Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தி.மு.க.வின் குடும்ப நல அரசியலுக்கு இறுதிப்புள்ளி வைக்க மக்கள் விருப்பம்:செ.கு.தமிழரசன் பேட்டி

Posted: 20 Mar 2016 01:22 PM PDT

திமுகவின் குடும்ப நல அரசியலுக்கு இறுதிப் புள்ளி வைக்க மக்கள் விரும்புகின்றனர் என இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.

அதிமுகவுக்கு மாற்றாக திமுகவை ஆதரிக்கக் கூடாது

Posted: 20 Mar 2016 01:21 PM PDT

அதிமுகவுக்கு மாற்றாக நினைத்து திமுகவை மக்கள் ஆதரிக்கக் கூடாது என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.

உடுமலை தலித் இளைஞர் படுகொலை சம்பவம்:கௌசல்யாவின் கல்விச் செலவை இன்சூரன்ஸ் சங்கம் ஏற்கும்

Posted: 20 Mar 2016 01:20 PM PDT

காதல் திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவின் மேற்படிப்புக்கான முழுச் செலவையும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்கும் என எம்.எல்.ஏ. கே.தங்கவேல் தெரிவித்தார்.

அரசு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட...

Posted: 20 Mar 2016 01:19 PM PDT

அரசு வங்கிகளில் வாராக் கடன், மறு சீரமைக்கப்பட்ட கடன் என நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சொத்து மதிப்பு ரூ. 7 லட்சம் கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சுண்டி இழுக்கும் இணையதள வர்த்தகம்

Posted: 20 Mar 2016 01:18 PM PDT

இணையதள வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான பல சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் பலனாக, நடப்பு ஆண்டில் இணையதளம் வாயிலாக பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை சராசரியாக 78 சதவீதம் வளர்ச்சி காணும் என்று அசோசேம்-பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சர்வதேச விமான சேவை:ஏர் இந்தியா மும்முரம்

Posted: 20 Mar 2016 01:17 PM PDT

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் புதிய வழித்தடங்களுக்கு விமானச் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்: புலவர்  குழுக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 20 Mar 2016 12:42 PM PDT

அனைத்து இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து நாடு முழுவதும் அதனைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவின் 107-வது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூதாட்டியிடம் 25 பவுன் நகை பறிப்பு

Posted: 20 Mar 2016 12:40 PM PDT

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை 25 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகரில் ரூ. 1.15 லட்சம் பறிமுதல்

Posted: 20 Mar 2016 12:40 PM PDT

விருதுநகர் அருகே ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.15 லட்சத்தை வாகன சோதனையில் ஈடுபட்ட வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

சிவகாசி

Posted: 20 Mar 2016 12:39 PM PDT

அரசு அலுவலர் மனைவியிடம் நகை பறிப்பு

Posted: 20 Mar 2016 12:38 PM PDT

சிவகாசி இ.பி.காலனியைச் சேர்ந்தவர் கந்தசாமி(63). வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பைக்கில், மனைவி சுப்புத்தாயுடன் கங்காகுளம்-திருத்தங்கல் சாலையில் சென்றார். அப்போது, பின்பக்கமாக பைக்கில் வந்த இருவர் சுப்புத்தாய் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.

ரூ.20 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

Posted: 20 Mar 2016 12:38 PM PDT

விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி அருகே உள்ள வலையங்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(63). இவருக்கு விருதுநகர் பெத்தனாட்சி நகரைச் சேர்ந்த வி.ஆர்.சேகரன், அவரது மகன் சாம் ஆனந்த் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அறிமுகத்தின் பேரில், மதுரை கூடல்நகரைச் சேர்ந்த ஞானதுரை, ஆப்பிரிக்க நாட்டில் வசிக்கும் ஜான்மாதன் ஆகியோரிடம் நட்பு ஏற்பட்டது.

இருக்கன்குடி சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 20 Mar 2016 12:38 PM PDT

சாத்தூரிலிருந்து-இருக்கன்குடிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.

விபத்து எச்சரிக்கைப் பலகை அமைக்கக் கோரிக்கை

Posted: 20 Mar 2016 12:37 PM PDT

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மதுரை செல்லும் சாலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் எதிரே பெட்ரோல் நிலையம் மற்றும் வங்கிகள் உள்ளன. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் அடிக்கடி இச்சாலையைக் கடந்து செல்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய குருத்தோலை பவனி

Posted: 20 Mar 2016 12:37 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது.

பழனி அடிவாரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல்

Posted: 20 Mar 2016 12:36 PM PDT

பழனி அடிவாரப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பழனியில் நாளை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்

Posted: 20 Mar 2016 12:36 PM PDT

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.

கொடைக்கானல் ஏரிச் சாலையை சுத்தம் செய்யும் பணி

Posted: 20 Mar 2016 12:35 PM PDT

கொடைக்கானல் ரோட்டரி கிளப் சார்பில், ஏரிச் சாலையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

கொடைக்கானலில் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்குச் சாவடி மையங்கள் ஆய்வு

Posted: 20 Mar 2016 12:35 PM PDT

கொடைக்கானலில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு நடந்தே சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினார்.

வைகை அணையின் நீர்மட்டம் 35 அடிக்கு உயர்ந்தது

Posted: 20 Mar 2016 12:34 PM PDT

வைகை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 35.50 அடிக்கு மேல் உயர்ந்தது.

வழக்குரைஞரை தாக்கியவர் கைது

Posted: 20 Mar 2016 12:34 PM PDT

தேனியில் வழக்குரைஞரைத் தாக்கியதாக, ஒருவரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

தேனியில் அமைச்சர்கள் சந்திப்பு

Posted: 20 Mar 2016 12:33 PM PDT

தேனியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் வேலுமணி, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.

இந்திய குடியரசு கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

Posted: 20 Mar 2016 12:33 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு குடியரசுக் கட்சியினர் பாரபட்சமின்றி பாடுபட வேண்டும் என, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சாந்தகுமார் வலியுறுத்தினார்.

கொடைக்கானலில் குருத்தோலை பவனி

Posted: 20 Mar 2016 12:32 PM PDT

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்

Posted: 20 Mar 2016 12:31 PM PDT

பழனி பெரியபள்ளிவாசல் அருகே வியாழக்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குருத்தோலை ஞாயிறு பவனி

Posted: 20 Mar 2016 12:30 PM PDT

ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் திருச்சடங்குகளின் முதல் நிகழ்வாக, குருத்தோலை பவனி திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகளைக் கடத்திச் சென்றதாக மனைவி மீது கணவர் புகார்

Posted: 20 Mar 2016 12:30 PM PDT

சின்னமனூரில் பெற்றோரைத் தாக்கிவிட்டு, தனது மகளையும் கடத்திச் சென்றதாக, மனைவி மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

Posted: 20 Mar 2016 12:29 PM PDT

கல்லூரி விரிவுரையாளர் மாயம்: மனைவி புகார்

Posted: 20 Mar 2016 12:29 PM PDT

உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரத்தில் கல்லூரி விரிவுரையாளர் காணாமல் போய்விட்டதாக, சனிக்கிழமை அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

Posted: 20 Mar 2016 12:28 PM PDT

உத்தமபாளையம் அருகே தேர்தல் விதிமீறல் தொடர்பாக, அதிமுக நிர்வாகி மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரூ.21ஆயிரம் திருட்டு: இளைஞர் கைது

Posted: 20 Mar 2016 12:28 PM PDT

திண்டுக்கல் எரியோடு அருகே ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 21 ஆயிரம் திருடிய வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அதிமுகவுக்கு மாற்றாக திமுகவை ஆதரிக்கக் கூடாது: தமிழருவி மணியன்

Posted: 20 Mar 2016 12:28 PM PDT

அதிமுகவுக்கு மாற்றாக நினைத்து திமுகவை மக்கள் ஆதரிக்கக் கூடாது என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.

போட்டித் தேர்வுகளில் முதலிடம் பெறுவோருக்கு பரிசு வழங்க கோரிக்கை

Posted: 20 Mar 2016 12:27 PM PDT

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு பரிசுகள் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Mar 2016 12:26 PM PDT

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக் குழு சார்பில், சனிக்கிழமை திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம்

Posted: 20 Mar 2016 12:26 PM PDT

தேனி அருகே போடி சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 20 Mar 2016 12:25 PM PDT

மேல்மருத்துவர் ஆதிபராசக்தி அடிகளாரின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத் தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். இடுக்கி மாவட்டத் தலைவர் சதீஸ்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாபு, செயலர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தொடக்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சி

Posted: 20 Mar 2016 12:25 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் ந.வெங்கடாசலம் பார்வையிட்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு,  மின்னணு திரை தொலைக் காட்சி  விளம்பர தொகுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு சாவடி நிலைய அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Mar 2016 12:24 PM PDT

ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் கோயில் மக்கள் மன்றத்தில்,  வாக்கு சாவடி நிலைய அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 20 Mar 2016 12:23 PM PDT

சாலை விபத்தில் காயமடைந்து உணர்வற்ற நிலையில் வாழும் இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கருணாநிதிதான் என் எதிரி

Posted: 20 Mar 2016 12:23 PM PDT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "தினமணி' க்கு அளித்த பேட்டி

இளைஞரின் முகத்தை அறுவை சிகிச்சை மூலம் சீரமைத்த "எய்ம்ஸ்' மருத்துவர்கள்

Posted: 20 Mar 2016 12:22 PM PDT

சிறு வயதில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து பாதிப்புக்குள்ளான இளைஞரின் முகத்தை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முக அறுவை சிகிச்சை மூலம் சீரமைத்து, அந்த இளைஞருக்கு வாழ்வில் புதுநம்பிக்கையை அளித்துள்ளனர்.

பழம் கனியவில்லை; பால் கவிழ்ந்தது!

Posted: 20 Mar 2016 12:22 PM PDT

தேர்தலில் கூட்டணிக் குழப்பம் என்பது எப்போதும் தொடர்கதையாக நீளும். ஆனால், இந்தத் தேர்தலில் சிந்துபாத் கதை போல கூட்டணிக் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்தர் என்கிளேவ் பகுதியில் செயல்படும்: அரசின் மருந்தகத்தை மூடும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு

Posted: 20 Mar 2016 12:22 PM PDT

இந்தர் என்கிளேவ் பகுதியில் செயல்பட்டு வரும் "சீடு' ஆரம்ப நகர்ப்புற சுகாதார மைய (பியுஎச்சி) மருந்தகத்தை மூடும் தில்லி அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 4 கட்சிகள் இணைகின்றன

Posted: 20 Mar 2016 12:21 PM PDT

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்), சமாஜவாதி ஜனதா ஆகிய 4 கட்சிகளும் ஒன்றாக இணையவுள்ளன. இந்த மாத இறுதிக்குள், அந்த 4 கட்சிகளும் இணைந்து புதிய கட்சியாக உதயமாகிறது.

மத்தியில் 2019-இல் பாஜகவோ, காங்கிரஸோ ஆட்சியைப் பிடிக்காது: பிஜேடி

Posted: 20 Mar 2016 12:21 PM PDT

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றாது என்று பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) மூத்த தலைவர் ததாகதா சத்பதி தெரிவித்தார்.

செல்liடப்பேசி சிங்கங்கள்!

Posted: 20 Mar 2016 12:21 PM PDT

தமிழக சட்டப்பேரவையின் 2016ஆம் ஆண்டுக்கான தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராத, சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை அளித்து கோலோச்சிக் கொண்டிருக்கும்

வன்முறை தடுப்பு நடவடிக்கை: "பெப்பர் பால் லாஞ்சர்'களை பயன்படுத்த தில்லி காவல் துறை திட்டம்

Posted: 20 Mar 2016 12:20 PM PDT

வன்முறை தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும், உயிருக்கு ஊறுவிளைவிக்காத "பெப்பர் பால் லாஞ்சர்'களை கொள்முதல் செய்து பயன்படுத்த தில்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ஐஐடி கல்விக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 20 Mar 2016 12:20 PM PDT

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிர்மலா சீதாராமன் செயல்பாடு;ஏமாற்றத்தில் அருண் ஜேட்லி!

Posted: 20 Mar 2016 12:20 PM PDT

வர்த்தகத் துறையின் முக்கிய ஒப்பந்தம் தொடர்புடைய கோப்பு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகத் தயாரிக்கப்பட்ட நிலையில், அதில் கையெழுத்திடாமல் ஹைதராபாதுக்கு மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றதானது, மத்திய நிதியமைச்சர்

2 வயது பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை

Posted: 20 Mar 2016 12:19 PM PDT

வடகிழக்கு தில்லி, சாஸ்திரி பார்க் பகுதியில் 2 வயது பெண் குழந்தையை, தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

ஹரியாணா காங்கிரஸில் பிளவு?

Posted: 20 Mar 2016 12:19 PM PDT

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரியாணா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா தனது கட்சித் தலைமை மீது மிகவும் அதிருப்தியில் உள்ளதை அவரது செயல்பாடு உணர்த்தி வருகிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்

அரசு விளம்பரங்களுக்கான நிதியை பாதியாக குறைக்க தில்லி அரசு திட்டம்

Posted: 20 Mar 2016 12:19 PM PDT

அரசு விளம்பரங்களுக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.200 கோடியை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

மின் செலவைக் குறைக்க எல்இடி விளக்குகளுக்கு மாறும் தில்லி மாநகராட்சிகள்!

Posted: 20 Mar 2016 12:18 PM PDT

மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளவும், அதன் செலவைக் குறைக்கும் வகையிலும் பாரம்பரிய விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தும் நடவடிக்கையில் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

மக்கள் விரோத முடிவு!

Posted: 20 Mar 2016 12:18 PM PDT

பி.பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம், சிறு சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல்துறையின் செல்வமகள் திட்டம் எல்லாவற்றின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. பி.பி.எப். (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்) திட்டத்தின் தற்போதைய 8.7% வட்டியை 8.1% ஆகவும், கிஸான் விகாஸ் பத்திரங்களின் தற்போதைய வட்டி 8.7%-யை 7.8% ஆகவும் குறைத்துள்ளார்கள்.

புது தில்லி

Posted: 20 Mar 2016 12:18 PM PDT

டிடிஇஏ பள்ளி ஆசிரியர்கள் கெளரவிப்பு

Posted: 20 Mar 2016 12:17 PM PDT

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு திறம்பட கற்பித்ததற்காக தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

ஒன்றாய் வாழ ஏன் தயாராகவில்லை?

Posted: 20 Mar 2016 12:17 PM PDT

ஆங்கிலேயர் வகுத்த அரசியல் சாசனத்தின் மொழியாக்கப் பதிப்புகளுக்கு நம் பாமர மக்களைப் பொறுப்பு ஆக்கக் கூடாது.

அதிக அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 10 வணிகர்கள் மீது தில்லி அரசு நடவடிக்கை

Posted: 20 Mar 2016 12:16 PM PDT

அதிக அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 10 வணிகர்கள் மீது தில்லி அரசு விரைவில் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகவரி மாற்ற விவகாரம்: உரிய விளக்கம் அளிக்க கேஜரிவாலுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

Posted: 20 Mar 2016 12:16 PM PDT

தனது முகவரி மாற்றம் தொடர்பாக முரணான தகவல்களை தெரிவித்தது குறித்து, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) கோரப்பட்டுள்ள கேள்விகளுக்கு, தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உரிய பதிலளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

திருக்குறளில் வணிகம்

Posted: 20 Mar 2016 12:16 PM PDT

வாணிகம் என்ற அமைப்பு ஒரு சமுதாயத்துக்கு ஏற்றன செய்வதாகும். எனவே, சமுதாயத்துக்கு ஏற்றன செய்பவர் வாணிகர் ஆவர்.

"பார்லிமென்ட்ரி' செயலர்கள் விவகாரத்தை பேரவையில் பாஜக எழுப்பும்

Posted: 20 Mar 2016 12:15 PM PDT

தில்லி அரசின் "பார்லிமென்ட்ரி' செயலர்கள் நியமன விவகாரத்தை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பாஜக எழுப்பும் என எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் பயண நெறிகள்: சிறார்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டிஎம்ஆர்சி புதுமையான முயற்சி

Posted: 20 Mar 2016 12:15 PM PDT

தில்லி மெட்ரோ ரயில்களில் முறையான நெறிகளை கடைப்பிடித்து பயணிக்கும் வகையில் சிறார்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி)  புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் நுகர்வோர் தின விழா

Posted: 20 Mar 2016 12:14 PM PDT

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் நுகர்வோர் தின விழா நடைபெற்றது.

கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வேள்வி

Posted: 20 Mar 2016 12:14 PM PDT

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை கலச விளக்குடன் வேள்வி பூஜை நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 20 Mar 2016 12:13 PM PDT

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் மற்றும் குருதி கொடையாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விரைவில் கூட்டணி குறித்து முடிவு: தமிழிசை நம்பிக்கை

Posted: 20 Mar 2016 12:13 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

கராத்தே விழிப்புணர்வு பயிற்சி

Posted: 20 Mar 2016 12:13 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரம் புனித லூக்கா சிறுவர் மேம்பாட்டு மையத்தில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் மாணவ, மாணவியருக்கு கராத்தே விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

விநாடி-வினா: சாயர்புரம் போப் கல்லூரி முதலிடம்

Posted: 20 Mar 2016 12:12 PM PDT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது.

தேசத்தைப் பிளவுபடுத்துவோரை கட்டுப்படுத்தாதது ஏன்? மோடிக்கு குலாம் நபி ஆஸாத் கடிதம்

Posted: 20 Mar 2016 12:12 PM PDT

தேசத்தைப் பிளவுபடுத்துவோரைக் கட்டுப்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கடிதம் எழுதியுள்ளார்.

என்.எல்.சி. நிறுவனப் பெயர் மாற்ற முயற்சி வீண் வம்பை விலைக்கு வாங்கும் செயல்:மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Posted: 20 Mar 2016 12:12 PM PDT

என்.எல்.சி. நிறுவனப் பெயரை மாற்ற முயற்சிப்பது வீண் வம்பினை விலைக்கு வாங்கும் செயல் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 20 Mar 2016 12:12 PM PDT

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பங்குனித் திருவிழா: ஆத்தூரில் பச்சை சாத்தி ஸ்ரீநடராஜர் வீதியுலா

Posted: 20 Mar 2016 12:12 PM PDT

ஆத்தூர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பச்சை சாத்தி தரிசனம் நடைபெற்றது.

போலியான பான் அட்டைகளை கண்டறிய புதிய தொழில்நுட்பம்:வருமான வரித் துறை நடவடிக்கை

Posted: 20 Mar 2016 12:11 PM PDT

இரண்டு நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை வைத்திருப்பவர்களைக் கண்டறிந்து, அவற்றில் போலியான ஒரு கணக்கை செயலிழக்கச் செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.

பணபலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதுதான் பாஜகவின் புதிய பாணி: ராகுல் காந்தி தாக்கு

Posted: 20 Mar 2016 12:11 PM PDT

"பணபலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதுதான் பாஜகவின் புதிய பாணி'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

விஜயகாந்துடன் மீண்டும் சந்திப்பு?மக்கள் நலக் கூட்டணியில் கருத்து வேறுபாடு

Posted: 20 Mar 2016 12:10 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்தை மீண்டும் சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார். ஆனால், மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

நாடு முழுவதும் 908 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

Posted: 20 Mar 2016 12:09 PM PDT

நாடு முழுவதும் 908 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே காங்கிரஸுடன் கூட்டணி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்

Posted: 20 Mar 2016 12:09 PM PDT

"மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலைச் சூழல்தான் காணப்படுகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்:இந்தியாவிடம் வரைவு அறிக்கையை அளித்தது இலங்கை

Posted: 20 Mar 2016 12:08 PM PDT

பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கையை இந்தியாவிடம் இலங்கை அளித்துள்ளது.

பயிர்க் காப்பீடு திட்டம்:வங்கி, காப்பீட்டு அதிகாரிகளை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Posted: 20 Mar 2016 12:07 PM PDT

பிரதமர் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை (பிஎம்எஃப்பிஒய்) அமல்படுத்துவது தொடர்பாக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளார்.

பஞ்சாபின் மிகப் பெரிய எதிரி ராகுல்:மாநிலத் துணை முதல்வர் சாடல்

Posted: 20 Mar 2016 12:07 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபின் மிகப் பெரிய எதிரி என்று மாநில துணை முதல்வர் சுக்வீர் சிங் பாதல் குற்றம்சாட்டினார்.

வெளிநாட்டுச் சொத்துகள்: அமரீந்தர் சிங்கின் மகனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Posted: 20 Mar 2016 12:07 PM PDT

வெளிநாட்டு சொத்துகள் தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததற்காக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங்கின் மகன் ரணீந்தர் சிங்குக்கு லூதியானா நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தேவாலயங்களில் குருத்தோலை பவனி

Posted: 20 Mar 2016 12:07 PM PDT

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது.

பாகிஸ்தான் சிறையில் இருந்து 86 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted: 20 Mar 2016 12:06 PM PDT

பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டு, கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 இந்தியர்களை அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது.

திக்விஜய் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னவீஸ் நோட்டீஸ்

Posted: 20 Mar 2016 12:06 PM PDT

தன் மீது உண்மைக்கு மாறாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், வழக்குரைஞர் மூலம்

கடையம் அருகே புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது

Posted: 20 Mar 2016 12:06 PM PDT

கடையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனையின் போது 16 மூட்டை புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

கலாபவன் மணி மர்மம் மரணம்: சிபிஐ விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்

Posted: 20 Mar 2016 12:06 PM PDT

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால், அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கேரள மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பெண் மாயம்: போலீஸில் புகார்

Posted: 20 Mar 2016 12:06 PM PDT

சாத்தான்குளம் அருகே கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களை அரிவாளால் வெட்டியதாக இருவர் கைது

Posted: 20 Mar 2016 12:05 PM PDT

கோவில்பட்டி முகம்மது சாலிஹாபுரத்தில் நடந்து சென்ற இளைஞர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திரைப்படத் தணிக்கை அமைப்பு மறுசீரமைப்புஷியாம் பெனகல் குழு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

Posted: 20 Mar 2016 12:05 PM PDT

திரைப்படத் தணிக்கை அமைப்பை (சென்சார் போர்டு) மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தரகண்ட் பேரவைத் தலைவர் நோட்டீஸ்

Posted: 20 Mar 2016 12:05 PM PDT

 உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவர்

நகை பறிப்பு வழக்கு: தூத்துக்குடியில் 4 பேர் கைது

Posted: 20 Mar 2016 12:05 PM PDT

தூத்துக்குடி மாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கதிர்வீச்சை அளவிடும் கருவி:டிஆர்டிஓ விஞ்ஞானிகள் சாதனை

Posted: 20 Mar 2016 12:04 PM PDT

அணு விபத்துக்களின்போது வெளியாகும் கதிர்வீச்சை அளவிடுவதற்கான உணர் கருவியை (சென்ஸார்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஜோத்பூர் ஆய்வக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 20 Mar 2016 12:04 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நேதாஜி, பகத் சிங்கின் முழக்கங்கள் தேச விரோதமா?பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி

Posted: 20 Mar 2016 12:04 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோரின் முழக்கங்கள் தேச விரோதமானவையா? என்று பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Posted: 20 Mar 2016 12:04 PM PDT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், சிவசைலம் காது கேளாதோர் பள்ளி மற்றும் அவ்வை ஆசிரமத்துக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சொத்து விவரம், செலவுக் கணக்கு தாக்கல்:வேட்பாளர்களுக்கு உதவியாளர்கள் நியமனம்

Posted: 20 Mar 2016 12:04 PM PDT

நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சொத்துக் கணக்கு குறித்த பிரமாணப்பத்திரம் (அஃபிடவிட்), செலவுக் கணக்கு போன்றவற்றை வேட்பாளர்கள் தாக்கல் செய்வதற்கு உதவியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட உதவியாளர்களை தேர்தல் ஆணையம் களமிறக்குகிறது.

பங்கு விற்பனையில் விதிகளை மீறியதாக புகார்:விஜய் மல்லையா நிறுவனங்கள் மீதான விசாரணையைத் தீவிரப்படுத்தியது செபி

Posted: 20 Mar 2016 12:03 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்கு விற்பனைகளில் வர்த்தக விதிகள் மீறப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) கண்டறிந்துள்ளது.

தூத்துக்குடியில் ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டும் பசு

Posted: 20 Mar 2016 12:03 PM PDT

தாயுள்ளம் என்பது மனித இனத்துக்கு மட்டுமல்ல; கால்நடைகளுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், தூத்துக்குடியில் தாயை இழந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பாலூட்டி வளர்த்து வருகிறது ஒரு பசுமாடு. இந்த வியப்பான நிகழ்வை தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.

உலகம் முழுவதும் கல்விப் புலமை தெரிய மேலை நாட்டு பட்டம் அவசியம்: துணைவேந்தர் பேச்சு

Posted: 20 Mar 2016 12:03 PM PDT

உலகம் முழுவதும் தங்கள் கல்விப் புலமை தெரிய வேண்டுமென்றால், மாணவர்கள் மேலை நாட்டு பட்டம் பெறுதல் அவசியம் என திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார்.

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

Posted: 20 Mar 2016 12:02 PM PDT

குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் திருவிழா அம்மா இறக்கம் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™