மல்லையாவுக்கு கடன்கள் வழங்கப்பட்டன' என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக, விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது. காங்., புகார்:ராஜ்யசபாவில், இப்பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ''கடன் ... |
| விண்ணில் கடல்சார் செயற்கைக்கோள் செலுத்தி 'இஸ்ரோ' அபார சாதனை Posted: 10 Mar 2016 10:09 AM PST ஸ்ரீஹரிகோட்டா:கடல்சார் ஆய்வுக்காக, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1எப்' செயற்கைக்கோளை, விண்ணில் நேற்று, வெற்றிகரமாகச் செலுத்தியது.கடல்சார் ஆராய்ச்சிக்காக, ஏழு செயற்கைக்கோள்களை, விண்வெளிக்கு அனுப்ப, இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, முதல் செயற்கைக்கோள், 2013, ஜூலையில், விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டரை ஆண்டுகளில், மேலும், நான்கு செயற்கைக்கோள்கள், விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டன. இந்த வரிகையில், 1,425 கிலோ எடை கொண்ட, ஆறாவது செயற்கைக்கோளான, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1-எப் உருவாக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், ... |
| ஏழை பெண்களுக்கு ரூ.8,000 கோடியில்இலவச காஸ் இணைப்பு அரசு ஒப்புதல் Posted: 10 Mar 2016 10:14 AM PST புதுடில்லி:வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில், பெண்களின் பெயரில், இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 8,000 கோடி ரூபாயில், மூன்றாண்டுகளில் நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிராமங்களில் உள்ள ஏழை மக்கள், விறகு போன்றவற்றை, சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர். இதனால் எழும் புகை,ஒரு மணி நேரத்தில், 400 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும்.இதில் இருந்து விடுபட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பப்பெண்களின் பெயரில், இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும் என, மத்திய ... |
| அ.தி.மு.க.,வில் அதிரடி முடிவு:குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' இல்லை! Posted: 10 Mar 2016 10:23 AM PST
அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. பழைய முகங்களில் ஊழல் குற்றச்சாட்டு, கிரிமினல் வழக்கு மற்றும் கட்டப்பஞ்சாயத்து புகார்களுக்கு ஆளாகியவர்களுக்கு மீண்டும், 'சீட்' கிடைக்காது என தெரிகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசாவுக்கு, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தரப்பில், 'சீட்' தரப்பட்டது. இது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கடும் தோல்வியை சந்திக்கவும், அ.தி.மு.க., கணிசமான வெற்றி ... |
| கம்யூ., மேலிடத்துடன் அ.தி.மு.க., பேச்சு?நீடிக்குமா மக்கள் நல கூட்டணி Posted: 10 Mar 2016 10:33 AM PST மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க.,வை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், விடுதலை சிறுத்தைகளையும், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சு, திரைமறைவில் நடப்பதாக தெரிகிறது.மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா., இடம்பெறும் என்ற நம்பிக்கை, அக்கூட்டணி தலைவர்களுக்கு குறைந்து வருகிறது. அதற்குள், தொகுதி பங்கீட்டை முடித்து, கூட்டணியை தக்க வைக்க வேண்டும் என, வைகோ திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றால், மக்கள் நலக் ... |
| இஷ்ரத் வழக்கில் ஆவணம் மாயம்! ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல் Posted: 10 Mar 2016 11:05 AM PST புதுடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, இஷ்ரத் ஜகான் 'என்கவுன்டர்' வழக்கு தொடர்பான ஆவணம் காணாமல் போனதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'இஸ்ரத் ஜகான் என்கவுன்டர் தொடர்பாக, குஜராத் ஐகோர்ட்டில் முந்தைய மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் அரசியல் ரீதியானது' என, முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியிருந்தார். இந்த விவகாரம் நேற்று லோக்சபாவில் எதிரொலித்தது. இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து பேசியதாவது: பயங்கரவாதத்தை அரசியலாக்க வேண்டாம். பயங்கரவாதம் எந்த ... |
| ராணுவத்தினரை இழித்து பேசிய கன்னையா குமார் மீது வழக்கு Posted: 10 Mar 2016 01:38 PM PST புதுடில்லி : ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது, உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் சிவில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசத் துரோக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ''ராணுவ வீரர்களை மதிக்கிறோம்; அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீரில் பெண்களை ராணுவ வீரர்கள் பலாத்காரம் ... |
| ரூ.5 கோடி செலுத்துவதற்கு பதில் சிறை செல்ல தயார்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் Posted: 10 Mar 2016 01:58 PM PST புதுடில்லி : ''யமுனையில் சர்வதேச கலாசார விழா நடத்த, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த, ஐந்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தப் போவதில்லை; மாறாக, சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்,'' என, 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். யமுனை நதி : டில்லியில், யமுனை நதிக்கரையில், வாழும் கலை அமைப்பு சார்பில், சர்வதேச கலாசார விழா, மார்ச், 11 முதல் மூன்று நாள் நடக்கிறது. இந்த விழாவுக்கு, தடை கோரிய வழக்கை விசாரித்த, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், யமுனை நதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடாக, ஐந்து கோடி ரூபாயை அபராதமாக செலுத்தும்படி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 11,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |