Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் தேரோட்டம்

Posted: 23 Mar 2016 01:31 PM PDT

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் மக்கள் நலக் கூட்டணி,தேமுதிகவினர் கொண்டாட்டம்

Posted: 23 Mar 2016 01:31 PM PDT

மக்கள் நலக்கூட்டணியில், தேமுதிக இணைந்ததை வரவேற்று, பெரம்பலூரில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முந்திரி ஏலம்: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

Posted: 23 Mar 2016 01:31 PM PDT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த வன ஒப்பந்ததாரர்கள் புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லலிதாவதியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பது:

பட்டறைக்கு தீ வைத்தவர் கைது

Posted: 23 Mar 2016 01:30 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தச்சு பட்டறைக்கு தீ வைத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பங்குனி உத்திரம், பௌர்ணமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 23 Mar 2016 01:30 PM PDT

பங்குனி உத்திரம்,பெளர்ணமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 23 Mar 2016 01:30 PM PDT

பொன்னமராவதி வட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

குளமங்கலம் அய்யனார் கோயிலில் குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 23 Mar 2016 01:29 PM PDT

பங்குனி உத்திரத்தையொட்டி ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் குதிரை சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

Posted: 23 Mar 2016 01:29 PM PDT

முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் உற்சவருக்கு புதன்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது.

நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம்

Posted: 23 Mar 2016 01:29 PM PDT

நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் ஆர். ராஜ்குமார்.

இந்து சமய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் ஜயேந்திரர்: அமித் ஷா

Posted: 23 Mar 2016 01:29 PM PDT

காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் சனாதன தர்ம (இந்து சமயம்) மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் என பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

தஞ்சாவூர்

Posted: 23 Mar 2016 01:28 PM PDT

பழையவலம் துர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 23 Mar 2016 01:28 PM PDT

திருவாரூர் அருகே பழையவலம் துர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

Posted: 23 Mar 2016 01:27 PM PDT

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சாதிய ஆணவக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 23 Mar 2016 01:26 PM PDT

தமிழகத்தில் நிகழும் சாதிய ஆணவக் கொலையைக் கண்டித்து திருவாரூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்: அமைச்சர் பேச்சு

Posted: 23 Mar 2016 01:26 PM PDT

அதிமுக அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்குகள் கேட்டாலே போதும் அதிமுக அபார வெற்றி பெற முடியும் என்றார் தமிழக மீனவளத் துறை அமைச்சரும், நாகை மாவட்ட அதிமுக செயலருமான கே.ஏ.ஜெயபால்.

சுமுகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு:இஸ்லாமியர் உடல் அடக்கம்

Posted: 23 Mar 2016 01:26 PM PDT

நன்னிலம் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் சுமுகப் பேச்சு வார்த்தை மூலம், இஸ்லாமிய முதியவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரூ.51,000 மதிப்பிலான ஆடைகள் வேனுடன் பறிமுதல்

Posted: 23 Mar 2016 01:25 PM PDT

நீடாமங்கலம் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்களின்றி ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 51,000 மதிப்பிலான ஆடைகளை பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரிப் படுகையை அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 23 Mar 2016 01:25 PM PDT

காவிரிப் பாசனப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சாராயம் விற்றவர் கைது

Posted: 23 Mar 2016 01:25 PM PDT

நன்னிலம் அருகே சாராயம் விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கல்லூரி மாணவியை ஏமாற்றியவர் கைது

Posted: 23 Mar 2016 01:24 PM PDT

வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றியதாக திருமணமான நபரை போலீஸார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணியில் 9 பேர் மீட்பு

Posted: 23 Mar 2016 01:24 PM PDT

வேளாங்கண்ணியில் குழந்தைத் தொழிலாளர்களும், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 7 குழந்தைகள், ஒரு பெண், ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 9 பேரும் புதன்கிழமை மீட்கப்பட்டனர்.

நரிக்குடி ஸ்ரீயமனேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம்

Posted: 23 Mar 2016 01:23 PM PDT

வலங்கைமான் வட்டம், நரிக்குடி கிராமம் ஸ்ரீயமனேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீயமனேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

அரவைக்காக 2,000 டன் நெல் வடசென்னைக்கு அனுப்பிவைப்பு

Posted: 23 Mar 2016 01:23 PM PDT

நீடாமங்கலத்திலிருந்து 2,000 டன் சன்னரக நெல், அரவைக்காக வடசென்னைக்கு சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

தேமுதிக இணைந்ததை வரவேற்றுமக்கள் நலக் கூட்டணியினர் கொண்டாட்டம்

Posted: 23 Mar 2016 01:23 PM PDT

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்று, மன்னார்குடியில் புதன்கிழமை அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி:சீமான்

Posted: 23 Mar 2016 01:22 PM PDT

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விளங்கும் தகுதி நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 2 பேர் கைது

Posted: 23 Mar 2016 01:22 PM PDT

முன்விரோதம் காரணமாக நீடாமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

செய்திகள் சில வரிகளில்...

Posted: 23 Mar 2016 01:19 PM PDT

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2-ஆவது கட்ட தகுதிச்சுற்றில் இந்தியா-ஈரான் அணிகள் மோதும் ஆட்டம்

பிரிட்டிஷ் ஓபன்: 2-ஆவது சுற்றில் கோஷல்

Posted: 23 Mar 2016 01:18 PM PDT

பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அப்ரிதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு

Posted: 23 Mar 2016 01:17 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பதற்காக காஷ்மீரிலிருந்து ஏராளமானோர் மொஹாலி வந்திருக்கிறார்கள் என்ற

மகளிர் உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா வெற்றி

Posted: 23 Mar 2016 01:16 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது

Posted: 23 Mar 2016 01:16 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.

மொயீன் அலி-டேவிட் வில்லே அதிரடி: தோல்வியில் இருந்து தப்பியது இங்கிலாந்து

Posted: 23 Mar 2016 01:12 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது இங்கிலாந்து.

"ரோஹித் சட்டம்' அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்

Posted: 23 Mar 2016 01:07 PM PDT

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய

உத்தரகண்ட்: காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் மேலும் 5 பேரின் ஆதரவு உள்ளது; பாஜக அறிவிப்பு

Posted: 23 Mar 2016 01:06 PM PDT

உத்தரகண்டில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த மேலும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களது கட்சிக்கு இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

டிரம்ப் அதிபரானால் இந்தியாவுக்கு பாதிப்பு

Posted: 23 Mar 2016 01:05 PM PDT

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது, இந்தியாவுக்கு கவலை ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின்

"நேட்டோ' நாடுகளுக்கு இணையாக இந்தியா: அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம் அறிமுகம்

Posted: 23 Mar 2016 01:03 PM PDT

அமெரிக்காவுடன் வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்

வங்கதேசத்துக்கு மின்சாரத்தை வழங்கி "பேண்ட்வித்' சேவையைப் பெற்றது இந்தியா

Posted: 23 Mar 2016 01:03 PM PDT

வங்கதேசத்துக்கு மின்சாரத்தை வழங்கி அதற்கு பதிலாக இணையதளப் பயன்பாட்டுக்கான "பேண்ட்வித்' சேவையைப் பெற்றது இந்தியா.

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

Posted: 23 Mar 2016 12:59 PM PDT

இந்தியா ஓர் ஆன்மிக தேசம்தான், சந்தேகமில்லை. நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை, இன்று இருப்பவர்கள் நாளை இருக்கப் போவதுமில்லை

பொருளாதார முன்னேற்றமும் திவால் சட்டமும்

Posted: 23 Mar 2016 12:57 PM PDT

நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் புதிய திவால் சட்டம் (இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்ஸி சட்ட மசோதா) அண்மையில் நாடாளுமன்றத்தில்

நட்புறவும் தேசநலனும்!

Posted: 23 Mar 2016 12:49 PM PDT

மாறிவிட்ட பொருளாதாரத்தை மையப்படுத்திய சர்வதேசச் சூழலில், வளர்ச்சியடைந்த நாடுகளுடனான நட்புறவு இல்லாமல் எந்தவொரு நாடும் முன்னேற முடியாது. அதேநேரத்தில், பிற நாடுகளுடனான நட்புறவு நமது நாட்டையோ, மக்களையோ பாதித்து விடாமல் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது.

வெறுமையான சிகரெட் பெட்டிகள்: பிரான்ஸ் ஆணை

Posted: 23 Mar 2016 12:41 PM PDT

நிறுவனங்களின் முத்திரைகளோ, வேறுபட்ட நிறங்களோ இல்லாத பெட்டிகளில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் போட்டி: அரிஸோனா மாகாணத்தில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

Posted: 23 Mar 2016 12:40 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, அரிúஸானா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

இஸ்ரேல்: மேற்குக் கரைப் பகுதி எல்லை மூடல்

Posted: 23 Mar 2016 12:39 PM PDT

யூதர்களின் "பூரிம்' புனித தினத்தையொட்டி, தனது மேற்குக் கரைப் பகுதி எல்லையை இஸ்ரேல் மூடியது.

பாகிஸ்தான்: விஷ சாராயம் அருந்தி 35 பேர் சாவு

Posted: 23 Mar 2016 12:38 PM PDT

பாகிஸ்தானில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது விஷ சாராயம் அருந்திய 35 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசம்: கிறிஸ்துவர் படுகொலைக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted: 23 Mar 2016 12:38 PM PDT

வங்கதேசத்தில் கிறிஸ்துவப் பாதிரியார் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

பிரஸ்ஸெல்ஸ் குண்டு வெடிப்பு: தாக்குதல் நிகழ்த்தியவர்கள் அடையாளம் தெரிந்தது

Posted: 23 Mar 2016 12:37 PM PDT

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய இருவரின் அடையாளத்தை

பால்மைராவை நெருங்கியது சிரியா ராணுவம்

Posted: 23 Mar 2016 12:35 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் புராதன பால்மைரா நகரை மீட்பதற்காக,

மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடும், நிவர்த்தி முறைகளும்

Posted: 23 Mar 2016 12:30 PM PDT

போரான் சத்துக் குறைபாட்டால் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து

குறைந்த செலவில், அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்!

Posted: 23 Mar 2016 12:28 PM PDT

உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அதுபோல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும்.

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியேற்றிய மகளிர் அமைப்பினர்

Posted: 23 Mar 2016 12:25 PM PDT

பாகிஸ்தானின் குடியரசு தினத்தையொட்டி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தேசியக் கொடிகளை

மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சிறிது மேம்பட்டுள்ளது: சீன அரசு நாளிதழ்

Posted: 23 Mar 2016 12:24 PM PDT

நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சிறிய அளவில் மேம்பட்டுள்ளது என்று சீன அரசு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரோஹித் வேமுலா விவகாரம்: மத்திய அமைச்சகத்தை முற்றுகையிட்ட ஜேஎன்யு மாணவர்கள்

Posted: 23 Mar 2016 12:22 PM PDT

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை

பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

Posted: 23 Mar 2016 12:21 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை யொட்டி, அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி

ஆட்சியமைக்கும் விவகாரம்: பிடிபி, பாஜக தலைவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் அழைப்பு

Posted: 23 Mar 2016 12:21 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு

வெடிகுண்டு மிரட்டல்: இண்டிகோ விமானம் தரையிறக்கம்

Posted: 23 Mar 2016 12:20 PM PDT

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தில்லி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானம் புதன்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் 6 அணு உலைகள்: இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 23 Mar 2016 12:20 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், ஜைதாபூரில் புதிதாக 6 அணு உலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது.

பஞ்சாப்: ரூ.15 கோடி ஹெராயின் கண்டெடுப்பு

Posted: 23 Mar 2016 12:19 PM PDT

பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் அருகே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப்

இந்தியா உள்பட 5 நாடுகளில் ஸிகா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்

Posted: 23 Mar 2016 12:19 PM PDT

பிரேசில் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று

அனைத்துக் கோயில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும்

Posted: 23 Mar 2016 12:18 PM PDT

அனைத்துக் கோயில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும்,

கிராமங்களில் 2.95 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 23 Mar 2016 12:17 PM PDT

எதிர்வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் "அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2.95 கோடி வீடுகளைக் கட்ட

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

Posted: 23 Mar 2016 12:16 PM PDT

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, உற்சவருக்கு புதன்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்ந்து விற்பனை:நடவடிக்கை எடுப்பது யார்?

Posted: 23 Mar 2016 12:16 PM PDT

அண்மையில் 356 மருந்துகளின் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இவற்றில் பல மருந்துகள், சாதாரண பெட்டிக் கடைகளில் கூட விற்கப்படுபவை. தடை செய்யப்பட்ட நிலையிலும், இந்த மருந்துகள் பல கடைகளில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றன. தடை குறித்து அறியாத மக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படுமா?

Posted: 23 Mar 2016 12:16 PM PDT

ஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஹோலி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

Posted: 23 Mar 2016 12:14 PM PDT

நாடு முழுவதும் வியாழக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட

போலீஸாருடன் ரோந்துப் பணியில் பொதுமக்கள்!

Posted: 23 Mar 2016 12:14 PM PDT

சென்னையில் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களை தகவல் அளிப்பவர்களாக காவல் துறை மாற்றி வருகிறது.

ஆரியங்காவு வனப் பகுதியில் 2 ராஜநாகங்கள் பிடிபட்டன

Posted: 23 Mar 2016 12:13 PM PDT

கேரள மாநிலம், ஆரியங்காவு பகுதியில், அதிக விஷமுள்ள 2 ராஜநாகங்கள் புதன்கிழமை பிடிபட்டன.

பார்வையற்றோர் வாக்களிக்க கையேடு வெளியீடு

Posted: 23 Mar 2016 12:13 PM PDT

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பது குறித்த பிரைய்ல் வடிவிலான கையேடு வேலூரில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

Posted: 23 Mar 2016 12:12 PM PDT

வேலூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.57 லட்சம் மதிப்பிலான பணம், பொருள் பறிமுதல்

Posted: 23 Mar 2016 12:12 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த 19 நாள்களில் வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் ரூ. 73.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரபு நாடுகளில் அவதிப்படும் தமிழக மீனவர்கள் 33 பேர் தாயகம் திரும்ப நடவடிக்கை

Posted: 23 Mar 2016 12:12 PM PDT

அரபு நாடுகளில் அவதிப்படும் தமிழக மீனவர்கள் 33 பேரை மீண்டும் தாயகத்துக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Mar 2016 12:11 PM PDT

ஆம்பூரில், அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை, வேலூரில் 106 டிகிரி: 11 இடங்களில் வெயில் சதம்

Posted: 23 Mar 2016 12:11 PM PDT

தமிழகத்தில் வேலூர், மதுரை உள்ளிட்ட 11 நகரங்கள் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக

பங்குனி உத்திர திருவிழா

Posted: 23 Mar 2016 12:11 PM PDT

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தில் மயிலாடும் மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

யோகா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் வெளியீடு

Posted: 23 Mar 2016 12:11 PM PDT

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதிய பத்து ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

சென்னையிலிருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு கோடை கால சிறப்பு ரயில்

Posted: 23 Mar 2016 12:10 PM PDT

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை புதன்கிழமை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி - மணப்பாறை இடையே பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

Posted: 23 Mar 2016 12:09 PM PDT

திருச்சி - மணப்பாறை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

Posted: 23 Mar 2016 12:09 PM PDT

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

Posted: 23 Mar 2016 12:09 PM PDT

வாணியம்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக: தமிழகத்தில் உருவானது 5 முனைப் போட்டி

Posted: 23 Mar 2016 12:08 PM PDT

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப் போட்டிக்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த சங்கரன்கோவில் ராணுவ வீரர் உடல் அடக்கம்

Posted: 23 Mar 2016 12:08 PM PDT

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் விஜயகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம்,

லாரி உரிமையாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

Posted: 23 Mar 2016 12:08 PM PDT

வாலாஜாபேட்டை அருகே லாரி உரிமையாளரை கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இரு சக்கர வாகனங்களை திருடிய இளைஞர்கள் கைது

Posted: 23 Mar 2016 12:07 PM PDT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய 2 இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஜி.கே.வாசன் நல்ல முடிவு எடுப்பார்:திருமாவளவன் நம்பிக்கை

Posted: 23 Mar 2016 12:07 PM PDT

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மக்கள் நலன் கருதி நல்ல முடிவை எடுப்பார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பங்குனி உத்திர விழா

Posted: 23 Mar 2016 12:07 PM PDT

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்திலுள்ள திருகண்டேசுவரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அழுகிய நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

Posted: 23 Mar 2016 12:07 PM PDT

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் அழுகிய நிலையில் சிறுத்தையின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஏகாம்பரநாதர் கோயில் திருக்கல்யாண உற்சவம்

Posted: 23 Mar 2016 12:06 PM PDT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர பிரம்மோற்சம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன்

வரும் 31-க்குள் அனைத்து வாக்குச் சாவடிகளும் தயார் நிலைக்கு வரும்:அரக்கோணம் தேர்தல் அலுவலர்

Posted: 23 Mar 2016 12:06 PM PDT

அரக்கோணம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும், வரும் 31-ஆம் தேதிக்குள் தயார் நிலைக்கு வந்துவிடும் என்று தொகுதி தேர்தல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்தார்.

தீ வைத்துக் கொண்ட இளைஞர் சாவு

Posted: 23 Mar 2016 12:06 PM PDT

வேலூரில் குடும்பத் தகராறில் தீ வைத்துக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

சுபிக்ஷா நிறுவனத்தின் ரூ.4.50 கோடி சொத்து முடக்கம்: மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted: 23 Mar 2016 12:05 PM PDT

சுபிக்ஷா நிறுவனத்தின் ரூ.4.50 கோடி மதிப்புள்ள சொத்தை மத்திய அமலாக்கத்துறை புதன்கிழமை முடக்கியது.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஹோலி கொண்டாடிய கேஜரிவால்

Posted: 23 Mar 2016 12:04 PM PDT

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தனது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், தில்லியில் உள்ள ஆத் ஆத்மி கட்சி அலுவலகத்தில் ஹோலி பண்டிக்கையை புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினார்.

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

Posted: 23 Mar 2016 12:04 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறை

தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி: திமுகவுக்குப் பாதிப்பில்லை- ஸ்டாலின்

Posted: 23 Mar 2016 12:04 PM PDT

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு பாதிப்பில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு சிலைகள் திறப்பு

Posted: 23 Mar 2016 12:03 PM PDT

விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய தியாகிகளின் தினத்தையொட்டி, தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவர்களது மூவரின் சிலைகளை தில்லி முதல்வர்

வங்கி ஊழியர்கள் பிரச்னை: மத்திய நிதியமைச்சரிடம் ஊழியர் சங்கத்தினர் மனு

Posted: 23 Mar 2016 12:03 PM PDT

கருணை அடிப்படையில் பணி, வீட்டுக்கடன் திட்டத்தை மாற்றியமைப்பது போன்ற பொதுத் துறை வங்கி ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுக் காண வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

ஹோலி கொண்டாட்டம்:தில்லியில் 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு

Posted: 23 Mar 2016 12:03 PM PDT

தில்லியில் ஹோலி கொண்டாட்டங்களின்போது விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் வியாழக்கிழமை, நகரின் பல்வேறு பகுதிகளில் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்: வழிமுறைகள் வெளியீடு

Posted: 23 Mar 2016 12:03 PM PDT

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் சிறப்பு வசதிகள் வழங்குவதற்கான வழிமுறைகளை

நஜீப் ஜங் வாழ்த்து

Posted: 23 Mar 2016 12:02 PM PDT

"மக்களுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையையும், பெண்கள் மீதான சமூகத்தின் நன்மதிப்பையும் வெளிப்படுத்தும் திருநாளாக ஹோலிப் பண்டிகை அமையட்டும்' என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

Posted: 23 Mar 2016 12:02 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு:மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் நேரில் ஆய்வு

Posted: 23 Mar 2016 12:01 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளத்ரி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

அதிமுக கூட்டணியில் சமக: சரத்குமார் அறிவிப்பு

Posted: 23 Mar 2016 12:01 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி (ச.ம.க.) போட்டியிடும் என்று


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™